சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் இன்று கொழும்பில் காலமானார். சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை எய்தினார்.
ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஊடாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் பின்னர் குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை முழுமையாக ஏற்பதாக பகிரங்கமாக அறிவித்த அவர் தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் செயற்பட்டவராவார். குமார் பொன்னம்பலத்தின் மறைவின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்ற அவர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்ட அவர் அதன் பிரதித்தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு வரை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை பூர்த்திசெய்த அவர் குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபட்டார். அவர் இலவசமாகவே தமிழ் கைதிகளின் வழக்குகளில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
A group of young activist in the UK, participating in the Mullivaikkal Remembrance Day event opposite British Prime Mister’s office No. 10 Downing Street, Westminister, submitted a petition to the Prime Minister, Rt. Hon. Theresa May, signed by 138 grieving mothers who are currently staging a protest in Kilinochchi, northern District in Ilankai. A similar petition was also given to UN Secretary General António Guterres by the International Truth and Justice Project (ITJP).
The Tamil Coordinating Committee (TCC) also submitted a separate petition demanding the international investigation into the war crimes committed in Sri Lanka.
The sit-in demonstration on the main A9 Road-side near the army camp has been going on for over three months. Since, the end of the war in May 2009, mothers from different Tamils speaking districts in the Tamil homeland were calling on the government to let them know where are their children surrendered to the army, but no answers given to them yet.
The demonstrators say that they are using the only means at their disposal to voice their frustrations and get the national and international attention to their cause and get the Sri Lankan government to respond.
A young Tamil activist Mr Luxshan Tharmalingam led this team including Mr Deivendram Letchuman, Mr Jeganathan Sivagnam, Mr Kirojan Thuraiyappah and Miss Ranitha Thiyagesu.
The petitions call on the British Prime Minister and the UN Secretary-General to urge the government of Sri Lanka to release the names of those who are still in custody.
– மனுவில் கையெழுத்திட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் –
இலங்கை அரசபடைகளால் தமிழீழத்தில் கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய மே 18 அன்று, தாயகத்தில் வாழும் மக்களாலும் புலம்பெயர் ஈழத்தமிழர்களாலும் உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்படவுள்ளது. இந்நிலையில் இலண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வில், பொதுமக்களினதும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பெரும்பான்மை அங்கத்தவர்களினதும் விருப்பத்துக்கு மாறாக, அந்த அமைப்பின் தலைமை அதிகாரத்தை கைகளில் வைத்துள்ள சில நபர்கள், தமிழீழத் தேசியக்கொடியேற்றலை முற்றுமுழுதாக நிராகரித்து வருவதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
தமிழ் தேசத்தின் ஆன்மாவான தமிழீழத் தேசியக்கொடியை பிரித்தானிய தமிழர் பேரவை புறக்கணிப்பது மிகவும் துரோகத்தனமான செயல் என பல பிரமுகர்கள் வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவித்துள்ள நிலையிலும், தமிழ்மக்களின் பிரதிநிதி என்று தங்களுக்கு தாங்களே முடிசூடிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை, மக்களின் ஆணைக்கு கட்டுப்படாது தன்னிச்சையாக செயற்படுவது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழினம் ஒரு இறையாண்மையுள்ள தேசிய இனம் என்பதை உலகுக்கு பறைசாற்றி நிற்கும் எமது தேசிய கொடியையும் பாதுகாத்து, உலக நாடுகளை அதை ஏற்கச் செய்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய வரலாற்றுக் கடமை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் அமைப்புக்களின் கையில் இருப்பதை அவர்களின் தலைமை மறந்து செயற்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயம். அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக, இராஜதந்திரம் என்ற போலிக்காரணங்களை முன்வைத்து, சொந்த மக்களின் விருப்புக்களை புறந்தள்ளி, செயற்பட்டுவருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த பிரச்சனை தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமையிடம் பேச்சு வார்த்தைகளை நடாத்தி சுமூகமான தீர்வை எட்டுவதற்கு, பல பிரமுகர்களும் முன்னாள் போராளிகளும் அந்த அமைப்பின் உறுப்பினர்களும் பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர். ஆனால் அவற்றையெல்லாம் புறக்கணித்த, பிரித்தானிய தமிழர் பேரவையின் தற்போதய தலைமை, கேள்வி எழுப்பியவர்கள் மீது தனிபட்ட முறையிலான தாக்குதல்களையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே. அவற்றையெல்லாம் மீறி, மீண்டும் இந்த வருடமும் சர்வாதிகாரமாக தமது சொந்த விருப்புக்கு ஏற்றபடியே நிகழ்வுகளை நடாத்த முடிவு செய்தமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசத்தை இழந்து நிற்கும் நிலையில் நாம், எமது தேசிய அடையாளங்களையும் இழக்க முடியாது. இதனைப் பொறுக்க முடியாத தேசிய உணர்வுமிக்க இளைய சமுதாயத்தினர், தொடர்ந்தும் பிரித்தானிய பேரவையின் தன்னிச்சையான முடிவுக்கு எதிராக, கையெழுத்துப் போராட்டமொன்றை நடாத்தி வந்தமை அனைவரும் அறிந்தது. இரவுபகல் பாராது ஓய்வொழிச்சலின்றி இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த வெகுஜன போராட்டத்திற்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் மட்டுமன்றி, பல தரப்பட்ட பிரமுகர்களும் தமது ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.
ஒரு கிழமை காலப்பகுதியில் 2000 இற்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டுள்ளமை மற்றும் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் ஊடகங்களில் வெளிப்படையாக பிரித்தானிய தமிழர் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை என்பன பெரும்பான்மை மக்கள் தேசியக் கொடி ஏற்றப்படுவதையே ஏகோபித்தமாக விரும்புகிறார்கள் என்பதை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கிறது என்று அடக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் சட்ட வல்லுனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திரு. கீத் அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காரணத்தால் பிரித்தானிய தமிழர் பேரவையின் சில முக்கிய உறுப்பினர் தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடாத்தி வருவதாகவும், தரக்குறைவான குற்றச்சாட்டுக்களை திட்டமிட்டு பரப்பிவருவதாகவும் அவர்; மேலும் தெரிவித்தார்.
இந்தப் போராட்டம் எந்த அமைப்பும் சாராமல், பொதுமக்களால் சுயாதீனமாக முன்னெடுக்கபட்ட போதிலும், TYO உட்பட பல அமைப்புக்கள் முன்வந்து தமது ஆதரவை வழங்கியுள்ளன. இந்த வகையில், தமிழ் தோழமை அமைப்பினர் (Tamil Solidarity) இந்த கையெழுத்துப் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதுடன், பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமையை இதற்கு பதில் வழங்கச்செய்யும் பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.
தேசிய நிகழ்வுகளில் தழிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என ஏன் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்பதை விரிவாக விளக்கும் கோரிக்கையும், அதனை வலியுறுத்தி பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துக்களும், அதனை ஏற்கும் 2000 பொதுமக்களின் கையெழுத்துக்களும்; கொண்ட மனு தம்மிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை பிரித்தானிய தமிழர்பேரவைக்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ் தோழமை அமைப்பினர் தமது இணையத்தளம் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். அத்துடன், இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது எனவும், பெரும்பான்மையான மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டியது மக்கள் பிரதிநிதி; என சொல்லிக் கொள்ளும் அமைப்புகளின் கடமையாகும் எனவும் தமிழ் தோழமை அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு சேனன் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டு, 48 மணிநேரம் கடந்த நிலையில் இன்னும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாதது மிகவும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக இந்த வெகுஜன போராட்டத்தை நெறிப்படுத்தியவர்களுள் ஒருவரும் முன்னாள் போராளியுமான திரு. குமரேசன் பாலசிங்கம் தெரிவித்தார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினரின் இந்த செயலானது மிகவும் தவறானதெனவும் அதனை மாற்றியமைத்துக் கொள்ளும்படியும் மூத்த போராளிகளான பொன். தியாகம் அப்பா, புரட்சிக் கவிஞர். காசியானந்தன், நீதியாளர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், இறுதி நாள்வரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடிய போராளிகள்; மற்றும் மாவீர்களின் பெற்றோர் என பலதரப்பட்டோரும் வெளிப்படையாக ஊடக மூலம் விட்டுள்ள உருக்கமான வேண்டுதல்களையும், மனுவில் கையொப்பமிட்ட 2000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின்; மனுவையும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை புறக்கணிப்பு செய்திருப்பதன் மூலம் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை பிரித்தானிய தமிழர் பேரவை இழந்து விட்டது எனவும் செல்வி அம்பிகை சீவரத்தினம் தெரிவித்தார். இவர் பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் முன்னாள் நிறைவேற்று உறுப்பினராக இருந்தவர் என்பதும், தலைமையின் சர்வாதிகார செயற்பாடுகளால் விரக்தியுற்று வெளியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனையை வெகு சுலபமாக தீர்ப்பதற்கு பல வழிகள் இருந்தும், இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்கள் மனங்களை புண்படுத்தி, முள்ளிவாய்க்கால் தினத்தில் தேசிய கொடி ஏற்றாமல் நிகழ்வுகளை செய்தே ஆகவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை பிடிவாதம் செய்வது, அவர்கள் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கிலும், தேசிய சின்னங்களை அழிக்கும் நோக்கிலும் உறுதியாக இருப்பதை தெளிவாக நிரூபிக்கின்றது என திரு. துரையப்பா கிரோஜன் தெரிவித்தார். இந்த போராட்டம் இத்துடன் நிறைவடையப் போவது இல்லை என்றும், பிரித்தானிய தமிழர் பேரவையின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வரை தொடரும் எனவும் தெரிவித்தார். தவறும் பட்சத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ்; மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல என்பதை பகிரங்கமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் மக்கள் ஆணையை மீறும் பொது அமைப்புக்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் திரு. துரையப்பா கிரோஜன் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க, இந்த முயற்சி ஒரு சில தனிமனிதர்களால் மேற்கொள்ளப்படும் சதி என்ற வதந்தியை பரப்புவதன் மூலம், இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த முயன்று வரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை, இப்போராட்டத்தில் முன்னெடுக்கும் இளையோர்களையும் கையெழுத்திட்ட மக்களையும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி மூலம் அழைப்புக்களை ஏற்படுத்தி அச்சுறுத்திவரும் மிகவும் கீழ்த்தரமான செயலிலும் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது.
