Home Blog Page 8

மைத்திரி, மகிந்த, ரணில் ஆகியோரிடமிருந்து விலகியவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம்!

image_pdfPRINT

சீலரத்ன தேரர் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்களை தமது கட்சியுடன் இணையுமாறு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசெத பெரமுன கட்சி இன்று வேட்பு மனுதாக்கல்  செய்த போதே  பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பிளவடைந்துள்ளது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

அதேபோல் பொதுஜன பெரமுன மற்றும் ரணில்விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்கள் அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்றே கூறவேண்டும்.

அதாவது 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பின்பற்றியதனையே தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பின்பற்றுகின்றார். இதில் மாற்றம் எதுவும் இல்லை.

நான் ஜனாதிபதியிடும் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றேன். அதாவது சர்வதேச நாணயநிதியத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதனை உண்மைத்தன்மையுடன் மக்களுக்கு பகிரங்கபடுத்துங்கள்” இவ்வாறு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்; 06 அரசியல் கட்சிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்!

image_pdfPRINT

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அரசியல் கட்சிகளை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியின்படி, கட்சியின் செயலாளர் அலுவலகம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் காரணமாக, 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியாத அரசியல் கட்சிகள் பின்வருமாறு;

01. ஈழவர் ஜனநாயக முன்னணி
02. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
03. எக்சத் லங்கா பொதுஜன கட்சி
04. எக்சத் லங்கா மகா சபா கட்சி
05. லங்கா ஜனதாக் கட்சி
06. இலங்கை முற்போக்கு முன்னணி

ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!

image_pdfPRINT

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

இந்தச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைத்ததற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சார்ள்ஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஆகியோரின் பிரத்தியேக வாழ்த்துச் செய்திகளையும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கையளித்தார்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானிகர், கல்வித்துறை உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி கிட்டுமென உறுதியளித்தார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பும் இன்று கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

அதேபோல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்தையும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வினின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும்

image_pdfPRINT

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரின் தலைமையில், மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

அஸ்வினின் திருவுருவ படத்திற்கு அஸ்வினின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து தேசிய பற்றாளர் விராஜ் மென்டீஸின் திருவுருவ படத்திற்கு, யாழ் பல்கலைகழ கலைப்பீடாதிபதி கலாநிதி ரகுராமும், ஊடக கற்கைகள் துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து அஸ்வின் மற்றும் தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவுரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பிரித்தானிய தலைநகரில் இடம்பெறும் தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

அகிம்செய்யனும் ஆயுதத்தால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானிய தலைநகரில் இடம் பெற்றது.

பிரித்தானியாவின் டவுனிங் வீதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் பிரித்தானியா மற்றும் பிரித்தானிய மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து எழுச்சி உரைகளும் டன் அடையாள உண்ணாவிரதமும் இடம்பெற்றது.

இந்திய அமைதிப்படைக்கு எதிராக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீரின்றி உணவின்றி தமிழ் தேசியத்தின் இலட்சியத்திற்காகவும் தமிழ் மண்ணின் விடுதலைக்காகவும் தன்னுயிரை நீர்த்தவரே தியாக தீபம் திலீபன் அவர்கள்.

தியாக தீபத்தின் நினைவேந்தல்

image_pdfPRINT

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உயிர்நீத்த நேரம் காலை 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. 

 மாவீரர்களின் சகோதரி, முன்னாள் போராளி பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பட உதவி – குமணன்

ஜனநாயகத்தை பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!

SRI-LANKA-ELECTION
image_pdfPRINT

”நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட  உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனநாயக ரீதியாக மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த எனது ஆட்சிக்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நாம் மிகவும் சவாலானதொரு கட்டத்தில் தான் உள்ளோம். நான் மெஜிக் காரனோ மாயாஜால வித்தைக் காரனோ கிடையாது. நானும் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை.
எனக்கும் ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன.

ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.
அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன்.
எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்.

உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.

எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.
அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பெற்ற வாக்குகள்

image_pdfPRINT
  • வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம்
  • ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள்

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும்.

மிகக்காத்திரமானதாகக் கருதப்பட்ட இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த சில தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருந்தன.

தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்குக் கூறும் நோக்கில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இப்பொதுவேட்பாளர் வட, கிழக்கு மாகாணங்களில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல், அதாவது சுமார் 700,000 வாக்குகளைப் பெறவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் போட்டித்தன்மை மிக அதிகமான இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதன்படி அவர் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 36,377 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 31.39, 16.74 சதவீதம் ஆகும்.

அதேபோன்று அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 18,524 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 36,905 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 9.985 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 7.74, 11.58, 2.36 சதவீதம் ஆகும்.

 மேலும் அரியநேத்திரன் வட, கிழக்கு மாகாணங்களில் தொகுதிவாரியாகப் பெற்ற வாக்குகளை நோக்குகையில் வடக்கில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் 11,170 வாக்குகளையும், காங்கேசன்துறையில் 5,726 வாக்குகளையும், மானிப்பாயில் 11,587 வாக்குகளையும், கோப்பாயில் 11,410 வாக்குகளையும், உடுப்பிட்டியில் 8,467 வாக்குகளையும், பருத்தித்துறையில் 8,658 வாக்குகளையும், சாவகச்சேரியில் 9,159 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.

 அடுத்ததாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னாரில் 10,757 வாக்குகளையும், வவுனியாவில் 11,650 வாக்குகளையும், முல்லைத்தீவில் 12,810 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.

புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

image_pdfPRINT

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால் உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். 

இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். 

வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் அனுரகுமார

image_pdfPRINT

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியானார் அனுரகுமார திசாநாயக்கா. புதிய ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் வாக்கெடுப்பு நேற்றைய தினம் (21) நடைபெற்றிருந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ஜே.வி.பி. கட்சின் அனுரகுமாரா திசாநாயக்க நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதி நாளையதினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 15 அமைச்சுக்கள் அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட முடியும்! – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

image_pdfPRINT

பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு முன்னதாக பிரதேச மட்டத்திலான தேர்தல் பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.

அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு இடம்பெற்றது. தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீட்டியாகொட பகுதியில் வாக்காளர் ஒருவர் நிழற்படம் எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அட்டையினை தம்வசம் எடுத்துவந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வாக்காளர் ஒருவர்  வாக்குஅட்டையினை கிழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!