Home Blog Page 317

யுத்தக்குற்றவாளிகளை அரசு ஒருபோதும் தண்டிக்காது; சீ.வி.விக்னேஷ்வரன்

image_pdfPRINT

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறார்கள்.

எனவே, போர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்பது மட்டுமே இதன் மூலம் விளங்குகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், இப்போது காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குவதிலிருந்து போர்க் குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கு செய்வது புலனாகின்றது.

ஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தண்டிக்காது.
அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது.

எனவே கடந்த ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி கடிதம் எழுதியிருந்தேன். அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன்.
மேலும் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டுவந்தது.
அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டுவந்த தாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள்.

ஆகவே இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையை கொண்டுவந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும். அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை பறித்த பொலிஸார்; யாழில் சம்பாவம்

image_pdfPRINT

இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் யாழ் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ். வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை போக்குவரத்து பொலிஸார் அவர்களை மறித்து வாகன அனுமதி மற்றும் காப்புறுதி பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் வாகனத்தின் அனுமதி பத்திரம், காப்புறுதி ஆகியவற்றையும் காட்டியதுடன் வாகன் செலுத்துவதற்கான அனுமதி பத்திரமானது பிறிதொரு போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக கூறி அதற்காக பொலிஸாரால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை காண்பித்துள்ளார்.

இதன்போது குறித்த பற்றுச் சீட்டு செல்லுபடியற்றது என குறிப்பிட்டு தமக்கு இலஞ்சம் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு அந்நபர் தன்னிடமுள்ளப்பணம் தனது பிள்ளையின் மருத்துவ செலவுக்கு தேவையான பணம் எனவும் எனவே தரமுடியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்போவதாக கூறி அங்கிருந்த வாகனமொன்றை அழைத்துள்ளனர். அதற்கு அந்நபர் தனது மோட்டார் சைக்கிளை ஏற்றவிடாது தடுத்து வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அச் சந்தியில் அதிகளவான பொதுமக்கள் கூடிவிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் தமது பொலிஸ் நிலைய வாகனத்தை வரவழைத்து அதில் அம் மோட்டார் சைக்கிளை ஏற்றிச் சென்றுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை வடமாகாண முதலமைச்சர் யாழில் தற்போது சட்டம் ஒழுங்கு முன்னேற்றகரமானதாக உள்ளதாக கூறியிருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழப்பு

image_pdfPRINT

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கில் பத்து வருடங்களின் பின்னர் இவருக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

தண்டனைக் கைதியான இவருக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் மனதளவில் பெரும் பாதிப்படைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வயோதிபரான இவருக்கு சிறை வாழ்க்கையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையும் சிறைச்சாலையுமாக இருந்து வந்த இவர் கடைசியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்ததாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் சர்ச்சை: இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து

image_pdfPRINT

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையே இந்த ரத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பூகோள காலக்கிரம மீளாய்வு அறிக்கை மீதான விவாதமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதான நிகழ்வு இடம்பெறாத போதிலும், இன்றைய தினத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஏனைய பக்க நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என மனித உரிமைகள் பேரவையின் பொது தகவல் அதிகாரி ரோலண்டோ கோமஸ் தெரிவித்துள்ளார்.

உலக தமிழருக்கு மகிழ்ச்சி செய்தி கூகுள்-விக்கிபீடியா அதிரடி

image_pdfPRINT

தமிழீழ தேசியத்தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரின் குறியீட்டை தனது தேடு பொறியில் தீவிரவாதி என்பதிலிருந்து படைவீரர் (Soldier) என மாற்றியுள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கும் வாழும் தமிழகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அளித்துள்ளது.

கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது தலைவரின் பெயரை படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது.

இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்நிலையில் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் மாற்றப்படுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர்; அம்பலப்படுத்திய புகைப்படம்

image_pdfPRINT

ஜப்பானில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் ஞானசார தேரர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஞானசார தேரரும் ஜனாதிபதியுடன் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டாரா? என ஜனாதிபதி செயலகத்திடம் கேட்ட கேள்விக்கும் ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதேவேளை ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை இலங்கையில் தான் தங்கியிருக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம், ஜப்பானில் உள்ள இலங்கையர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக அங்குள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளித்திருந்தார். இதன் போது அங்குள்ள இலங்கையர்களும் அதிர்ச்சிக்குள்ளாக்கு வகையில் ஞானசார தேரரும் கலந்து கொண்டுள்ளார். ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருக்கும் போது முன்வரிசையில் ஞானசார தேரர் அமர்ந்திருக்கின்றார். இதனை அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதோடு இது தொடர்பாக தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக ஞானசார தேரர் செயற்பட்டார் என பகிரங்கமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டு வருகின்றன. கண்டி இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட மறுநாள் ஜனாதிபதியை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்திருந்த ஞானசார தேரர்.

இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் வெளியாகியாகியுள்ளான. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்த விடயத்தை விட, ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரரை போன்ற ஒருவர் அருகில் இருப்பது தொடர்பாக தான் தற்போது இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஐ.நா.ஆணையாளரின் அறிக்கையில் வடமாகாண சபையின் தீர்மானம் தாக்கம் செலுத்தும்; சிவாஜிலிங்கம்

image_pdfPRINT

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் எதிர்வரும் 26ம் திகதி சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையில் வடமாகாணசபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரில் வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இதனை அவர் கூறியுள்ளார்.