– புலம்பெயர் அமைப்புக்களிடம் மாமனிதர் கவிஞர் நாவண்ணனின் மகள், கவிஞர் பூங்கோதை உணர்வுபூர்வமான வேண்டுதல் –
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளின் போது, தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்துவருவதன் மூலம் புலம்பெயர் மக்களின் ஒற்றுமையையும் விடுதலை உணர்வையும் சில அமைப்புக்கள் திட்டமிட்டு அழித்து வரும் நிலையில், இதை எதிர்த்து பல தரப்பட்டவர்களும் தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தனது உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, எழுத்து மூலம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையிலும், மக்கள், உணர்வுக்கு மதிப்பளிக்காமல் பிரித்தானிய தமிழர் பேரவை செயற்பட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வழங்கியுள்ள, கவிஞர் பூங்கோதை அவர்கள் புலம்பெயர் அமைப்புகளிடம் மிகவும் உணர்வுப்பூர்வமான விண்ணப்பம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவரது தந்தை, திரு. நாவண்ணன் அவர்கள் தமிழீழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் மட்டுமன்றி, விடுதலைப்போரில் தன்னை ஐக்கியமாக்கியவர். தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற கௌரவ விருதைப்பெற்றவர். இவருடைய மகளான உதயவேணி கதிர்ச்செல்வன் (பூங்கா) ஒரு விடுதலைப்போராளி மட்டுமன்றி ஒரு சிறந்த கவிஞருமாவார். பூங்கோதை என்ற புனைபெயரில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவர் வழங்கிய கருத்தின் முழுவடிவம் வருமாறு;
“இன்று புலம்பெயர் நாடுகளில் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்படுவது தமிழீழக் கொடியின் தேவை பற்றியது.மிகப்பெரும் இனவழிப்பின் பின்னர் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் மத்தியில் தமிழ் அமைப்புக்கள் தேசியக்கொடி சார்ந்த முரண்பாடுகளை தெறிக்கவிட்டிருக்கும் செயலானது, ஏற்கெனவே சோர்ந்து போன மக்களை விரக்தி நிலைக்கு இழுத்துச்செல்லும் ஒரு செயலாகவே நான் காண்கிறேன்.
ஒரு இனத்தை தனித்துவப்படுத்துவதும் அந்த இனத்தை ஒருங்கிணைப்பதும் அந்த நாட்டின் தேசியக் கொடியே என்பது சாதாரணமாக எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. பண்டைக்காலத்தில் அரசர்கள் போரில் வென்றதும் முதலில் கொடிமரத்தையே வெட்டிச்சாய்ப்பார்கள். ஏனென்றால் கொடி தான் அந்த நாட்டு மக்களையும் அரசையும் பிரதிபலிக்கிறது.
எமது தமிழீழப் போராட்ட வரலாற்றில் கூட சீலன் எனப்பட்ட மாவீரன் சாள்ஸ் அன்ரனி முதன் முதலில் அரசுக்கெதிரான தனது எதிர்ப்பைகாட்டசிங்கக் கொடியைபொஸ்பரஸ் வைத்து எரித்தார். ஏனென்றால் அந்த சிங்கக்கொடி சிங்கள அரசை, சிங்கள தேசத்தை பிரதிபலிப்பது என்பதால். எனவே ஒரு தேசத்தை, இனத்தை தன் கீழ் ஒருங்கிணைக்கும் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்றோ, அவசியமற்றது என்றோ கருதுவது எமது தேசத்தின் அடையாளத்தை சிதைப்பதாகவே முடியும்.
மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் பிரித்தானியர்களால் கைது செய்யப்பட போது வேறு எந்த வார்த்தையையும் பயன்படுத்தாமல் உதிர்த்தஒரே ஒரு வார்த்தை “தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள் ” என்பதே. ஏனென்றால்ஒரு இனத்துக்கு விடுதலை உணர்வை கொடுக்க, மக்களின் சோர்வை நீக்கி போராட்டத்தை வலுப்படுத்த அந்தக் கொடி ஒன்றே போதும் என்பதை அந்த விடுதலைப் போராளி அறிந்திருந்தார்.
எமது தமிழீழத்தின் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களும் கூட தேசியக் கொடியை முன்னிறுத்தியவர் என்பது மறுக்க முடியாத உண்மை. வெறுமனே போராளிகளின் நிகழ்வுகளில் அல்லாமல், பொதுமக்களின் நிகழ்வுகளிலும் பாடசாலை நிகழ்வுகளிலும் கூட தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது.உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன் என பல்வேறுபட்ட மக்களையும் ஒன்றிணைந்த தமிழினமாக இணைத்து வைத்திருந்தது இந்தக் கொடிதான். இன்று எத்தனையோ தமிழ் தேசிய உணர்வாளர்கள் தாயகத்தில் தேசியக் கொடியை ஏற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தும் அதனை தவிர்ப்பது அல்லது எதிர்ப்பது வருத்தத்திற்கு உரியதே.
சிலர் பேசும் போது போராளிகள் சண்டைக்கு போகும்போது கொடியைப் பிடித்துக் கொண்டா சென்றார்கள், இல்லைத்தானே என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லைத்தான். ஏனென்றால் அவர்கள் தேசத்தை, தேச விடுதலையை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தவர்கள். அதனால் தான் அவர்கள் வித்தாகும் போது தேசியக்கொடியை போர்த்தி மதிப்பளித்தோம்.
ஆனால் அவர்கள் வாழும்போது தேசியக் கொடியைத் தமது உயிராக மதித்தவர்கள்.போராளிகள் மட்டுமன்றி ஈழத்து தமிழ் மக்களும் கூட கொடியேற்றத்தின் போது , தேசியக் கொடிப் பாடலைப் பாடும் போது உணர்வெழுச்சியோடு அமைதிவணக்கம் செலுத்துவதை போன்ற எழுச்சி எப்போதும் அமைவதில்லை. இந்த எழுச்சியூட்டும் நிலை கொடிஏற்றல் இல்லையென்றால் அழிந்துபோகும் என்பதை இன்றைய குழப்பவாதிகள் அறியாதவர்கள் அல்ல.
கடந்தகாலங்களில் போர்ச்சூழலில் வாழ்ந்த நம் உள்ளங்களில் எமது இனத்துக்கு ஏற்பட்ட அழிவும் துரோகமும் ஆறாத வடுவாக எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஆனால் இந்த உணர்வுகளை எமது வருங்கால சந்ததியினர் எப்படி அறிவார்கள்? தாயகத்தில் இளைஞர்களும் இன்றைய சிறுவர்களும் கூட ஒரு அடக்கப்படும் சூழலில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே அந்த தேசியக் கொடி செய்யும் பணியை ஆதிக்கவாதிகள் தம்மையறியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள். ஈழமக்கள் மத்தியில் எமது அடையாளங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், தாம் அடக்கப்படுகிறோம் என்பதை அவ்வப்போது உணரக்கூடிய சூழ்நிலையில் வாழ்கிறார்கள். அவர்களிடத்தில் என்றாவது ஒருநாள் ஒரு சிறிய விடுதலைப்பொறி பறந்தால் கூட அது பற்றியெரிய ஆரம்பித்துவிடும். ஆனால் புலம்பெயர் சூழலில் வாழும் இளைஞர்கள், சிறுவர்களின் நிலை என்ன? நடைமுறையில் முழு சுதந்திரத்துடன் வளர்ந்துவரும் இவர்களிடம் தேசியக் கொடியின்மீது உணர்வெழுச்சியுடனான பார்வை எப்படி ஏற்படும்?
பாண்டியமன்னனின் மீன் கொடி , சேரமன்னனின் விற்கொடி , சோழமன்னனின் புலிக்கொடி என வரலாற்றில் படிப்பதுபோல் , பிரபாகரனின் புலிக்கொடி என்று போகிற போக்கில் வரலாற்று கதையொன்றைப்படிப்பது போலாகிவிடும் என்பதுதான் உண்மை. எனது தேசம், எனது கொடி , எனது மொழி என்ற எமது அடையாள உணர்வுகளை எமது சந்ததினரிடமிருந்து மெல்ல மெல்ல அழித்து விடுவதுதான்இந்தக் குழப்பத்தின் பின்னணியா?
ஏற்கெனவே குழப்பமடைந்து, விரக்தியுற்று போன மக்களிடம் தேச விடுதலை பற்றிய வெறுப்பை விதைப்பது தான் இவர்களின் நோக்கமா?
மக்கள் விழிப்போடுதான் இருக்கிறார்கள். இப்போது மக்கள் எந்த அமைப்பையும் நம்பமுடியாதபடி, தமக்கான சரியான வழிகாட்டலைத் தெரிந்து கொள்ள முடியாதபடி பல்வேறு முரண்பாடுகளை காலத்துக்கு காலம் தோற்றுவித்து மக்களை இயலாமை நிலைக்கு இழுத்து செல்லும் இழிவான அரசியல் சதிவலைக்குள் எமது தமிழ் அமைப்புக்கள் உள்வாங்கப்படுவது என்?
நான் எந்த அமைப்பையும் சாராதவள் என்ற வகையில் சாதாரண பொதுமக்களில் ஒருத்தியாக புலம்பெயர் நாடுகளில் செயற்படும் ஒவ்வொரு தமிழ் அமைப்புகளிடமும் ஈழமக்கள் சார்பாக நான் கேட்க, சொல்ல விரும்புவது இதுதான்.
எந்த அமைப்பாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் அடையாளங்களைக் காப்பாற்ற முடியுமானால், எமது போராட்டத்திற்கும், தியாகங்களுக்கு மதிப்பளித்து செயற்படமுடியுமானால் முன்வாருங்கள். முடியவில்லை என்றால் எமது மக்களுக்கு இந்த அமைப்புக்கள் தேவைதானா என்ற விரக்தியை ஏற்படுத்தாத வகையில் அமைதியாக செயற்படுங்கள்.
எமது தேசியத்தலைவருக்குப் பின் அவருக்கு இணையாக எந்த தலைமைத்துவத்தையும் நாங்கள் இதுவரை காணவில்லை. இனிமேலும் காண முடியாது என்ற விரக்திநிலையை ஏற்படுத்தாதீர்கள்.
மக்களை நாடிபிடித்து செயற்பட முடியாத நீங்கள், உங்கள் தனிப்பட்ட அல்லது அமைப்பு ரீதியான இலாபங்களுக்காகமக்களின் உணர்வுகளை பலியாக்காதீர்கள்.
குறைந்தபட்சம்சிறு சிறு கருத்து முரண்பாடுகளைக் கூட கையாளமுடியாமல் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டு கிடைக்கும் உங்களிடம் எமது அரசியல் எதிர்காலத்தை எப்படி நம்பிக் கொடுக்க முடியும் என்பதே சாதாரண ஈழத்து தமிழச்சியான எனது கேள்வி.
கொடியை ஏற்றாமல் விடுவதன் மூலம், நாம் தோற்றுப் போன இனம் என்ற உணர்வை எம் மத்தியில் விதைக்க முனைகிறீர்களா? எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வாழ்ந்தவர்களை அல்லவே நாங்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய தலைவனின் பின்னே ஒரு கொடியின் கீழ் ஒன்று திரண்டவர்கள். எப்படித்தான் நீங்கள் முயன்றாலும், நாங்கள் எமக்கென்ற கொடியோடும், இராணுவப் படைகளோடும்அரசியல் கட்டமைப்புகளோடும் தனித்துவமாக வாழ்ந்தவர்கள் என்பதை வரலாறு பேசும். எனவே மக்களிடம் நம்பிக்கையை விதையுங்கள். எமது இனத்துக்கான அடையாளங்களோடு வாழவிடுங்கள். இல்லையென்றால் அதைச் செய்ய முன்வருபவர்களுக்குவழிவிடுங்கள்”.
தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையென்பது முற்றுமுழுதான தவறான கருத்தாகும். தமிழீழ தேசியக்கொடியென்பது விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியல்ல. அது தமிழீழ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியாகும் என சட்ட வல்லுனராகிய திரு அருண் கணநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ் தகவல் நடுவம் ஒழுங்குபடுத்தியிருந்த கலந்துரையாடலொன்றில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் இதனைத்; தெரிவித்திருந்தார். தற்போது பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் தமிழ் இனவழிப்பு தின முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளில், மக்கள் ஆணைக்கு மாறாக, தேசிய கொடியை ஏற்ற மறுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை, அதற்கான காரணமாக பிரித்தானியாவில் தேசியக் கொடி தடை செய்யப்பட்டுள்ளது என மக்களுக்கு தவறான தகவலை பரப்பிவருகின்றனர். இது உண்மை அல்ல என்ற போதிலும், பல அப்பாவி மக்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட சட்ட சட்டத்துறையில் வல்லுனராகிய இவரது உரையை இங்கே நினைவுபடுத்துவது சாலப் பொருத்தமானதாகும்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தமிழீழ தேசியக்கொடி மட்டுமன்றி, விடுதலைப்புலிகளின் கொடி கூட பிரித்தானிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. கோடி தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தப்பான வார்த்தைப்பிரயோகம் ஆகும். இதை நாம் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் அமைப்பு தடைசெய்யப்பட்டிருப்பதால், அந்த அமைப்பு தொடர்பான அடையாளங்களை பாவிப்பது தவறு என சம்மத்தப்பட்ட சட்டத்தின் சரத்து தெரிவிக்கின்றது. எனவே விடுதலைப்புலிகளுக்குரிய சின்னங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இருந்தும் விடுதலைப்புலிகளின் கொடியை பிடிப்பவர்கள் மீது கூட வழக்குத் தாக்கல் செய்வதில் அரச தரப்பு பல சட்டச் சிக்கல்களை எதிர்நோக்குவார்கள். இவற்றை மீறி, ஒருவரை குற்றவாளியான நிரூபித்து, சிறைத்தண்டனை வழங்குவது என்பது மிகவும் கடினமான விடயம்.
தமிழீழத்தின் தேசியக்கொடிக்கு எந்த வகையிலும் தடை விதிக்க முடியாது. அதனை ஏற்றுவதால் எந்த பிரச்சனையும் வர முடியாது. தமிழீழம் என்பதும் விடுதலைப்புலிகள் என்பதும் ஒன்றல்ல. தமிழீழ கோரிக்கை விடுதலைப்புலிகளுக்கு முன்னரே உருவாக்கபட்டது. இது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் உருவானது. விடுதலைப்புலிகள் பின்னர் இதை முன்னெடுத்து சென்றார்களே தவிர, அவர்களும் தமிழீழமும் ஒன்றல்ல. தேசியக்கொடிக்கும் விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பிருந்தாலும் அது விடுதலைப்புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவது அல்ல. அதனால் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்கள் ஆணை பெற்ற, தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவதால் எனவும் கைது செய்யப்படலாம் என்பது சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்தார்.
மேலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் நிச்சயமாக தடை எதுவும் இல்லை. இந்த கொடியை ஏற்றுவது சட்டவிரோதமென்பது முற்றும்முழுதாக தவறான கூற்றாகும் என அவர் மேலும் எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த நிலையில், சிலர் இன்னும்; தமிழீழத் தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடை உள்ளது என்ற மாயையை பரப்பி, பொது நிகழ்வுகளில் தேசிய கொடியை புறக்கணிக்க முயல்வது, முற்றுமுழுதாக அவர்களின் சுயநல நடவடிக்கைகளின்பாற்பட்டது என்று நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
திரு அருண் கணநாதன் ஒரு மூத்த சட்டதரணி மட்டுமன்றி, வழக்குரைஞருமாவார். பிரித்தானியாவில் தமிழர்களின் பல்வேறு முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாக நடாத்தி பிரித்தானியாவின் குடிவரவு சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய பிரபல சட்ட வல்லுனர். இவரின் அயராத உழைப்பில் உருவான ஜி.ஜே (GJ and Others (post-civil war: returnees) Sri Lanka CG [2013] UKUT 00319 (IAC) என்றழைக்கப்படும் இலங்கைக்கான நெறிப்படுத்தல் வழக்கின் பிரகாரமே பல ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுவருகின்றார்கள். அண்மையில் இலங்கை தமிழ் அகதிகள் தமக்கு தாமே காயம் போட்டுக்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குடிவரவு தீர்ப்பாயம்; உருவாக்கிய விதிமுறையை KV (Sri Lanka v SSHD) எதிர்த்து மேன் முறையீட்டு நீதிமன்றில் பெருவெற்றி பெற்று, அந்த விதிமுறையை நிர்மூலம் செய்து, இலங்கை அகதிகள் மீதான பெரும்பழியை துடைத்தவர். இது மட்முமன்றி அண்மையில் UB (Sri Lanka) v SSHD என்ற வழக்கின் மூலம் மேன் முறையீட்டு நீதிமன்றில், பிரித்தானிய உள்விவகார அமைச்சு தமது சொந்த அறிக்கைகளில் உள்ள அகதிகளுக்கு சாதகமான தகவல்களை வழக்குகளில் சமர்ப்பிக்க தவறுவது சட்ட ரீதியான பிழை என்பதை நிறுவி, நாடு கடந்த தமிழீழ அரசாங்க செயற்பாட்டாளர்களின் நிராகரிக்கப்பட்ட அகதித் தஞ்சக் கோரிக்கைகளை மீளாய்வு செய்யும் வழி வகுத்தவர்.
இவர் ஒரு சட்டத்தரணி மட்டுமன்றி, ஒரு தமிழ் தேசியவாதியுமாவார். பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இதர புலம் பெயர் அமைப்புக்களின் உருவாக்கத்தில் பெரும் பங்களித்த இவர், ஆரம்ப காலங்களில் புலம் பெயர் தமிழ் மக்களின் பேச்சாளராக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவாத்தைகளை நடாத்தி, தற்போதைய தலைமைகளுக்கு வழிகாட்டிய முன்னோடி அரசியல் செயற்பாட்டாளருமாவர்.
புலம்பெயர் அமைப்புக்களுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அறைகூவல்!
மே 18 அன்று நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளின் போது, உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்து வருகின்றர். ஆனால் பிரித்தானியாவில் உள்ள பிருத்தானிய தமிழர் பேரவை என்ற அமைப்பு மட்டுமே தேசியக்கொடியை புறக்கணிப்பு செய்து, தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மடிந்த மக்களையும் அவமதித்து வருவது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை கொதித்து எழ வைத்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் பல தரப்பட்ட பிரமுகர்களும் ஒருமித்த குரலில், தேசிய தினங்கள் தனி அமைப்புக்களின் விருப்புகளுக்கும் தேவைகளுக்கும் அமைய நடாத்தப்படக்கூடாது. அவை அவற்றுக்குரிய நியமங்களின் படியே நடைபெறவேண்டும் எனவும் இதனை ஏற்க மறுப்பவர்கள் இந்த நிகழ்வுகளை நடத்தாமல் ஒதுங்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்த வகையில், இந்தியாவில் கடும் கொடுப்பிடிகளுக்கு மத்தியில் சிறைப்படுத்தப்பட்டு வாழும் நிலையிலும், தமிழீழ விடுதலைக்காக அயராது உழைத்து வரும், தமிழீழ தேசிய புரட்சிக்கவிஞர் காசியானந்தன் அவர்கள் வழங்கியுள்ள முள்ளிவாய்க்கால் தின உரையில் புலம்பெயர் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அந்த உரையில் “இந்த நாளில் விடுதலைப்போராட்டத்தின் கொடியான புலிக்கொடியை ஏற்றுவோம் கம்பங்களில் புலிக்கொடியை ஏற்றுவோம் கைகளில் புலிக்கொடியை ஏந்துவோம் புலிக்கொடி தமிழீழ மக்களுடைய போராட்டத்தின் அடையாளம், தமிழீழ மக்களின் போராட்டத்தின் சின்னம் புலிக்கொடி, ஒரு கம்பத்தை நடுவோம் அந்தக்கம்பத்தின் காற்றில் மிடுக்கொடு புலிக்கொடி பறக்கட்டும், புலிக்கொடியை பார்க்கிறவனுக்கு தெரிய வேண்டும் இந்த புலிக்கொடி பறக்கிறது என்றும் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் படும் . புலிக்கொடி பறக்கட்டும் இன்னும் தமிழீழ மக்கள் களத்தில் நிற்கிறார்கள் என்று புரிந்துகொள்ளட்டும்” என்று உணர்வுபூர்வமாக வேண்டியுள்ளார்.
இந்த உரையின் முழுவடிவம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளின் போது, திரையிடப்படும்.
– பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தாயகத்திலிருந்து ஒரு மாவீரர்களின் தாய் உருக்கமான வேண்டுகோள் –
உலகெங்கும் முள்ளிவாக்கால் தினம் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்று வரும் இந்த வேளையில், பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் பேரவை தேசியகொடியை உதாசீனம் செய்து வருவது புலம்பெயர் மக்களை மட்டுமன்றி, தாயகத்தில் வாழும் தமிழ் உறவுகளையும் கொதித்தெழ வைத்துள்ளது.
அவ்வாறு கொதித்து எழும் மக்களின் சார்பாக, பிரித்தானிய தமிழர் பேரவையிடம் உருக்கமான வேண்டுகோளை விடுக்கும் வகையில், தாயகத்தில் வாழும் லெப்ரினன் மணியரசன் மற்றும் வீரவேங்கை கலைஅரசி ஆகியோரின் தாயார் திருமதி சுந்தரவடிவேல் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், தேசியக்கொடியென்பது நாம் இழந்துவிட்ட இறைமையையும் எமது இனத்தின் மதிப்பையும் நிலைநாட்டுகின்ற முதன்மைப் பொருளாகும். இவற்றை முதன்மைப்படுத்தி எமது விடுதலை வேணவாவை உலகுக்கு பறைசாற்றவேண்டியது அனைவரதும் கடமையாகும் என தாயார் திருமதி சுந்தரவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தேசியக்கொடியென்பது வெறும் துணியல்ல அது எமது பிள்ளைகளின் இரத்தத்தாலும் தசையாலும் நெய்யப்பட்டது. ஆயிரமாயிரம் வீர மறவர்களினதும் அவர்களோடு இறுதிவரை கூடநின்ற மக்களினம் ஆன்மாவால் உருவானது. இன்று அத்தகைய மதிப்புமிக்க எமது தேசிய அடையாளத்தை பிரித்தானிய தமிழர் பேரவை தீண்டத்தகாத ஒரு பொருளாக கருதி மக்களது உருக்கமான வேண்டுகோளைப் புறக்கணித்து தமிழின இனவழிப்பு நாளை அனுட்டிக்கவுள்ளமை வெந்த புண்ணில் வேல்பாச்சுவதுபோல உள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் இத்தகைய அடாத்தான செயல் மாவீரர்களின் தியாகங்களையும் தாயக மக்களின் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துதவதுபோல் உள்ளது. அதேநேரம் ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் களமாடிச் சாதித்துப் பெற்றுக்கொடுத்த தளத்திலிருந்துகெண்டு எமது மக்களின் விடுதலை உணர்வை அழிக்க நினைப்பது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.
