Home Blog Page 276

வயிற்றுவலி தாங்கமுடியாது வயிற்றை பிளேட்டினால் வெட்டியவர் மரணம்

image_pdfPRINT

வயிற்று வலி தாங்க முடியாது , வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஞானசந்திரன் (வயது 55) என்பவரே அவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு , வயிற்றில் மூன்று இடங்களில் பிளேட்டினால் கீறியுள்ளார்.

அதனால் அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் உறவினர்களால் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழை பீதிக்குள்ளாக்கியுள்ள குள்ளர்களின் அட்டகாசம்

image_pdfPRINT

அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீமூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள்  இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களைத் தட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தைக் கலக்கமடையச் செய்துவரும் குள்ள மனிதர்களின்  அட்டகாசம்தான் இது என்று அயலவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

‘பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றி வெற்றியடையுங்கள்’

image_pdfPRINT

‘பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றி வெற்றியடையுங்கள்’ என வடக்கு மாகாண கல்வி அமைச்சு நாளை நடைபெற இருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, மகாண கல்வித்திணைக்களம், வலய கல்வித் திணைக்களங்களங்கள் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் சார்பில் இந்த வாழ்த்துச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்துச்செய்தி வருமாறு,

‘நாளை 5ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப் பரசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன்,ஒரு குழந்தையின் வாழ்வின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஆதாரமாக புலமைப்பரிசில் பரீட்சை அமைவதில்லை. இந்தப் பரீட்சை முடிவடைந்தபின் அடுத்து வரும் ஆண்டுகளில் உங்கள் ஒவ்வொருவரின் விடாமுயற்சியும்,கல்வியில் மேல் நிலைக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் உங்கள் ஒவ்வெருவரையும் இந்த நாட்டின் ஆற்றல் மிக்க பிரஜைகளாக உருவாக்கும்.

நாளை நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை உங்களுக்குக் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்;படுத்தும் என்று நாங்கள் நம்புகின்றோம். பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் தோற்றி வெற்றியடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த நாட்டின் அற்றல் மிக்க பிரஜைகளாக வளர எங்கள் வாழ்த்துக்கள்.’ இவ்வாறு வட மாகாணக் கல்வி அமைச்சர்; கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் குழந்தைகளுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவி;ததுள்ளார். வடமாகாணக் கல்வி அமைச்சு,வடமாகாணக் கல்வித் திணைக்களம்,வலயக் கல்வித் திணைக்களங்கள்; மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் சார்பில் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

என அந்த வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் சனத்தொகை குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது

image_pdfPRINT

-கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன்

தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு கல்வி வலயத்தில் ஆயிரம் மாணவர்கள் குறைவடைகின்றார்கள்.

நாங்கள் உடனடியாகவே எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப்பிறப்பு விகிதத்ததை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையின் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(01.08.2018) யாழ் மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

நான் ஒரு கல்வி அமைச்சராக வடக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளுக்குப் போயிருக்கிறேன். எமது மாகாணத்திலே 1010 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் 120 பாடசாலைகள் 20 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. 250 பாடசாலைகள் 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நகரத்தின் சில பாடசாலைகள்,பருத்தித்துறை நகரத்தின் சில பாடசாலைகள்,கிளிநொச்சியின் நகரத்தல் ஒரு சில பாடசாலைகள், இதேபோன்று வவுனியா,மன்னார் போன்ற நகரங்களில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர மிகுதி அனைத்துப்பாடசாலைகளிலுமே மாணவர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வடமராட்சி கல்வி வலயத்தில் மட்டும் முதலாம் தர மாணவர்ளின் தொகை ஆயிரம் மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வருடத்திலே ஒரு வலயத்திலே ஆயிரம் மாணவர்கள் குறைவடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலம்,எங்களுடைய இருப்பினுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு மில்லியன் தமிழ் மக்களை நாடடை விட்டு வெளியேற்றியிருக்கிறது. இதை விட போராளிகள்,பொது மக்கள் உற்பட மூன்றறை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியோராக இருந்தாலும் சரி அல்லது கொல்லப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இவர்களின் வயதெல்லைகளைப் பார்ப்போமாக இருந்தால் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆக இந்த மக்களும் எங்களிடம் இல்லை. இவர்களின் சந்ததிகளும் எங்களிடம் இல்லை. ஆகவே நாங்கள் மூன்று நான்கு தலைமுறையை இழந்திருக்pறோம்.

