Home Blog Page 6

மாவீரர்களுக்கு விளக்கேற்றி சிறிதரன் மீண்டும் பணியில்!

image_pdfPRINT

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் , உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தியதாக கட்சி தகவல் தெரிவித்துள்ளன.

அதனை தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடாற்றிய பின்னர், மாவட்ட அலுவலகமாகிய அறிவகத்தில் ஆதரவாளர்களை சந்தித்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆதரவாளர்கள் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான சூழல் கனிந்திருப்பதாக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன்-தோல்வியின் பின் சுமந்திரன்

image_pdfPRINT

இந்த தேர்தலில் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிட்டது. அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் ஒரு ஆசனம் , திருகோணமலையில் ஒரு ஆசனம், யாழ் . தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தலா ஒரு ஆசனங்களை பெற்றுள்ளோம். ஆகவே இது எமக்கு தோல்வி அல்ல.

இந்த முறை நான் தெரிவாகவில்லை. மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனாலும் தொடர்ந்து தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயக்குவேன். பொறுப்புடன் மக்களுடன் சேர்ந்து இயக்குவேன். 

புதிய அரசியலமைப்புக்கு எமது உதவிகள் தேவைப்பட்டால் , அதனை நான் நிச்சயம் செய்வேன். 

தமிழரசு கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. நான் மக்கள் மத்தியில் தேசிய பட்டியலில் செல்ல மாட்டேன் என கூறியுள்ளேன். ஆனாலும் தேசிய கட்சி விவகாரம் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தான் அமையும்.

மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் . ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொது தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவள் கூட மூன்றில் இரண்டு பெருபான்மை கிடைக்கவில்லை. கட்சி தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர். 

ஆனால் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதனை தாண்டி 173 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதொரு உயர் தகு வெற்றியாகும் 

அவர்கள் தேர்தல் அறிக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெட்ட தெளிவாக கூறியுள்ளார்கள். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போதான தேர்தல் அறிக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி காலத்தில் வரைபை பூர்த்தியாக்குவோம் என கூறி இருந்தார்கள். அந்த விடயங்களை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதனை சரியாக செய்யும் போது அவர்களுக்கு எமது கட்சியின் பூரண ஒத்துழைப்பு இருக்கும். 

மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் ட்ரம்ப்

image_pdfPRINT

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவாகி உள்ளார். இதனை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பொக்ஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நேற்று நடைபெற்றன.

இந்நிலையில் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டனர். 

அமெரிக்காவிலுள்ள மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 277 பேரின் ஆதரவை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 பேரின் ஆதவை பெற்றுள்ளார். அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வெற்றி குறித்து ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவிப்பு

அமெரிக்காவில் புதிய அரசியல் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

வெற்றிகாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. 

என் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளை தீர்ப்பேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்-வேந்தன்!

image_pdfPRINT

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது சிங்கள மக்கள் ஆனால் அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம் என்றும் இணைந்திருந்த வடக்கு கிழக்கையும் பிரித்தவர்கள் இந்த தேசிய மக்கள் சக்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூட இல்லாமல் செய்தவர்களும் இவ் தேசிய மக்கள் சக்தியினர்

அதேபோன்று ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட யுத்த குற்ற பிரேரணை தொடர்பில் இலங்கையில் யுத்த குற்றம் நடைபெறவில்லை என்றும் தாம் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு போகத் தேவை இல்லை என்று சொன்னவர்களும் இந்த இவர்கள்தான்

ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிபப்பது எங்கள் தலையில் மண் அள்ளி போடும் செயல் என்றும் தெரிவித்ததுடன் நாங்கள் ஜனநாயக ரீதியாக பல கட்சிகளின் கூட்டாக இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஆகவே எங்களுக்கு எமது சங்கு சின்னத்திற்க்கு வாக்களியுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

ஜே.வி.பி தமிழர்களுக்கு எதுவும் செய்யாது-ஐங்கரநேசன்

image_pdfPRINT

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

பனை அபிவிருத்திச்சபையின்  தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்த மாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்கு விடிவுகாலம் பிறந்திருப்பதாகவே நாம் நினைத்தோம். ஆனால், இருவார காலத்துக்குள்ளாகவே அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பொருத்தமற்ற ஒருவர் பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந் நியமன மாற்றத்தின் மூலம்  பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சி மேலும் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது மக்களில் சிலரும் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது.  

பனை வளத்துறை முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு அதனை வினைத்திறனுடன் இயங்கவைத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா முதலாவது தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைவர்களாக இருந்த நடராஜா, கோகுலதாசன் போன்ற  ஒருசிலரைத்தவிர பனை அபிவிருத்திச்சபைக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதற்குப் பொருத்தமற்றவர்களாகவே இருந்தார்கள். தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்களும் அக் கட்சிகளின் விசுவாசிகளுமே வேறு போக்கிடமின்றி நியமனம் செய்யப்பட்டதுபோல இங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். 

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமான பொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. 

பனை அபிவிருத்திச்சபை இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தால் பனை மரத்துக்குச் சாபவிமோசனமே கிடையாது. மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பனை அபிவிருத்திச்சபையைத் தொடர்ந்தும் நம்பாமல் மாகாண நிர்வாகத்தின் கீழ் அல்லது சுயாதீனமாகவேனும் பனை வளத்தைப்பேணிப் பனைப் பொருளாதாரத்தை ஊக்குவிற்பதற்கு ஒரு அமைப்பை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துறைசார் வல்லுநர்கள் இதற்கு முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். 

முல்லைத்தீவில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ள வடக்கு மாகாண ஆளுநர்

image_pdfPRINT

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பானது, முல்லைத்தீவு (Mullaitiu) மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது. 

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!

image_pdfPRINT

அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அவர்,

தற்போதைய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள உறுப்பினர்கள் இல்லை என்றும், எதிர்கால குழப்பங்களைத் தடுப்பதற்கு அறிவுள்ள தலைவர்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நான் முன்பு பாராளுமன்றத்தில் இருந்தேன், இப்போது எங்கள் குழுவிலிருந்து ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இவர்கள் மட்டுமே தற்போது நாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள்.

தனது குழு மூன்று அல்லது நான்கு வருடங்கள் சேவையாற்றியுள்ளதுடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் மூத்த உறுப்பினர்கள் இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம்; அரசாங்கத்தின் நிலைப்பாடு!

image_pdfPRINT

புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது அல்லது திருத்துவது தொடர்பான விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அது தொடர்ந்தும் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மாத்திரமே மாற்றங்களைச் செய்ய முடியும் என்றார்.

எவ்வாறெனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.

புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் அரசாங்கம் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

image_pdfPRINT

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல் -ஜனாதிபதி

image_pdfPRINT

அடுத்த வருடத்திற்குள் மாகாணாசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

உள்ளுராட்சி சபை தேர்தல்களையும் அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வலுவான அமைச்சரவை நாடாளுமன்றம் மாகாணசபைகள் உள்ளுராட்சி சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான அரசியல் பொறிமுறை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

image_pdfPRINT

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!