Home Blog Page 281

விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு  யாழ் நகரில் சுவரொட்டிகள்

image_pdfPRINT

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு  யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாண பஸ் நிலையம், மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“சுயலாபமற்ற அரசியலில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர் துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் தமிழ்த்தலைவி விஜயகலா மகேஸ்வரன் “என குறிப்பிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகஉரையாற்றியிருந்த நிலையில், தென்னிலங்கையில் அமைச்சருக்கெதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் நேற்று மாலை விஜயகலா மகேஸ்வரன் தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த்தலைவி என அவரை குறிப்பிட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிகரிக்கிறது பெற்றோல், டீசலின் விலைகள்

image_pdfPRINT

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , தற்போது 137 ரூபாவாக விற்கப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபாவாகும்.

ஆணின் சடலம் மீட்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீட்டிற்கு வெளியே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி (வயது 71 ) என்பவரே நேற்றைய தினம் காலை சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்தவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் காலை வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போதே இவர் உயிரிழந்திருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டிருந்ததுடன் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியும் சம்பவ இடத்திற்கு சென்நு விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

மேலும் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தற்கொலையா இல்லை வேறெதும் காரணமா அல்லது கொலையா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்காகவே பதவியைத் துறந்தேன் – விஜயகலா அறிக்கை

image_pdfPRINT

“வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து விலகியுள்ளேன்”

இவ்வாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலமை ஏற்பட்டது.

ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.

இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.

மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன். இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் நான் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது எனது நிலைப்பாட்டை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால்தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன்.

தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.
இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன்.

என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும். மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால்தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன்.

இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.
எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படுமபோது நாம் பேசாதிருக்க முடியாது.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வறான சூழல் ஏற்படுவதற்கு அரசானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது – என்றுள்ளது.

யாழ். பல்கலையில் கரும்புலிகளுக்கு அஞ்சலி

image_pdfPRINT

கரும்புலிகள் நாள் இன்று(05) தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலும் இன்று பிற்பகல் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிற்பகல்-06.05 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதொரு பகுதியில் கரும்புலியின் உருவப்படம் வைக்கப்பட்டு ஈகைச்சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கரும்புலிகளுக்கு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது தமிழீழ எழுச்சிப் பாடல்கள் உரத்து ஒலிக்கவிடப்பட்டதுடன், அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் சிவப்பு, மஞ்சள் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் செயலர் திடீர் பதவி விலகல்

image_pdfPRINT

ஜனாதிபதியின் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ திடீரெனப் பதவி விலகியுள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறித்த தகவலைச் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், அவர் என்ன காரணத்துக்காகப் பதவி விலகியுள்ளார்?என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்

image_pdfPRINT

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் எதிராக கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தால், பணிப்பாளர் தலைமை அதிபதியிடமிருந்து யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீதிவான் நீதிமன்றால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும் இந்திய மீனவர் ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனையை அனுப்பவிக்கவேண்டும் என்பதுடன் அவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகு ஒன்றுக்கு 6 மில்லியன் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புதிய சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்யபடுமிடத்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் அதிகாரம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் அதிபதிக்கு உண்டு.

குற்றத் தீர்ப்பளிக்கும் அதிகாரமும் நீதிவானுக்கு உண்டு. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ஒரு மாதகாலத்துக்குள் நீதிவான் குற்றத்தீர்ப்பளிக்கவேண்டும்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் இன்று (5) வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் இரண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மருத்துவ சோதனைக்கு பின்னர் இந்திய மீனவர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான், இந்திய மீனவர்கள் 12 பேரையும் வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சட்டப்பின்னணி

1979 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கத்தின் கீழான வெளிநாட்டு கடற்தொழில் படகுகள் முறைப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் கடந்த பெப்ரவரி மாதம் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் சார் நடவடிக்கையை தடுப்பதுடன் இலங்கைக்கு உரித்தான கடற்பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

புதிய திருத்தத்தின் கீழ் கைப்பற்றப்படும் கடற்தொழில் படகுகளுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படடது.

