Home Blog Page 314

திட்டமிட்டு அரங்கேறும் சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் நேரில் ஆராய்வு- வடமாகாண சபை

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்தனர்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 09 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய் , நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதுடன் மாலை மீண்டும் மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி மாவட்ட செயலர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளிப்பது என சபை உறுப்பினர்கள் ஏக மனதாக தீர்மானித்து உள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச சபையையும் கூட்டமைப்புவசம்

image_pdfPRINT

சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

குறித்த சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது புதிய தவிசாளராகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கந்தையா வாமதேவன் 23 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த கந்தையா சதீஸ்வரன் 6 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

ரணில் வெற்றி; 46 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

image_pdfPRINT

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கின்றார்.

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில் இவ் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகளும் ஆதரவாக 76 வாக்குகளும் பதிவாகின.

இதனையடுத்து 46 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையச் செய்யப்பட்டது.

அதேவேளை 26 பேர் இவ் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

குறித்த வாக்கெடுப்பில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்த கூட்டமைப்பு சர்ந்தப்பத்தை பயன்படுத்தி ரணிலுக்கு ஆதரவு வழங்க அவருடன் பேரம் பேசியதுடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரணிலிடமிருந்து உறுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’; இராணுவத்தளபதி மிரட்டல்

image_pdfPRINT

“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://youtu.be/xodSkKeAnJo

குறித்த வார்த்தையை சொன்னபோது மொழிபெயர்ப்பாளர் அதனை சொல்வதா விடுவதா என ஆச்சரித்து பார்த்த போதிலும் மீண்டும் அந்த வார்த்தையை இராணுவத்தளபதி அழுத்தி கூறியுள்ளார்.

நல்லாட்சியிலும் இராணுவ அதிகாரமும்
அடக்குமுறையும் தொடர்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி நல்லூரில் மீண்டும் புத்துயிர்

image_pdfPRINT

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் , உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் இன்று ஆராய்ந்தனர்.

இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தி 1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவாக நல்லூரில் தூபி அமைக்கப்பட்டது.

பின்னர் யுத்தகாலத்தில் அந்தத் தூபி அரச படைகளால் அழிக்கப்பட்டது. அதனை மீளவும் அதே வடிவில் சீரமைப்பது தொடர்பிலேயே இன்று ஆராயப்பட்டது.

இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் தியாக தீபம் திலீபனின் தூபி அமைக்கப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

கூட்டமைப்பின் இறுதி முடிவு இதோ! சபையில் சற்று முன்னர் சம்பந்தர்

image_pdfPRINT

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் எனக் குறிப்பிட்ட அவர், தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மக்கள் ஆணை, கூட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் அளிக்கப்பட்ட மக்களின் ஆணைக்கு மாறாக நாடாளுமன்றம் செயற்படக் கூடாது என்றும் சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

இரா­ணு­வத்­தி­டம் துப்­பாக்­கி­யைப் பறித்­த சந்­தேக­ந­பர்­கள் அடை­யாள அணி­வ­குப்­பு

image_pdfPRINT

இரா­ணு­வத்­தி­டம் இருந்து துப்­பாக்­கி­யைப் பறித்­துச் சென்றனர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட சந்­தேக­ந­பர்­கள் நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

வழக்­கின் முத­லாம் மற்­றும் இரண்­டாம் சாட்­சி­க­ளான இரா­ணு­வத்­தி­ன­ரும், மூன்­றாம் நான்­காம் சாட்­சி­க­ளாக வன­வ­ளப் பாது­காப்பு பிரிவு உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் சந்­தே­க­ந­பர்­கள் மூவ­ரை­யும் நீதி பதி முன்­னி­லை­யில் அடை­யா­ளம் காட்டினர்.

சந்­தே­ந­கர்­கள் மூவ­ரை­யும் எதிர்­வ­ரும் 11ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

பின்­னணி
முல்­லைத்­தீவு ஆண்­டான்­கு­ளத்­தில் கடந்த 26ஆம் திகதி மரம் கடத்­தப்­ப­டு­கின்­றது என்று இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தக­வல் கிடைத்­தது. வன­வ­ளப் பாது­காப்­புப் பிரிவு இந்­தத் தக­வலை வழங்­கி­யி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­னர் வீதிச் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

மரங்­க­ளு­டன் வந்த வாக­னம் ஒன்றை மறித்­துச் சோத­னை­யிட்­டுள்­ள­னர். வாக­னத்­தில் வந்­த­வர்­க­ளுக்­கும், இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் இடையே வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்­டுள்­ளது. வாக­னத்­தில் வந்த இரு­வ­ரும் இரா­ணு­வத்­தி­ன­ரின் துப்­பாக்­கி­யைப் பறித்­துக் கொண்டு காட்­டுப் பகு­திக்­குள் ஓடித் தப்­பி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

