SHARE

பிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ஏன் முற்றிலும் சட்டபூர்வமானது.

– ஓர் சட்டரீதியான பார்வை –

அறிமுகம்:

தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமும், அனைத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் ஒன்றிணைக்கின்றதுமான தமிழீழ தேசியக் கொடியினை  தமது தேசிய நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக ஏற்றவேண்டும் என பிரித்தானியா மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் சமூகம்  நம்பிக்கை கொண்டுள்ளது.

இருப்பினும், தமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதனை  ஏற்றுவது வழக்கு விசாரணைக்கு வழிவகுக்கும் என்றும் சில புலம்பெயர் அமைப்புக்களும்; தனிநபர்களும் தமிழ் சமூகத்தினரை  தவறாக வழிநடத்திவருகின்றனர். புலம்பெயர்ந்துவாழும் நாட்டுப்பற்றுள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களை சுதந்திரத்தின் வழி; தூண்டும் என்பதால் இந்தத் தமிழீழ தேசியக் கொடியை தமது ஏகாதிபத்தியத்திற்கு  ஓர் பாரிய அச்சுறுதலாகக் கருதுகின்ற இலங்கை அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுவருகின்ற திட்டத்தின் ஓர் பகுதியாகவே இது உள்ளது. இந்தப் பொறியினுள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தனிநபர்களும் விழுந்து, தமிழர்களின் அடையாளத்தினையே இல்லாதொழிக்கத் திட்டமிட்டரீதியில்  முயற்சிக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு பங்களிப்புச்செய்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மையாக உள்ளது.

ஸ்கொட்லண்ட் யாட்டும் மெற்றோபொலிற்றன் பொலிசாரும் தமிழ்த தேசியக் கொடியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடினையும் தவறாகப் புரிந்துகொண்டதால் 2009 இல் ஓர் பதட்டம் ஏற்பட்டது என்பதை தமிழ் சமூகத்தினர் புரிந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளி;ன் கொடியினை எந்த நிகழ்வுகளிலும் பயன்படுத்தும் நோக்கம் புலம்பெயந்து வாழும் தமிழர்களிடம் இருக்கவில்லை. இருப்பினும், தமிழீழ தேசியக் கொடியினை தாம் ஏற்றுவது தடுக்கப்படக்கூடாது என அவர்கள் நம்புகின்றனர். பிரித்தானியாவில் நடைபெற்ற கடந்த சில முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின்போது கணிசமான தமிழ் மக்கள் தமது  கொடிகளைக் கொண்டுவந்து கட்டுப்படுத்தமுடியாதவாறு மேடைக்கு முன்னால் ஏற்றினர்.
தமிழீழ தேசியக் கொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற தவறான புரிந்துணர்வுகளையும் தவறான கருத்துருவாக்கங்களையும் தெளிவுபடுத்த கீழ்வரும் தகவல் உதவும்.

தமிழ்த் தேசியம் மற்றும் தேசியக் கொடி ஆகியவற்றின் தோற்றமும் வரலாறும்::

தமிழீழ தேசியக் கொடியானது தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை உள்ளடக்குகின்றது. கி.மு 200 ¬– கி.பி 250 இற்கு உட்பட்ட சங்ககாலத்திலிருந்தே தமிழ் இலக்கியத்தில் ஈழம் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. ஈழம் என்ற சொல்தான் தற்போது சிறி லங்கா என மாறியுள்ளது. கி.பி 1017-1070 வரையான சோழர் காலத்தில் ஈழமானது நிர்வாக அலகுகளைக் கொண்டிருந்தது என்பது ஒர் அறிந்த உண்மையாகும். தற்போதைய சிறிலங்காவின் வடக்கு கிழக்கினை பூர்வீகமாகக்கொண்டதே தமிழழீழம் ஆகும். இவை சுதந்திரமான இராட்சியங்களைக் கொண்டிருந்ததுடன் போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தரின் காலனியாதிக்கத்திலிருந்து தமது பிராந்திய ஒருமைப்பாட்டினைத் தக்கவைத்தன. தமது நிர்வாக சுலபத்திற்காக பிரித்தானியர் இந்த இராட்சியங்களை ஒன்றிணைத்ததிலிருந்து தமிழ் இராட்சியம் தனது ஒருமைப்பாட்டினையும் அடையாளத்தினையும் இழக்கத்தொடங்கியது.  பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் வழங்கத் தீர்மானித்தபோது அவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதோடு எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருந்த சிங்களவரிடம் ஆளும் அதிகாரம் கையளிக்கப்பட்டது. சிங்கள பௌத்த நாடாக சிறிலங்காவை உருவாக்கும் நோக்கோடு 1948 இலிருந்து இனச்சுத்திகரிப்பு ஆரம்பமாகியது. இதன் ஓர் முக்கிய கட்டமாக சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாறாக, தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் வரலாற்று அடையாளங்கள்  அழிக்கப்பட்டன. தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 1990 இல் கீழ்வரும் மாதிரி வடிவத்தில் உள்ளது போல் தமிழர்கள் தமது தேசியக் கொடியினை மீள் வடிவமைப்புச் செய்தனர்.