இதுவரையில் நடைமுறையில் இருந்த 15 இலட்சம் ரூபா தண்டப்பணம் 175 மில்லின் ரூபா வரை அதிகரிக்கப்பட்டதுடன் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடற்தொழில் படகு கைப்பற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என விதந்துரைக்கப்பட்டது.

கைப்பற்றப்படும் வெளிநாட்டு படகுகள் தொடர்பில் குறித்த நாட்டின் கவுன்சிலருக்கு விரைவாக கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படல் வேண்டும்.

சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது கைப்பற்றப்படும் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.

புதிய திருத்தத்திற்கு அமைவாக கைப்பற்றப்படும் படகின் அளவுக்கேற்ப 5 மில்லியன் முதல் 175 மில்லியன் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும்.

அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் படகுகளுக்கு அதன் நீளத்துக்கு அமைவாக அனுமதிப்பத்திர கட்டணமாக 7 இலட்சத்து 50,000 ஆயிரம் ரூபாவில் இருந்து 150 மில்லியன் ரூபாய் வரை அறவிடப்படவேண்டும்.

மாகாண அமைச்சர் நான்தான்; திணைக்களத் தலைவர்களை நாளை கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் டெனீஸ்

image_pdfPRINT

மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராக தானே உள்ளதாகக் குறிப்பிடும் பா.டெனீஸ்வரன், தனது அமைச்சின் கீழ் வரும் மாகாண திணைக்களின் தலைவர்களை நாளை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வடமாகாண கிராமிய அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கே அவர் இந்த அழைப்புக் கடித்த்தை அனுப்பிவைத்துள்ளார்.

டெனீஸ்வரனின் துறைகளில், போக்குவரத்து அமைச்சு முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரனிடம் உள்ளது.

மீன்பிடி அமைச்சு, விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசனிடம் உள்ளது.

வர்த்தக வாணிப அமைச்சு, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் – விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் அமைச்சர் அனந்திர சசிதரனிடம் உள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் கடிதத்
தலைப்பிலேயே பா.டெனீஸ்வரனால் இன்று இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவரது அழைப்பை ஏற்பதா இல்லையா என்பதில் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் யாழ். அரசாங்க அதிபர்: கஜேந்திரன் கடும் சாடல்

image_pdfPRINT

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிதிகளான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தைக் கேட்டு கைதட்டினார்கள், விசிலடித்தார்கள் என்பதற்காகப் பிரதேச செயலகங்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் விசாரணையொன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரின் இத்தகைய விசாரணைக் கோரிக்கையானது ஒரு கேலிக்கூத்தான விடயம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் இது முற்றுமுழுதாக ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றதொரு விடயம். எனவே, இத்தகைய செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை(05) யாழ்.கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்து விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் ஆயுதமேந்துவது தவறு, வன்முறையில் ஈடுபடுவது தவறு என்பதால் அரசாங்கத்தின் கோமாளித்தனமான, ஏமாற்றுத்தனமான, நயவஞ்சகத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தங்களின் நடவடிக்கைகளை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துகின்றார்கள்.

பொதுவாக வடக்கு, கிழக்கிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், பண்பானவர்கள், அன்பானவர்கள், பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய வகையில் சேவையாற்றி வருபவர்கள்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிறந்ததொரு அரசாங்க அதிபராகக் காணப்படுகின்றார் என்றால் அவர் பல்வேறு சேவைகளையும் நேரடியாகச் சென்று செய்வதில்லை. அவருக்குக் கீழுள்ள உத்தியோகத்தர்களே நேரடியான சேவைகளில் ஈடுபடுகிறார்கள்.