எனவே தமிழீழ தேசியத்தை புறக்கணித்து தேசியக்கொடியை அவமதித்து விடுதலைக்காக வீழ்ந்த மறவர்களினதும் மக்களினதும் தியாகத்தின்மேல் நின்று கூத்தாடும் பிரித்தானியத் தமிழர் பேரவையை புறக்கணித்து விடுதலையின்பால் உண்மையான பற்றுக்கொண்டு தேசிய அடையாளங்களை மதித்து தேசியக்கொடியேற்றி நிகழ்வைச்செய்யும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் பின்னால் அனைவரையும் அணிதிரழுமாறு விடுதலைப் போராட்டத்திற்காய் இரண்டு பிள்ளைகளை ஈய்ந்த தாய் என்ற உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்’.
தம்மை மக்கள் பிரதிநிதியாக காட்டிக்கொண்டு அரசியல் நடாத்த முயலும் பிரித்தானிய தமிழர் பேரவை, புலம்பெயர் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கும் அபிலாசைக்கும் செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. ஆவர்கள் தாயகத்தில் வாழும் எமது உறவுகளின் கோரிக்கைகளுக்காவது செவிசாய்ப்பார்களா?
– வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் நிருபர் அல்வின் சுகிர்தன் –
‘ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி – எட்டுத் திக்கிலும் மானத்தை சேர்த்த கொடி’
எங்கள் ஈழத்தின் கொடிய வேதனை நிறைந்த அந்த கோரப்படுகொலை அரங்கேறிய நாளிற்கு இன்னும் சில மணி நிசிகளே உள்ள போது அந்த ஆறா வேதனையை தீர்க்கவல்லது எங்கள் தேசியக் கொடி என்பதை தமிழ் தேசியக் கீதமே எங்களிற்கு சொல்லி நிற்கின்றது என்பதை வாசகனுக்கு முதலில் அழுத்திக்கொண்டு என் மன எழுகையை விரிக்கின்றேன்.
ஓர் இனத்தின் தலைவர் படை ஆட்சி என்பவற்றை விடவும் உயர்ந்ததாக அவ்வினத்தின தேசிய கொடி மதிக்கப்படுகின்றது. ஏனவே தான் எந்தவொரு நாட்டிலும் எச்;சிறப்பு நிகழ்வுகளிலும் அவ்வினத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தலைவர் படை அரசு உட்பட குடிமக்கள் அனைவரும் அக்கொடியின் கீழ் திரண்டு வணக்கம் செய்வர்.
‘இது யாவரும் அறிந்த ஒன்றே!’ என்ற வாசகனின் வியப்பிற்கு என் பதில்இ பிரித்தானியாவில் நினைவு கூறப்படவுள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வில் ஓர் அமைப்பு எம் இனத்தின் தேசிய கொடியின் கீழ் நிற்க மறுப்பதேயாகும்.
கொடியை இழந்தால் எம் இறைமையை நாம் இழப்போம் என்பதை அவர்கள் உணர்ந்து கௌ;ள வேண்டும்.
எம் இனத்துக்கான தேசிய கொடி உருவான வரலாறு மிகவும் போரட்டகரமானது. சேர சோழ மன்னன் வீழ்ந்த போது அவனது கொடி வீழ்ந்தது. பின்னர் கி.பி.1619 இல் சங்கிலிக்குமாரன் போர்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்ட போது நந்திக்கொடி வீழ்ந்தது. தொடர்;ந்து வன்னியை ஆண்ட பண்டார வன்னியனின் வர் கொடியும் சரிந்தது.
இவ்வாறு வீழ்த்தப்பட்ட தமிழ் இனத்தின் நிமிர்வுக்கு அதன் பண்பாட்டு மரபினை தழுவி எம் தேசிய தலைவர் பிரபாகரனால் உருவாக்கபட்ட புலிக்கொடியே இன்றும் தமிழனை தூக்கி நிற்கின்றது.
இதன் உருவாக்கம்இ போராட்டமும் வலிகளும் நிறைந்தவை என்பதை இன்று பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே அதன் புனிதத்தை உணர மறுத்து புறக்கணித்து பச்சோந்திகளாக நிற்கின்றனர் மறுப்பு வாதிகள்.
1947 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய கொடி எதுவாக இருக்க வேண்டும் என்பதில் தமிழருக்கும் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருக்குமிடையே பிளவு உருவாகிற்று. இந்நிலையில் கண்டியை ஆண்ட கடைசி மன்னன் விஐயனின் சிங்கக்கொடியை இலங்கையின் தேசிய கொடியாக Nஐ.ஆர். nஐயவர்த்தன அறிவித்தார். ஆனால் தமிழனுக்கு என்று தனிக்கொடி உள்ளது. அதுவே நந்திக்கொடிஇ எனவே மூவினத்துக்கான பொதுவான கொடியே வேண்டுமென தந்தை செல்வா போர்க்கொடி தூக்கினார். ஏனினும் 1948 பெப்ரவர் மாதம் கண்டி தலதா மாளிகையில் தேசிய கொடியாக சிங்கக்கொடி ஏற்றப்பட்டது. ஏனினும் தமிழரின் போராட்டம் நிற்கவில்லை. இதனால் தேசிய கொடி பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு கொடியில் எந்த மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என்றதுடன் அதில் சிறுபான்மை இனத்தவருக்காக மஞ்சள் கோட்டிற்கு வெளியே இரு பட்டைகள் மாத்திரம் இடப்படும் என 1950 இல் தீர்மானித்தது.
இதனால் 1957 இல் இலங்கையின் சுதந்திர இதினத்தை தமிழர்கள் புறக்கணித்து துக்கநாளாக அனுஷ்டித்தனர். இதில் சிங்கக்கொடியை எரித்த தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட வரலாறும் உண்டு.
இந்நிலையிலேயேஇ எம் தமிழரின பாரம்பரிய பழைய வரலாறு தேசியதலைவர் பிரபாகரனால் புதுப்பிக்கப்பட்டது எனலாம். அடக்கு முறைகளுக்கு எதிராக வீறு கொண்டு எழும் தமிழ் இனம் என்பதை பிரதிபலிக்கும் நோக்கில் வட்டத்துக்கு வெளியே பாயும் புலியை கொண்ட கொடியை உருவாக்கினார்.
1977 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலி கொடி தோற்றம் பெற்றது. ஆனால் ஆரம்பத்தில் அக்கொடி விடுதலை அமைப்பின் கொடியாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அதில் இருந்த தமிழீழ விடுதலை புலிகள் என்ற எழுத்தை நீக்கி எம் தமிழ் இனத்தின் தேசிய கொடியாக தலைவர் பிரபாகரன் அறிவித்தார்.
சிங்கக் கொடியில் தமிழருக்கு சிறிய இடத்தையை கொடுத்த பேரி;னவாதத்துக்கு இது பொரும் இடியாக மாறியது.
இவ்வாறு பல போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு எம் இனத்தை அடையாளப்படுத்தி நிற்கும் கொடியை மறுப்பது தன்னை கருவில் சுமந்து உயிர் தந்தவளை மறுப்பதற்கு சமமாகும்.
தமிழர் தாயகத்தில் இறுதியாக நடத்தப்பட்டது இலங்கை படையினரது தனித்த யுத்தம் அல்ல என்பது உலகு அறிந்த விடயம். உலக அரங்கில் பேரரசுகளுடனும் வல்லரசுகளுடனுமே எமது போராட்டம் முட்டி மோதியது. தெரிந்தும் புலம்பெயர் தமிழர்கள் நாம் அவர்கள் உயிர்களைத் தியாகம் செய்து தரும் வெற்றிச் செய்திகளை கொண்டாடுவதிலும் விமர்சனம் செய்வதிலும் மாத்திரம் நின்றிருந்தோம்.
சர்வதேசம் எங்கும் பரந்து வாழும் நாங்கள் உரி;ய நேரத்தில் ஒன்றாக குரல் எழுப்ப தவறியதன் விளைவே இந்த முள்ளிவாய்;க்கால். அதே தவறை மீண்டும் செய்து இன்னுமொரு முள்ளிவாய்க்காலை உருவாக்கப்போகிறோமா?
முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் அதற்கான நீதியை இதுவரை நாம் பெற முடியாமல் நிற்கின்றோம் என்றால் அது சர்வதேசத்தின் பாராமை அல்ல எம் இனத்திற்குள் உள்ள சுயநலமும் போட்டியுமே காரணம்.
மாவீரர் நாளில் கொடியை ஏற்றி எம் இனத்தின் வீரர்களின் தியாகத்தை மதிக்கிறோம் என மார்தட்டும் பிரித்தானியா தமிழர் பேரவை (டீவுகு) அமைப்பு இறுதி யுத்தத்தில் எம் ஒட்டுமொத்த இனத்தின் தியாகத்தை தேசிய கொடி ஏற்றி அனுஷ்டிக்க மறுப்பதன் பின்னணி என்ன?
போராட்டமும் மக்களும் வேறுவேறு அல்ல என்பதில் முதல் தெளிவுகொள்ளல் வேண்டும். தமிழருக்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிங்களம் தனித்து அல்லாது சர்வதேசமும் பின்னால் நிற்கும் போது அங்கு மக்களும் தான் போராடினார்கள். தனியே ஆயதம் ஏந்திக் களமாடுவது மட்டும் போராட்டமல்ல. கையில் இருந்ததை சமைத்து கொடுத்த தாய்மார் போராடினார்கள் காயப்பட்ட போராளிகளையும் மக்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற தந்தையர் போராடினர் இவ்வாறு இறுதியில் அங்கு நின்ற அனைவரும் ஒரு போராளியாகவே செயற்பட்டனர். இதன் சாட்சிகள் பல புலம் பெயர் நாடுகளிலும் தற்போது உள்ளன.
இந்நிலையில் இறுதிவரை நின்று போராடிய மக்களை நினைவுகூற அவர்களின் தியாகங்களிற்கு மதிப்பளிக்க நினைவு நாளில தேசியக்கொடி ஏற்றப்படல் வேண்டும்.
ஏம் இனத்தின் போராட்ட வடிவம் மாத்திரமே மாற்றம் பெற்றுள்ளது. தமிழர் தாயகம் என்ற இலட்சியம் மாறவில்லை. புலம்பெயர் தமிழரிடமே போராட்டத்தின் புதிய வடிவத்தின் பொறுப்பு உள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தாயக உறவுகள் புலம்பெயர் உறவுகளிடம் எதைக்கேட்டும் நிற்கவில்லை. 2004 ஆழிப்பேரலையின் போதும் உருண்டெழுந்து அவர்கள் தம்மை கட்டியெழுப்பத் தயாரானார்கள். ஆனால் இன்று அவர்களின் இழப்புக்கள் அதிகம். அதை பெற்றுக்கொடுக்க நிவர்த்திசெய்ய சர்வதேசத்துடன் பின்னி வாழும் புலம்பெயர்வாழ் எங்களுக்கே பொறுபுள்ளது. அந்தப் பொறுப்பிலிருந்து தவற நினைப்பது எம் இனத்துக்கு செய்யும் பெரும் துரொகமே.
இந்நிலையில் இங்;கு தன்னிச்சையாக பிரிந்து பிளவு பட்டு எமது பலத்தை குறைத்து என்ன இலக்கை தன்னிச்சைவாத அமைப்புக்கள் அடையப்போகின்றன.
