SHARE

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ சப்பரதம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாலை 6 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், குதிரையாட்டம் ,  கரகாட்டம் , தீபந்த விளையாட்டுக்கள் , வெளிவீதியில் இடம்பெற , வேல்பெருமான் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெளிவீதிலா வந்தார்.

இன்றைய சப்பர திருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

அதேவேளை நாளை சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை  7 மணிக்கு ஆறுமுக பெருமான் தேரிலே ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிக்கவுள்ளார்.

நாளைய தேர்த்திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகின்றது.

Print Friendly, PDF & Email