இப்போது இலங்கையின் சனத்தொகை பெருக்க விகிதம் முஸ்லிம்கள் ஆயிரம் பேருக்கு 8.7 பேர் அதிகரிக்கிறார்கள். சிங்களவர்கள் ஆயிரம் பேருக்கு 5.5 பேர் அதிகரிக்கிறார்கள் தமிழர்கள் 1.5 பேர் அதிகரிக்கின்றார்கள். தேசிய சராசரியை விட மிகமிக குறைவான மக்கள் தொகை அதிகரிப்பில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எமது சனத்தொகை தொடர்பில் மீள் சிந்தனை கண்டிப்பாக எங்களுக்குத் தேவை. சிங்கள இனவாத பிக்கு ஞானசார தேரர் சிங்களவரிடத்திலே பரப்புரை செய்து வருகிறார் இங்கே சிங்கள இனம் அழிந்து கொண்டு வருகிறது. எனவே 6,7 பிள்ளைகள் பெறுங்கள் என்கிறார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது பாதீட்டிலே சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்றாவது பிள்ளைப்பெற்றால் அவரது பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்து அதனை நடைமுறையும் படுத்தினார். அந்த திட்டத்தில் இன்னும் மாற்றமில்லை. இந்த அரசாங்கமும் அதை செய்து கொண்டு தான் இருக்கிறது.

இப்போது இருக்கின்ற சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எமது இனம் சென்று கொண்டிருக்குமானால் நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மூன்றாவது இனமாக சுருங்கி விடுவோம். ஆகவே பாடசாலைகளுக்கு மாணவர்கள் குறைவு என்றால் எங்களுக்கு மாற்று வழிகள் இல்லை. எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றேயாக வேண்டும். வேறு எந்த குறுக்கு வழிகளிலும் இதற்கு தீர்வு காணமுடியாது என்றார்.

நிகழ்வில் கல்வி மற்றும் இணைபாட விதானங்களிலும், விளையாட்டுக்களிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் துணைவியார் திருமதி சுபாஜினி சர்வேஸ்வரன் அவர்கள் சான்றிதழ்களையும்,பரிசில்களையும் வழங்கிவைத்தார். பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு சிறை

image_pdfPRINT

சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் தீர்ப்பளித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 10 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களில் இரண்டு பேருக்கு எதிராக சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டும் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.

வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமான வி.இராமகமலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

அவர்களில் இருவர், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தமை ஆகிய குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய குற்றவாளிகள் இருவரும் இரண்டு வார கால சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் மது போதையில் வாகனம் செலுத்தியமைக்கு  7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமும் செலுத்தவேண்டும் என மேலதிக நீதிவான் தீர்ப்பளித்தார்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 8 பேரையும்  7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்று அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை 3 மாதங்களுக்கு இடைநிறுத்திவைக்க நீதிமன்றப் பொலிஸ் அலுவலகருக்கு கட்டளையிட்டார்.

இராணுவ முகாம்களுக்குள் செல்வதற்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு!

image_pdfPRINT

”எத்தரப்பாயினும் பக்கச்சார்பின்றி விசாரணை” என்கிறார் காணல்போனோர் பற்றிய அலுலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்


கேள்வி:- காணமல்போனோர் விடயத்தில் கடந்த கல அனுபத்தினால் ஏற்பட்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடே வடக்கில் நிகழ்ந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஆதங்க உணர்வினை புரிந்துகொள்கின்றேன். உறவுகள் இல்லாமையால் அவர்கள் அடைந்துள்ள கவலைகள் எனக்கு விளங்குகின்றது. அத்தகையவர்கள் எமது அலுவலகத்தின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக முன்னெடுக்கும் போரட்டத்தினை நான் மதிக்கின்றேன். அதற்கு அவர்களுக்கு பூரண உரித்தும் உள்ளது.

ஆனால், அந்தப்போராட்டம் அமர்வில் பங்கேற்க வருகைதரும் ஏனையவர்களுக்கு இடையூறாக அமையக்கூடாது. அத்துடன் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சர்வதேச பொறிமுறை ஊடாக இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் ன்று கருதுவார்களாயின் அதனை மீளவும் சிந்திக்க வேண்டும்.
சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து கண்டறிந்து விட முடியுமா என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.சர்வதேச பொறிமுறை ஊடாக இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை இம்மக்களிடத்தில் முன்வைப்பவர்கள் இந்த மக்களின் உண்மையான நலனை மையப்படுத்தியா செய்கின்றார்கள் என்ற கேள்வி எனக்குள்ளது.

நாம் சொல்லும் விடயங்கள் அனைத்தின் மீது நம்பிக்கைகொள்ளாது விட்டாலும்,அரசங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்காது விட்டாலும் அலுவலகத்தின் குறைபாடுகள், அது பற்றிய விமர்சனங்கள் போன்றவற்றை தெரிவிப்பதற்காகவாவது எமது அமர்வுகளில் பங்கேற்குமாறு ஆர்ப்பாடங்களில் ஈடுபடும் உறவுகளிடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு பங்கேற்பதானது இந்த அலுவலகம் வினைத்திறனாக செயற்படுவதற்கு வழிவகுப்பதாக இருக்கும். அதனை விடுத்து பிரிவுகளாகி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனால் ஆர்ப்பாட்டங்கள் கூட வெற்றியளிக்காது போய்விடும்.

கேள்வி:- காணமல்போனோரின் உறவினர்கள் வீதியோரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முதியவர்கள் மரணமடைந்தும் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்:- அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை எமக்கு வழங்க முடியாது. குறுகிய காலத்தில் இப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். மிகவும் சிக்கலான இந்த விடயத்தினை தீர்ப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30.1தீர்மானத்தின் பிரகாரம் நிரந்தரமான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவாவது அவர்கள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அச்செயற்பாடு அவர்களின் போராட்டம் வெற்றிபெறுவதற்கு முதற்படியாகவும் அமையலாம்.