ஓர் இனத்தின் விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காக பாடுபடும் எந்த அமைப்பும் அதன் அடையாளங்களை தொலைத்து விட்டோ புறக்கணித்த விட்டோ அவ்வினத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியாது என்பது வரலாறு.
இன்று சிங்களப்பேரினவாதத்தின் ஆட்சியே இலங்கை முழுவதும் பரந்து கிடக்கின்ற போதிலும் தாயகத்தில் தற்;போதும் எம் இனம்சார்ந்த நிகழ்வுகளில் இம் தேசிய கொடியின் பிரதான வர்ணங்களான சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றமை யாவரும் அறிந்ததே.
உயிர் அச்சுறத்தல்களுக்கு நடுவிலும் எம் இனத்தின் அடையாளங்களை இழக்க மறுக்கும் எம் தாயக உறவுகளின் உணர்வுகளிற்கும் மனித்துவம் காக்கும் நாடுகளின் சுதந்திர நிழலில் வாழும் புலம்பெயர் எம்மவரின் உணர்வகளுக்கும் இடைவெளி அதிகம் என்றே கூறலாம்.
சாதி மத பேதமின்றி பேரினவாதத்தின் அடக்குமறைக்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழனாக ஒன்று திரட்டிய அப்புனித கொடியை புறக்கணிக்க முயலும் அமைப்புக்கள் மீண்டும் எம் இனத்துக்கு புதிய புதைகுழியை தோண்டி அதன் மேல் உட்கார்ந்து சுயலாபம் பெறவே முயல்கிறார்கள்.
புpரித்தானியாவில் பல்லின மக்;கள் வாழுகின்றனர். அவர்கள் தங்கள் இனம் சார்ந்த நிகழ்வுகளில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தவோ தம் இனத்தின் தேசியகொடியை ஏந்தவோ தடை இல்லை. எனவே வலிகள் நிறைந்த அந்த கொடுர இனப்படுகொலையின் ஆறாப் புண்களை உலகிற்கு மீண்டும் மீண்டும் அவிழ்த்துக்காட்டி மருந்து கேட்க எதிர் வரும் 18 ஆம் திகதி தேசிய கொடியின் கீழ் அணிதிரள வேண்டும்.
உலகில் எங்கு வாழினும் நாம் தமிழர் என்பதை அடையாளப்படுத்துவது எமது கலை கலாச்சாரம் மற்றும் சின்னங்களே. அவ்வாறு எம் சின்னத்தை தொலைக்க நிற்பது நிர்வாண கோலம்.
– முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன்-
மே-18 என்பது தமிழர்கள் வாழ்வில் கறைபடிந்த நாள். கொத்துக் கொத்தாய் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூர இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு எமது தாய்நிலம் அன்னியரின் கையில் அடிமைப்பட்ட நாள். தமிழீழத்தின் தேசிய துக்கநாள்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடந்தேறிய மே-18 ஐ தமிழீழத்தின் தேசிய துக்கநாளாகப் பிரகடனப்படுத்தி தாயகத்திலும் சர்வதேசமெங்கும் தமிழர்கள் பரந்துவாழும் இடங்களிலெல்லாம் தேசிய இனப்படுகொலை நாளாக அனுட்டித்து வருகின்றோம்.
எமது தேசிய ஆன்மாவை போராட்டத்தின் அடுத்த பரிமாணத்தை புலம்பெயர் ஈழத்தமிழரிடம் கையளித்துவிட்டு எமது ஆயுதப்பேராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தாயம் பகைவனின் கொடூர இரும்புப்பிடிக்குள் சிக்குண்டு எமது மக்கள் யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை நினைத்து அழுவதற்குக்கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாம் செய்வது என்ன?
நாம் எல்லாவற்றையும் அன்னியரிடம் இழந்துவிட்டோம். நாடிழந்து வீடிழந்து சொந்தங்களை இழந்து இங்கு நடைப்பிணங்களாக புலம்பெயர்ந்து எம்தேசத்தின் நினைவுகளை இதயத்தில் சுமந்தபடி கனத்த இதயங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எம்மை வாழவைப்பது ஈழத்தமிழன் என்ற அடையாளத்தை கொடுப்பது எமது தேசியக்கொடி மாத்திரமே.
தேசியக்கொடியென்பது எமது ஆன்மா எமது விடுதலை வேட்கையின் பிரதிபலிப்பு எமது தேசத்தின் அடையாளம் தாயகம் நோக்கிய எமது விடுதலைப்பயணத்தின் மூலவேர். ஈழத்தமிழர்களின் எழுச்சியின் வடிவம். தேசவிடுதலைக்காய் களமாடி வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் விடுதலைவீரர்களின் வித்துடல்பேழையில் போர்த்தப்பட்ட கொடி அத்துடன் அவர்கள் சிந்திய செங்குருதியில் ஊறிச்சிவந்தகொடி.
ஆனால் இன்று பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் கருத்துகளிற்கு மதிப்பளிக்காது எமது தேசியக்கொடியை முற்றாகப் புறக்கணித்து தேசிய இனப்படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்த ஏற்பாடுசெய்துள்ளது. தேசியக்கொடியை ஒரு தீண்டத்தகாத பொருளென்றும் வெள்ளைக்காரருடன் இருந்து வைன் குடிப்பதற்கு அந்தக்கொடி பிரச்சினையான பொருளென்றும் அதனால்தான் தம்மால் தேசியக்கொடி ஏற்றமுடியாது என்றும் அடாத்தாக கூறிவருவது வெந்த புண்ணில் வேலை பாச்சுவதுபோல இருக்கிறது.
தேசியக்கொடி தடைசெய்யப்பட்ட கொடியென சென்றவருடம் பரப்பிய வதந்திகள் மக்களால் முறியடிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் புதிய வதந்தியை பரப்பிவிடுவதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை முயற்சி செய்து வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சில அமைப்புகள் தமிழீழ தேசியக்கொடியை சுமந்தவாறு பல்வேறு நாட்டு முக்கிய தலைவர்களையும் இராஜதந்திரிகளையும் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதுவரைக்கும் யாரும் அவர்களிடம் தேசியக்கொடியை கைவிட்டு வருமாறு சொன்னதாக தெரியவில்லை. தேசியக் கொடியை கைவிட்டு அவர்களும் எதுக்கும் போவதற்கும் தயாராகவும் இல்லை.
இதிலிருந்து சில உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழத்தேசியக்கொடி இலங்கையை தவிர எந்தவொருநாட்டிலும் தடையில்லை. யாரும் தேசியக்கொடியை ஏற்றவேண்டாமென்றும் கூறவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்த அல்லது மகிழ்ச்சிப்படுத்தவே பிரித்தானிய தமிழர்பேரவை தேசியக்கொடியை புறக்கணித்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடாத்தவிளைகிறது. அப்படியாயின் எம்மைக்கொன்றழித்த இலங்கை அரசாங்கத்தை பிரித்தானிய தமிழர்பேரவை ஏன் திருப்திப்படுத்தவேண்டும்? பிரித்தானிய தமிழர் பேரவையும் விலைபோய்விட்டதா? பிரித்தானிய தமிழர்பேரவை தேசியக்கொடியை புறக்கணிப்பதற்கு வழங்கப்பட்ட விலை என்ன? அதன்பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன?
இனப்படுகொலையை நிரூபிப்பதாயின் முதலில் தமிழீழ மக்களாகிய நாம் ஒரு இறையாண்மையுள்ள இனம் என்பதை நிரூபிக்க வேண்டும். தேசம் இழந்து நிற்கும் எமக்கு, தற்போதய நிலையில் எமது இறையாண்மையை பறைசாற்றி நிற்பது தேசியக் கொடியே. அதனை புறக்கணித்து, மக்கள் மத்தியில் மறக்கச் செய்வதன் மூலம் எம்மை ஒரு தனித்த இனமல்ல என நிறுவ முயல்கிறது சிங்கள அரசு. அதற்கு துணைபோகிறது பிரித்தானிய தமிழர் பேரவை. நாம் ஒரு தேசிய இனம் அல்ல என்றாகிவிட்டால் 'இனப்படுகொலை' என்ற சொற்பதமே அர்த்தமற்றதாகிவிடும். சிங்கள அரசை பாதுகாக்க தீட்டப்படும் நீண்டகால நிகழ்ச்சிநிரல் இதுவேயாகும்.
தேசியக்கொடியை வெளிப்படையாக புறக்கணிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையை அனைவரும் புறக்கணிப்பதன் மூலம்தான் எமது அடையாளங்களை கைவிட நினைக்கும் அனைவருக்கும் ஒரு பாடத்தை நாம் கற்பிக்க மூடியும்.
அடையாளமிழந்த மனிதன் ஆணிவேர் இழந்த மரத்துக்கு சமன். ஆகவே தேசியக் கொடியை ஏற்றி மீண்டும் எழுந்து நிற்போம். இம்முறை கடந்த முறையைவிட பலமாக எழுந்து நிற்போம். வேற்றுமைகளை மறந்து ஒரே கொடியின் கீழ் ஒன்றாக இணைந்து நிற்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் கல்விகற்று, மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றபட்ட ஆசிரியராக பட்டம்பெற்றவர். யோகபுரம் மகாவித்தியாலயத்தில் 9 வருடங்கள் கல்விச்சேவையை வழங்கிய, பின்னர் இவர் உதவிக் கல்விப்பணிப்பாளராக 10 வருடங்கள் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தில் சேவையாற்றியவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறையின் நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றிய இவர், விடுதலைப்புலிகளின் மகளிர் வலைப்பந்தாட்ட அணி பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டவர். செஞ்சோலை சிறுவர் இல்லம் மற்றும் பல சிறுவர் இல்லங்களிலும் கல்விச்சேவை வழங்கியவர். பல அரசியல் நிகழ்வுகளை முன்னின்று நடாத்தியவர். இறுதி யுத்தத்தின் சாட்சியங்களுள் ஒருவரான, சிங்கள இனவெறி அரசால் தடுத்து வைக்கபட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானவர். தற்போது பிரித்தானியாவில் தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக தொடர்ந்தும் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு அயராது உழைத்து வருகிறார்.
பிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ஏன் முற்றிலும் சட்டபூர்வமானது.
– ஓர் சட்டரீதியான பார்வை –
அறிமுகம்:
தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமும், அனைத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் ஒன்றிணைக்கின்றதுமான தமிழீழ தேசியக் கொடியினை தமது தேசிய நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக ஏற்றவேண்டும் என பிரித்தானியா மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இருப்பினும், தமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதனை ஏற்றுவது வழக்கு விசாரணைக்கு வழிவகுக்கும் என்றும் சில புலம்பெயர் அமைப்புக்களும்; தனிநபர்களும் தமிழ் சமூகத்தினரை தவறாக வழிநடத்திவருகின்றனர். புலம்பெயர்ந்துவாழும் நாட்டுப்பற்றுள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களை சுதந்திரத்தின் வழி; தூண்டும் என்பதால் இந்தத் தமிழீழ தேசியக் கொடியை தமது ஏகாதிபத்தியத்திற்கு ஓர் பாரிய அச்சுறுதலாகக் கருதுகின்ற இலங்கை அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுவருகின்ற திட்டத்தின் ஓர் பகுதியாகவே இது உள்ளது. இந்தப் பொறியினுள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தனிநபர்களும் விழுந்து, தமிழர்களின் அடையாளத்தினையே இல்லாதொழிக்கத் திட்டமிட்டரீதியில் முயற்சிக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு பங்களிப்புச்செய்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மையாக உள்ளது.
