Home Blog Page 17

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் கண்ணீருடன் பிரித்தானியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்த.ல் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்களால் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பிரித்தானியாவிலும் உள்ள புலம் பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களிற்கு இழைக்கக்கப்பட்ட கொடுமைக்கு பிரித்தானிய அரசிடம் நீதி கோரி ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றது.

பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்புகளின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பாராளுமன்ற சதுக்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிய பேரணி, வெளிவிவகார அமைச்சகம் முன்பாக சென்று இறுதியாக பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தை வந்தடைந்தது.

அங்கு தமிழ் தேசியக்கொடி மற்றும் பிரித்தானியக்கொடி ஆகியன ஏற்றலுடனும் இறந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதே வேளை எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவாக கஞ்சியும் வழங்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் பேராதரவுடன் ஈழத்தமிழ் மக்களின் ஒரே விடிவு “தமிழீழ சோசலிச குடியரசின்” மலர்வு ஒன்றே என்பதை இன்று நாடு கடந்த ஈழத் தமிழர்களால் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியோடும் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு உறுதிப்படுத்தியது..

நாம் இழந்த இலட்சக்கணக்கான உயிர்களினதும் மாவீரச் செல்வங்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றிடவும் ஈடு செய்யவும் நம் கல்வி பொருளாதாரம் எம் கலை கலாச்சாரம் என்பவற்றை பாதுகாக்கவும் இது ஒன்றே ஒற்றை தீர்வாகும் என்பதை இன்று பிரித்தானியாவில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் நினைவு படுத்தியது.

படங்கள் -அனுஷன் பாலசுப்பிரமணியம்

காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் – ஐ.நா அறிக்கை

image_pdfPRINT

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்
சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர்

image_pdfPRINT

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளார்.

நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர் இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டின் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.

அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில்; தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்

image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றைய தினம் (18) சனிக்கிழமை பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது. 

அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. 

அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர்.

அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு

image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் இனப்பொடுகொலை நினைவு நாளாகிய இன்று யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவு கூறும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அனைத்து இனத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த அத்தனை உறவுகளையும் நினைவேந்தி அஞ்சலிக்கப்பட்டதுடன், சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த
உறவுகளின் சங்கத்தினரால் பிரித்தானிய பிரதமருக்கு மனு

image_pdfPRINT

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா அங்கீகரிக்கும் படியும் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஇ முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்காஇ கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரி இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka – United Kingdom (AERED-UK)) இன்றைய தினம் பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றைய தினமே (18.05.2024) பிரித்தானிய பிரதமருக்கு மேற்படி மனு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும்இ இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஇ முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் குனுஊழு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவினைஇ இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாகஇ 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர் (சிவபாலசுந்தரம் சிவசிதம்பரம்) அவர்களின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரி (விக்டர் விமலசிங்கம் அமரசிங்கம்) அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா (இளையதம்பி பரராஜசிங்கம்) அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் (ஞானச்செல்வம் உதயராஜா) அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்

பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும்இ இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்இ கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இன அழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 1,40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் போர்க்குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தியது தொழிற் கட்சி

