SHARE

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் இன்று  மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.

மேலும், நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

Print Friendly, PDF & Email