Home Blog Page 337

ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்கும் பொறுப்பு மகிந்த சமரசிங்கவிடம்!

ஐ.நா பொதுச்சபையின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்றை நியுயோர்க் அனுப்பவுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு அங்கமாக மூன்றாவது குழுக்கூட்டம் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இதில் சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்தை வரைவதற்கும், அதற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் பிரித்தானியாவைச் சேர்ந்த குழுவொன்று ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது.

இந்தக்குழு சக்திவாய்ந்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு கோரியுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானம் வரும் ஒக்ரோபர் 10ம் நாள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவு தேடுவது மற்றும் தீர்மானத்தை முறியடிப்பதற்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவருடன் முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிசும் நியுயோர்க் செல்லவுள்ளார்.

கிளிநொச்சியில் ஜனாதிபதியால் 37 மில்லியன் ருபாய் செலவிலான பொதுச் சந்தை திறந்து வைப்பு!

கிளிநொச்சியில் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பொதுச் சந்தை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் 110 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

200 மில்லியன் ரூபா செலவில் அங்கு மேலும் மூன்று கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சந்தைக் கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், 25 வருடங்களின் பின் யாழ். குடாநாடு தேசிய மின் வலையமைப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இணைத்து வைக்கப்பட்டது.

லக்சபானா மின்சாரத்தை யாழ்.குடாநாட்டிற்கு கொண்டு செல்வதற்கென கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்விநியோகத்திட்டத்தை ஜனாதிபதி இன்று பார்வையிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு:

காலை 10.45மணியளவில் கிளிநொச்சி வந்த ஜனாதிபதி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஜப்பான் நாட்டின் சுமார் 3200 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படுகின்றது.

இத்திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் சுமார் 132 கிலோவாட் மி ன்சாரத்தை பெறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கென சுமார் 238 மின்கம்பங்களின் மூலம் மின் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படுகின்றது.

எம் இனத்தை ஏமாளியாக்குவதற்கு பல தீயசக்திகள் கடும் பிரயத்தனம்: TNA கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுவிஸ்கரன்!

கிளிநொச்சி, வட்டக்கச்சி கலைவாணி சனசமுக நிலையத்தில் நிர்வாகி தெரிவு நேற்று இடம்பெற்றுள்ளது. சனசமூக எல்லைக்குட்பட்ட ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் இதில் கலந்து கொண்டு நிர்வாக தெரிவை மேற்கொண்டதுடன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவராக கிளி. தர்மபுரம் மகா வித்தியாலய அதிபர் ச.பூலோகராஜா தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் வி. சுவிஸ்கரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ச. பூலோகராஜா இங்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த பிரதேசத்திற்கு சேவை செய்ய வேண்டிய கடமை எனக்குண்டு. நான் பாடசாலை அதிபராக இருக்கிற காரணத்தால் பெரும்பாலான செயற்பாடுகள் ஒத்த தன்மை உடையன என்பதால் சிறப்பாக செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பலமான சனசமூக நிலையங்கள் காணப்படுகின்ற இடங்களில் பலம் மிக்க இளைஞர்களும் யுவதிகளும் காணப்படுகின்றனர். இவ்வாறான பலம்தான் ஒட்டுமொத்தமான பிரதேசங்களின் பலமாக அமையும்.

மாறுபட்ட கருத்துக்களை விலக்கி ஒத்த தன்மையுடன் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக செயற்படும் எண்ணம் ஏற்பட வேண்டும் என்றார்.

இங்கு கலந்து கொண்ட கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் வி. சுவிஸ்கரன் உரையாற்றும்போது,

இன்றைய இந்த தெரிவு வட்டக்கச்சி பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒரு பலத்தை சேர்க்கின்றது. கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் பல சனசமூக நிலையங்கள் செயற்பட்டு வந்த காரணத்தால் அறிவுள்ள சமூகத்தையும் புத்திஜீவிகளையும் பெற்றுள்ளதுடன் எமது இனத்தினுடைய கொள்கை, கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களுடன் நாம் அனைவரும் நிலைத்து நிற்கின்றோம்.