27ஆம் திகதி பொலி­ஸா­ரும், இரா­ணு­வத்­தி­ன­ரும் இணைந்து அந்­தப் பகு­தி­யில் தேடு­தல் நடத்­தி­னர். சில­ரி­டம் விசா­ரணை நடத்­தி­ய­தில் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் நடத்­தி­ய­வி­சா­ர­ணை­க­ளில் துப்­பாக்கி மத­கின் கீழ் இருந்து மீட்­கப்­பட்­டது. எனி­னும் பிர­தான சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

பிர­தான சந்­தே­க­ந­பர் தேடப்­பட்­டு­வந்த நிலை­யில் அவர் 28ஆம் திகதி நீதி­மன்­றில் சர­ண­டைந்­தார்.
இரா­ணு­வத்­தி­ன­ரின் பணிக்கு இடை­யூறு விளை­வித்­தமை, ஆயு­தத்­தைப் பறித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளின் கீழ் சந்­தே­ந­பர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.
இது தொடர்­பான வழக்கு முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. சந்­தேக நபர்­கள் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆளுநர் பாராட்டு

image_pdfPRINT

அண்மையில் வெளியாகிய கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளையடுத்து அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியவர்களில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர்கல்லூரி மாணவியினை தனது அலுவலகத்திற்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்குரே பாராட்டியுள்ளார்.

பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர் சகிதம் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்திற்கு நேற்று (03) மாலை 4 மணியளவில் வருகை தந்த மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு பசில்பொதியினை வழங்கி ஆளுநர் கௌரவித்தார்.

யாழ் குடாநாட்டு மாணவர்கள் அண்மைக்காலமாக கல்வியில் மீண்டும் முன்னேற்றம் கண்டுவருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த ஆளுநர் மிருதி சுரேஸ்குமார் மேலும் கல்வியில் முன்னேற்றம் கண்டு இந்த நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

புதிய யாழ். இந்திய தூதுவர் ஆளுநரை சந்திப்பு

image_pdfPRINT

புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (02) மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதுவரை காலமும் பதவிவகித்த ஆ.நடராஜன் அவர்கள் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வளிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு!

image_pdfPRINT

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)

இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றிரவு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றிற்கு ரணில் விக்கிரமசிங்க, எழுத்து மூல உறுதிமொழி வழங்கியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நடைபெற்ற போது நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க வேண்டுமென இரா.சம்பந்தன், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக நின்றுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் ரணிலிடம் ஒப்புதல்கள் சிலவற்றை பெறவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையினில் இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபாலவை சென்று சந்தித்ததுடன் அவரது நிலைப்பாட்டை கண்டறிய கூட்டமைப்பு முற்பட்டிருந்தது. இச்சந்திப்பின் தொடர்ச்சியாக ரணிலிடம் எழுத்து மூலமாக சில கோரிக்கைகள் வைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்பிரகாரம் உயர்பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்படல், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல், வேலைவாய்ப்பு வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவற்றை நிறைவேற்ற ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து நாளை இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கரவெட்டி கூட்டமைப்பு வசம்

image_pdfPRINT

கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியது. தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும் , பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தெரிவாகியுள்ளனர்.

கரவெட்டிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் (03) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கவேலாயுதம் ஐங்கரனை பிரேரித்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சதாசிவம் இராமநாதனைப் பிரேரித்தது.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என கோரப்பட்ட போது பகிரங்க வாக்கெடுப்புபினை 11 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பினை 10 உறுப்பினர்களும் கோரினர்.

அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் தங்கவேலாயுதம் ஐங்கரனுக்கு வாக்களித்தனர்.

ஈழமக்கள் ஜனநாய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினரும் சதாசிவம் இராமநாதனுக்கு வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினரும் நடுநிலமை வகித்தனர்.

இதனையடுத்து உப தவிசாளர் தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கந்தர் பொன்னையாவை கூட்டமைப்பினர் பிரேரித்தனர். வேறு யாரும் உபதவிசாளராக பிரேரிக்கப்படாத நிலையில் போட்டியின்றி தெரிவானார்.

ரணிலின் பதில் கடிதத்துக்காக காத்திருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்

image_pdfPRINT

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை அவர் கூறியுள்ளார்.

மேலும், வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால், காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளும் இவ்வாறாக அபகரிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும். சில தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பான பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எவ்வுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!