தமிழீழ தேசியக் கொடி:

பண்டைய சோழ இராட்சியத்தினால் பயன்படுத்தப்பட்ட சோழர் கொடியிலிருந்தே தமிழீழ தேசியக் கொடி உருவெடுத்தது. சோழர் கொடியானது புலியினை அல்லது பாயும் புலியினை  கொண்டிருந்தது.

[1] http://en.wikipedia.org/wiki/Flag_of_Tamil_Eelam
http://tamilnation.co/tamileelam/defacto/flag.htm

 

தென்னிந்தியாவில் நீண்ட காலம் ஆண்ட வம்சங்களில் சோழவம்சமும் ஒன்றாகும். கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்தான குறிப்புக்கள் மௌரீய சாம்ராட்சி;யத்தின் அசோகரின் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. முடிசூடிய மூன்று மன்னர்களில் ஒருவரான சோழப் பேரரசு 13ம் நூற்றாண்டுவரை பல்வேறு பிராந்தியங்களை தொடர்ந்து ஆண்டது

சோழவம்சத்தின் மைய பூமியாக காவேரி ஆற்றங்கரை விளங்கியது. ஆனால் 9ம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதியிலிரந்து 13ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கணிசமான பெரும் நிலப்பகுதியை தமது அதிக்கத்தின் கீழ் அண்டனர். துங்கபத்ரவின் தென்பகுதியான நாடு முழுவதும் ஒன்றிணைக்கப்பட்டு  2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு தேசமாக விளங்கியது. ராஜராஜ சோழன் – 1மற்றும் அவரைத் தொடர்ந்து ராஜேந்திர சோழன் -1, ராஜாதிராஜ சோழன் -1, வீரராஜேந்திர சோழன் மற்றும் குலதுங்க சோழன்-1 ஆகியோரின் கீழ் இந்த வம்சமானது தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இராணுவ பொருளாதார கலாச்சார வல்லமை கொண்ட வம்சமாகியது. கங்கை வரை விஸ்தரிக்ககப்பட்டு புதிய சாம்ராட்சியத்தின் அதிகாரம் கிழக்கு உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அதனை ராஜேந்திர சோழன்-1 ஆட்சி செய்து தென் கிழக்கு ஆசியாவில் இருந்த சிறிவிஜயாவின் கடலோரப் பேரரசின் நகரங்களையும் ஆக்கிரமித்து  சீனாவில் அடிக்கடி தூதரகங்களை வைத்திருந்தான்..

1010 – 1200 வரையான காலப் பகுதியில் சோழர் பிராந்தியங்கள் தெற்கில் மாலைதீவிலிருந்து வடக்கு நோக்கி அந்திரப் பிரதேசத்தில் உள்ள கோதாவாரி ஆற்றங்கரை வரை  விரிவாக்கமடைந்தன. ராஜராஜசோழன்  தென்னிந்தியக் குடாவை தெற்றிகொண்டு தற்போது இலங்கையாக உள்ளதன் பகுதிகளையும் இணைத்து மாலைதீவினையும் அக்கிரமித்தான். ராஜேந்திர சோழன் வடஇந்தியாவுக்கு ஓர் வெற்றிகரமான படையெடுப்பினை மெற்கொண்டு கங்கை நதியினை அடைந்து பாட்டாளிபுத்ர மற்றும் மகிபாலாவின் ஆட்சியாளரை தோற்கடித்தான். மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சிறிவிஜயா நகரங்கள் மீதும் அவன் வெற்றிகரமாகப் படையெடுத்தான்.

