Home Blog Page 3

சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு!

image_pdfPRINT

-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா இன்று (24 மார்ச் 2025) தடை விதித்துத்துள்ளது.

2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights Sanction Regime) கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) பல வழிகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.

ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சிலவாவுக்கு எதிராக 50 பக்க ஆவணந்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருந்தது. அதுபோலவே ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்தது.

அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால் பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பலவழிகளில் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களின் மூலம் முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது.

கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போது ஆட்சியமைந்துள்ள பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கடந்த தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தடையை அறிவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆயினும் இதனை நடைமுறைப்படுத்த தாமதித்ததால், ICPPG இந்த போராட்டத்தை தொடர்ந்து வந்ததுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விட்டிருந்தது. அத்துடன் ITJP, Redress, Sri Lanka Campaign, Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் கடும் உழைப்பின் விளைவாக, இன்று பிரித்தானிய அரசு இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தப்பிவந்தவர்கள், சித்திரவதை அனுபவித்தவர்கள் மற்றும் பிரித்தானாய வாழ் இளையோரின் இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும். இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டந்தில் இது ஒரு ஆரம்பபடியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

https://www.change.org/p/time-for-the-uk-to-sanction-sri-lanka-s-army-commander-war-criminal-shavendra-silva

https://edm.parliament.uk/early-day-motion/58497/12th-anniversary-of-the-end-of-the-sri-lankan-civil-war

‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ – ITJP அறிக்கை வெளியீடு

image_pdfPRINT

‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று (02) யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று வெளியிட்டு வைத்தனர்.

பாதிக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம்,பொதுச்சுடர் ஏற்றல், மலர் அஞ்சலியை தொடர்ந்து வரவேற்புரையை  மூத்த ஊடகவியலாளர் தி.எஸ் தில்லைநாதன்  நிகழ்த்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதம குரு சோ தண்டாயுதபாணி தேசிகர், யாழ். முறைமாவட்டத்தின் மூத்த குருவும் முன்னாள் ஊரணி மயிலிட்டி பங்குத்தந்தையும் லண்டன் கத்தோலிக்க ஆண்மீக பணியகத்தின் இயக்குநருமான அருட்தந்தை தேவராஜன் அடிகள் ஆகியோர் அஞ்சலி உரையை ஆற்றினர்.

தொடக்க உரையை வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு செயலாளர் ந. ஆனந்தராஜ் ஆற்றினார் அதன் பின்னர் அறிக்கை அறிமுகமும் பிரதிகள் வழங்கலையும் தொடர்ந்து சிறப்புரைகளை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிறிட்டோ பெர்னானடோ மற்றும் வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு தலைவர்  ச.செல்வேந்திரா ஆகியோர் ஆற்றியிருந்தனர்.  

நன்றி உரையினை  சிரேஸ்ட ஊடகவியலாளர் மகாலிங்கள்  நிகழ்தியிருந்தார். இந்த நிகழ்வில்  சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tamil-ITJP_VALVETTITHURAI_TESTIMONIES-OF-A-MASSACRE_Final_compressed-March-2025

ITJP_VALVETTITHURAI_TESTIMONIES-OF-A-MASSACRE_Digital_Final-March-2025

Sinhala-ITJP_VALVETTITHURAI_TESTIMONIES-OF-A-MASSACRE_Final_compressed

தமிழ் ஒலிபரப்பின் முன்னோடி
ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

image_pdfPRINT

தமிழ் ஊடகப்பரப்பின் மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் லண்டனில் நேற்று(21) காலமானார்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் இலங்கை வானொலியில் தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்த அறிவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதன்பின்னர் 1970களில் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த அவர் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராக மூத்த தயாரிப்பாளராக பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றார்.

அதன்பின்னர் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்ட நிலையில் தனது மறைவுவரை அதன் தலைமை பொறுப்பில் இருந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி. பி. சி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பணிபுரிந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் தேசியத்தலைவர் மேதகு வே. புpரபாகரனை செவ்விகண்ட பெருமைக்குரியவர்.

இவர் தயாரித்த பல ஒலிபரப்புத் தொடர்களும் முக்கிய பிரபலங்களுடனான செவ்விகளும் இவரை உலகப்பரப்பெங்கும் வாழ்ந்த தமிழ்மக்களிடையே பிரபலமாக்கியிருந்தன.

ஆனந்தி சூரியபிரகாசத்தின் மறைவுக்கு நமது ஈழநாடு ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

”பெப்ரவரி 4, ஒவ்வொரு வருடமும் வரும் நாம் என்ன செய்யப் போகிறோம் ! ….”

image_pdfPRINT

-இதயச்சந்திரன்

ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை மறுக்கப்பட்ட நாள் பெப்ரவரி நான்கு.

எமை ஆண்ட ஏகாதிபத்தியவாதிகளாலும், வலதுசாரி தமிழ்த்தேசிய அரசியல் கனவான்களாலும் சிங்கள தேசத்திடம் தமிழ் இறைமை ஒப்படைக்கப்பட்ட நாள்.

அன்று தொடங்கிய தமிழின அடியழிப்பு, முள்ளிவாய்க்காலில் பேரழிவாக விஸ்வரூபமெடுத்தது. இந்திய ஒன்றிய அரசாங்கங்களும் அதன் ஆளும் வர்க்கமும், உலக ஏகாபத்தியங்களும் தமக்குள் பிரிந்து கிடந்தாலும், சில தளங்களில் ஒன்றுபட்டு நின்றாலும், எமக்கு நடந்த இனப்படுகொலை குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.

