முள்ளிவாய்க்கால் டயரி
மே-04
இராணுவத்தின் மோட்டார் செல் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் ஓய்ததாக இல்லை. மக்கள் நகரும் இடங்களிலெல்லாம் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.
தந்தை ஒருவரின் காலில் ஓடிக்கொண்டிருந்த இரத்தத்திற்கு கட்டு போட்டுவிட்டு காயப்பட்ட மற்றவர்களிடம் ஓடிப்போவதற்குள் அருகில் வீழ்ந்து வெடித்த செல்லின் சன்னம் ஒன்று அவரின் வயிற்றைக் கிழித்தது.
எங்கு பார்த்தாலும் இங்க ஓடிவாங்கோ இவருக்கு செல் பட்டுட்டு கட்டு போடுங்கோ என்ற கூக்குரல்களும் இரத்தமுமே காணப்பட்டன.
நேரடி சாட்சி