[1] http://en.wikipedia.org/wiki/Flag_of_Chola
[1] http://tamilmirrorcanada.blogspot.co.uk/2013/01/pandara-vanniyan-last-tamil-king-of.html

 

சோழரின் புலிக் கொடியானது 12ம் நூற்றாண்டில் சேக்கிழாரினால் தொகுக்கப்பட்ட பெரியபுராணத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வரலாற்றுரீதியில் இந்த அடையாளத்துடன் ஓர் ஆழமான தொடர்பு இருந்துள்ளது.

சிறிலங்காவில் பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் கொல்லபட்ட ‘பண்டார வன்னிய மன்னனின்” வன்னிமையின் பூர்வீக அடையாளமாகவிருந்த குறுக்காக வைக்கப்பட்டிருக்கும் வாள்களினை அடிப்படையாகக்கொண்டே  துப்பாக்கிகள குறுக்காக வைக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி:

தமிழீழ விடுதலைப் புலிகளால் 1977 இல்  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்டிருக்கும் புலிகளின் கொடியும்;  தமிழீழத் தேசியக் கொடியும் தொடர்ந்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகின்றமை துரதிர்ஸ்டவசமானதாகும். இதனை எடுத்துக்காட்டுவதற்காக நாம் புலிகளின் கொடியினை மேலே காண்பித்துள்ளோம்.

தமிழீழ தேசியக் கொடிக்கும் தடைசெய்யப்பட்டிருக்கும் புலிகளின் கொடிக்கும் இடையிலான வேறுபாடு:

புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை குறிப்பிடுவது அத்தியாவசியமானதாக உள்ளது.

புலிகளின் கொடியில்  “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.  தமிழ்த தேசியக் கொடியில் அத்தகைய பெயர்கள் எவையும் இல்லை.

சம்பந்தப்பட்ட சட்டங்களை வெளிப்படுத்தி புலிகளுக்கு புகழாரம் சூடுவதற்கான அல்லது தடை செய்யப்பட்ட அந்த அமைப்பிற்கு ஆதரவைத் தேடுவதற்கான நோக்கத்தோடு கூடிய ஓர் ‘அற்ப’ மாற்றமாக இது அமையவில்லை. இது இரண்டு கொடிகளையும் வேறுபடுத்துகின்ற ஓர் முக்கிய வேறுபாடு ஆகும்.

1990 இலிருந்தே, அதாவது 2001 இல் விடுதலைப் புலிகள் தடை செய்யப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் கூடிய காலத்திற்கு முன்னிருந்தே தமிழீழ தேசியக் கொடி பின்பற்றப்பட்டது  என்பதையும்  குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே தடைசெய்யப்பட்ட கொடியை ஓர் ‘அற்ப’ மாற்றத்தோடு காட்ட புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகின்றது.

சம்பந்தப்பட்ட சட்டம்

‘தடை செய்யப்படாத அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது’ என்பது ஆங்கிலச் சட்டத்தின் ஓர் அரசியலமைப்புக் கொள்கையாகும்-சாதாரண குடிமகனின் ஓர் அடிப்படைச் சுதந்திரம். சாதாரண உரை நடையில் குறிப்பிடுவதானால், பிரித்தானியாவில் உள்ள எந்தவொரு எழுத்து மூல சட்டத்தினாலோ, சட்ட சபையினால் இயற்றப்பட்ட எழுத்துமூல சட்டத்தினாலோ, உள்ளுர் அதிகார சபையின் சட்டத்தினாலோ அல்லது விதிமுறைகளினாலோ தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை.

பயங்கரவாதச் சட்டம் 2000 இன் கீழ் தடைவிதிக்கப்பட்ட குற்றங்களாக பின்வருவனவற்றை உள்விவகாரச் செயலர் வரையறுத்துள்ளார்;

ஓர் குற்றச்செயலாகும் தடைவிதிக்கப்பட்ட விடயங்கள்:

•    பிரித்தானியாவில் அல்லது வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் ஓர் அமைப்பிற்கு உரித்துடையதாக இருத்தல் அல்லது உரித்துடையது எனக் கூறப்படுகின்றவை (சட்டத்தின் பிரிவு 11)

•    தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பினை வரவேற்று ஆதரவு வழங்குதல் ( அத்தோடு ஆதரவு என்பது நிதி மற்றும் சொத்துக்களை வழங்குவதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை) (பிரிவு 12(1));