இதற்குள் சுழியோடி எமக்கான நீதியை, சுயநிர்ணய உரிமையை பெறலாம் என்கிற கற்பிதம் கடந்த 15 வருடங்களாக எம்மவரிடையே விதைக்கப்படுகிறது.

சந்திப்புக்களும் சமூக வலைத்தளக் கூட்டங்களும் தொடர்ந்தவண்ணமுள்ளது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் இயக்கமொன்றின் அவசியம் குறித்து, ஒவ்வொரு தேர்தலின் பின்பும் பேசப்படுகிறது.

கட்சி மற்றும் அதிகார அரசியல் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த்தேசிய தளத்தில், மக்கள் திரள் அரசியல் பற்றிப் பேசுவதை எவரும் கவனிப்பதில்லை. கட்சி அரசியல், தமிழ்நாட்டு அரசியல் கடந்து, புதிய தளத்தில் எப்போது சிந்திக்கப் போகிறோம்?. ‘பெப்ரவரி 4, ஒவ்வொரு வருடமும் வரும். நாம் என்ன செய்யப் போகிறோம்?.

இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து
பிரித்தானியாவிலும் தமிழர்கள் போராட்டம்

image_pdfPRINT

தமிழீழமே எமது நாடு. தமிழீழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசத்துடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் தேசிய சுதந்திர தினமான இன்று (4) அதனை கரிநாளாக பிரகடணப்படுத்தி தமிழர் தாயகம் உட்பட உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்தவகையில் இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் தமிழீழமே எமது நாடு தமிழ் ஈழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

image_pdfPRINT

சுதந்திர தினத்தினை (04.02.2025) கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றையதினம் காலை 11 மணியளவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடணப்பபடுத்தி கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

image_pdfPRINT

பல்வேறு அழுத்தங்களுக்குஅச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆந்தவகையில் கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக சென்றடைந்ததும் அங்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ‘இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்’ ‘நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா’ ‘உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள்’ ‘காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே’ ‘எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும்’ ‘நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு’ ‘சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு’ ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே’ உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மூன்று மாவட்ட தலைவிகள் மற்றும் உறவினர்கள்இஇலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றகுழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்இபொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை வடகிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு நகரில் இந்தபோராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தர பெறப்பட்ட நிலையில் இந்த போராட்டம் செங்கலடியில் நடாத்தப்பட்டது.

புரியாத புதிராக முடிவடையும் எனது நீதித்துறை வாழ்க்கை – நீதிபதி இளஞ்செழியன் ஆதங்கம்

image_pdfPRINT

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று(01.02) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்கள் உள்ளன. 12.01.2025 இல் இருந்து அதற்கு தகமையானவன் நான். நான் தகமையாலும், இலக்கம் 1 இன்றில் இருப்பதாலும் நான் தகுதியானவன். எனது பிறந்த தினம் 20.01 ஆகும். மேல் நீதிமன்றம் 61 வயதை அடையும் போது முதல்நிலை நீதின்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள். 28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுகிறது. வேதனையா, சோதனையா, சாதனையா எதுவும் புரியவில்லை.

அனைத்தும் நல்லதிற்கே என மனதை திருப்திப்படுத்தக் கூட முடியவில்லை. ஆனால் இன்று பெருவிழாவை வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் ஒழுங்கமைத்து வடக்கு – கிழக்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் இங்கு வருகை தந்ததையிட்டு உங்கள் நன்றி உணர்வை மதிக்கிறேன்.

நீங்கள் அருகில் நிற்கும் போது எனக்கு புத்துணர்வு வருகிறது. இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு உள்ளுணர்வாக கிளம்புகின்றது. இருப்பினும், சந்தோசமாக போவதற்கு நான் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

இலண்டனில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழர் மரபு திங்கள் விழா

image_pdfPRINT

தமிழர்கள் வாழ்வில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா இலண்டனில் கடந்த ஞாயிறு (19/01/2025) அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இயற்கையை தெய்வமாக வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் கொண்டாடும் இந்த தை மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ் மரபு திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிகழ்வானது கிங்ஸ்டன் நகரசபையின் (Kingston Borough Council) ஆதரவுடன் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD), தமிழ் தகவல் நடுவம் (TIC), ITC கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை மற்றும் சறே தமிழ் பாடசாலை உள்ளடங்கிய கிங்ஸ்டன் தமிழ் மரபுக்குழுவினரால் (Kingston Tamil Heritage Group) சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க மற்றும் மயிலாட்டம் குதிரையாட்டம் புலியாட்டம் கரகாட்டம் என தமிழர்களின் கண்கவர் கலைகளுடன் நிகழ்வின் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு தமிழர்களின் பல்வேறு கலை பாரம்பரிய நிகழ்வுகளுடன் மரபுத் திங்கள் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது.

நமது ஈழநாடு மற்றும் மெய்வெளி ஆகியன ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடக்கது.

TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்

image_pdfPRINT

TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வின் திறம்பட செயலாற்றிய அதன் செயற்பாட்டாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ‘உலக மனித உரிமைகள் தினம் 2024’ நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் இலண்டனில் நடைபெற்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் இந்த மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மேற்படி நிகழ்வினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பல வழிகளில் செயலாற்றிய TIC யின் செயற்பாட்டாளர்கள் நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அந்தவகையில் செயற்பாட்டாளரான அழகரத்தினம் நிரோஜன் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் யோகலிங்கத்திடமிருந்து பாராட்டு சான்றிதழினை பெற்றுக்கொண்டார்.

அழகரத்தினம் நிரோஜன்
முகமட் இப்ராஹிம் அஃப்ரிடி  
அப்துல் சமீட் முகமது சஹீம்
error: Content is protected !!