SHARE

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புக் கருதி மேடையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தே உரையாற்றியுள்ளார்.

முன்னதாக போபாலில் இருந்து வீதி வழியாக மகிந்த ராஜபக்சவை சாஞ்சிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.  இதனால், வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஆனால், பாதுகாப்புக் கருதி அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் போபாலில் இருந்து சாஞ்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் பங்கேற்கவில்லை.

சாஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மகிந்த ராஜபக்ச, மீண்டும் உலங்குவானூர்தியில் போபால் சென்று அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி திரும்பினார்.

Print Friendly, PDF & Email