SHARE

தியாக தீபம் திலீபனின் நினைவாக நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை ஆனந்தபுரம், ஊற்றுப்புலம், பாரதிபுலம் மற்றும் கட்டப்பிரய் ஆகிய இடங்களை சேர்ந்த வாழ்வதார உதவி தேவைப்படுவோருக்கு தொழில் முதலீடு மற்றும் பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் Mr. Gam Hewage Vidura Vishwanath , Mr. Iguruhena Janaka Hemantha Thalawaththaghe , Miss. Igurahenage Amodya Ilmi Thalawaththage ஆகியோரின் கூட்டிணைந்த ரூபாய் 4 இலட்சத்து 5 ஆயிரம் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் ஆனந்தபுரம் கிழக்கைச் சேர்ந்த ரவீந்திரராசா பேபி அவர்களுக்கு கோழி வளர்ப்பிற்காகவும், ஊற்றுப்புலம் நாவலர் பண்ணையைச் சேர்ந்த சந்திரகுமாரி இந்திராணி என்பவருக்கு தோட்டம் செய்வதற்காகவும் தலா 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன் பாரதிபுரத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி கிருஸ்ண குமார் என்பவருக்கு விவசாயத்திற்கு தேவையான நீர் இறைக்கும் இயந்திரமும் 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலும் கட்டைப்பிராயை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி 42 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலும் வழங்கி வைப்பட்டன.

மேலும் மாவிரர் குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Print Friendly, PDF & Email