SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீட்டிற்கு வெளியே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி (வயது 71 ) என்பவரே நேற்றைய தினம் காலை சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்தவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் காலை வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போதே இவர் உயிரிழந்திருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டிருந்ததுடன் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியும் சம்பவ இடத்திற்கு சென்நு விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

மேலும் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தற்கொலையா இல்லை வேறெதும் காரணமா அல்லது கொலையா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.