SHARE

நமது ஈழநாடு ஊடகத்தின் உதவிக்கரமான வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ், யுத்தத்தின் அங்கவீனமுற்று, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்ப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீர்ர் குடும்பத்தினருக்கு இம்மாதம் இரண்டாம் கட்டமாக உலர் உணவு பொதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரின் 6 ஆவது வேண்டுகோளுக்கு அமைய, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு இலட்சம் பெறுமதியான உதவிகள் இந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

இதன்போது உழைக்கும் திறன் அற்ற 12 முன்னாள் போராளி குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகள், சிறு கைத்தொழில் செய்யக்கூடிய இரு குடும்பங்களுக்கு  கோழி வளர்ப்பிற்கான கூடு அமைப்பதற்குரிய பொருட்கள்  மற்றும் விவசாயத்துக்கான விதை தானியம், தண்ணீர் குழாய் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன்,  மாவீரரின் தந்தையான முதியவர் ஒருவருக்கான மலசல கூட இருக்கையும், மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு நடை வண்டிகள் (Walker) மற்றும் கால் இழந்த இருவருக்கு ஊன்றுகோல்களும் (Crutches) என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான நிதியுதவியை லண்டனை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான திரு சங்க தனஞ்சய ஜெயசிங்க அவர்கள் வழங்கியிருந்தார்.

லண்டனை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான திரு கீத் குலசேகரம் அவர்களினால் உருவாக்கப்பட்டு நேரடியாக வழிநடத்தப்பட்டு வரும் நமது ஈழநாடு வாழ்வாதார திட்டம் தொடர்ந்தும் மாதாந்தம் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய

வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில்,  கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் உமாகாந்தன் (சரவணன்) அவர்கள் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, திரு கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், இந்த உதவிகள் இம்முறை வழங்கப்பட்டுள்ளன.

Print Friendly, PDF & Email