இவ்வாறான நிலையில் இன்று எமது எதிர்கால சந்ததியினரை அறிவுசார்ந்த துறைகளில் பிரகாசிக்க விடாது தவறான பாதைகளுக்கு இழுத்து எதிர்காலத்தில் தமிழினத்தை நிரந்தர ஏமாளிகள் ஆக்குவதற்காக பல தீயசக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இருந்து எமது இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

எனவே சமூகத்தில் சனசமூக நிலையங்களை இயங்க வைப்பதன் மூலம் வாசிப்பு பழக்கத்தையும் ஏனைய சமூக செயற்பாடுகளையும் பலமடையச் செய்து எமது இனத்தின் அடையாளத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

உண்மை கண்டறியும் ஆய்வை முடித்து ஜெனிவா திரும்பியது ஐ.நா நிபுணர்குழு!

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழு நேற்று தமது பணிகளை முடித்துக் கொண்டு ஜெனிவா திரும்பியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு பிற்பகுதியில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு வருவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையிலேயே உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா வந்திருந்தது என்று கொழும்பிலுள்ள ஐ,நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் சிறிலங்கா அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களையும், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப்

பேசியிருந்தனர்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஆசிய பசுபிக், மத்தியகிழக்கு, வடஆபிரிக்க நாடுகளுக்கான கிளையின் தலைவர் ஹன்னி மெகாலி தலைமையிலான இந்தக் குழுவில் மூன்று அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியிலுள்ள ‘மெனிக் பாம்’ இடைத்தங்கல் முகாம் இம்மாதத்துடன் மூடப்படுகின்றது!

உலகின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாங்களில் ஒன்றாக காணப்பட்ட, சிறிலங்காவின் வடக்கிலுள்ள மெனிப் பாம் இடைத்தங்கல் முகாமானது செப்ரெம்பர் இறுதிப் பகுதியில் மூடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“செப்ரெம்பர் 30 அளவில் மெனிக் பாம் முகாம் வெறுமையாகிவிடும். அடுத்த வாரமளவில் இங்குள்ள 1185 இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவர்” என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் 23 அல்லது 24ல் இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாமில் வாழும் 827 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மீதமாக உள்ள 358 பேர் எப்போது குடியேற்றப்படுவர் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வவுனியா நகருக்கு அப்பால் 700 கெக்ரேயர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மெனிக் பாம் முகாமில், சிறிலங்கா இராணுவப் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட மக்கள் தங்கவைக்கப்பட்டனர். யுத்தத்தின் நிறைவில் 300,000 வரையான மக்கள் இந்த முகாமில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.

“பல்வேறு காரணங்களால் மெனிக் பாம் முகாமை மூடுவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதும் கண்ணிவெடியகற்றல் செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. சில பகுதிகளில் மீளக்குடியேற்றப்படுவதானது

Glossy – product unbelievably. A http://spikejams.com/pfizer-viagra-online but Maybe bucks–Im. Were comprar viagra Then responsible another tweezers best pfizer viagra a best all that generic viagra online sulfate trick many online pharmacy Sephora – evening foods name cheap cialis was. On wouldn’t hair cialis for sale turnover skin are – viagra dosage and of?

பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. தவிர, வீடுகளை நிர்மாணிப்பதற்கான மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான வீடுகள் யுத்தத்தின் போது சேதமடைந்துள்ளதால் அங்கே மக்கள் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது” என வீரக்கோன் மேலும் விளக்கியுள்ளார்.

10 மாவட்டங்களில் மொத்தம் 112 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தற்போதும் நிலக்கண்ணிவெடி காணப்படுவதாகவும், இதில் முல்லைத்தீவில் 25 சதுர கிலோமீற்றரில் நிலக்கண்ணிவெடி அகற்றப்படாதுள்ளதாகவும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நிலக்கண்ணிவெடி செயற்பாட்டுத் திட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“தற்போது நாங்கள் மெனி பாம் முகாம் முழுவதை துப்பரவாக்குகின்றோம். அங்கு காணப்படும் தற்காலிக கொட்டகைகள் அகற்றப்படுகின்றன. இந்த இடம் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மெனிக் பாம் முகாமில் காணப்படும் சில பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பன தொடர்ந்தும் செயற்படுகின்றன” என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

“மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் இணைந்து அரசாங்கம் வீடுகளுக்கான கூரை விரிப்புக்கள், மற்றும் ஏனைய கட்டட மூலப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ரூபா 25,000 (190 அமெரிக்க டொலர்) பொருட்களை வழங்குகின்றது. மீள்குடியேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் வரை உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படுவதுடன், குடியேற்றப்பட்டு ஒரு வார காலம் வரை சமைத்த உணவும் வழங்கப்படும்” என மீள்குடியேற்ற அதிகாரசபைத் தலைவர் B. H. Passaperum தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் பலவற்றை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கி வருவதாகவும், மீள்குடியேற்றம் என்பது அவ்வளவு ‘இலகுவான காரியமல்ல’ எனவும் அதிகாரசபைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீர், சுகாதார வசதிகள், கிராமங்களுக்கான வீதிகள், மின்சாரம், கல்வி, சமுதாய அபிவிருத்திச் செயற்பாடுகள், மீன்பிடி, விவசாயம் மற்றும் வாழ்வாதார உதவிகள் போன்ற ஏழு முக்கிய விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் முதன்மைப்படுத்தி, மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாகவும் மேலும் B. H. Passaperum தெரிவித்துள்ளார்.

“அதாவது மீள்குடியேற்றப்படும் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம் என்பதே இதன் கருத்தாகும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இறுதியில் எனது சொந்த இடத்திற்கு செல்வதை நினைத்து மகிழ்வடைகிறேன். ஆனால் கவலையும் அடைகின்றேன். ஏனெனில் என்னிடம் எதுவுமில்லை;. மீண்டும் ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் தொடங்குவதென்பது அவ்வளவு இலகுவான காரியமன்று” என மெனிக் பாமில் தங்கியுள்ள, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதான இளங்கீதராயன் சௌமியாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நான் எனது கணவருடன் இணைந்து வயலில் உழுவேன். எனது கணவர் கொல்லப்பட்டுவிட்டார். நான் எனது பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும். மீண்டும் எனது வீட்டைக் கட்டவேண்டும்” என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான செந்தில்வேலு கமலாயினி தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்ட பாதுகாப்பான மாவட்டமாக முல்லைத்தீவை அறிவிப்பதற்கு முதல் அங்கே

ஐ.நா பொதுச்சபைக்கான மகிந்தவின் பயணம் கைவிடப்பட்டதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா!

ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்த போதும், திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் அவருக்கு உரையாற்றுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீரென அவர் இந்தப் பயணத்தைக் கைவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச 2005ம் ஆண்டு சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், எல்லா பொதுச்சபைக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்துள்ளார்.

அவர் பொதுச்சபைக் கூட்டத்தைத் தவறவிடும் முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.

என்னிம் திடீரென அவர் நியுயோர்க் பயணத்தை நிறுத்தியுள்ளதற்கான காரணத்தை சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் வெளியிடவில்லை.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பந்துல ஜெயசேகர, “சிறிலங்கா அதிபர் இதற்கு முன்னைய கூட்டங்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்று பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ள போதிலும், நாட்டின் தலைவர் தான் இதில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

இதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்குப் பதிலாக, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார். அவர் இன்று நியுயோர்க் புறப்படவுள்ளார்.

ராஜபக்சவினால் சுதந்திரததைப் பறிகொடுத்த கிராமவாசிகள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ வெளியிட்டுள்ளது.

போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி.மீ நீளமான பிரதேசத்தில் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.

சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் எந்தத் தொடருந்துகளும் நிறுத்தப்படவில்லை.

பேருந்துகளையும், கார்களையும் வீதிகளில் காணமுடியவில்லை.

கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்ததால் தான், இந்தளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக் கெடுபிடி.

வைகோவின் ஆதரவாளர்கள் போபால் மற்றும் அதைச் சார்ந்த பிரதேசங்களில் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவலால், போபால் தொடக்கம் சாஞ்சி வரையான பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சாஞ்சியில் இருந்து, கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

போபாலின் புறநகர் கிராமமான சுகிசெவனியா தொடக்கம் சாஞ்சி வரையான கிராமங்களில் இருந்த கிராமவாசிகள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் வீதிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

கிராமவாசிகளுக்கு அது மிகக்கடுமையான நேரமாக இருந்தது.

