SHARE

சட்ட விரோத கடல் அட்டைப்பண்ணைகளால் தமது மீன்படித்தொழில் பாதிப்படைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி இன்றுடன் 36 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவ குடும்பங்களிற்கு நமது ஈழநாட்டின் உதவிக்கரத்தினால் அத்திய அவசிய உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிராஞ்சி இலவங்குடா கடலில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளால் தமது பாரம்பரிய சிறகுவலை மீன்படித்தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால் தமது குடும்பங்கள் பெரிதும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறி அப்பகுமி மீனவ குடும்பங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பண்ணைகளை அகற்றுவதாக சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதியளித்த போதிலும் இதுவரையில் அவைகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) 36 ஆவது நாளாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையிலேயே அவர்களின் அன்றாட உணவுத்தேவைக்கு உதவும் வகையில் இலண்டனிலுள்ள சதீஸ் அன்ரனி மற்று அவரது சகோதரரான இன்பராஜ் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் அத்திய அவசிய உணப்பொருட்கள் அடங்கிய பொதி நமது ஈழநாடு உதவிக்கரத்தினால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email