
பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் பொதுதேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல்வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தமிழின படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபத்தனையின் அடிப்படையில் அப்பிரச்சாரத்தில் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்துத்துள்ளனர்.
இந்நிலையில் Sutton மற்றும் Cheam தொகுதிகளை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர் CLLR TOM DRUMMOND அவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் கலந்துகொண்டு அவருக்கானா பிரச்சார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார பணியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் பெருமாள் தலைமையில் அனுஷன் பாலசுப்ரமணியம், திலீபன் அபிநாஷ், திராவிட் இராமகிருஷ்ணன் அனந்தகுமார்,தேவஜன்சன் சத்யதேவன் ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