ஸ்கொட்லண்ட் யாட்டும் மெற்றோபொலிற்றன் பொலிசாரும் தமிழ்த தேசியக் கொடியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடினையும் தவறாகப் புரிந்துகொண்டதால் 2009 இல் ஓர் பதட்டம் ஏற்பட்டது என்பதை தமிழ் சமூகத்தினர் புரிந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளி;ன் கொடியினை எந்த நிகழ்வுகளிலும் பயன்படுத்தும் நோக்கம் புலம்பெயந்து வாழும் தமிழர்களிடம் இருக்கவில்லை. இருப்பினும், தமிழீழ தேசியக் கொடியினை தாம் ஏற்றுவது தடுக்கப்படக்கூடாது என அவர்கள் நம்புகின்றனர். பிரித்தானியாவில் நடைபெற்ற கடந்த சில முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின்போது கணிசமான தமிழ் மக்கள் தமது கொடிகளைக் கொண்டுவந்து கட்டுப்படுத்தமுடியாதவாறு மேடைக்கு முன்னால் ஏற்றினர்.
தமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற தவறான புரிந்துணர்வுகளையும் தவறான கருத்துருவாக்கங்களையும் தெளிவுபடுத்த கீழ்வரும் தகவல் உதவும்.
தமிழ்த் தேசியம் மற்றும் தேசியக் கொடி ஆகியவற்றின் தோற்றமும் வரலாறும்::
தமிழீழ தேசியக் கொடியானது தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை உள்ளடக்குகின்றது. கி.மு 200 ¬– கி.பி 250 இற்கு உட்பட்ட சங்ககாலத்திலிருந்தே தமிழ் இலக்கியத்தில் ஈழம் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. ஈழம் என்ற சொல்தான் தற்போது சிறி லங்கா என மாறியுள்ளது. கி.பி 1017-1070 வரையான சோழர் காலத்தில் ஈழமானது நிர்வாக அலகுகளைக் கொண்டிருந்தது என்பது ஒர் அறிந்த உண்மையாகும். தற்போதைய சிறிலங்காவின் வடக்கு கிழக்கினை பூர்வீகமாகக்கொண்டதே தமிழழீழம் ஆகும். இவை சுதந்திரமான இராட்சியங்களைக் கொண்டிருந்ததுடன் போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தரின் காலனியாதிக்கத்திலிருந்து தமது பிராந்திய ஒருமைப்பாட்டினைத் தக்கவைத்தன. தமது நிர்வாக சுலபத்திற்காக பிரித்தானியர் இந்த இராட்சியங்களை ஒன்றிணைத்ததிலிருந்து தமிழ் இராட்சியம் தனது ஒருமைப்பாட்டினையும் அடையாளத்தினையும் இழக்கத்தொடங்கியது. பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் வழங்கத் தீர்மானித்தபோது அவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதோடு எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருந்த சிங்களவரிடம் ஆளும் அதிகாரம் கையளிக்கப்பட்டது. சிங்கள பௌத்த நாடாக சிறிலங்காவை உருவாக்கும் நோக்கோடு 1948 இலிருந்து இனச்சுத்திகரிப்பு ஆரம்பமாகியது. இதன் ஓர் முக்கிய கட்டமாக சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாறாக, தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டன. தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 1990 இல் கீழ்வரும் மாதிரி வடிவத்தில் உள்ளது போல் தமிழர்கள் தமது தேசியக் கொடியினை மீள் வடிவமைப்புச் செய்தனர்.
தமிழீழ தேசியக் கொடி:
பண்டைய சோழ இராட்சியத்தினால் பயன்படுத்தப்பட்ட சோழர் கொடியிலிருந்தே தமிழீழ தேசியக் கொடி உருவெடுத்தது. சோழர் கொடியானது புலியினை அல்லது பாயும் புலியினை கொண்டிருந்தது.
தென்னிந்தியாவில் நீண்ட காலம் ஆண்ட வம்சங்களில் சோழவம்சமும் ஒன்றாகும். கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்தான குறிப்புக்கள் மௌரீய சாம்ராட்சி;யத்தின் அசோகரின் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. முடிசூடிய மூன்று மன்னர்களில் ஒருவரான சோழப் பேரரசு 13ம் நூற்றாண்டுவரை பல்வேறு பிராந்தியங்களை தொடர்ந்து ஆண்டது
சோழவம்சத்தின் மைய பூமியாக காவேரி ஆற்றங்கரை விளங்கியது. ஆனால் 9ம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதியிலிரந்து 13ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கணிசமான பெரும் நிலப்பகுதியை தமது அதிக்கத்தின் கீழ் அண்டனர். துங்கபத்ரவின் தென்பகுதியான நாடு முழுவதும் ஒன்றிணைக்கப்பட்டு 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு தேசமாக விளங்கியது. ராஜராஜ சோழன் – 1மற்றும் அவரைத் தொடர்ந்து ராஜேந்திர சோழன் -1, ராஜாதிராஜ சோழன் -1, வீரராஜேந்திர சோழன் மற்றும் குலதுங்க சோழன்-1 ஆகியோரின் கீழ் இந்த வம்சமானது தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இராணுவ பொருளாதார கலாச்சார வல்லமை கொண்ட வம்சமாகியது. கங்கை வரை விஸ்தரிக்ககப்பட்டு புதிய சாம்ராட்சியத்தின் அதிகாரம் கிழக்கு உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அதனை ராஜேந்திர சோழன்-1 ஆட்சி செய்து தென் கிழக்கு ஆசியாவில் இருந்த சிறிவிஜயாவின் கடலோரப் பேரரசின் நகரங்களையும் ஆக்கிரமித்து சீனாவில் அடிக்கடி தூதரகங்களை வைத்திருந்தான்..
1010 – 1200 வரையான காலப் பகுதியில் சோழர் பிராந்தியங்கள் தெற்கில் மாலைதீவிலிருந்து வடக்கு நோக்கி அந்திரப் பிரதேசத்தில் உள்ள கோதாவாரி ஆற்றங்கரை வரை விரிவாக்கமடைந்தன. ராஜராஜசோழன் தென்னிந்தியக் குடாவை தெற்றிகொண்டு தற்போது இலங்கையாக உள்ளதன் பகுதிகளையும் இணைத்து மாலைதீவினையும் அக்கிரமித்தான். ராஜேந்திர சோழன் வடஇந்தியாவுக்கு ஓர் வெற்றிகரமான படையெடுப்பினை மெற்கொண்டு கங்கை நதியினை அடைந்து பாட்டாளிபுத்ர மற்றும் மகிபாலாவின் ஆட்சியாளரை தோற்கடித்தான். மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சிறிவிஜயா நகரங்கள் மீதும் அவன் வெற்றிகரமாகப் படையெடுத்தான்.
சோழரின் புலிக் கொடியானது 12ம் நூற்றாண்டில் சேக்கிழாரினால் தொகுக்கப்பட்ட பெரியபுராணத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றுரீதியில் இந்த அடையாளத்துடன் ஓர் ஆழமான தொடர்பு இருந்துள்ளது.
சிறிலங்காவில் பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் கொல்லபட்ட ‘பண்டார வன்னிய மன்னனின்” வன்னிமையின் பூர்வீக அடையாளமாகவிருந்த குறுக்காக வைக்கப்பட்டிருக்கும் வாள்களினை அடிப்படையாகக்கொண்டே துப்பாக்கிகள குறுக்காக வைக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி:
தமிழீழ விடுதலைப் புலிகளால் 1977 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்டிருக்கும் புலிகளின் கொடியும்; தமிழீழத் தேசியக் கொடியும் தொடர்ந்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகின்றமை துரதிர்ஸ்டவசமானதாகும். இதனை எடுத்துக்காட்டுவதற்காக நாம் புலிகளின் கொடியினை மேலே காண்பித்துள்ளோம்.
தமிழீழ தேசியக் கொடிக்கும் தடைசெய்யப்பட்டிருக்கும் புலிகளின் கொடிக்கும் இடையிலான வேறுபாடு:
புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை குறிப்பிடுவது அத்தியாவசியமானதாக உள்ளது.
புலிகளின் கொடியில் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்த தேசியக் கொடியில் அத்தகைய பெயர்கள் எவையும் இல்லை.
சம்பந்தப்பட்ட சட்டங்களை வெளிப்படுத்தி புலிகளுக்கு புகழாரம் சூடுவதற்கான அல்லது தடை செய்யப்பட்ட அந்த அமைப்பிற்கு ஆதரவைத் தேடுவதற்கான நோக்கத்தோடு கூடிய ஓர் ‘அற்ப’ மாற்றமாக இது அமையவில்லை. இது இரண்டு கொடிகளையும் வேறுபடுத்துகின்ற ஓர் முக்கிய வேறுபாடு ஆகும்.
1990 இலிருந்தே, அதாவது 2001 இல் விடுதலைப் புலிகள் தடை செய்யப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் கூடிய காலத்திற்கு முன்னிருந்தே தமிழீழ தேசியக் கொடி பின்பற்றப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே தடைசெய்யப்பட்ட கொடியை ஓர் ‘அற்ப’ மாற்றத்தோடு காட்ட புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகின்றது.
சம்பந்தப்பட்ட சட்டம்
‘தடை செய்யப்படாத அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது’ என்பது ஆங்கிலச் சட்டத்தின் ஓர் அரசியலமைப்புக் கொள்கையாகும்-சாதாரண குடிமகனின் ஓர் அடிப்படைச் சுதந்திரம். சாதாரண உரை நடையில் குறிப்பிடுவதானால், பிரித்தானியாவில் உள்ள எந்தவொரு எழுத்து மூல சட்டத்தினாலோ, சட்ட சபையினால் இயற்றப்பட்ட எழுத்துமூல சட்டத்தினாலோ, உள்ளுர் அதிகார சபையின் சட்டத்தினாலோ அல்லது விதிமுறைகளினாலோ தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை.
