Home Blog Page 313

வடமாகாண புதிய அமைச்சர்களும் மோசடியில் ஈடுபடுகின்றார்களா ?

image_pdfPRINT

வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது.

குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

கூட்டு வங்கி கணக்குகள்- வடமாகாண அமைச்­சர்­கள் தங்­க­ளது ஆள­ணி­யி­ன­ருக்கு உள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு நிய­மித்­த­வர்­க­ளு­டன், கூட்டு வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்து, அவர்­க­ளது சம்­ப­ளப் பணத்­தை­யும் பெற்­றுக் கொண்­டுள்­ளமை கண்­டறி­யப்­பட்­டுள்­ளது.

பயன்படுத்தாத பிக்கப் வாகனத்திற்கு எரிபொருள்.

அதே­போன்று, ‘பிக்­கப்’ வாக னம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே, அதற்­கு­ரிய எரி­பொருள் கொடுப்­ப­ன­வாக 75ஆயி­ரம் ரூபா­வைப் பெற்­றுக் கொள்­வ­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

தனிப்பட்ட ஆளணி சம்பளத்தில் மோசடி

முத­ல­மைச்­சர் தனது ஆள­ணி­யில் 15பேரை­யும், அமைச்­சர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் 10பேரை­யும் நிய­மிக்க முடி­யும்.

வடக்­கில் முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சர்­க­ளும் இந்த எண்­ணிக்­கை­யில் தமது தனிப்­பட்ட ஆளணி நிரப்­பப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்டு, அந்த ஆள­ணி­யி­ன­ருக்­கு­ரிய சம்­ப­ளம் அர­சால் வழங்­கப்­ப­டு­கின்­றது. தனிப்­பட்ட ஆள­ணி­யில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள் வழங்­கிய வங்­கிக் கணக்­குக்கு பணம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது.

வடக்­கில் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் 3 அமைச்­சர்­க­ளின் அமைச்­சில் தமது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிக்­கப்­பட்­ட­வர்­கள் பணி­யாற்­றா­மல், அமைச்­சி­லி­ருந்து அலு­வ­லர்­கள் பணி­யாற்­று­வது தெரி­ய­வந்­துள்­ளது.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக, ‘பிக்­கப்’ வாக­னத்தை அமைச்­சர் பயன்­ப­டுத்­து­கின்­றாரா என கோரப்பட்ட போது ,

அதற்கு அமைச்­சர் ஒரு­வர் ‘பிக்­கப்’ வாக­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், அது ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பெறப்­பட்­டது என­வும், மாதாந்­தம் எரி­பொ­ருள் கொடுப்­ப­ன­வாக 75 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் பதில் வழங்­கப்­பட்­டது.

ஆனால் எந்­த­வொரு அமைச்­ச­ரும் இது­வ­ரை­யில் ‘பிக்­கப்’ வாக­னம் பயன்­ப­டுத்­த­வில்லை. மேலும், ஒரு அமைச்­ச­ரின், தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்டு சம்­ப­ளம் பெறு­ப­வர் ஒரு­வரை, அந்த அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­று­கின்­றாரா என்று அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, அப்­படி ஒரு­வர் பணி­யாற்­ற­வில்லை என்று பதில் வழங்­கப்­பட்­டது.

மகளுக்கு வேலை- மற்­றொரு அமைச்­சர், தனது மக­ளின் பெய­ரை­யும் தனிப்­பட்ட ஆள­ணி­யில் குறிப்­பிட்டு வழங்­கி­யுள்­ளார். அவ­ரது மகள், அமைச்­சின் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றி­யதே கிடை­யாது என்று அமைச்­சர் அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் அலு­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இந்த அமைச்­சர், தனது கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தையே, அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வதி­வி­ட­மா­கக் குறிப்­பிட்டு அதன் வாட­கைப் பணத்­தை­யும் பெற்­றுக் கொள்­கின்­றார்.

சம்பளம் வழங்குவதில் மோசடி.