கேள்வி:- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, காணமல்போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு அறிக்கை ஆகியன காணப்படுகின்ற நிலையில் மீண்டும் அமர்வுகள் நடத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதா?

பதில்:- மீண்டும் அமர்வுளை நடத்தி வேதனைக்குள்ளானவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல. ஆகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றினை மீள்பரிசீலனை செய்யவுள்ளோம். சாட்சிகளின் பதிவுகள் அடங்கிய இந்த அறிக்கைகளின் பிரதிகளைப் பெறுவதற்கான அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.

கேள்வி:- மேற்படி இரு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எவ்வாறு பயன்படுத்தவுள்ளீர்கள் என்பதோடு அவற்றில் குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில்:- இந்த அறிக்கைகளில் உள்ள சாட்சியங்களின் பதிவுகளை பயன்படுத்தவுள்ளோம். எனினும் இந்த அறிக்கைகளை இறுதியானவையாக கருதப்போவில்லை. அவற்றை விசாரணைக்கான வளங்களாக பயன்படுத்தவுள்ளோம்.

சாட்சியங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை, திரிவுபடுத்தப்பட்டுள்ளமை, சாட்சியங்கள் அச்சம் காரணமாக விபரங்களை முழுமையாக குறிப்பிடாமை போன்ற பல குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே அதனையும் கவனத்தில் கொண்டு தான் செயற்படுவோம்.

கேள்வி:- அலுவலகம் நிரந்தரமாக காணப்படுகின்ற அதேநேரம் தங்கள் தலைமையிலான குழுவினருக்கான பதவிக்காலம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அக்காலப்பகுதியில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- எமது பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருக்கின்றன. அக்காலப்பகுதியில் காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான வினாக்களுக்கு பதில்களை தேடவுள்ளோம். துற்போது கிராமாசேவகர்கள் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம் 13ஆயிரம் வரையிலான முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

ஏற்கனவே ஆணைக்குழக்களின் அறிக்கைகளில் உள்ள சாட்சிகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அவற்றில் தெளிவுபடுத்தல்களோ தவறான தகல்களோ அல்லது மேலும் தகவல்களோ அவசியமாகுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

காணமலாக்கப்பட்டவார்களில் மோதல்களின் போது காணமல்போனவர்கள், பலவந்தமாக காணமலாக்கப்பட்டவர்கள், கைதுகளின் பின்னர் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்கள் என வெள்வேறு தரப்பினர் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிவதற்கு விரிவான தேடலுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துடனான உதவியும் அவசிமாகின்றது.

இத்தகைய பிரதான விடயத்தினைத் தாண்டி தமது உறவுகள் காணாமல்போயுள்ளமையால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்குவதற்கான பரிந்துரைகளைச் செய்ய முடியும். அத்துடன் இக்குடும்பங்கள் தமக்கு எந்த இழப்பீடும் வேண்டாம் தமது உறவுகளே வேண்டும் என்று அழுத்தமாக கூறியுள்ளார். இழப்பீடுகளை வழங்கிய இந்தப்பிரச்சினைக்கு தீர்வினை அளிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம்.

இருந்தபோதும் அவர்களின் கணவரோ, புதல்வரோ, சகேதரரோ காணமலாக்கப்பட்டமைப்பால் வாழ்க்;கையை நகர்த்திச் செல்வதில் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள கடின நிலைமையையும் சுட்டிக்காட்டியுள்ளதால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் சமகாலத்தில் சில உதவிகளையும் வழங்குதற்கு பரிந்துரைக்க முடியும்.

கேள்வி:- கடந்த காலத்தில் மரணச்சான்றிதழ் அல்லது காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்குவது குறித்து பேசப்பட்ட நிலையில் தாங்களும் அவ்வாறான பரிந்துரையொன்றை முன்வைப்பீர்களா?

பதில்:- உறவுகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தமாகவோ காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்க முடியும். வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இவ்வாறான கடதாசி சான்றிதழ்கள் வேண்டாம் என்று கூறுவதோடு உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கோருகின்றார்கள்.

கேள்வி:- இராணுவத்தினர், விடுதலைப்புலிகள் மற்றும் துணைக்குழுக்கள் என பலதரப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சாட்சி வழங்கியவர்கள் முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா?

பதில்:- குழுவினராகவோ அல்லது தனிநபராகவோ எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை செய்ய முடியும் என்பதே எமது அலுவலகத்தின் அதிகாரமாகவுள்ளது. ஆனால் அனைத்தையும் உடனடியாகச் செய்ய முடியாது. கிரமமான செயற்றிட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதன்காரணத்தினாலேயே நிரந்தர அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

கேள்வி:- படையினர் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளவது தொடர்பாக பேசும் போதே கடும் எதிர்ப்புக்கள் எழுகின்ற நிலையில் அவற்றை கடந்து விசாரணைகள் சாத்தியமாகுமா?