image_pdfPRINT

பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நேற்றைய தினம் (15) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் ஈழத்தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்டு கொடூரமான அனைத்துலக குற்றமீறல்களுக்கு ஆளாக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்களை நினைவில் நிறுத்தி அவர்களை மதிப்பளிக்கும் வகையில் துயர் தோய்ந்த செய்தியொன்றை தொழிற் கட்சியின் தவிசாளரும் பெண்கள் மற்றும் சமத்துவ விவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் அனெலீஸ்டொட்ஸ் ஊடாக தொழிற் கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டு பிரித்தானியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியே வெற்றி பெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த இரங்கலை தனது மனம்திறந்த செய்தியில் ஸ்ராமர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாள் மட்டுமன்றிஇ அவசரமாக நீதி கிட்ட வேண்டியதை நினைவூட்டும் பதிவு என்பதையும் ஸ்ராமர் அவர்கள் வலியுறுத்தினார். அத்தோடு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்கள் மறக்கப்பட முடியாதவை என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார். தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான அனைத்துலக குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலமே மடிந்த மக்களை நினைவேந்தி மதிப்பளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஈழத்தீவில் தமிழ் மக்கள் முகம்கொடுத்த கொடூரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றத் தவறியதையும்இ கடந்த கால அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும்இ தனது கடும் தொனிச் செய்தியில் ஸ்ராமர் அவர்கள் விமர்சித்திருந்தார். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துலகக் குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடுஇ தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் ஸ்ராமர் நினைவூட்டியதோடு, ஈழத்தீவில் நிரந்தர சமாதானமும்இ நல்லிணக்கமும், தமிழ் மக்களுக்குப் பரிபூரணமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் டேம் சிபோன் மக்டொனா, வெஸ் ஸ்ரிறீற்ரிங் (நிழல் சுகாதார மற்றும் சமூக நலப் பராமரிப்பு அமைச்சர்), கத்தரின் வெஸ்ற் (ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிழல் அமைச்சர்), சேர் ஸ்டீபன் ரிம்ஸ் (முன்னாள் நிதித்துறைத் தலைமைச் செயலர்), கரத் தொமஸ் (நிழல் பன்னாட்டு வணிக அமைச்சர்), ஜேமரஸ் முறே (நிழல் நிதித்துறை செயலர்), சாறா ஜோன்ஸ் (தொழில்துறை மற்றும் கரிமநீக்க நிழல் அமைச்சர்), ஜோன் மக்கொனெல் (முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சர்), டோன் பட்லர் (முன்னாள் அமைச்சர்), வீரேந்திர சர்மா, பரி காடினர் (முன்னாள் காலநிலை மாற்ற நிழல் அமைச்சர்) போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

போரின் கொடூரங்களையும், நீதியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் திகழ்கையில், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திக் கடந்த காலக் கொடூரங்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதிலும், ஈழத்தீவில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வைக் காண்பதிலும் தொழிற் கட்சி கொண்டுள்ள பற்றுறுதியையும் உறுதிசெய்யும் வகையிலும் ஸ்ராமர் அவர்களின் உணர்வுபூர்வமான வேண்டுகை அமைந்துள்ளது.

https://youtu.be/_ZdOoZuKzCM?si=0eTPMKZNx8EmMCIo

பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை நினைவுநாள் நினைவேந்தல்

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நேற்றய தினம் (15) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் ஈழத்தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்டு கொடூரமான அனைத்துலக குற்ற மீறல்களுக்கு ஆளாக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்களை நினைவில் நிறுத்தி, அவர்களை மதிப்பளிக்கும் வகையில் துயர் தோய்ந்த செய்தியொன்றை தொழிற் கட்சியின் தவிசாளரும், பெண்கள் மற்றும் சமத்துவ விவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் அனெலீஸ் டொட்ஸ் ஊடாக தொழிற் கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பியோருக்கும் அவர்களின்குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த இரங்கலை தனது மனம்திறந்த செய்தியில் ஸ்ராமர்அவர்கள் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாள் மட்டுமன்றி, அவசரமாக நீதி கிட்ட வேண்டியதைநினைவூட்டும் பதிவு என்பதையும் ஸ்ராமர் அவர்கள் வலியுறுத்தினார். அத்தோடு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்கள் மறக்கப்பட முடியாதவை என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார். தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான அனைத்துலக குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன்நிறுத்துவதன் மூலமே மடிந்த மக்களை நினைவேந்தி மதிப்பளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் ஸ்ராமர்நினைவூட்டியதோடு, ஈழத்தீவில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும், தமிழ் மக்களுக்குப்பரிபூரணமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துலகக் குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக குற்றவியல்நீதிமன்றில் முன்னிறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னின்று செயற்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழர்களுக்கான தொழிலாளர் கட்சியின் தலைவர் திரு சென் கந்தையா மற்றும்தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டேம் சிபோன் மக்டொனாஇ வெஸ் ஸ்ரிறீற்ரிங்(நிழல் சுகாதார மற்றும் சமூக நலப் பராமரிப்பு அமைச்சர்)இ கத்தரின் வெஸ்ற் (ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிழல் அமைச்சர்), சேர் ஸ்டீபன் ரிம்ஸ் (முன்னாள் நிதித்துறைத் தலைமைச்செயலர்), கரத் தொமஸ் (நிழல் பன்னாட்டு வணிக அமைச்சர்), ஜேமரஸ் முறே (நிழல் நிதித்துறைசெயலர்), சாறா ஜோன்ஸ் (தொழில்துறை மற்றும் கரிமநீக்க நிழல் அமைச்சர்), ஜோன் மக்கொனெல் (முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சர்), டோன் பட்லர் (முன்னாள் அமைச்சர்), வீரேந்திர சர்மா, பரிகாடினர் (முன்னாள் காலநிலை மாற்ற நிழல் அமைச்சர்) ஆகியோர் இந் நிகழ்வில்உரையாற்றியிருந்தனர்.

