Home Blog Page 268

இலங்கையுடனான ஆயுத விற்பனை நிறுத்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தர தயார்!

image_pdfPRINT
-பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் Kerry McCarthy தெரிவிப்பு

இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை தொடர்பிலான முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக பிரித்தானியாவின் Bristol East  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Kerry McCarthy தெரிவித்துள்ளார்.

அதேவேளை தேவைப்படின் குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் தனது சகாக்களின் ஆதரவை பெற்றுத்தர தயாராகவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஆயுத விற்பனை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ரமேஸ்கரன் மாணிக்கம் தலைமையிலான செயற்பாட்டாளர்களான நல்லதம்பி அருள்பிரகாஷம், நோபல் ரவீந்திரன் டேவிட், கிரோஜன் துரையப்பா மற்றும் சிவகுருநாதன் பிரகலாதன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிய போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

ஐ.நா ஆயுதவர்த்தக ஒப்பந்தத்தில் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனைகளை செய்வதில்லையென கைச்சாத்திட்ட பிரித்தானியா, தமிழினப்படுகொலை செய்த பேரினவாத இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக ஆயுதவிற்பனை செய்துவருகின்றது.

அந்தவகையில் இதனை தடுத்துநிறுத்தும் முயற்சியில் தமிழ் தகவல் நடுவத்துடன் இணைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் சுமார் 6 மாத காலங்களைக்கடந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் பலனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்தும் முன்பிரேணைக்கான 1480 ஆம் இலக்கத்தை கொண்ட முன்பிரேரணை (EDM) வாக்குகோரும் தளம் ஒன்று பாராளுமன்ற இணையத்தளத்தில் இணைக்கப்பட்டடுள்ளது.

இதுவரையில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள்

image_pdfPRINT

யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன்

நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நல்லூர் முன் வீதியில் கடந்த இரு நாட்களாக இராணுவ வாகனத்தில் பெரியளவிலான LED தொலைக்காட்சி பொருத்தப்பட்டு , அதில் விளம்பரங்கள் திரையிடப்பட்டு உள்ளன. 
 
ஆலய வீதியில் இராணுவ வாகனத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். 
அதற்கு விளக்கமளிக்கும் வகையில் உறுப்பினர் வ. பார்த்திபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. 
 
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 

ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தனது LED திரையை நல்லூர்க் கோவில் முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் நிறுவுவதற்கு அனுமதியினைப் பெற்றுக் கொண்டது. அத் தனியாரும் அதற்குரிய மாநகர சபைக் கட்டணமாகிய ரூபா26 570 ரூபாவினை யாழ்.மாநகர சபைக்குச் செலுத்தி அனுமதியினைப் பெற்றுக்கொண்டார்.

அவ் LED திரையும் இராணுவத்தினர் வந்து நிறுவினர். திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் ஏற்கனவே யாழ்.மாநகரசபையினால் கேள்வி கோரப்பட்டு எடுக்கப்பட்ட கடை ஒன்றும் தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட LED திரைக்கு முன்னால் அமைக்கப்பட்டது. அது குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் LED திரையை மறைத்தது.

இந்நிலையில் தான் பிரச்சனை ஆரம்பமானது . அப்பிரச்சினையின் முடிவாக அவ் LED திரையை கழட்டி வேறு இடத்தில் அமைக்குமாறும் அதனை கழட்டி பூட்டுவதற்குரிய செலவினை மாநகர சபை தருவதாகவும் கூறப்பட்டது. அத்துடன் யாழ். மாநகர சபையால் ஒரு இடமும் நேற்று ஒதுக்கப்பட்டடுது. அவ்விடத்தில் தான் இராணுவ வாகனத்துடன் கூடிய LED திரை தற்போது உள்ளது.

எனக்கு தெரிந்த மட்டில் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் இராணுவ வாகனத்தில் ஒரு LED திரை காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் இம்முறையே நடைபெற்றுள்ளது.

நல்லூர் ஒரு கோவில் என்பதற்கு அப்பால் அது யாழ்ப்பாணம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழரினதும் அவர்களின் பண்பாட்டு பாராம்பரியங்களின் அடையாளம் . அந்தவகையில் அப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய பண்பாட்டு பெருவிழாவில் இவ் இராணுவ பிரசன்னம் தேவையானதா என்பதனையும் சம்மந்தப்பட்ட தரப்புகள் அலசி ஆரயவேண்டும்.