பதில்:- பக்கச்சார்பற்ற நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே நிலைப்பாடாகும். படையினருக்கு எதிராக சாட்சியங்கள் காணப்பட்டால் அவற்றை தவிர்த்து விட்டு அமைதியாக இருக்கப்போவதில்லை.

கேள்வி:- இலங்கைக்கு வெளியே குறிப்பாக இந்திய இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- இலங்கையினுள் காணமல்போனவர்கள் மற்றும் வலிந்து காணமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக எவரிடமும் விசாரணை செய்யமுடியும் என அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் செயற்படும்போது இந்திய இராணுவம் தொடர்பில் பிரயோக ரீதியாக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி:- படைமுகாம்களுக்குள் நேரடியாகச் சென்று விசாரணைகளை அல்லது ஆய்வுகளை செய்வதற்கு அதிகாரம் உள்ளதா?

பதில்:- அவசியம் ஏற்படுகின்றபோது அத்கைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் எமக்கு உள்ளது. மிகவும் சவால் மிக்க செயற்பாடாகும்.

கேள்வி:- விசேடமாக திருகோணமலை கடற்படைமுகாமில் காணப்பட்ட இரகசிய முகாம் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் உள்ள நிலையில் அதுதொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?

பதில்:- நாம் விசாரணையை இன்னமும் ஆரம்பிக்கவில்லை. தற்போது அலுவலகத்தினை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றோம். விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற தருணத்தில் அது தொடர்பிலும் நிச்சயம் கவனத்தில் கொள்வோம்.

கேள்வி:- மன்னார் மனித புதைகுழி உட்பட வடக்கில் காணப்படுவதாக கூறப்படும் மனிதப் புதைகுழிகள் சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?

பதில்:- மன்னார் மனித புதைகுழியை நாம் நேரயாக பார்வையிட்டுள்ளதோடு அது தொடர்பில் நீதிமன்றசட்ட வைத்திய அதிகாரியுடனும் கலந்துரையாடி வருகின்றோம். இதுபோன்ற விடயங்கள் முன்வைக்கப்படுமிடத்து அவற்றில் விசேட கவனங்களை எடுப்பதற்கு பின் நிற்கப்பேவதில்லை.

கேள்வி:- இவற்றை விடவும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு அல்லது சரணடைந்து போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பீர்களா?

பதில்:- அவை தொடர்பான சாட்சியங்களும் காணப்படுகின்றன. ஆகவே அவ்விடயத்திற்கு நாம் முன்னுரிமை வழங்கி செயற்பட முயற்சிப்போம்.

கேள்வி:- தாங்கள் முன்னெடுக்கும் விசாரணையின் அடிப்படையில் குறித்த குழுவினரோ அல்லது நபரோ அடையாளம் காணப்படும் பட்சத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?

பதில்:- எமது அலுவலகத்திற்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் இல்லை. காணமல்போன நபருக்கோ அல்லது குழுவுக்கோ என்ன நடந்தது என்பதை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அச்சமயத்தில் குற்றமிழைக்கப்பட்டுள்ளது என்பதும் அதனுடன் தொடர்புபட்டவர்கள் என்பதும் அடையாளம் காணப்படும் இடத்து குற்றவியல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் கட்டமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பரிந்துரைகளைச் செய்வதற்கே எமக்கு அதிகாரம் உள்ளது.

கேள்வி:- காணமல்போனோர் பற்றி பிரந்திய அலுவலகங்கள் எவ்வாறு எப்போது செயற்படவுள்ளன?

பதில்:- வடக்கில் ஐந்து அலுவலகங்களும் கிழக்கில் மூன்று அலுவலகங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நான்கு அலுவலகங்களும் அமைக்கப்படவுள்ளன. அதன் பிரகாரம் வடக்கில் முதலாவது அலுவலகம் ஒருமாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்படும் அலுவலகங்களின் ஊடாக மேலதிக விசாரணைகள், குடும்பங்களுக்கு உதவுதல், சாட்சியாளர்களுக்கு உதவுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான அலுவலர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

கேள்வி:- காணமல்போனார் பற்றி அலுவலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட வெளிநாட்டுகளின் அழுத்தங்கள் காரணமாக அமைக்கப்பட்டதென்று தென்னிலங்கையிலும் காலம்கடத்துவதற்காக அமைக்கப்பட்டதென்று வடக்கிலும் கூறப்படுவது பற்றி?

பதில்;- ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டுத் தரப்புக்களை மகிழ்விப்பதற்காக இத்தகைய அலுவலத்தினை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் கடந்த நாற்பது வருடங்களாக காணமல்போன சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதனடிப்படையில் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு இத்தகைய அலுவலகம் அவசியமாகின்றது. எது எவ்வாறாயினும் நான் உள்ளிட்ட ஏழு பிரதிநிதிகளும் யாரையும் ஏமாற்றவேண்டும் எண்ணப்பட்டிலோ அல்லது எவரையும் திருப்பதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ இந்தப் பணியை பொறுப்பேற்கவில்லை.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் காணமல்போனவர்களின் உறவினர்களை சந்திக்கின்ற போது வாக்குறுதிகளை வழங்கினாலும் காணமல்போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இராணுவத்தினை விசாரணைக்கு உட்படுத்த இடமளிக்க மாட்டோம் என்று மறுபக்கத்தில் பகிரங்க கருத்துக்களை முன்வைக்கின்றார்களே?