பயங்கரவாதச் சட்டம் 2000 இன் கீழ் தடைவிதிக்கப்பட்ட குற்றங்களாக பின்வருவனவற்றை உள்விவகாரச் செயலர் வரையறுத்துள்ளார்;
ஓர் குற்றச்செயலாகும் தடைவிதிக்கப்பட்ட விடயங்கள்:
• பிரித்தானியாவில் அல்லது வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் ஓர் அமைப்பிற்கு உரித்துடையதாக இருத்தல் அல்லது உரித்துடையது எனக் கூறப்படுகின்றவை (சட்டத்தின் பிரிவு 11)
• தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பினை வரவேற்று ஆதரவு வழங்குதல் ( அத்தோடு ஆதரவு என்பது நிதி மற்றும் சொத்துக்களை வழங்குவதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை) (பிரிவு 12(1));
• தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அல்லது அவற்றை மேலும் முன்னெடுப்பதற்கு, அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றினைச் சேர்ந்த அல்லது சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்ற ஒருவரால் உரையாற்ற என்று தெரிந்துகொண்டு கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது நெறிப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவற்கு உதவுவது (பிரிவு 12(2)) ; அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் செயற்பாடுகளுக்கான அதரவை ஊக்குவிப்பதை அல்லது செயற்பாடுகளை மேலும் முன்னெடுப்பதை நோக்காகக்கொண்டு ஓர் கூட்டத்தில் உரையாற்றுவது (பிரிவு 12(3)) ; மற்றும்
• ஓர் தனிநபர் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஓர் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்று நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும்வகையில் பொதுவெளியில் உடைகளை அணிந்திருத்தல் அல்லது பொருட்களை வைத்திருத்தல் அல்லது காட்சிப்படுத்தல் (பிரிவு 13)
இங்கு பிரிவு 13 மிகவும் பொருத்தமான பகுதியாகும். இருப்பினும், பின்வரும் காரணங்களுக்காக, பொது நிகழ்வு ஒன்றில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது இந்த வகைப்படுத்தல்கள் எவற்றிற்கும் உட்படவில்லை;
1. எந்தவொரு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கும் சொந்தமான ஒரு பொருளாக தமிழீழ தேசியக் கொடியினைக் கருதமுடியாது. அத்துடன் தமிழீழம் என்பது ஓர் அமைப்பு இல்லை. மாறாக அது ஒரு தேசம். எனவே அது தடைசெய்யப்படமுடியாதது. அவ்வாறாக, தமிழ்த்தேசியக் கொடி தடைசெய்யப்பட்டுள்ளது என யாரும் வாதிட எந்தவொரு அடிப்படையும் இல்லை.
2. தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ‘தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என ஒரு தனிநபர் மீது நியாயமான சந்தேகத்தினை’ ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை. பொது நிகழ்வின் நோக்கம் வெளிப்படையானது என்பதால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் தொடர்புபடுத்துவதற்கு எதுவுமில்லை.
‘Actus Reus‘ மற்றும் ‘Mens Rea‘ என்பன குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாகும். இது ஒரு செயலைச் செய்பவரின் மனம் குற்றமடையாவிட்டால் அச்செயல் அவரைக் குற்றவாளியாக்காது. ஒருவர் எண்ணத்திலும் செயலிலும் குற்றமுடையவர் அல்லது கண்டிக்கத்தக்கவர் என்பது நிரூபிக்கப்பட்டாலே அவர் குற்றவாளி என எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
இந்தக் கொள்கையினை எமது சூழ்நிலைக்கு பிரயோகிக்கும்போது, உத்தியோகபூர்வமாக ஓர் கொடியினை உயர்த்துவது அல்லது ஏற்றுவது என்பது ஓர் குற்றச்செயலுக்கு ஒப்பாகாது. எமக்கு தடை செய்யப்பட்ட அமைப்பை புகழாரம் செய்யும் நோக்கம் உள்ளது என்று அல்லது நாம் அந்த நோக்கத்தை ஊக்குவிப்பதாக பொலிசார் உறுதிப்படுத்தவேண்டும். இது எமது நிலைமையைப் பொறுத்தவரையில் பொருத்தமற்றது என்பது வெளிப்படையானதாகும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில், ‘நீதிமன்றத்தினால் நியாயமான முறையில் நம்பத்தகுந்த ஆதாரங்களை’ வழக்குத் தொடுப்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்குச் சமர்ப்பிக்கவேண்டும். வெறும் சந்தேகம் இதற்குப் போதுமானதாக இருக்காது. இந்தச் சந்தர்ப்பங்களில் ஆதாரத்திதின் தரமானது ‘ஓர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். அதாவது பொலிசார் அந்த நோக்கத்தினை 100 வீதம் நிரூபிக்கவேண்டும். ஒரு வீதம் சந்தேகம் இருந்தால்கூட குற்றச்சாட்டினை நீதிமன்ற நீதியாளர் குழு ரத்துச்செய்யும். புதிய சட்டத்தில், ‘நீதியாளர் குழுவினை உறுதியாக நம்பச் செய்யவேண்டும்’ என்ற பிரயோகம் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, நீதியாளர் குழு அல்லது குற்றவியல் நீதிபதிகள் பிரதிவாதியின் குற்றத்தினை உறுதியாக நம்பவேண்டும்.
தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவதன்மூலம் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் குற்ற நோக்கம் ஒன்று எம்மிடம் உள்ளது என்று நீதியாளர் குழுவை நம்பவைக்க பொலிசாரிடம் ஒரு வழியுமில்லை. உண்மையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் ஒருவரிடமேனும் அத்தகைய நோக்கம் எதுவுமில்லை. எனவே பொலிசாரினால் எந்த விலைகொடுத்தும் இதனை நிரூபிக்கமுடியாது.
கடந்த காலத்தில் மெட்ரோ பொலிசாரும் ஏனைய அரசுகளும் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள்
மேலே குறிப்பிடப்பட்ட குழப்பமானது கடந்த காலத்தில் கைதுகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதையும் அதனைப் பயன்படுத்துவதோ அல்லது காட்சிப்படுத்துவதோ தடுக்கப்படமுடியாது என்பதையும் பொலிசார் உணர்ந்த பின்னர் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி பொலிசாரினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதை தனது சிரேஸ்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின்னர் வாய்மூல அறிக்கை ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒளிப்பதிவினை பின்வரும் இணையத்தில் பார்வையிடலாம் ;
https://www.youtube.com/watch?v=VzssCpOA_v8
ரொறன்ரோ பொலிஸ் பேச்சாளரான மார்க் புகாஷ் அவர்களை மேற்கோளிட்ட, கனேடிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்தி அறிக்கை ஒன்றின் பிரகாரம், கனடாவில் ஈழத் தமிழர்களின் தேசியக் கொடியின் பயன்பாடு கனேடியச் சட்டம் எதற்கும் முரணானது அல்ல. அந்தச் செய்தி மேலும் தெரிவிப்பதாவது: ‘இலங்கைத் தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார அபிலாசைகளை அடையாளப்படுத்துகின்றதாக விபரிக்கப்படும் ஈழத்தமிழர்களின் தேசியக்கொடியானது, 1990 இல் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் தடைசெய்யப்பட்டிருக்காத காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டது. முழு விபரங்களுக்கு பின்வரும் இணையத்தைப் பார்வையிடவும் ;
யோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியம் (YUTSA) எதிர் காலத்தில் தமது அமைப்பினைப் பிரதிநிதித்துபடுதுவதற்கும் பல்கலைக் கழகத்தின் பல்லினக் கலாச்சார வாரத்தின்போதும் தமிழீழக் கொடியினைப் பயன்படுத்துவதற்காக ஓர் நகலை முன்வைத்தது.
இவை ஏனைய அரசாங்கங்களால் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதோடு உலகளாவிய ரீதியிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் சட்டரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான சில உதாரணங்களாகும்.
தமிழ் சமூகத்தின் அபிப்பிராயமும் நம்பிக்கையும்:
2009 இல், மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் அவர்கள் ‘ தமிழ்த் தேசத்தில் அதன் தேசியக் கொடியினை ஏற்றுவதில் எந்தவொரு தப்பும் இல்லை’ என வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ தேசியக் கொடி புலிகளின் கொடி அல்ல. மாறாக அது தமிழ் மக்களின் கொடி. அதனை ஏற்றுவது அமைதிக்கு எதிரானது அல்ல. இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் அண்மையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் அமைதி பேணுகின்றனர். இந்த கொலைகள் போருக்கான தூண்டுதல்களாலும்.’
தமிழ்த் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழ் சமூகம் இந்தக் கொடியினை அங்கீகரிக்கின்றது. இதன் மூலங்கள் கட்டுக்கதை என்பதும்; கொடியின் மிகவும் துல்லியமான அடையாளங்களை சிதைப்பதும் கல்விமான்களின் ஓர் கையாளுகை ஆகும். அதன் தோற்றுவாய் என்னவாக இருந்தாலும் தமிழ் சமூகம்; கொடியினை தற்போதுள்ள வடிவத்தில் தமிழ்த் தேசத்தின் கொடியாக ஏற்றுக்கொள்கின்றனர். தற்போது வடக்கும் கிழக்கும் பெரிதும் இராணுவமயப்படுத்தப்பட்டு அங்கே தமிழரின் அடையாளத்தினை வெளிப்படுத்துவது குற்றமாக்கப்பட்டுள்ளதால், தமிழ் இனத்தையும் அடையாளத்தையும் கொண்டாடுவதற்கான ஓர் வழிமுறையாக கொடி உள்ளது.
தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவதன் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவைத் தேடுவதோ அல்லது அதற்குப் புகழாரம் சூடுவதோ தமிழ் சமூகத்தின் நோக்கம் இல்லை.
நோக்கத்தினை தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் கல்விசார் நிபுணத்துவக் கட்டுரையின் ஓர் பகுதியையும் நாம் இங்கே வழங்குகின்றோம்..
தமது பல்வேறு கோரிக்கைகளை நியாயப்படுத்தும் முகமாக இனவாத கட்டுக்கதைகளை பின்பற்றியவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் அடங்குவர். கிறிஸ்துவுக்கு முன்னரான முதலாவது மிலேனிய யுகத்திலிருந்தே தமிழ் மக்களின் பிரசன்னம் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்துவருகின்றது என்பது தமிழர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையானது என்றபோதிலும், சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராக ஆயுத எதிர்ப்பினை கட்டியெழுப்பும் பொருட்டு; தமிழ் மக்களை போராற்றல் மிக்க மக்களாக உருவாக்குவதற்கு சோழர்காலத்து போர்வரலாற்று கட்டுக்கதையினை விடுதலைப் புலிகளும் திட்டமிட்டு பயன்படுத்தினர். (இந்திரபாலா 2007:அத்தியாயம் 7, பக்கம் 255-6 இனை பார்வையிடவும்). உண்மையில் இந்த சொற்பதத்தினையும் புலிச் சின்னத்தினையும் புலிகள் பயன்படுத்தியமையானது சோழர் நாணயங்களில் புலியைப் பயன்படுத்தியமையினைப் பிரதிபலிக்கின்றது: அயசவயைட எநடழரச இனையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் அடையாளப்படுத்துகின்ற திராவிட நாகரிகத்தில் வேரூன்றிய ஓர் அடையாளச் சின்னமாகையால் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழத்தின் தேசிய முத்திரையாக புலியை தெரிவுசெய்தார் (தமிழ்நெற் 2005). சோழ ஏகாதிபத்தியத்தின் புலிச் சின்னமானது சிங்களவர்களின் சிங்கத்துடன் நேரடியான முரண்பாட்டை ஏற்படுத்தியது. அத்தோடு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சின்னமான அமர்ந்திருக்கும் காளையும் மாற்றீடு செய்யப்பட்டது. புலிச் சின்னமானது வீர வரலாற்றினையும் தமிழர்களின் தேசிய எழுச்சியினையும் விளக்கியுள்ளது, எமது தேசியக் கொடியானது சுதந்திர தேசத்தின் அடையாளமாக உள்ளது என புலிகள் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் (பெப்ரவரி 1991) மேற்கோள்காட்டியுள்ளது.