மூன்­றா­வது அமைச்­சர் தனது தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­க­ளு­டன் கூட்டு வங்­கிக் கணக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். அந்த வங்­கிக் கணக்கு இலக்­கத்­துக்கே சம்­ப­ளம் வைப்­பி­லப்­ப­டு­கின்­றது. அதனை மேற்­படி அமைச்­சர் எடுத்­துக் கொண்டு, அதில் ஒரு தொகையை மாத்­தி­ரமே தனிப்­பட்ட ஆள­ணி­யில் உள்­ள­வர்­க­ளுக்கு வழங்கி வந்­துள்­ளார். இந்த விட­யம் அமைச்­சின் அலு­வ­லர்­க­ளால் கண்­ட­றி­யப்­பட்டு முத­ல­மைச்­ச­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முதலமைச்சர் நடவடிக்கை இல்லை

முத­ல­மைச்­சர், அமைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. கூட்டு வங்­கிக் கணக்கை தனிப்­பட்ட வங்­கிக் கணக்­காக மாற்றி, அமைச்­சர் எடுத்­துக் கொண்ட பணத்தை மீள வழங்­கு­மாறே பணித்­துள்­ளார்.

இந்த விட­யம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரைக் கேட்­ட­போது, அவர் அப்­படி எது­வும் நடக்­க­வில்லை என்று மறுத்­துள்­ளார். இருப்­பி­னும் முத­ல­மைச்­சர் தான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­ததை ஏற்­றுக் கொண்­டுள்­ளார். அமைச்­சர்­க­ளின் ஏனைய மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தவ­றா­னது என்­றும் முத­ல­மைச்­சர் பதில் வழங்­கி­னார்.என குறித்த் பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது.

‘யுத்தக்குற்றத்துக்குரியவரை முன்னரே அடையாளம் காணமுடியாது போனது ஏன்?’

image_pdfPRINT

ஐ.நா.வின் அமைதிகாக்கும் செயலரிடம் ICPPG நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம் கேள்வி

ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியில் அமர்த்தப்பட லெபனான் அனுப்பப்படவிருந்த இலங்கை இராணுவத்தின் லெப் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் யுத்தக்குற்றவாளி என்பதை தாம் அறியப்படுத்துவதற்கு முன்னதாவே உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனமைக்கான காரணம் யாது என ஐஊPPபு நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சிவரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியின் செயலர் JEAN-PIERRE LACROIX க்கு குறித்த விவகாரம் தொடர்பில் நேற்றதினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் வினவியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளுக்காக லெபனான் செல்லவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் ஐக்கியநாடுகள் சபையால் அண்மையில் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். பின்னர் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கின் இராணுவ அதிகாரியின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.விசாரணைகள் மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தர்.
எனினும் குறித்த நடவடிக்கைகளில் மந்தகதி நிலைமைகளே காணப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே ICPPG அமைப்பின் நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சிவரத்தினம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியின் செயலருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

ஐ.நா.வின் அமைதிகாக்கும் படை நடவடிக்கையில் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தினரில் யுத்தக்குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை அவர்களின் பணி அமர்வுக்காக விதிமுறைகளை செயல்ப்படுத்தும் கடமையிலிருந்து ஐ.நா. தவறியுள்ளமை அதன் விதிமுறைகளை கேலிக்குள்ளாக்கியுள்ளது.