பதில்:- அரசாங்கம் என்ற வகையில் சில விடயங்கள் சுயாதீனமாக செய்ய வேண்டிவைகளாக உள்ளன. அதற்காகவே சுயாதீன ஆணைக்குழக்கள் நாட்டில் உள்ளன. அந்த வகையில் காணாமல்போனவர்கள் விவகார அலுலகமும் சுயாதீன தன்மைகொண்ட ஆணைக்குழுவிற்கு நிகரானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதன் சுயாதீன செயற்பாடுகளுக்கும் இமளிக்க வேண்டியது கடமையாகின்றது.

கேள்வி:- உங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அரசியல் அழுத்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அச்சவாலுக்கு முகங்கொடுத்து முன்நகரமுடியுமா?

பதில்:- தற்போது வரையில் நாம் அரசியல் அழுத்தங்களுக்கு இலக்காகவில்லை. நான் உட்பட எமது அலுவலகத்தின் ஏழு பிரதிநிதிகளும் அநாவசியமான அரசியல் தலையீடுகளுக்கு அடிபணிவதில்லை என்ற ஏகோபித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றோம்.

ஏதோவொரு கட்டத்தில் அவ்வாறான அழுத்தங்களுக்கு இலக்காகும் பட்சத்தில் அதற்கு எதிரான நடவடிக்கைளை எடுப்போம். குறிப்பாக நான் இந்தப் பதவிக்காக நியனம் பெற்ற தினமன்று எமது செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் கால அவகாசத்தினையும் வழங்கி சுயாதீன செயற்பாட்டுக்கு இடமளிக்குமாறு கோரியுள்ளேன்.
அலுவலகத்தினால் வெற்றிகரமாக

மன்னார் புதைகுழி! புதைத்துவிட முயலும் அரசு

image_pdfPRINT

வீரகேசரியின் முன்னாள் நிருபர்- ப.சுகிர்தன்

இலங்கைத்தீவில் தமிழருக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தினால் நடத்தி முடிக்கப்பட்ட பாரிய இன அழிப்பு யுத்தம் நடைபெற்று 9 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் யுத்த வடுக்கள் அதன் இழப்புக்கள் இன்றுவரை ஆற்றப்படாத சாபம் நிறைந்த பூமியாக இலங்கை இருந்துவருகின்றது.

யுத்தக்குற்றத்திலிருந்து தப்பிக்க சர்வதேச விசாரணையிலிருந்து நழுவப்போராடும் இலங்கை அரசுக்கு உள்ளநாட்டில் உள்ள யுத்த எச்சங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் செய்யப்பட்டோர் எங்கே? உறவுகளின் கண்முன்னே இராணுவத்தினரால் வலிந்து கொண்டு செல்லப்பட்ட அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது இன்று வரை பதில் சொல்லப்படாத வினா நிறைந்த போராட்டமாகவே தொடர்கின்றது.

இந்நிலையிலேயே யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றான வடக்கின் மன்னாரில் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மனித எச்சங்கள் நிறைந்த பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை (சதொச) வளாகத்தில் கட்டட நிர்மாண பணிக்காக மண் அகழ்வு இடம்பெற்றபோதே அங்கு மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் என மனித எச்சங்கள் வெளிவரத்தொடங்கின. இதனையடுத்து குறித்த நிலத்தை முற்றாக அகழுமாறு நீதிமன்றம் உத்தரவிட சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மதிப்பறிக்கையை பெறும் பொருட்டில் அங்கு தொடர்ந்து தோண்டும் பணிகள் ஆரம்பமாகின.


கடந்த மே மாதம் முதல் நடைபெறும் தொடர் அகழ்வில் இதுவரையில் 120 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்ல புதைகுழி விவகாரம் விஷ்பரூபம் எடுத்துள்ளது.
அந்தவகையில் யுத்தத்தின் பின்னர் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆவது மிகப்பெரிய மனித புதைகுழியாக இது காணப்படுகின்றது. முன்னர் திருக்கேதிஸ்வரத்தில் தோண்டப்பட்ட மனித புதைகுழியில் 94 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. கடந்த 2014 ஆம் ஆண்டு அவை மீட்கப்பட்ட போதிலும் இன்னும் அவை குறித்து தெளிவான முடிவுகள் வெளிவரவில்லை. இது ஒரு புறம் பெரும் சந்தேகத்தினை இன்றுவரையில் ஏற்படுத்தி நிற்கின்றது.

