ஐ.நா.வின் அமைதிகாக்கும் செயலரிடம் ICPPG நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம் கேள்வி
ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியில் அமர்த்தப்பட லெபனான் அனுப்பப்படவிருந்த இலங்கை இராணுவத்தின் லெப் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் யுத்தக்குற்றவாளி என்பதை தாம் அறியப்படுத்துவதற்கு முன்னதாவே உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனமைக்கான காரணம் யாது என ஐஊPPபு நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சிவரத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியின் செயலர் JEAN-PIERRE LACROIX க்கு குறித்த விவகாரம் தொடர்பில் நேற்றதினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் வினவியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளுக்காக லெபனான் செல்லவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் ஐக்கியநாடுகள் சபையால் அண்மையில் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டார்.
போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். பின்னர் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கின் இராணுவ அதிகாரியின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.விசாரணைகள் மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தர்.
எனினும் குறித்த நடவடிக்கைகளில் மந்தகதி நிலைமைகளே காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே ICPPG அமைப்பின் நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சிவரத்தினம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியின் செயலருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
ஐ.நா.வின் அமைதிகாக்கும் படை நடவடிக்கையில் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தினரில் யுத்தக்குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை அவர்களின் பணி அமர்வுக்காக விதிமுறைகளை செயல்ப்படுத்தும் கடமையிலிருந்து ஐ.நா. தவறியுள்ளமை அதன் விதிமுறைகளை கேலிக்குள்ளாக்கியுள்ளது.
அமைதிப்படைக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் குறித்த பின்னணியை இணையத்தளங்களின் மூலம் மிக இலகுவாக பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிந்ததாயின் லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த வீரர்கள் குறித்து தங்களிற்கு வழங்கப்பட்ட PHP படிவங்களில் அவரின் பின்னணி எவ்வாறு இடம்பெறாது போயிருந்தன?.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி லெபனானில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படை நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தின் 49 வீரர்களை முன்னதாகவே அனுப்பியிருந்தனர். அதில் 2016 இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அனுப்பப்பட்ட வீரர்கள் தொடர்பில் சிலரது ஆவணங்களை இலங்கை இராணுவத்தினர் இலங்கை மனித உரிமை கவுன்சிலில் சமர்ப்பிக்கத்தவறியுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 திகதி லெபனானுக் அனுப்பப்பட்ட இலங்கையின் 49 வீரர்களும் ஐ.நா. வின் விதிமுறைகளின் படி முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கு அனுப்பட்டார்களா. அப்படி அனுப்பபட்டிருப்பின் அதில் போர் குற்றம் இளைத்தவர்கள் இடம்பெற்றிருந்தமை எவ்வாறு? அப்படியாயின் அவர்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தவும்
அதேவேளை 2004 ஆண்டிலிருந்து 2007 வரையில் ஹெய்டியில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 134 இலங்கை அமைதிகாக்கும் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். எனினும் இது குறித்த நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முழுப்பொறுப்புரியவர்கள் நீங்களே. ஐ.நா. அமைதிகாக்கும் வீரர்களின் வதிமுறைகள் மற்றும் அமைதிகாக்கும் படை வீரர்களால் நிகழ்த்தப்படும் பாலியல் சம்பந்தப்பட் வன்கொடுமை விடயங்களில் ஐ.நா. கடுமையான நிலைப்பாட்டையே கடைப்பிடிப்போம் என தெரிவித்துள்ளீர்கள்.
அந்தவகையில் குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் ஐ.நா.க்கான அமைதிகாக்கும் வீரர்கள்; முற்றிலும் நேர்மாறாகவே உள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
SRI LANKAN ARMY’S FLOUTING OF VETTING AGREEMENT FOR UN PEACEKEEPERS