SHARE

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர்  தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை எச்சரித்துள்ளார்.

அதேவேளை தமிழர் சுயநிர்ணய உரிமையை மறுப்பது என்பது ஆபத்தானதாகும் எனவும் அவர்; இலங்கையை எச்சரித்ததுடன் இலங்கை அரசானது தழிழர் சுயநிர்ணய உரிமையினை அடிப்படையாக கொண்டு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டியது கட்டாயமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலையின் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் (16) தென்மேற்கு லண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின் அனுசரணையில்இ தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது,

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டடத் தொகுதியின்  Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணி முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவரும் தொழிற்கட்சியின் தலைவருமான ஜெரமி கோபின்இ நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையிலேயே இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை மேற்கண்டவாறு எச்சரித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவ் அரசை நாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை இராணுவம் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் முடிவுக்கு கொண்டவரப்பட வேண்டும்.
யுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள்இ சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு நாம் வலியுறுத்துகிறோம்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்றது போல் இல்லாமல் தொழிற் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும் பிரித்தானிய இராஜதந்திரிகள் உட்பட அதிகாரிகளை ஒரு இடத்திற்கு மாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைத்து அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email