முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –
-யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்
முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோம். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம்பெண்ணுக்கு பிடியாணை
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்கு எச்சரிக்கை
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை எச்சரித்துள்ளார்.
அதேவேளை தமிழர் சுயநிர்ணய உரிமையை மறுப்பது என்பது ஆபத்தானதாகும் எனவும் அவர்; இலங்கையை எச்சரித்ததுடன் இலங்கை அரசானது தழிழர் சுயநிர்ணய உரிமையினை அடிப்படையாக கொண்டு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டியது கட்டாயமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலையின் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் (16) தென்மேற்கு லண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின் அனுசரணையில்இ தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது,
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டடத் தொகுதியின் Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணி முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவரும் தொழிற்கட்சியின் தலைவருமான ஜெரமி கோபின்இ நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையிலேயே இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை மேற்கண்டவாறு எச்சரித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவ் அரசை நாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை இராணுவம் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் முடிவுக்கு கொண்டவரப்பட வேண்டும்.
யுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள்இ சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு நாம் வலியுறுத்துகிறோம்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்றது போல் இல்லாமல் தொழிற் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும் பிரித்தானிய இராஜதந்திரிகள் உட்பட அதிகாரிகளை ஒரு இடத்திற்கு மாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைத்து அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்
பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது.
தென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின் அனுசரணையில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டிடத் தொகுதியின் Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணிக்கு இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சருமான ஜோன் மக்டொன்ல், நிழல் சுகாதாரத்துறை அமைச்சர் ஜொனத்தன் அஸ்வேர்த், நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர், நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.
தன்னாட்சியுரிமை உட்பட தமக்கே உரித்தான சகல உரிமைகளையும், சுதந்திரங்களையும் தமிழ் மக்கள் வென்றெடுப்பதற்குத் தொழிற்கட்சி உறுதுணை நிற்கும் என்ற நிலைப்பாட்டை இந்நிகழ்வில் பங்கேற்கும் நிழல் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்த இருப்பதோடு, இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பன்னாட்டுக் குற்ற மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஊடாக சிறீலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு தாம் எடுக்க உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துரைகளை ஆற்ற இருக்கின்றனர்.
தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக இதில் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளைப் பங்கேற்குமாறு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
பொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு
-இலங்கை அரசுக்கு ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களில் 280 பேரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் அவர்கள் தொடர்பான விவரங்களையும் (ITJP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்டுள்ள 280 பேர் தொடர்பான தகவல்களில் இருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விசாரணையின் முக்கியத்துவம் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.
மேலும் மே 18 அன்று இராணுத்திடம் சரனடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இராணுவம் பதிலளிக்க வேண்டும். குறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
நினைவு சுடர் நல்லூரில்
கார்ப்பிணிப் பெண் கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு பிணை
அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்
அவர்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது- முதலமைச்சர்
காலில் விலங்கிட்ட நிலையில் கைதி அவதி; மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரல் கொடுப்பார்களா ?
காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
































