SHARE
யாழ்.கோட்டையிலுள்ள படையினர் குறைக்கப்படுவதாக ஒருபுறம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட மறுபுறம் யாழ்.கோட்டையினில் படைத்தளமொன்றை திறக்க அரசு முனைப்பு காட்டிவருகின்றது.அதன் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன் கோட்டைக்கும் பயணம் செய்து அங்கு நிலைகொண்டுள்ள படையினரது நலன்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் கீழுள்ள கோட்டையிலிருந்து படையினர் வெளியெற வேண்டுமென்ற கோரிக்கை யாழ்.மாநகரசபையாலும் ,தொல்லியல் திணைக்களத்தாலும் வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் வடமாகாண ஆளுநர் யாழ்;.நகரிலுள்ள படைமுகாம்களினை மூடி அவற்றினை யாழ்.கோட்டையினுள் நிறுவ ஆலோசனை வழங்கிவருகின்றார்.இந்நிலையில் புதிதாக முகாம்களை கோட்டையினுள் அமைக்கும் பணிகள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுமுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email