அதை விட இன்று நல்லூர் கேணியினுள் நடைபெற்றுக்கொண்டு இருந்த தீர்த்தத் திருவிழாவினை எந்த ஒரு அனுமதியுமின்றி Phantom ( Arial view) மூலம் படப்பிடிப்பு செய்ததனை நேரடியாக ஒளிப்பரப்புச் செய்த தொலைக்காட்சி நிறுவனங்களுள் இத் தொலைக்காட்சி நிறுவனமும் அடங்குகின்றது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் இது வேண்டும் என்றாலும் செய்ய முடியும் ஆனால் பல நிறுவனங்கள் நல்லூரின் பாரம்பரியம் அதன் நிர்வாக நடைமுறைகளுக்கு மதிப்பளித்துவருகின்ற நிலையில் குறித்த நிறுவனம் தனது தொழில் நுட்ப திறனைக் காட்டியிருப்பது சிறப்பானதா என்பதனை தங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூவர் கைது

image_pdfPRINT

வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் பயணிப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வீதி சோதனை நடவடிக்கையில் சுன்னாக பொலிசார் ஈடுபட்டு இருந்த வேளையே மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்கள் 21, 23 வயதுகளையுடையவர்கள் எனவும் , அவர்களிடம் மேலதிக விசரானைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாக பொலிசார் தெரிவித்தனர்.

ஓய்வெடுக்க சென்ற இளைஞனை மோட்டார் சைக்கிள் மேதியதில் பலி

image_pdfPRINT

யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ். சாவற்காடு , ஆணைக்கோட்டையை சேர்ந்த லிங்கேஸ்வரன் றீகன் (வயது 25) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த 30ஆம் திகதி மாலை தனது நண்பர்களுடன் பண்ணை கடற்கரையில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். வீதியருகே நண்பர்களுடன் நின்றிருந்த வேளை,  பண்ணை வீதி வழியாக மண்டைதீவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த இளைஞர் மீது மோதியதில் இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளானர்.

காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்நிலையில் வைத்திய சாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு உறுப்பினரை சந்தித்த தமிழ் இளையோர்!

image_pdfPRINT

பிரித்தானியாவின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுகள் பற்றிய குழுவின் அங்கத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான LEO DOCHERTY யை சந்தித்த தமிழ் இளையோர் குழு, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுத விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான அழுத்தத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

RUSHMOOR  கவுன்சில் அலுவலகத்தில் நேற்றய தினம் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த செயற்பாட்டாளர்களான சிவராஜ் சிவசுதன், லட்சுமன் தெய்வேந்திரன், ஏ.என். பிரியங்கா, அகிலன் தங்க வேலாயுதம் மற்றும் நிஷாந்தன் அற்புதானநதன் ஆகியோரே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இச்சந்திப்பில் பிரித்தானியாவிடமிருந்து தொடர்ந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு நாட்டிலுள்ள தமிழ் மக்கள் மீது எவ்வாறான தொடர் இன அழிப்பை அடக்கு முறைகளை செய்து வருகின்றது என்பது குறித்தும் தமிழர் வாழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவ மயமாக்கல் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.

அதேவேளை, யுத்த குற்றம் புரிந்த விதிமுறைகளை மீறும் நாடுகளிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்ற ஐ.நா. ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரித்தானியா, பாரிய யுத்த குற்றம் இழைத்துள்ள இனப்படுகொலை இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என்பதை இந்த சந்திப்பின் போது குழுவினர் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கணவன் – மனைவி சடலமாக மீட்பு

image_pdfPRINT

வன்னியின் கனகராயன் குளத்தைச்சேர்ந்தவர்களான கணவன் மனைவியாகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கனகராயன் குளம் பரிசன்குளம் புளியங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்தவர்களான அ.நந்தகுமார்(நந்தன்- வயது 24) மற்றும் அவரது மனைவியான கௌதமி(வயது 18) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டில்இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்ற போதும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் புதைகுழி; ஊடகங்களிற்கு அதீத கட்டுப்பாடு

image_pdfPRINT

மன்னார் புதைகுழி தொடர்பில் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மன்னாரிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட நீதவான் புதைகுழி தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தைப் பற்றி ஊடகவியலாளர்களிடையே பேசுவதில்; நிபுணர்களிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.