தொலைந்த தம்வர்களின் புகைப்படங்களை கைளில் ஏந்திய படி உறவுகள் கண்ணீருடன் இரவு-பகலாக வீதி ஓரமாக கத்திருப்புஇ நாளாந்த போராட்டம் என தமிழரின் அவலங்கள் தொடரும் நிலையில் தோண்டப்படும் இம் மனித புதைகுழி குறிப்பாக தமிழர் தரப்பில் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது அகழப்பட்டு வரும் குறித்த வளாகத்திலிருந்து இருவேறு பகுதிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் வளாகத்தின் மையப்பகுதியில் எந்தவித குழப்பங்களுமின்றி ஒழுங்காக புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்களும் வளாகத்தின் நுழைவுப்பகுதியில் அவசர அவசரமாக ஒன்றுடன் ஒன்று நெருக்கமான முறையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களும் மீட்கபட்டதாக குறித்த அகழ்வுக் குழு நிபுணர் தலைவர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதுவரையில் மீட்கப்பட்ட மனித வன்கூடுகளில்; 6 சிறுவர்களுடையது என தெரிவித்துள்ளதுடன் இன்னும் அகழவேண்டிய பகுதிகள் மீதம் உள்ளதால் மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மீட்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காண உதவும் வகையில் ஆடைகளோ வேறு பொருட்களோ புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்படவில்லை. அவ்வாறாயின் இதன் மர்மம் என்ன? இது மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் புதைக்கபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது.

தவிரஇ அங்கு உடல்கள் காணப்படும் விதம் குறித்து அகழ்வில் ஈடுபடும் நிபுணர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். புதைகுழியினுள் இரண்டு அடுக்குகளில் எலும்புக்கூடுகள் காணப்படுகிறது. ஆவற்றில் சில எலும்புகள் முறிவடைந்த நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அகழ்வின் 43 ஆவது நாளின் போது மனதை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்றும் நிகழ்தேறியுள்ளது. அகழ்வு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு முதிர்ந்த மனித வன்;கூடும் அதன் அருகே சிறிய வன்கூடுகளைக்கொண்ட மனித எச்சங்களையும் நிபுணர்கள் கண்டனர். இதனையடுத்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்ணை அகற்றிய போது தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கும் வகையில் அங்கு ஒன்றையொன்று அணைந்த படி எலும்புக்கூடுகள் காணப்பட்டன. அதேபோல் தலையில் வெட்டுத்தளும்புடன் கூடிய மண்டையோடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஓவ்வொரு நாள் அகழ்வுப்பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்படுவதினால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை முடிப்பதில் கூட தாமதம் காணப்படுவதாக அகழ்வுப்பணியில் ஈடுபட்டுவரும் குழுவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு தோண்டதோண்ட நாளுக்கு நாள் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நிகழ்தபடி இருக்க சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

காணமல் போன உறவுகள் விடயத்தில் சர்வதேசத்தின் முன்னிலையில் பதில் சொல்ல முடியாது அதிலிருந்து நழுவ உள்ளக விசாரணை மட்டுமே போதும் என்று கூறியதுடன் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை (OMP) திறந்து அதில் தனக்குரியவர்களை பணிக்கு அமர்த்தி சர்வதேசத்திற்கு வெளிநாடகம் போட்டுவரும் இலங்கை அரசுக்கு இந்த புதை குழி விவகாரம் பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

ஆனால் வழமை போல் அதனை மூடிமறைக்கும் வேலைகளை மிகக் கச்சிதமாக நகர்த்தி வருகின்றது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

புதை குழி விவகாரத்தை அப்படியே மூடிவிட முனைப்பெடுக்கும் அரசு ஊடகங்களின் வாய்களை முதலில் மூட களமிறங்கிவிட்டது. குறித்த புதை குழியின் அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஊடகங்களிடையே கருத்து தெரிவிப்பதற்கு அங்கு பணிபுரியும் நிபுணர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வாராய்சிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீதித்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சமிந்த ராஜபக்ஷவும் அகழ்வின் நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் ஊடகங்களுக்கு அகழ்வு பணிகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையிலேயே, பின்னர் ஊடகங்களிற்கு கருத்துக்கள் தெரிவிக்க விதிமுறைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார் நீதவான் டி.சரவணராஜ் தற்போது நீதிமன்ற பதிவாளரை உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமித்துள்ளார்.

நீதிபதி தினசரி பதிவாளருக்கு வழங்கப்படும் அறிக்கையைப்பெறுவார். பத்திரிகையாளர்கள் பதிவாளரிடம் இருந்து தகவலைப் பெற வேண்டும்.
இவ்வாறு ஊடகங்களிற்கு வேலிகளை போட்டுள்ள அரசு ஒட்டுமொத்தமாக குறித்த புதைகுழியையும் நாட்டு மக்களிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்து மறைத்துவிட வேலியை போட்டு வருகிறது.

நல்லாட்சி அரசு என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மைத்திரி தலைமையிலான அரசு குறித்த விவகாரத்தை வெளிப்படையாக கையாழ்வதில் ஏன் தயக்கம் காட்டுகிறது. நெருப்பு இல்லாமல் ழரு போதும் புகை வராது என்பார்கள்.
யுத்த வெற்றியை பெற்றுத்தந்த தமது இராணுவ வீரர்களை ஒருபோது குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்போவதில்லை என உறுதிப்பாட்டு நிலையை கொண்டுள்ள அரசு அவர்களை காப்பாற்றவே இந்த புதை குழி விவகாரத்தையும் மூடி மறைக்க முயன்றுவருகிறது.

