மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் பாலுவின் சகோதரியும், மாவீரர் பொன்னம்பலம் அவர்களின் மனைவியுமான கமலாதேவி அவர்களால் பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவுகூரப்பட்டுள்ளது.
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு வினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும். தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் இன்று மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.
மேலும், நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும். இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இரணைப்பாலை துயிலும் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர பெருமளவான மக்கள் இன்று மாலை ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடமானது அரச காணி என்பதால் அங்கு அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் சிறிய வாக்குவாதம் ஒன்றும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று தங்களுடைய உறவுகளை சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்திட்டம் மாவீர்ர் நாளாகிய இன்று நவம்பர் 27 லண்டன் அக்ஸ்போரட் உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையில் இன்று வரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல் திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் உலகத் தமிழர் வறலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பெரும்திரளான புலம்பெயர் தமிழர்களிடம் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்திட்டம் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி இந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் இடைக்கால நீதி பொறிமுறை மற்றும்பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு இச் செயற்திட்டம் அத்தியாவசியமாக இருக்கின்றமையால் மிகுந்த ஆர்வத்துடன் பணியில் தாமாக முன்வந்து ஈடுபடுவதுடன் ஈழ மண்ணின் விடுதலைக்காய் உயிர் நீத்த வரலாற்று நாயகர்களின் கனவை நினைவாக்க எம்மாலான சிறு பணியை செய்வதில் மன நிறைவடைவதாக தெரிவித்தார்கள். மேற்படி செயற்திட்டத்தில் செயற்ப்பாட்டாளர்களான அனுசன் பாலசுப்பிரமணியம், ஜனார்த்தனன் ஈஸ்வரன், விஸ்வா றமேஸ், நிறோஜன் பாலசிங்கம், விதுஷன் மார்க்கண்டு, கஜானந் சுந்தரலிங்கம், ஆரகன் ஜெயக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரித்தானியாவில் இன்று மாவீரர் பெற்றோர் மற்றும் உருத்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் கார்த்திகை மாதத்தில் இன்றைய தினம் (17) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்ட்டது.
காலை 11.00 மணியளவில் பண்ணிசை அணிவகுப்படன் மாவீர்ர் குடும்பங்கள் உலகத்தமிழர் வரலாற்றுமைய வளாகத்திற்கு வரவேற்கப்பட்டு பின்னர் அங்கு அமைக்கக்பட்டுள்ள பிரமாண்ட மண்டபத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன் இன்று வெள்ளிக்கிழமை (15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள துரைராச ரவிகரன் இன்றையதினம் காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார்.
வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினரை முல்லைத்தீவு மக்கள் இன்று முல்லைத்தீவு நகரில் மாலை அணிவித்து வரவேற்றதுடன் வெடிகொழுத்தி வெற்றி கொண்டாடட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலில் மகத்தான தேர்தல் வெற்றிக்காக வாக்களித்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
“மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி புதிய நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தேசிய பட்டியல் ஊடாக 18 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.