சம்பியனானது சாப்மி

கொனீபா உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட தமிழீழ அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
சற்று முன்னர் நடைபெற்று முடிந்த இறுதியாட்டயத்தில் 2-1 என்ற கோல்க் கணக்கில் தமிழீழ அணியை வெற்றி கொண்ட சாப்மி அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் மகளீர் உலகக்கிண்ண தெடரின் இறுதியாட்டம் ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வேயில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறது.
இதில் தமிழீழ மகளீர் அணியும் சாப்மி மகளீர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் பந்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
பின்னர் 2 ஆவது பாதி ஆட்டம் ஆரம்பமானதும் அதில் கிடைத்த பெனால்டி உதை வாய்ப்பை சதகமாக்கிய சாப்மி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலைப்படித்தியதுடன் மேலும் ஆட்ட நேர நிறைவை அண்மிக்க போது கிடைத்த மூலை உதை வாய்ப்பையும் கோலாக மாற்றி 2-1 என்ற கோல்க் கணக்கில் வெற்றியை உறுதி செய்து கொண்டனர்.
சாப்மி இனம் என்பது ஸ்கன்டிநேவியா தீபகற்பத்தின் வடக்கு பகுதியிலும் கோலா தீபகற்பத்தின் பெரும் பகுதியிலுமுள்ள பழங்குடியின் மக்கள் மற்றும் நோர்வே, ரஷ்யா, சுவீடன், பின்லாந்து ஆகியஸ்கன்டிநேவியா நாடுகளில் சிறுபான்மைக்குழுவாக அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இனத்தினிரின் ஒன்று சேர்ந்த அணியே சாப்மி அணியாகும்.