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி நிலை அடைந்து இறுதி யுத்த ஆரம்பிக்கப்பட்ட வேளையில் குறித்த புதைகுழி உள்ள மன்னார் பகுதி இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது.  எனவே இந்த புதை குழி மர்மம் தொடர்பில் அப்போதைய இராணுவத்தளபதி தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா அறிந்திராமல் இருப்பதற்கு வாய்பில்லை என்றே சொல்லவேண்டும்.

இதனிடையே இறுதி யுத்த ஆரம்ப கட்டங்களில் காயப்பட்டவர்கள் பலர் கொழும்பில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு கொழும்பிற்கு தொடர்ந்து காயப்பட்டவர்கள் அனுப்பப்படும் போது தென்பகுதி மக்களிடையே ஒரு குழப்பநிலை ஏற்படும் என்பதோடு வடக்கில் பெரும் யுத்தம் நடைபெறுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

எனவே தென்பகுதி குழப்பமடைவதை தவர்த்துகொள்ள கொழும்புக்கு அனுப்பப்படும் காயப்பட்டவர்களை இடைநடுவே இராணுவம் மன்னாரில் மறித்த தாக தகவல்கள் அப்போ வெளியாகி இருந்தன. இதனால் இந்த புதை குழிக்கும் குறித்த சம்பவத்திற்கும் தொடர்புகள் இருக்குமா என்ற சந்தேகக்கோணங்கள் குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்திருந்தவர்களிடம் எழுந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறலை நிகழ்த்திய இலங்கை இராணுவம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அப்பட்டமாக மறுத்து வரும் நிலையில் வழமை போல் இப்புதை குழி விவகராத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என முந்தியடித்துகொண்டு தெரிவித்துவிட்டார்கள்.

புதைகுழயில் காணப்படும் உடல்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் நிச்சயமாக இந்த புதைகுழிக்கும் படையினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை எவரும் அந்தக்குற்றச்சாட்டுக்களை சுமத்தவுமில்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் அத்தப்பத்து.

இதனிடையே மறுபக்கத்தில் மன்னாரில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் இந்தியாவுக்கு படகுகளில் தப்பிச்செல்ல முயன்ற பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டை மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர் விக்டர் சூசை முன்வைத்துள்ளார். குறித்த புதைகுழிவிவகாரம் தொடர்பில் பிரபல செய்தி சேவைக்கே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அகழ்வு நடவடிக்கைகளின் ஆரம்ப நாட்களில் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாக அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர் புதைகுழியினுள் புதைக்கப்பட்டவர்கள் யார் எவர் என்பதை நிச்சயம் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டது.

இவ்வாறு பல சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ள இந்த மன்னார் புதை குழி விவிகாரம் வெளிப்படையாக இறுதிக்கட்ட அறிக்கை வரை இடம் பெறுதல் அவசியம்.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்த போதிலும் தொலைந்த தம் உறுவுகளை இன்றுவரை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இப்புதைகுழி விவவாரம் மேலும் ஒரு பயத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.

எனவே அவர்களின் மனதில் மேலும் ஒரு அழுத்தமாக எழுந்துள்ள இந்த விவகாரத்தை வெளிப்படையாக கையாண்டு குறித்த வன்கூடுகள் தொடர்பில் உண்மை அறிக்கை வெளியிடப்படவேண்டும். இது அவர்களின் மனிதில் ஏழுந்துள்ள மேலான ஒரு அழுத்தத்தை நீக்க வழிவகுக்கும்.

இந்நிலையில் காணமால் போனாருக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க உழைப்பதாக சொல்லிக்கொள்ளும் காணாமல் போனோருக்கான அலுவலகம் வெறுமனே இப்பணிக்கான நிதி உதவியை மட்டும் செய்து விட்டு நழுவல் போக்கை கையாழாது புதை குழி விவிகாரத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இறுதியாக இலங்கை அரசாங்கம் தனது கடந்த காலங்களை உரிய விதத்தில் அணுக விரும்பினால் மனித புதைகுழிகளை வெளிப்படையாக விசாரணை செய்வதன் மூலம் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு நேர்மையான தீர்வை காண முயலவேண்டும்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு உரிய நடவடிக்கைகளையும் எடுக்காத அரசு இப்புதைகுழியையும் அப்படியே புதைத்துவிடுமா என்தே எமது பெரும் கேள்வியாக உள்ளது.

ஊடகவியலாளர் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்

image_pdfPRINT

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழில் நினைவு கூறப்பட்டது.

யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவுதூபியின் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுதூபிக்கு நிலக்சனின் தாய்இதந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ். கோட்டையை குறிவைத்துள்ள இராணுவம்

image_pdfPRINT
யாழ்.கோட்டையிலுள்ள படையினர் குறைக்கப்படுவதாக ஒருபுறம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட மறுபுறம் யாழ்.கோட்டையினில் படைத்தளமொன்றை திறக்க அரசு முனைப்பு காட்டிவருகின்றது.அதன் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன் கோட்டைக்கும் பயணம் செய்து அங்கு நிலைகொண்டுள்ள படையினரது நலன்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் கீழுள்ள கோட்டையிலிருந்து படையினர் வெளியெற வேண்டுமென்ற கோரிக்கை யாழ்.மாநகரசபையாலும் ,தொல்லியல் திணைக்களத்தாலும் வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் வடமாகாண ஆளுநர் யாழ்;.நகரிலுள்ள படைமுகாம்களினை மூடி அவற்றினை யாழ்.கோட்டையினுள் நிறுவ ஆலோசனை வழங்கிவருகின்றார்.இந்நிலையில் புதிதாக முகாம்களை கோட்டையினுள் அமைக்கும் பணிகள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுமுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு முதல்வர் மீது மாநகர முதல்வர் குற்றசாட்டு

image_pdfPRINT

யாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் திறம்பட செய்ய விடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடுக்கின்றார் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், மாநகர சபை உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாகவே அவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகின்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று செவ்வாய் கிழமை காலை நடைபெற்று.

அதன் போது கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு நடக்கின்றது. குறிப்பாக அவ்வமைச்சு அனுப்பும் சுற்று நிருபங்கள் ஊடாக இக் கட்டுப்படு விதிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையை எடுத்து பார்தால் அவர்கள் மக்கள் சேவையை திறம்பட செய்வதற்க்காக பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக உறுப்பினர்களுக்கான போக்குவரத்து, தொலைபேசி, உபகரண செலவு என்பவை உட்பட பல மேலதிக செலவுகள் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ்.மாநகரத்திற்க்கு சேவை செய்யும் உறுப்பினர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தியுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் இந்த நடவடிக்கையை ஏற்க்க முடியாது. இது போன்று பல விடயம் நடக்கின்றது. எல்லாவற்றையும் சபையில் சொல்ல முடியாது.

உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் வேலை செய்யாமல் தடுக்கவே இவ்வாறான சுற்று நிருபம் அனுப்பப்படுகின்றது. 30 வருடமாக பின்னோக்கி நலிந்து போயிருக்கும் எங்களை கௌரவ குறைவா நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், அரச அதிகாரிகள் சுற்று நிருபத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றவர்கள். சுற்று நிருபத்தை மீறி செயற்பட முடியாது.

எனவே சுற்று நிருபத்தில் மாற்றம் தேவை. அதற்கான நடவடிக்கையினை சபை எடுக்க வேண்டும். ஆனால் சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டு நடப்பார்கள் என முதல்வர் தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட உறுப்பினர் மு.ரெமிடியஸ், வடமாகாண முதலமைச்சர் யாழ்.மாநகர சபையில் உள்ள ஒரு சிலருடைய தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகளில் தேவையற்ற விதத்தில் ஈடுபடுகின்றார் என்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனந்திக்காக வெளிநடப்பு செய்த ஈ.பி.டி.பி.

image_pdfPRINT

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக சக உறுப்பினர் அஸ்மின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விவகாரம் மாநகர சபையின்  அமர்விலும் எதிரொலித்தது.

இதன் போது அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கண்டனம் வெளியிட்டுள்ள அதே வேளையில் ஈபிடிபியினர் வெளிநடப்பும் செய்திருந்தனர்.

யாழ் மாநகர சபை அமர்வு மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன் போது ஈபிடிபியின் உறுப்பினர் ரெமீடியஸ், அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பது குறித்தான உறுப்பினர் அஸ்மினின் குற்றச்சாட்டு தொடர்பில் சபையில் பிரஸ்தாபித்தார்.

அத்தோடு அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டிய நேரத்தில் இருக்கின்ற பெண் அரசியல் வாதிகளையும் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றது.

அவரிடம் கைத்துப்பாக்கி இருக்கா இல்லையா என்பதற்கப்பால் பெண் அரசியல்வாதிகளை அச்சுறுத்தி அவமானப்படுத்தும் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய செயற்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.

இதனையடுத்து அனந்தி சசிதரன் மீதான குற்றச்சாட்டுக்கள் அவரை அச்சுறுத்துவதாக அல்லது அவமானப்படுத்துவதாக அமைவதுடன் அவருக்கு எதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளையும் நாம் வண்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணண் தெரிவித்தார்.

ஆகவே அனந்திக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்பதுடன் சபையையும் ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு சபையை ஒத்தி வைக்க முடியாதென முதல்வர் இமானுவேல் ஆர்னோலட் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சபையிலிருந்து ஈபிடிபியின் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதனையடுத்து சுமார் 15 நிமிடங்களின் பின்னர் மீளவும் சபைக்கு வந்து சபை அமர்விலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலரி விதையை உண்டால் என்ன நடக்குமென பரிசோதித்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

image_pdfPRINT

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற குடும்பஸ்தர், மீண்டும் வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். அத்துடன் மிகுந்த சேர்வு நிலையிலும் இருந்துள்ளார்.

அது குறித்து அவரது மனைவி விசாரித்த போது , வரும் வழியில் அரலி விதையை உண்டதாகவும் , அதனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என அறிவதற்காகவே அதனை சாப்பிட்டதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் ,மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டார்.

error: Content is protected !!