Home Blog Page 18

நீர் கொள்கலனில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனில் இருந்து; சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

உடுத்துரை வடக்கு, தாளையாடி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இதேவேளை குறித்த பெண் படுகொலை செய்யட்டுள்ளமை உடற்;கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாண வீரர்

image_pdfPRINT

யாழ்ப்பாணத்தின் மைந்தன் விஜயகாந்த் விஜேஸ்காந்த் இன்று இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது முதலாவது ஆட்டத்தினை களம் கண்டார்.

இதன் மூலம் சர்வதேச இருபது-20 தொடர் ஒன்றில் விளையாடிய முதல் யாழ்ப்பாணத்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் Sunrisers Hyderabad அணியில் பந்துவீச்சாளராக இடம்பிடித்திருந்த விஜேஸ்காந்த் இன்று Lucknow Super Giants அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் அணியில் இடம் பிடித்திருந்தார்.

இந்தப்போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப்பெற்றது.

இந்நிலையில் இதில் 4 ஓவர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசிய விஜேஸ்காந்த் வெறும் 27 ஓட்டங்களையே எதிரணி பெற அனுமதித்திருந்தார்.

Lucknow Super Giants அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பந்து வீசுவதற்காக விஜேஸ்காந்த அணித்தலைவரினால் அழைக்கப்பட்டார்.

இதன் போது சிறிலங்கா வடக்கின் யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச T20 போட்டியை களம்காணும் முதல் வீரர் விஜேஸ்காந்த் என வர்ணனை அறையிலிருந்து விஜேஸ்காந்துக்கு சிறப்பான அறிமுகம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பான அறிமுகத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் குறிப்பாக வடக்கு மக்கள் பெருமையாக கொண்டாடி வருகின்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Sunrisers Hyderabad அணி Abhishek Sharma (75) Travis Head (89) ஆகியோரின் அதிரடி இணைப்பாட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்களைப்பெற்று வெற்றியை தனதாக்கியது.

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு : இருவர் கைது!

image_pdfPRINT

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரைக் கைது செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 35 வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து 30kg 500g கேரளா கஞ்சாவினை போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

image_pdfPRINT

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘பொலிசார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய், பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்” என பல்வேறு கோசங்களை எழுப்பி இருந்தனர்

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார்.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பொலிசார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்குமிடையில் விசேட சந்திப்பு!

image_pdfPRINT

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

சந்திப்பின் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான ஜோன் பிஜேர்கெம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு!

image_pdfPRINT

யாழ், புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன், வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த எலும்புக்கூடு புதையுண்டு இருந்த நிலையை பார்க்கும் போது, உரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமையால் இது நல்லடக்கம் செய்யப்பட்ட சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுத் தொகுதி , அவற்றுடன் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட நீதவான் அது தொடர்பில் பகுப்பாய்வு பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். இதனையடுத்து  அகழ்வு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும்  சடலம் மீட்கப்பட்ட பகுதியை அண்மித்த பகுதிகளில் கிடங்குகள் வெட்டி , கட்டட வேலைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் , மீட்கப்பட்ட சடலத்தின் பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றுக்கு கிடைத்த பின்னர் , நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிகளில் வேலைகளை முன்னெடுக்குமாறும் ஏனைய பகுதிகளில் வேலைகளை முன்னெடுக்க தடையேதும் இல்லை என ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டு இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதன் அடிப்படையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

image_pdfPRINT

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

image_pdfPRINT

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள் கையேந்தும் வர்க்கத்தில் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை போராட்டம் இடம்பெற்றது. கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன்பாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

image_pdfPRINT

மே தினத்தை முன்னிட்டு இன்று (30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணிகளுக்கு 6000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 4000 பொலிஸார் ஏனைய பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, மே தினப் பேரணிகள், கூட்டங்களை பதிவு செய்வதற்காக ட்ரோன் கெமராக்களை அனுமதியின்றிப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையேற்படின் முன்னனுமதி பெற வேண்டுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விதிமுறை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறவுள்ள மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்குப் பொருந்துமெனவும் அவர் கூறினார்.

மேலும் கொழும்பு நகரில் மாத்திரம் 14 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் நாடளாவிய ரீதியில் 40 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிபந்தனை அடிப்படையில் பிரித்தானிய
தேர்தல் பிரச்சாரக்களத்தில் தமிழ் இளையோர்

image_pdfPRINT

நிபந்தனைகயின் அடிப்படையில் பிரித்தானியாவின் கன்சர்வேர்ட்டி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செயலாற்றிவரும் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் குழு அக்கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான Hon. Loue Franch MP அவர்களின் பிரச்சார பணியில் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் ஆளும் கட்சியான கன்சர்வேர்ட்டிவ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பெரும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொள்ள தமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் புலம் பெயர் தமிழர்களும் வாக்குகளின் எண்ணிக்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளாக உள்ளனர் என்பது மறுப்பதுக்கில்லை.

இந்நிலையிலேயே இந்த சர்ந்தப்பத்தினைப்பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டு நீதி வழங்குவதோடு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியா தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழர்களின் தனிநாட்டு தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரச்சார பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டு செயலாற்றி வரும் தமிழ் செயற்பாட்டாளர்கள் Old BexLey and sidcup பகுதியில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Loue Franch MP அவர்களுக்கான ஆதரவு வேண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இன்பராஜ் பத்திநாதர்க, ஜன் தேவராசா ஆகியோர் தலைமையில் செயற்பாட்டாளர்களான மரியநாயகம் வேதநாயகம், ரமணன் சிவலிங்கம்ஈ, ஸ்வரன் டறோஜன், ஏஞ்சலோ நிருசன், பத்மநாதன் துலக்ஷன், றூபன் மத்தியாஸ், ஜெயவீரசிங்கம் பேரானந்தம், சிவசிதம்பரம் கோகுலன், துரைராஜா நீதிராஜா, பரணீதரன் பர்மிலன், பிரியதர்ஷன் கனகலிங்கம் ஆகியோரே இப் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்!

image_pdfPRINT

”உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன் வெளிப்படையான விசாரணை அவசியம்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதித் தேர்தலில் உறுதியாக நான் போட்டியிடுவேன். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள். எமது அரசாங்கத்தின் கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்.

விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தப்படும். அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு விசேட நீதிமன்றமொன்று நிறுவப்படும்.
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சுயாதீனமான அரச சட்டத்தரணிகள் கொண்ட அலுவலகமும் நிறுவப்படும்.

தற்போதைய அரசாங்கம் குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மறைத்துள்ளது. நாம் அதனை எமது அரசாங்கத்தில் வெளிக்கொண்டு வருவோம்” இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!