மன்னார் புதைகுழியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 140 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்டுள்ள மனித வன்கூடுகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளது.

மே மாதத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து, நீதித்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சமிந்த ராஜபக்சவும், தடயவியல் தொல்பொருள் பேராசிரியரும் பேராசிரியர் ராஜ் சோமதேவா பத்திரிகையாளர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார் நீதவான் டி.சரவணராஜ் தற்போது நீதிமன்ற பதிவாளரை உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமித்துள்ளார்.

நீதிபதி தினசரி பதிவாளருக்கு வழங்கப்படும் அறிக்கையைப்பெறுவார். பத்திரிகையாளர்கள் பதிவாளரிடம் இருந்து தகவலைப் பெற வேண்டும்,

2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீச்சாரத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழி குறைந்தபட்சம் 82 உடல்கள் கொண்டதாக இருந்திருந்தது. அது அடையாளம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சதொச புதைகுழியினை மூடிவிட ஏதுவாக முன்னதாக நீதிவானை முறையற்றவகையில் இடமாற்றம் செய்திருந்த அரசு ஊடகங்களது கண்காணிப்பினை தவிர்க்க மும்முரமாகியுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா

image_pdfPRINT

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

நாளைய தினம் காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நல்லூர் சப்பரம்

image_pdfPRINT

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ சப்பரதம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாலை 6 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், குதிரையாட்டம் ,  கரகாட்டம் , தீபந்த விளையாட்டுக்கள் , வெளிவீதியில் இடம்பெற , வேல்பெருமான் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெளிவீதிலா வந்தார்.

இன்றைய சப்பர திருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

அதேவேளை நாளை சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை  7 மணிக்கு ஆறுமுக பெருமான் தேரிலே ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிக்கவுள்ளார்.

நாளைய தேர்த்திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகின்றது.

புலிகளுக்கு ஆதரவானவர்கள் என அரசு சந்தேகம் கொள்பவர்களும் காணமல் ஆக்கப்படுகிறார்கள்

image_pdfPRINT

-முன்னாள் போராளி விக்னா பிரித்தானிய நாடாளுமன்றில் சாட்சி

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக எவர் இருக்கிறார்கள் என இலங்கை அரசு சந்தேகம் கொள்கிறோதோ அவர்கள் அனைவரும் காணமால் ஆக்கப்படுகிறார்கள் என முன்னாள் போராளியான விக்னா திருகுணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள அவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற காணமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்து கொண்டு சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்புகூற பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாடு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலரது நேரடி சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இதில் கலந்து கொண்டு சாட்சியமளித்த போதே விக்னா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் அளித்த சாட்சியத்தின் முழுவடிவம் பின்வருமாறு,

https://youtu.be/scyd3GrXC1w

 

யாழ் கல்வியங்காடு வாள்வெட்டு சம்பவம்; இளைஞர் ஒருவர் கைது

image_pdfPRINT

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 3 வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) செல்வராசா சஜீபன் (வயது 25) பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய்  பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முல்லையில் விகாரை அமைப்பினை தடுத்தனர்; தமிழ் இளைஞர்கள் கைது

image_pdfPRINT

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்புபிரதேசங்களுக்கிடையில் நிர்மாணிக்கப்படவுள்ள சுருந்தாவசோக  விகாரை பணிகளை தடுத்து நிறுத்தியதாக இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

விகாரை அமைப்பு பணிகளை தடுத்ததன் மூலம் இனநல்லிணக்கத்தை பாதிக்க செய்ததாக ஜக்கிய தேசியக்கட்சியின் உள்ளுர் பிரமுகரான கலைச்செல்வன் என்பவர் இலங்கை காவல்துறையின் முல்லைதீவு காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைதான இளைஞர்கள் இருவரும் நேற்றிரவு நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!