மேலும்,இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்திற்குள் நம்பிக்கை தரும் வகையில் இலங்கை அரசு ஒன்றையுமே செய்திருக்கவில்லை. இந்நிலையில் அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறுகோரி வடமாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் ஒரு பிரதியே தற்போது ஆணையளருக்கு நேரில் வழங்கப்பட்டுள்ளது என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் ஏப்ரலில் நிறைவு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் அதன்மூலம்வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்பட்டுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் எனவும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கயிற்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் கருத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியில் 400 மில்லியன் ருபாய் செலவில் தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது.
1960 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை, யுத்தம் காரணமாக முறையான பராமரிப்பின்மையால் பழுதடைந்த நிலையில் நன்நீருடன் உவர் நீர் கலக்கும் அபாய நிலையில் காணப்பட்டது தற்போது துருப்பிடிக்காத உலோகங்களால் ஆன கதுவுகள் இடப்பட்ட அணை இடப்பட்டு வருகின்றது இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பெருமளவிலான நீர் வளத்தை பாதுகாக்க மூடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுனர் குழுவின் அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

image_pdfPRINT

கடந்த ஆண்டு நவம்பரில் (2017) கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன்னேற்றமும் அடையவில்லை என சிறிலங்காவின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவினர்விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகளுக்கான செயலகம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மையப்படுத்தி, இலங்கையின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் செயலகத்திற்கு பன்னாட்டு நிபுணர்கள் குழு அறிக்கையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையினால் நடத்தப்படும் கலந்தாய்வுக் கூட்டத் தொடரின் 37,ஆவது அமர்வு இம்மாதம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் வேளையில் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

34 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிபுணர்கள் குழுவின் மூன்றாவது கள அறிக்கையானது, பாதிப்புற்றோரின் கோணத்திலிருந்து பொறுப்புக்கூறல் வழிமுறைகளது திறத்தின் மீது கவனம் செலுத்துவதுடன், தற்சார்பான மதிப்பீட்டையும், முன்னேற்றமான செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த சுயாதீன நிபுணர் குழு ஆறு நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்களை உள்ளடக்கியதாக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்பேன்; ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் உறுதி

image_pdfPRINT

‘பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நாம் நிற்கிறோம் இயன்றவரை நீதியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்’ என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உறுதியளித்துள்ளார்.

அரச சார்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து நடைபெறவுள்ள இரு விவாதங்களிலும் ஆணையாளர், இலங்கைக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இலங்கை குறித்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையும் எடுத்துரைப்பார் என தெரியவருகிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் ; மீண்டும் சூடு பிடிக்கு கொலைமிரட்டல் அதிகாரி விவகாரம்

image_pdfPRINT

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என அவருக்கு எதிராக பிரித்தானிய பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://youtu.be/JH0lwbsCMGo

போர்க்குற்றவாளியான பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் விவகாரத்தினையடுத்து பிரித்தானிய நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அவருக்கெதிரான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதேவேளை மறுபக்கத்தில் சமகாலவேளையில் பிரித்தானிய இராஜதந்திரகளுடனும் இலங்கை அரசுக்கு ஒத்துப்பாடும் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற தமிழர் தரப்பின் சில அமைப்புக்களுடனும் காய்நகர்த்தல்களை மேற்கொண்ட இலங்கை அரசு அவரை மெல்ல இலங்கைக்கு அழைத்துள்ளது.

எனினும் கொலை மிரட்டல் அதிகாரியின் விவகாரம் விஸ்பரூபம் எடுத்தவண்ணமே உள்ளன. அவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் பிரித்தானியாவுக்கு மீள அழைக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவரால் அச்சுறுத்தலுக்குள்ளான இளைஞரகள், தமிழர் தரப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடமிருந்தும் பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ‘நமது ஈழநாடு‘ இணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் குறித்த காட்சியை தனது கமராவில் பதிவு செய்தவரான சத்திய மூர்த்தி சபேஷ்ராஜ் இராணுவ அதிகாரிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தவர்களில் கிறிஸ்ரிராஜ் பொன்ராஜா, குமரன் சிவதாஸ், வி.மோகனரூபன் ஆகியோர் அளித்த நேர்காணலில் ‘கொலை அச்சுறுத்தல் விடுத்த தூதரக அதிகாரி எங்கிருந்தாலும் பிரித்தானிய சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும். அதே வேளை போர்க்குற்றவாளியான அவரை இலங்கை அரசு பாதுகாக்கவே முயற்சி எடுத்துவருகின்றது’ என தெரிவித்துள்ளனர்.

மாடுகள் கொல்லப்படுவதை நிறுத்தக்கோரி தீவில் ஆர்ப்பாட்டம்

image_pdfPRINT
தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
புங்குடுதீவுப் பிரதேசத்தில் இன்று அதிகாலை வளர்ப்பு மாடுகளை கடத்தும் முயர்ச்சியில் இனந்தெரியாதசிலர் ஈடுபட்டிருந்த வேளை ஊர்காவற்றுறை பொலிசாரினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், கடத்தப்பட்ட மாடுகளும் கைப்பற்றப்பட்டன.
மீட்கப்பட்ட மாடுகள் ஊர்காவற்றுறை பொலிஸ் பாதுகாப்பில் கட்டப்பட்டுள்ளன.
குறித்த மாடுகளின் உரிமையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மாடுகள் பிடிப்பவர்களை இனங்கண்டு உரிய தண்டணை வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்
error: Content is protected !!