SHARE
image_pdfPRINT

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவரான சரவணன் அவர்கள் நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, 4 முன்னாள் போராளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு சுயதொழில் விருத்திக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

லண்டனில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் கடந்த 12ம் திகதி (12/08/2022) கிளிநொச்சியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதி உதவியை திரு மனோச் பிரசன்னா அவர்கள் அவர்கள் நன்கொடையாக வழங்கி உதவியிருந்தார்.

இவ்வாறாக, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகளை நமது ஈழநாடு அறக்கட்டளை ஊடாக, திரு கீத் குலசேகரம் அவர்கள் தொடர்ந்து செய்து வருவது குறிப்படத்தக்கது.