அமைதிப்படைக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் குறித்த பின்னணியை இணையத்தளங்களின் மூலம் மிக இலகுவாக பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிந்ததாயின் லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த வீரர்கள் குறித்து தங்களிற்கு வழங்கப்பட்ட PHP படிவங்களில் அவரின் பின்னணி எவ்வாறு இடம்பெறாது போயிருந்தன?.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி லெபனானில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படை நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தின் 49 வீரர்களை முன்னதாகவே அனுப்பியிருந்தனர். அதில் 2016 இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அனுப்பப்பட்ட வீரர்கள் தொடர்பில் சிலரது ஆவணங்களை இலங்கை இராணுவத்தினர் இலங்கை மனித உரிமை கவுன்சிலில் சமர்ப்பிக்கத்தவறியுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 திகதி லெபனானுக் அனுப்பப்பட்ட இலங்கையின் 49 வீரர்களும் ஐ.நா. வின் விதிமுறைகளின் படி முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கு அனுப்பட்டார்களா. அப்படி அனுப்பபட்டிருப்பின் அதில் போர் குற்றம் இளைத்தவர்கள் இடம்பெற்றிருந்தமை எவ்வாறு? அப்படியாயின் அவர்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தவும்
அதேவேளை 2004 ஆண்டிலிருந்து 2007 வரையில் ஹெய்டியில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 134 இலங்கை அமைதிகாக்கும் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். எனினும் இது குறித்த நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முழுப்பொறுப்புரியவர்கள் நீங்களே. ஐ.நா. அமைதிகாக்கும் வீரர்களின் வதிமுறைகள் மற்றும் அமைதிகாக்கும் படை வீரர்களால் நிகழ்த்தப்படும் பாலியல் சம்பந்தப்பட் வன்கொடுமை விடயங்களில் ஐ.நா. கடுமையான நிலைப்பாட்டையே கடைப்பிடிப்போம் என தெரிவித்துள்ளீர்கள்.
அந்தவகையில் குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் ஐ.நா.க்கான அமைதிகாக்கும் வீரர்கள்; முற்றிலும் நேர்மாறாகவே உள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

SRI LANKAN ARMY’S FLOUTING OF VETTING AGREEMENT FOR UN PEACEKEEPERS

கண்டி வன்முறை தொடர்பிலான விசாரணைக்கு உதவ பகிரங்க அழைப்பு

image_pdfPRINT

அண்மையில் நாட்டில் நடைபெற்ற கண்டி கலவரம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி மற்றும் அதையொட்டிய தினங்களில் கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் வெறுப்பு மற்றும் மதப்பிரிவினைவாதத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணைகளை செய்வதற்காகவே மக்களிடமிருந்து தகவல்கள் மற்றும் எழுத்து மூல சாட்சியங்களை பகிரங்கமாக கோரியுள்ளது.

அந்தவகையில் குறித்த சம்பவத்தினால் பாதிப்புக்குட்பட்ட மற்றும் சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட நபர்களிடமிருந்து சாட்சியங்கள் சேகரிக்கப்படவுள்ளது.

ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் தகவல்கள் 3 பக்கங்களிற்கு மேற்படாமலும் சம்பவம் நடந்த திகதி, நேரம் இடம் சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளடக்க வேண்டும் எனவும் அத்துடன் புகைப்படங்கள் மற்றும் ஒலி,ஒளி நாடாக்களையும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் அனைத்தையும் கீழ்க்காணும் முகவரிக்கு இம்மாதம் எதிர்வரும் 21 திகதி அன்றோ அதற்கு முன்னதாகவோ அனுப்பிவைக்க முடியும்.

பிரதேச ஒருங்கிணைப்பாளர்
கண்டி பிரதான காரியாலயம்,
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
இல.8/1, பிறிம்றோஸ் வீதி,
பெராதெனிய வீதி,
கண்டி.

தொடர்புகளுக்கு – 081-2228009/ 070-3654901

ஈ.பி.டி.பி யின் கோட்டை சரிந்தது

image_pdfPRINT

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் விழுந்தது.

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கனான முதலாவது அமர்வு இன்றைய தினம் காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது தவிசாளர் தெரிவின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானை பிரேரித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரை பிரேரித்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்த பிலிப் பற்றிக் ரொஷான் 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரேரித்த நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

நெடுந்தீவு பிரதேச சபையானது 13 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 4 ஆசனங்களையும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் 06 ஆசனங்களையும் சுயேட்சை குழு 02 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழுவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளனர்.