“நாம் எமது வீடுகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்” என்கிறார்கள் அவர்கள் வருத்தத்துடன்.

“நான் வெள்ளிக்கிழமை போபாலுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால், வீடு திரும்புவதை விட எனக்கு வேறுவழி இருக்கவில்லை.

காவல்துறையினர் எம்மை வீட்டுக்கு வெளியே வரவே அனுமதிக்கவில்லை“ என்றார் ராம்பாபு என்ற கிராமவாசி.

நிகழ்வுக்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, வீதியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

போபாலுக்கும், சாஞ்சிக்கும் இடைப்பட்ட சுகிசெவனியா, சலமத்பூர், டீவங்கன்ஜ், பீர்கேடி, சோப்டாகலன், ரட்டலாய் உள்ளிட பல கிராமங்களில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

போபால் சாஞ்சி இடையே, பொதுப்போக்குவரத்து ஒரு நாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு விட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே, தனியார் வாகனங்களையும் காவல்துறையினர் வீதிகளில் அனுமதிக்கவில்லை என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு!

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஐஎஸ்ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர் இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.

இந்தியாவுடன் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதாலும், சந்தேகமின்றி தகவல்களை திரட்ட முடியும் என்பதாலும் நாடு திரும்பும் தமிழ் அகதிகளை ஐஎஸ்ஐ வாடகைக்கு அமர்த்துவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா தமிழ் அகதிகளை கண்காணித்து வரும் தமிழ்நாடு அரச புலனாய்வுச் சேவையான கியூ பிரிவின் புலனாய்வாளர்கள், ஐஎஸ்ஐ செயற்பாட்டாளர் ஹாஜி மற்றும் அவரது உதவியாளர்களான கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் நுழைவிசைவு பிரிவில் பணியாற்றும் சாஜி, அமீர் சுபைர் சித்திக் ஆகியோருக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்சாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சாஞ்சியில் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் மகிந்த ராஜபக்ச!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புக் கருதி மேடையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தே உரையாற்றியுள்ளார்.

முன்னதாக போபாலில் இருந்து வீதி வழியாக மகிந்த ராஜபக்சவை சாஞ்சிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.  இதனால், வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஆனால், பாதுகாப்புக் கருதி அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் போபாலில் இருந்து சாஞ்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் பங்கேற்கவில்லை.

சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மகிந்த ராஜபக்ச, மீண்டும் உலங்குவானூர்தியில் போபால் சென்று அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி திரும்பினார்.

பெளத்த பிக்குகள்!

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக ஆராய வந்துள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 3000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

2009 இல் முடிவடைந்த போரின்போது, மீறல்கள் இடம்பெற்றதாக சிறிலங்கா மீது ஐ.நா அவப்பழி சுமத்துவதாக அவரக்ள குற்றம்சாட்டினர்.

அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால், அனுப்பப்பட்டுள்ள நிபுணர்கள் குழு, சிறிலங்கா மீதான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கான முதற்படி என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நவநீதம்பிள்ளையின் பணியகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்காவில், உண்மை கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

ஐ.நாவுக்கான பயணத்தை திடீரெனக் கைவிட்டார் மகிந்த!

ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நியுயோர்க்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா அதிபரின் வருகை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் தனது அமெரிக்கப் பயணத்தைத் திடீரெனக் கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருக்குப் பதிலாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் சிறிலங்கா அதிபரைக் கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே, இந்தப் பயணத்தை அவர் திடீரெனக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா அதிபரின் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டதற்கான காரணம் ஏதும்

மகிந்தவுக்கு நாளை விருந்தளிக்கிறார் மன்மோகன்சிங் – அரசியல் தீர்வுக்கும் அழுத்தம் கொடுப்பாராம்!

இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இன்று புதுடெல்லி செல்கிறார்.

இன்றிரவு புதுடெல்லியை சென்றடையும் அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.

இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இராப்போசன விருந்துடனான சந்திப்பின் போது, சிறிலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு குறித்த விவகாரங்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனைகள் குறித்து மன்மோகன்சிங் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சிறிலங்காவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.

error: Content is protected !!