இத்தனை காலமும் செவ்வனே சேவை செய்து வரும் உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் உரையைக் கேட்டு கைதட்டி, விசிலடிக்க வேண்டியதொரு சூழல் ஏற்பட்டிருந்தால் அதுவும் அவர்களின் ஆதங்கத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது. இதுவும் ஒருவகையில் நோக்கினால் ஜனநாயகமானதொரு செயற்பாடே.

ஹிட்லர் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடாத்தியுள்ளார். ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் போன்று தான் தற்போதும் இந்த நாட்டில் மைத்திரி- ரணிலின் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

நல்லாட்சி எனும் போர்வையில் நடைபெறும் இந்த ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்குப் பூட்டுப் போடுவதற்கு வேதநாயகன் முற்படுகின்றார். பழிவாங்கும் நடவடிக்கையாகவே இத்தகைய நடவடிக்கையை நாங்கள் கருதுகின்றோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டிய அரசாங்க அதிபர் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்ற செயற்பாட்டிற்குத் துணையாக நிற்கின்றார்.

பேரினவாத அரசுக்கு முண்டு கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைக்கும் வகையிலும் அவருடைய இத்தகைய விசாரணைக் கோரிக்கை அமைந்திருக்கிறது. அவர் இத்தகைய விசாரணை முன்னெடுப்புக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மேலும் கேட்டுள்ளார் .

கைதட்டியதற்கு மன்னிப்புக்கோரி கடிதம் வழங்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

image_pdfPRINT

கடந்த திங்கட்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜயகலாவின் உரையை வரவேற்று கைதட்டிய மற்றும் விசிலடித்து ஆரவாரித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆண் அரச பணியாளர்களை மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயகலா தனது உரையில் விடுதலைப் புலிகள் தெடர்பில் உரையாற்றியிருந்தார். அதன் போது வெளிவிவகார மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மண்டபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் கைதட்டி ஆரவாரித்ததாக அரச பணியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அதற்கு விளக்கம் கோரி அரச அதிபரினால் பிரதேச செயலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே நிகழ்வில் பங்கேற்றிருந்த ஆண் அரச பணியாளர்களிடம் பிரதேச செயலர்கள் மன்னிப்புக் கோரல் கடிதங்கள் கோரியிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த கடிதத்தில்,

குறித்த………………………………. நிகழ்வில் பங்கேற்ற …………………………………………. செயலகத்தில்………………………………..பணியாற்றும் ……………………………………… ஆகிய நான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் உரையாற்றிய சந்தர்ப்பங்களில் கை தட்டியோ விசிலடித்தோ ஆரவாரம் செய்யவில்லை என உறுதிபகர்வதோடு என்னை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்திருப்பின் அதற்காக மன்னிப்புக் கோருவதோடு இனிவரும் காலங்களில் அவ்வாறு அநாகரீகமான நடந்துகொள்ளடமாட்டேன் என உறுதியுரைபகர்கின்றேன்.

எனும் தொனிப்பட எழுதித்தருமாறு பிரதேச செயலர்களினால் பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நெல்லியடி மண்ணில் கரும்புலிகளுக்கு அஞ்சலி

image_pdfPRINT

ஜீலை 5- கரும்புலிகள் நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேச விடுதலைக்காய் தம் உடல்களில் வெடியுடன் நடமாடிய உன்னத தியாகிகளாகிய கரும்புலிகள் நினைவு தினம் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் முதற் கரும்புலி கப்டன் மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணின் மத்திய கல்லூரியில் இன்று நண்பகல் நினைவுகூரல் இடம்பெற்றது.

1987ம் ஆண்டின் இதே நாளன்று நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை படைகள் மீது விடுதலைப்புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் விஜயகலா இராஜினமா ?

image_pdfPRINT

தமிழ் மக்களுக்காக தனது பதவியை துறப்பதாக மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நடைபெற்ற நிகழ்வில் “மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் ” என உரை நிகழ்த்தி இருந்தார். குறித்த உரை தொடர்பில் தெற்கில் சிங்கள அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

அந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவிக்கும் போது , தான் தமிழ் மக்களுக்காக பதவியை துறக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!