•    தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அல்லது அவற்றை மேலும் முன்னெடுப்பதற்கு, அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றினைச் சேர்ந்த அல்லது சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்ற ஒருவரால் உரையாற்ற என்று தெரிந்துகொண்டு கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது  நெறிப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவற்கு உதவுவது (பிரிவு 12(2)) ; அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் செயற்பாடுகளுக்கான அதரவை ஊக்குவிப்பதை அல்லது செயற்பாடுகளை மேலும் முன்னெடுப்பதை நோக்காகக்கொண்டு ஓர் கூட்டத்தில் உரையாற்றுவது (பிரிவு 12(3)) ; மற்றும்

•    ஓர் தனிநபர் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஓர் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்று நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும்வகையில் பொதுவெளியில் உடைகளை அணிந்திருத்தல் அல்லது பொருட்களை வைத்திருத்தல் அல்லது காட்சிப்படுத்தல் (பிரிவு 13)

இங்கு பிரிவு 13 மிகவும் பொருத்தமான பகுதியாகும். இருப்பினும், பின்வரும் காரணங்களுக்காக, பொது நிகழ்வு ஒன்றில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது இந்த வகைப்படுத்தல்கள் எவற்றிற்கும் உட்படவில்லை;

1.    எந்தவொரு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கும் சொந்தமான ஒரு பொருளாக  தமிழீழ தேசியக் கொடியினைக் கருதமுடியாது. அத்துடன் தமிழீழம் என்பது ஓர் அமைப்பு இல்லை. மாறாக அது ஒரு தேசம். எனவே அது தடைசெய்யப்படமுடியாதது. அவ்வாறாக, தமிழ்த்தேசியக் கொடி தடைசெய்யப்பட்டுள்ளது என யாரும் வாதிட எந்தவொரு அடிப்படையும் இல்லை.

2.   தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ‘தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என ஒரு தனிநபர் மீது நியாயமான சந்தேகத்தினை’ ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை. பொது நிகழ்வின் நோக்கம் வெளிப்படையானது என்பதால்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் தொடர்புபடுத்துவதற்கு எதுவுமில்லை.

[1] http://tamilnationalflag.com/index.php/history
[1] http://restructure.wordpress.com/2009/05/15/tamil-eelam-flag-versus-tamil-tiger-flag/

 

குற்ற எண்ணத்தை நிரூபிக்கவேண்டிய தேவை

Actus Reus‘ மற்றும்  ‘Mens Rea‘ என்பன குற்றவியல் சட்டத்தின் அடிப்படையாகும். இது ஒரு செயலைச் செய்பவரின்  மனம் குற்றமடையாவிட்டால் அச்செயல்  அவரைக் குற்றவாளியாக்காது. ஒருவர் எண்ணத்திலும் செயலிலும்  குற்றமுடையவர் அல்லது கண்டிக்கத்தக்கவர் என்பது  நிரூபிக்கப்பட்டாலே அவர் குற்றவாளி என எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இந்தக் கொள்கையினை எமது சூழ்நிலைக்கு பிரயோகிக்கும்போது, உத்தியோகபூர்வமாக ஓர் கொடியினை உயர்த்துவது அல்லது ஏற்றுவது என்பது ஓர் குற்றச்செயலுக்கு ஒப்பாகாது. எமக்கு தடை செய்யப்பட்ட  அமைப்பை புகழாரம் செய்யும் நோக்கம் உள்ளது என்று அல்லது நாம் அந்த நோக்கத்தை ஊக்குவிப்பதாக பொலிசார் உறுதிப்படுத்தவேண்டும். இது எமது நிலைமையைப் பொறுத்தவரையில் பொருத்தமற்றது என்பது வெளிப்படையானதாகும்.

இத்தகைய சந்தர்ப்பங்களில், ‘நீதிமன்றத்தினால் நியாயமான முறையில் நம்பத்தகுந்த ஆதாரங்களை’ வழக்குத் தொடுப்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்குச் சமர்ப்பிக்கவேண்டும். வெறும் சந்தேகம் இதற்குப் போதுமானதாக இருக்காது. இந்தச் சந்தர்ப்பங்களில் ஆதாரத்திதின் தரமானது ‘ஓர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். அதாவது பொலிசார் அந்த நோக்கத்தினை 100 வீதம் நிரூபிக்கவேண்டும். ஒரு வீதம் சந்தேகம் இருந்தால்கூட குற்றச்சாட்டினை நீதிமன்ற நீதியாளர் குழு ரத்துச்செய்யும். புதிய சட்டத்தில், ‘நீதியாளர் குழுவினை உறுதியாக நம்பச் செய்யவேண்டும்’ என்ற பிரயோகம் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, நீதியாளர் குழு அல்லது குற்றவியல் நீதிபதிகள் பிரதிவாதியின் குற்றத்தினை உறுதியாக நம்பவேண்டும்.

தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவதன்மூலம் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் குற்ற நோக்கம் ஒன்று எம்மிடம் உள்ளது என்று நீதியாளர் குழுவை நம்பவைக்க பொலிசாரிடம் ஒரு வழியுமில்லை. உண்மையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் ஒருவரிடமேனும் அத்தகைய நோக்கம் எதுவுமில்லை. எனவே பொலிசாரினால் எந்த விலைகொடுத்தும் இதனை நிரூபிக்கமுடியாது.

கடந்த காலத்தில் மெட்ரோ பொலிசாரும்  ஏனைய அரசுகளும்  எடுத்துக்கொண்ட  நிலைப்பாடுகள்

மேலே குறிப்பிடப்பட்ட குழப்பமானது கடந்த காலத்தில் கைதுகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதையும் அதனைப் பயன்படுத்துவதோ அல்லது  காட்சிப்படுத்துவதோ தடுக்கப்படமுடியாது என்பதையும் பொலிசார் உணர்ந்த பின்னர் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி பொலிசாரினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதை  தனது சிரேஸ்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின்னர் வாய்மூல அறிக்கை ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒளிப்பதிவினை பின்வரும் இணையத்தில்  பார்வையிடலாம் ;

https://www.youtube.com/watch?v=VzssCpOA_v8

ரொறன்ரோ பொலிஸ் பேச்சாளரான மார்க் புகாஷ் அவர்களை மேற்கோளிட்ட, கனேடிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்தி அறிக்கை ஒன்றின் பிரகாரம், கனடாவில் ஈழத் தமிழர்களின் தேசியக் கொடியின் பயன்பாடு கனேடியச் சட்டம் எதற்கும் முரணானது அல்ல. அந்தச் செய்தி மேலும் தெரிவிப்பதாவது: ‘இலங்கைத் தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார அபிலாசைகளை அடையாளப்படுத்துகின்றதாக விபரிக்கப்படும் ஈழத்தமிழர்களின் தேசியக்கொடியானது, 1990 இல் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் தடைசெய்யப்பட்டிருக்காத காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டது.  முழு விபரங்களுக்கு பின்வரும் இணையத்தைப் பார்வையிடவும் ;

http://www.tamilguardian.com/article.asp?articleid=2243

யோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியம் (YUTSA) எதிர் காலத்தில் தமது அமைப்பினைப் பிரதிநிதித்துபடுதுவதற்கும் பல்கலைக் கழகத்தின் பல்லினக் கலாச்சார வாரத்தின்போதும் தமிழீழக் கொடியினைப் பயன்படுத்துவதற்காக ஓர் நகலை முன்வைத்தது.

இவை ஏனைய அரசாங்கங்களால் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதோடு உலகளாவிய ரீதியிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் சட்டரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான சில உதாரணங்களாகும்.

தமிழ் சமூகத்தின் அபிப்பிராயமும் நம்பிக்கையும்:

2009 இல், மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் அவர்கள் ‘ தமிழ்த் தேசத்தில் அதன் தேசியக் கொடியினை ஏற்றுவதில் எந்தவொரு தப்பும் இல்லை’ என வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ தேசியக் கொடி புலிகளின் கொடி அல்ல. மாறாக அது தமிழ் மக்களின் கொடி. அதனை ஏற்றுவது அமைதிக்கு எதிரானது அல்ல. இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் அண்மையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் அமைதி பேணுகின்றனர்.  இந்த கொலைகள் போருக்கான தூண்டுதல்களாலும்.’
தமிழ்த் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழ் சமூகம் இந்தக் கொடியினை அங்கீகரிக்கின்றது. இதன் மூலங்கள் கட்டுக்கதை என்பதும்; கொடியின் மிகவும் துல்லியமான அடையாளங்களை சிதைப்பதும் கல்விமான்களின் ஓர் கையாளுகை ஆகும். அதன் தோற்றுவாய் என்னவாக இருந்தாலும் தமிழ் சமூகம்; கொடியினை தற்போதுள்ள வடிவத்தில் தமிழ்த் தேசத்தின் கொடியாக ஏற்றுக்கொள்கின்றனர். தற்போது வடக்கும் கிழக்கும் பெரிதும் இராணுவமயப்படுத்தப்பட்டு அங்கே தமிழரின் அடையாளத்தினை வெளிப்படுத்துவது குற்றமாக்கப்பட்டுள்ளதால், தமிழ் இனத்தையும் அடையாளத்தையும் கொண்டாடுவதற்கான ஓர் வழிமுறையாக கொடி உள்ளது.

தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவதன் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவைத் தேடுவதோ அல்லது அதற்குப் புகழாரம் சூடுவதோ தமிழ் சமூகத்தின் நோக்கம் இல்லை.

நோக்கத்தினை தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் கல்விசார் நிபுணத்துவக் கட்டுரையின் ஓர் பகுதியையும் நாம் இங்கே வழங்குகின்றோம்..

தமது பல்வேறு கோரிக்கைகளை நியாயப்படுத்தும் முகமாக இனவாத கட்டுக்கதைகளை பின்பற்றியவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் அடங்குவர். கிறிஸ்துவுக்கு முன்னரான முதலாவது மிலேனிய யுகத்திலிருந்தே தமிழ் மக்களின் பிரசன்னம் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்துவருகின்றது என்பது  தமிழர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையானது என்றபோதிலும்,  சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராக ஆயுத எதிர்ப்பினை கட்டியெழுப்பும் பொருட்டு; தமிழ் மக்களை போராற்றல் மிக்க மக்களாக உருவாக்குவதற்கு சோழர்காலத்து போர்வரலாற்று கட்டுக்கதையினை விடுதலைப் புலிகளும்  திட்டமிட்டு பயன்படுத்தினர். (இந்திரபாலா 2007:அத்தியாயம் 7, பக்கம் 255-6 இனை பார்வையிடவும்). உண்மையில்  இந்த சொற்பதத்தினையும் புலிச் சின்னத்தினையும் புலிகள் பயன்படுத்தியமையானது சோழர் நாணயங்களில் புலியைப் பயன்படுத்தியமையினைப் பிரதிபலிக்கின்றது: அயசவயைட எநடழரச  இனையும்  தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் அடையாளப்படுத்துகின்ற திராவிட நாகரிகத்தில் வேரூன்றிய ஓர் அடையாளச் சின்னமாகையால் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழத்தின் தேசிய முத்திரையாக புலியை தெரிவுசெய்தார் (தமிழ்நெற் 2005). சோழ ஏகாதிபத்தியத்தின் புலிச் சின்னமானது சிங்களவர்களின் சிங்கத்துடன் நேரடியான முரண்பாட்டை ஏற்படுத்தியது. அத்தோடு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சின்னமான அமர்ந்திருக்கும் காளையும் மாற்றீடு செய்யப்பட்டது. புலிச் சின்னமானது வீர வரலாற்றினையும் தமிழர்களின் தேசிய எழுச்சியினையும் விளக்கியுள்ளது, எமது தேசியக் கொடியானது சுதந்திர தேசத்தின் அடையாளமாக உள்ளது  என புலிகள்  அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள்  (பெப்ரவரி 1991) மேற்கோள்காட்டியுள்ளது.

எழுதியவர் டேமியன் கிங்ஸ்பெரி

‘இலங்கையும் அரசியல், இனம் மற்றும் படுகொலையிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பும்’

முடிவு:

இந்தக் கொடியினை எமது தேசியக் கொடியாகவும் தமிழ்த் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தமிழ் சமூகம் அங்கீகரிக்கின்றது. இது புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாகிய நாம் குழப்பங்களை ஏற்படுத்தாமலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாமலும் எமது கருத்துச் சுதந்தரத்தினை பிரயோகிப்பதற்கான எமது அடிப்படை உரிமை என நம்புகின்றோம்.