எழுதியவர் டேமியன் கிங்ஸ்பெரி
‘இலங்கையும் அரசியல், இனம் மற்றும் படுகொலையிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பும்’
முடிவு:
இந்தக் கொடியினை எமது தேசியக் கொடியாகவும் தமிழ்த் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தமிழ் சமூகம் அங்கீகரிக்கின்றது. இது புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாகிய நாம் குழப்பங்களை ஏற்படுத்தாமலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாமலும் எமது கருத்துச் சுதந்தரத்தினை பிரயோகிப்பதற்கான எமது அடிப்படை உரிமை என நம்புகின்றோம்.
பிரித்தானியாவின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகளை மீறாமலும் அல்லது அவற்றுக்கு முரண்படாமலும் புலம்பெயர் தமிழர்களை வழிநடத்துகின்ற கடமை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு உள்ளது என்பதால், அவர்கள் விழிப்போடு செயற்பட்டு தமிழீழ தேசியக் கொடியின் சட்ட அந்தஸ்தினை தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர். ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசாருக்கு எழுத்துமூலத்தில் எழுதி இந்த விடயத்தினை உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் கலந்துரையாடியுள்ளனர். இருப்பினும், ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசார் எழுத்துமூலத்தில் எதனையும் வழங்க மறுத்துள்ளனர். இது தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்றே அர்த்தப்படவேண்டும். தடை செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்களுக்கு கரிசனை இருந்திருந்தால் ஆலோசனை வழங்கவேண்டிய கடப்பாடு ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசாருக்கு இருக்கின்றது. தமிழ்க்கொடி தடைசெய்யப்பட்டிருந்தால் அவர்கள் தெரிந்துகொண்டு எவரையும் ஏற்ற அனுமதிக்கமாட்டார்கள் என்பதுடன் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடுத்திருப்பார்கள்.
பிரித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளரான மரியா என்பவர் 2009 இல் இந்த விடயத்தினை ஸகொட்லண்ட் யாட் ஃ மெற்றோபொலிற்றன் பொலிசாரிடம் எடுத்துச் சென்றார். சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவானது (SO15) தமிழீழ தேசியக் கொடியானது புலிகளின் கொடியிலிருந்து வேறுபட்டது என்றும் அது தடைசெய்யப்படவில்லை என்றும் தெளிவாக உறுதிப்படுத்தியது. 26 மே 2009 அன்று ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவினால் (SO15) இந்தப் பிரச்சினைக்குரிய கொடி ஈழத் தமிழர்களின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை பின்வரும் யூரியூப் ஒளிப்பதிவு தெளிவாகக் காட்டுகின்றது.
ஸ்கொட்லண் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவு (SO15) 17 மே 2016 அன்று ICPPG இன் நிறைவேற்று அதிகாரியான அம்பிகை சீவரட்ணம் அவர்களுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ தொடர்பாடலில் இது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய சட்டம் மற்றும் ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவின் வாய்மொழி மூலமான பிரகடனத்தினையும் எடுத்துக்கொண்டால், பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதோடு பிரித்தானியச்சட்டத்தின் கீழ் எவரையும் வழக்குவிசாரணைக்குஉட்படுத்தமுடியாது.
பரிந்துரை:
பிரித்தானியாவிலும் உலகளாவியரீதியிலும் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதால், தமிழ் தேசியக் கொடியினை ஏற்றுவது வழக்கு விசாரணைக்கு வழிகோலும் எனத் தொடர்ந்தும் நம்புகின்ற பொதுமக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முன்னணிவகிக்கவேண்டும். அமைப்புக்கள் முன்வந்து ஒவ்வொரு தேசிய நிகழ்வுகளிலும் உரிய மரியாதையோடு தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வாறு செய்வது சந்தேகங்களை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல் தமிழீழ தேசியக் கொடிக்கு நாம் வழங்கும் உன்னத மரியாதையினை இரண்டாம் தலைமுறையினருக்கும் கற்பிக்கும்.
தமிழீழ தேசியக் கொடியினை ஊக்குவிப்பது இராஜதந்திர நகர்வுகளுக்கு அல்லது ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இடையூறாக இருக்கலாம் என வாதிடுவது ஓர் போலியான கட்டுக்கதையே தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். தமது நிகழ்வுகளில் தேசியக் கொடியினை ஏற்றுவதோடு இலங்கைக்கு எதிராக ஓர் தீர்மானத்தை ஐ.நா கொண்டுவரவேண்டும் என வெற்றிகரமாக ஆதரவு திரட்டிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல பல்வேறு நாடுகளில் உள்ளன. ஐ.நாவின் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ் அரச சார்பற்ற நிறுவனமான ‘Le Collectif La Paix au Sri Lanka‘ ஆனது தனது முத்திரையில் தமிழீழ தேசியக் கொடியினை வைத்திருக்கின்றது என்பதை இங்கே குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் ஐ.நா மற்றும் பல்வேறு இராஜதந்திரிகளுடன் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகப் பணியாற்றிவருகின்றனர். தமிழீழ தேசியக் கொடி காரணமாக அவர்கள் எதிர்ப்புக்களை சந்தித்ததாகப் பதிவுகள் எவையும் இல்லை. இராஜதந்திர நகர்வுகள் எவற்றுக்கும் எந்த வகையிலும் தமிழீழ தேசியக் கொடி இடையூறாக அமையாது என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது. தமிழீழ தேசியக் கொடியினை எமது அடையாளமாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் தனிப்பட்ட ரீதியான இராஜதந்திரிகள் இருப்பார்களானால் அவர்களை படிப்படியாக நம்பவைத்து எமது தமிழ் தேசியக் கொடியினை ஏற்று மதிப்பளிக்கச் செய்யவேண்டியது புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாகும். இதில் வெற்றியடையாமல், நீதியை கோருவதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் சுதந்திர தாயகத்தினை நிறுவுவதும் சாத்தியமானதாக இருக்காது.
எழுதியவர்;:
குலசேகரம் கீதார்த்தனன், LLB (Hons), Pg Dip in Legal Practice, Dip in Journalism.
கீத் ஓர் மனித உரிமைச் செயற்பாட்டாளர், ILEX இன் பட்டதாரி உறுப்பினர், 2004 இலிருந்து மனித உரிமைச் செயற்பாட்டாளராச் செயற்படுகின்றார். 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளுக்கு வெற்றிகரமாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மூத்த சட்டத்தரணியும் பரிஸ்டருமான திரு அருண் கணநாதனின் வழிப்படுத்தலின் கீழ் அதி உயர் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். அவரது சிறந்த செயல்திறனுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்குமாக நீதிபதி ஒருவரின் பரிந்துரைக்கு அமைய அவருக்கு அசோகா டயஸ் நிறுவனத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜேர்மனியில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் (PPT); பிரிதிநிதித்துவப்படுத்தி ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக வழக்குத் தாக்கல் செய்ய ஜியோவ்றி ரொபேட்சன் QC இற்கு உதவினார். 2014 இல் ‘போரில் பாலியல் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்’ என்பதற்காக இடம்பெற்ற உலக உச்சிமாநாட்டில் உரையாற்றியுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவேண்டியதன் அவசியத்தை வெளிப்படு;த்தி ஆய்வுக் கட்டுரை ஒன்றினையும் எழுதியுள்ளார். தனக்குச் சொந்தமான ஆலோசனை வழங்கும் அலுவலகத்தினை நடத்துகின்றார். ஐ.நா அமைப்புக்கள் மற்றும் பொது மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், Freedom From Torture மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் போன்ற சர்வதேச அமைப்புக்களுக்கும் தொடர்ந்தும் உதவிவருகின்றார்.
இணை எழுத்தாளர்:
மெலனி திசநாயக்க, LLB. LLM. Attorney-At-Law
Melani Dissanayake, LLB. LLM. Attorney-At-Law
மெலனி திசநாயக்க ஓர் மனித உரிமைச் சட்டத்தரணியும் மனித உரிமைப் பாதுகாவலரும் ஆவார். அவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். தனது சட்டப் பட்டப்படிப்பினை 2004ம் அண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார். தனது மேலதிக தகைமைகளை இலங்கைச் சட்டக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 2005 இல் அவர் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டு வழக்கறிஞராகச் செயற்பட அதிகாரமளிக்கப்பட்டது.
மனித உரிமைச் சட்டத்தரணி என்ற தகைமையில் அவர் பல எண்ணிக்கையான அதி உயர் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு இலங்கையில் நன்மதிப்புப் பெற்ற மனித உரிமை அமைப்புக்களோடு பணியாற்றியுள்ளார். இலங்கையின் மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்தி உதவியுள்ளார். அவர் தற்போது தமிழர் தகவல் மையத்துடன் தொண்டராகவும் ICPPG உடன் ஓர் ஆய்வாளராகவும் செயற்படுகின்றார். இலங்கையில் இடம்பெற்ற படுகொலையிலிருந்து தப்பியவர்களிடமிருந்து சாட்சியங்களைச் சேகரித்து தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் அணைக்குழுவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சமர்ப்பித்துவருகின்றார்.
ஒரு மனித இனத்தின் அடையாளமாக அவர்களது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், இயல் இசை, விளையாட்டு, மற்றும் சம்பிதாயங்கள் விளங்குகின்றன.
ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நாடு தங்களை பிரதிபலிப்பதற்கு தங்களின் தேசியக்கொடியையே முன்னிலைப்படுத்துவார்கள்.
ஒரு நாடு,அந்த நாட்டினதும் அந்த நாட்டு மக்கள் சம்பந்தமான அணைத்து நிகழ்வுகளையும் தங்கள் தேசியக்கொடியை ஏற்றுவதோடு ஆரம்பிக்கும்.
இதே போல் ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்கள் ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்களுடைய இனத்தின் அடையாளங்கள்- மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் இதர விழுமியங்களை பேணிப்பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திலும் எங்கள் இனத்தின் விடுதலைக்கும் எங்கள் மக்கள் மீது நடத்தப்படட கொடுமைகளுக்கும் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்திலும் இன்னும் இருக்கிறோம்.
உலகமெங்கும் நீதி கேட்டு போராடும் எங்களின் அடையாளம் என்பது எங்கள் தேசியக்கொடியே. எந்தவொரு நாடும் அல்லது எந்தவொரு அமைப்பும், நாங்கள் ஏற்றும் தேசியக்கொடியை தவிர்க்கக்கூறுவது, எங்கள் உரிமைகளை கைவிடக்கோருவதற்கு ஒப்பானது.
கடந்த ஆண்டு மே 18- முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் தமிழ் தேசியக்கொடியேற்றுவது தொடர்ப்பாக லண்டனில் ஏற்படட கருத்து முரணப்பாடுகள் தமிழ் மக்களை பெருங்கவலைகளுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருந்தது மட்டுமல்லாமல், மக்களின் பங்களிப்பையும் வெகுவாக குறைத்திருந்தது.
எனவே இந்தவருடம் எந்தவித மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமளிக்காமல் கட்சி பேதங்கள் எதுவுமின்றி தமிழ் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பிக்கும் மே 18- முள்ளிவாய்க்கால்- தமிழ் இனவழிப்பு நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து கொண்டு, அநியாயமாக படுகொலை செய்யப்படட எம்மக்களை நினைவு கூர்வதோடு , அதற்கான நீதியையும் வேண்டி, எம்மக்களின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க ஒற்றிணையுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.