வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பானது, முல்லைத்தீவு (Mullaitiu) மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.