பிரித்தானியாவின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகளை மீறாமலும் அல்லது அவற்றுக்கு முரண்படாமலும் புலம்பெயர் தமிழர்களை வழிநடத்துகின்ற கடமை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு உள்ளது என்பதால், அவர்கள் விழிப்போடு செயற்பட்டு தமிழீழ தேசியக் கொடியின் சட்ட அந்தஸ்தினை தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர். ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசாருக்கு எழுத்துமூலத்தில் எழுதி இந்த விடயத்தினை உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் கலந்துரையாடியுள்ளனர். இருப்பினும், ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசார் எழுத்துமூலத்தில் எதனையும் வழங்க மறுத்துள்ளனர்.  இது தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்றே அர்த்தப்படவேண்டும். தடை செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்களுக்கு கரிசனை இருந்திருந்தால் ஆலோசனை வழங்கவேண்டிய கடப்பாடு ஸ்கொட்லண்டயாட்ஃமெற்றோபொலிற்றன் பொலிசாருக்கு இருக்கின்றது. தமிழ்க்கொடி தடைசெய்யப்பட்டிருந்தால் அவர்கள் தெரிந்துகொண்டு எவரையும் ஏற்ற அனுமதிக்கமாட்டார்கள் என்பதுடன் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடுத்திருப்பார்கள்.

பிரித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளரான மரியா என்பவர் 2009 இல் இந்த விடயத்தினை ஸகொட்லண்ட் யாட் ஃ மெற்றோபொலிற்றன் பொலிசாரிடம் எடுத்துச் சென்றார்.  சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவானது (SO15) தமிழீழ தேசியக் கொடியானது புலிகளின் கொடியிலிருந்து வேறுபட்டது என்றும் அது தடைசெய்யப்படவில்லை என்றும் தெளிவாக உறுதிப்படுத்தியது. 26 மே 2009 அன்று ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவினால் (SO15) இந்தப் பிரச்சினைக்குரிய கொடி ஈழத் தமிழர்களின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை பின்வரும் யூரியூப் ஒளிப்பதிவு தெளிவாகக் காட்டுகின்றது.

https://www.youtube.com/watch?feature=youtu.be&v=2ypOwIg73XU&app=desktop

ஸ்கொட்லண் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவு (SO15) 17 மே 2016 அன்று ICPPG இன் நிறைவேற்று அதிகாரியான அம்பிகை சீவரட்ணம் அவர்களுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ தொடர்பாடலில் இது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய சட்டம் மற்றும் ஸ்கொட்லண்ட் யாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவின் வாய்மொழி மூலமான பிரகடனத்தினையும் எடுத்துக்கொண்டால், பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதோடு பிரித்தானியச்சட்டத்தின் கீழ் எவரையும் வழக்குவிசாரணைக்குஉட்படுத்தமுடியாது.

பரிந்துரை:

பிரித்தானியாவிலும் உலகளாவியரீதியிலும் தமிழீழ தேசியக் கொடி தடைசெய்யப்படவில்லை என்பதால், தமிழ் தேசியக் கொடியினை ஏற்றுவது வழக்கு விசாரணைக்கு வழிகோலும் எனத் தொடர்ந்தும் நம்புகின்ற பொதுமக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முன்னணிவகிக்கவேண்டும். அமைப்புக்கள் முன்வந்து ஒவ்வொரு தேசிய நிகழ்வுகளிலும் உரிய மரியாதையோடு தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வாறு செய்வது சந்தேகங்களை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல் தமிழீழ தேசியக் கொடிக்கு நாம் வழங்கும் உன்னத மரியாதையினை இரண்டாம் தலைமுறையினருக்கும் கற்பிக்கும்.

