SHARE

அண்மையில் நாட்டில் நடைபெற்ற கண்டி கலவரம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி மற்றும் அதையொட்டிய தினங்களில் கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் வெறுப்பு மற்றும் மதப்பிரிவினைவாதத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணைகளை செய்வதற்காகவே மக்களிடமிருந்து தகவல்கள் மற்றும் எழுத்து மூல சாட்சியங்களை பகிரங்கமாக கோரியுள்ளது.

அந்தவகையில் குறித்த சம்பவத்தினால் பாதிப்புக்குட்பட்ட மற்றும் சம்பவம் தொடர்பில் அக்கறை கொண்ட நபர்களிடமிருந்து சாட்சியங்கள் சேகரிக்கப்படவுள்ளது.

ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் தகவல்கள் 3 பக்கங்களிற்கு மேற்படாமலும் சம்பவம் நடந்த திகதி, நேரம் இடம் சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளடக்க வேண்டும் எனவும் அத்துடன் புகைப்படங்கள் மற்றும் ஒலி,ஒளி நாடாக்களையும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் அனைத்தையும் கீழ்க்காணும் முகவரிக்கு இம்மாதம் எதிர்வரும் 21 திகதி அன்றோ அதற்கு முன்னதாகவோ அனுப்பிவைக்க முடியும்.

பிரதேச ஒருங்கிணைப்பாளர்
கண்டி பிரதான காரியாலயம்,
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
இல.8/1, பிறிம்றோஸ் வீதி,
பெராதெனிய வீதி,
கண்டி.

தொடர்புகளுக்கு – 081-2228009/ 070-3654901

Print Friendly, PDF & Email