முறிகண்டி கோவிலாக காட்சியளித்த யாழ்.பல்கலை பிரதான வாயில்

image_pdfPRINT

யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்று நண்பகல் (6) போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாக பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றி 108 தேங்காய் உடைத்து போதனை சாரா ஊழியர்கள் போராட்டம் நடத்தனர்.

யாழ். வந்தார் கருணாஸ்

image_pdfPRINT

தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ். வந்த கருணாஸ் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆக்கிரமித்த காணியை விடுவிக்க 880 மில்லியன் ரூபாய் கோரும் இராணுவம்

image_pdfPRINT

வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டியுள்ளது. இவ் யுத்தத்தால் இந்தியாவுக்குச் சென்ற மக்களில் 60 ஆயிரம் மக்கள் மீண்டும் இங்கு குடியேறுவதுக்காக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு வருகை தரவுள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது.

அம் மக்களுக்கும் மேலும் இங்குள்ள மக்களுக்குமாக மொத்தம் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியுள்ளது. இதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு 14 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 60 வீதமான நிதியில் 12 ஆயிரத்து 700 வீடுகள் கட்டப்பட்டன.

அதே போன்று 2017 ஆம் ஆண்டு 9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆயிரம் வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டிருந்தன. ஒதுக்கப்பட்ட நிதியில் மீதம் ஏனைய உட்கட்டமைப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி வீடமைப்பு அதிகாரசபை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த கால நிலமைகளால் மக்கள் இழந்தவற்றில் ஏதாவது ஒன்றுக்கான இழப்பீட்டினை வழங்குவதுக்கு நாம் தீர்மானித்துள்ளோம். இதற்காக எம்மிடம் 32 ஆயிரத்து 800 கோவைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் எமது இலக்கு 19 ஆயிரம் கோவைகளையாவது நிறைவு செய்ய வேண்டும் என்பதேயாகும்.

அவற்றில் மாதாந்தம் 2000 கோவைகள் வீதம் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே அதில் உள்ள சிறு சிறு தவறுகளை திருத்தி அவற்றை விரைவாக பூர்த்தி செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டியதுடன் அதற்காக நடமாடும் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

காணியற்ற மக்களுக்கு காணிகளை கொள்வனவு செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கத்துக்கு 680 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. இவற்றை விட மீளக் குடியமர்ந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதே பிரச்சனையாகவுள்ளது. அதற்காக வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகளை அமைப்பதுக்கு கலந்தாலோசித்து வருகின்றோம். மாங்குளம் மட்டக்களப்பு பூநகரி போன்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

தொழிற்சாலைகளில் கட்டாயமாக வடக்கில் இருந்து 1000 பேருக்கும் கிழக்கில் இருந்தும் 1000 பேருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு தொழில்களை வழங்குவர்களுக்கே வீட்டு திட்டத்தை அமைக்கும் பணியை வழங்கவுள்ளோம். 8 மாவட்டங்களிலும் உற்பத்தி வலயங்களை அமைக்கவுள்ளோம்.

மேலும் படையினர் வசமுள்ள காணிகளில் 530 ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதுக்கு இராணுவம் 880 மில்லியன் ரூபாய் நிதிகோரியுள்ளது. இது தொடர்பாக நாம் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளதுடன் இந்நிதியை பெற்று அக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதுக்கான அமைச்சரவை பத்திரங்களை தயாரித்து வருகின்றோம் என்றார்.

பிறந்தநாள் அன்று தியாக தீபத்திடம் ஆசி வாங்கிய சிறுவன்

image_pdfPRINT

யாழ்ப்பணத்தில் சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் கொளுத்தி வணங்கினான்.

இராணுவத்துக்கு எதிராக பெண் அதிரச்சி சாட்சியம்

image_pdfPRINT

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.

வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 14 சாட்சியங்களில் 7 சிவில் சாட்சிகளிடம் இன்று மன்றினால் சாட்சியம் பெறப்பட்டது.

அதன் போது பெண்ணொருவர் சாட்சியம் அளிக்கும் போது,

இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் பயணித்த வேளை வழிமறித்த இராணுவத்தினர் அவர்களை சிறுப்பிட்டி படை முகாமுக்குள் அழைத்துச் சென்றனர்.

அதனை முகாமுக்கு அண்மையில் நின்று அவதானித்தேன். சிறிது நேரம் அங்கு என்ன நடக்கின்றது என அவதானித்தேன். எனினும் அந்த இளைஞர்கள் இருவரும் முகாமுக்குள் இருந்து வெளியே வரவில்லை என அந்தப் பெண் சாட்சியமளித்தார்.

அதேவேளை நேற்று வியாழக்கிழமை 7 சாட்சியங்கள் பதியப்பட்டதுடன் மீதி சிவில் மற்றும் பொலிஸ் சாட்சியங்களை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி பதியப்படும் என தெரிவித்த நீதிவான் வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

பின்னணி

1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர். எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரினால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 1996ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர். அத்துடன் இளைஞர்களின் துவிச்சக்கர வண்டிகளின் பாகங்களையும் இராணுவப் பொலிஸார் மீட்டிருந்தனர்.

அந்தச் சான்றுப் பொருள்கள் தற்போது இந்த வழக்குடன் சேர்க்கப்பட்டுள்ளன.

செவ்விந்தியர்கள் போல் தமிழர்களும் அழிக்கப்படும் ஆபத்து -வடமாகாண கல்வி அமைச்சர்

image_pdfPRINT

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழினம் அழிக்கப்படுவதற்கான முன்னேற்பாடே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் என வடமாகாண கல்வி அமைச்சர் க .சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

தெற்கிலே தமிழர்கள் வாழவில்லையா ? ஏன் வடக்கில் சிங்களவர்கள் வாழ கூடாது என சிங்கள தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தெற்கிலே தமிழர்களை அரசாங்கம் அழைத்து சென்று குடியேற்றவில்லை. அங்குள்ள மக்கள் தமது உழைப்பில் காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறியவர்கள்.

ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு இல்லை. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை திட்டமிட்டு அபகரித்து அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுகின்றார்கள்.

வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பு என தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்கின்ரர்கள். இலங்கைக்கு அயல் நாடுகளால் எந்த ஆபத்தும் இல்லை அவ்வாறு இருக்கையில் எதற்காக தேசிய பாதுகாப்பு என காணிகளை தொடர்ந்து அபகரித்து வருகின்றார்கள்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் , தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு மூலகாரணமாக விளங்குபவர்கள் முப்படைகளும் , சில பௌத்த தேரர்களுமே.

நாங்கள் வடக்கு கிழக்கில் தொழில் நிமித்தம் அல்லது வேறு காரணங்களுக்காக வாழ வரும் சிங்கள மக்களை எதிர்க்கவில்லை. அரசாங்கத்தினால் திட்டமிட்டு குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றங்களை தான் எதிர்க்கின்றோம் என தெரிவித்தார்.

சிங்கள குடியேற்றம் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

image_pdfPRINT

சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி , கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம்.

நாடாளுமன்றில் ஒத்திவைத்த பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களே தெரியாது.

நாடாளுமன்றில் இந்த பிரச்சனை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயாதீன தமிழீழம் மலரவேண்டுமா ? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா ? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படும்-மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்

image_pdfPRINT

வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்பட்ட காணி மற்றும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடமைப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (05) ; இடம்பெற்றிருந்த்து.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அவற்றில்; முதற்கட்டமாக வலி வடக்கு கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 650 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.

மேலும், ஏற்கனவே பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருந்த அராலி – பருத்தித்துறை வீதி எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்துவிடப்படவுள்ளது என தெரிவித்தார்.

error: Content is protected !!