தமிழீழ தேசியக் கொடியினை ஊக்குவிப்பது இராஜதந்திர நகர்வுகளுக்கு அல்லது ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இடையூறாக இருக்கலாம் என வாதிடுவது ஓர் போலியான கட்டுக்கதையே தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். தமது நிகழ்வுகளில் தேசியக் கொடியினை ஏற்றுவதோடு இலங்கைக்கு எதிராக ஓர் தீர்மானத்தை ஐ.நா கொண்டுவரவேண்டும் என வெற்றிகரமாக ஆதரவு திரட்டிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல பல்வேறு நாடுகளில் உள்ளன. ஐ.நாவின் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ் அரச சார்பற்ற நிறுவனமான ‘Le Collectif La Paix au Sri Lanka‘ ஆனது தனது முத்திரையில் தமிழீழ தேசியக் கொடியினை வைத்திருக்கின்றது என்பதை இங்கே குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் ஐ.நா மற்றும் பல்வேறு இராஜதந்திரிகளுடன் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகப் பணியாற்றிவருகின்றனர். தமிழீழ தேசியக் கொடி காரணமாக அவர்கள் எதிர்ப்புக்களை சந்தித்ததாகப் பதிவுகள் எவையும் இல்லை. இராஜதந்திர நகர்வுகள் எவற்றுக்கும் எந்த வகையிலும் தமிழீழ தேசியக் கொடி இடையூறாக அமையாது என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது. தமிழீழ தேசியக் கொடியினை எமது அடையாளமாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் தனிப்பட்ட ரீதியான இராஜதந்திரிகள் இருப்பார்களானால் அவர்களை படிப்படியாக நம்பவைத்து எமது தமிழ் தேசியக் கொடியினை ஏற்று மதிப்பளிக்கச் செய்யவேண்டியது புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாகும். இதில் வெற்றியடையாமல், நீதியை கோருவதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் சுதந்திர தாயகத்தினை நிறுவுவதும் சாத்தியமானதாக இருக்காது.


எழுதியவர்;:

குலசேகரம் கீதார்த்தனன், LLB (Hons), Pg Dip in Legal Practice, Dip in Journalism.

கீத் ஓர் மனித உரிமைச் செயற்பாட்டாளர், ILEX இன் பட்டதாரி உறுப்பினர், 2004 இலிருந்து மனித உரிமைச் செயற்பாட்டாளராச் செயற்படுகின்றார். 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளுக்கு வெற்றிகரமாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மூத்த சட்டத்தரணியும் பரிஸ்டருமான திரு அருண் கணநாதனின் வழிப்படுத்தலின் கீழ் அதி உயர் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.  அவரது சிறந்த செயல்திறனுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்குமாக நீதிபதி ஒருவரின் பரிந்துரைக்கு அமைய அவருக்கு அசோகா டயஸ் நிறுவனத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜேர்மனியில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் (PPT);  பிரிதிநிதித்துவப்படுத்தி ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக வழக்குத் தாக்கல் செய்ய ஜியோவ்றி ரொபேட்சன் QC இற்கு உதவினார்.  2014 இல் ‘போரில் பாலியல் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்’ என்பதற்காக இடம்பெற்ற உலக உச்சிமாநாட்டில் உரையாற்றியுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவேண்டியதன் அவசியத்தை வெளிப்படு;த்தி ஆய்வுக் கட்டுரை ஒன்றினையும் எழுதியுள்ளார். தனக்குச் சொந்தமான ஆலோசனை வழங்கும் அலுவலகத்தினை நடத்துகின்றார். ஐ.நா அமைப்புக்கள் மற்றும் பொது மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், Freedom From Torture மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் போன்ற சர்வதேச அமைப்புக்களுக்கும் தொடர்ந்தும் உதவிவருகின்றார்.

இணை எழுத்தாளர்:

மெலனி திசநாயக்க, LLB. LLM. Attorney-At-Law

Melani Dissanayake, LLB. LLM. Attorney-At-Law

மெலனி திசநாயக்க ஓர் மனித உரிமைச் சட்டத்தரணியும் மனித உரிமைப் பாதுகாவலரும் ஆவார். அவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். தனது சட்டப் பட்டப்படிப்பினை 2004ம் அண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார். தனது மேலதிக தகைமைகளை இலங்கைச் சட்டக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 2005 இல் அவர் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டு வழக்கறிஞராகச் செயற்பட அதிகாரமளிக்கப்பட்டது.

மனித உரிமைச் சட்டத்தரணி என்ற தகைமையில் அவர் பல எண்ணிக்கையான அதி உயர் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு இலங்கையில் நன்மதிப்புப் பெற்ற மனித உரிமை அமைப்புக்களோடு பணியாற்றியுள்ளார். இலங்கையின் மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்தி உதவியுள்ளார். அவர் தற்போது தமிழர் தகவல் மையத்துடன் தொண்டராகவும் ICPPG உடன் ஓர் ஆய்வாளராகவும் செயற்படுகின்றார். இலங்கையில் இடம்பெற்ற படுகொலையிலிருந்து தப்பியவர்களிடமிருந்து சாட்சியங்களைச் சேகரித்து தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் அணைக்குழுவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சமர்ப்பித்துவருகின்றார்.

Print Friendly, PDF & Email