இக் கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்களாக ஈழத்தமிழர்கள் சார்பாக

சுகன் விக்ணேஸ்வரன்இ முரளிதரன் விஜயசுந்தரம், கனகசபாபதி கார்திகேசன், செனவிரத்ன பனடார, கங்காதரன் திலக்சன், பரராஜசிங்கம் வசந்தன், செல்வராசா மேனன், ராதிகா மகேஷி கனேஷன்,  முகமட் இஷாத் தல்ஹா, அலகரத்தினம் நிரோஜன், முகமது ஹசான், மரியநேசம் தனுசாந், சந்திரசேகரன் கிஷாந்தன், சமிலா டிலானி மரபுலகேஇ முகமட் சஹீம், அனுசன் பாலசுப்ரமணியம், சந்திரவர்மன் மேகலக்ஸ்மன்இ சந்திரவர்மன் நிலானி, அவ்ரின் முகமட், சுபாஸ்கரவர்மா வானுப்பிரியா, அகமட் ஆரிவ், பவசுதன் உதயராசாஇ வேலுமயில் சுபேகா, வானுசன் தங்கவேலாயுதம், சசிகரன் செல்வசுந்தரம், மற்றும் சுரேஸ் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

போரின் கொடூரங்களையும், நீதியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டும் நாளாக முள்ளிவாய்க்கால்நினைவு நாள் திகழ்கையில், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்திக் கடந்த காலக்கொடூரங்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிசெய்வதிலும், ஈழத்தீவில் தமிழ் மக்களின் தன்னாட்சிஉரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வைக் காண்பதிலும் தொழிற் கட்சி கொண்டுள்ளபற்றுறுதியையும் உறுதிசெய்யும் வகையிலும் ஸ்ராமர் அவர்களின் உணர்வுபூர்வமான வேண்டுகைஅமைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுஷ்டிக்க பிரதான எதிர்க்கட்சி ஏற்பாடு

image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதோடு சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கலந்துரையாட பிரித்தானியாவின் பிரிதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பிரித்தானிய பாராளுமன்றில் ஒன்று கூடுகின்றது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் எதிர் வரும் 18 ஆம் திகதி தாயகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படவுள்ளது.

இந்நிலையிலேயே பிரித்தானியாவில் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் உறு துணையாக நிற்கும் தொழிற்கட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை வழமைபோன்று அனுஷ்டிக்கவுள்ளது.

தொழிலாளர் கட்சியின் தலைவரும் நிழல் மாநில செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் Anneliese Dodds MP இன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்றின் குழு அறை 11 இல் இடம்பெறவுள்ள

தமிழர்களுக்கான தொழிலாளர் கட்சியின் தலைவர் திரு சென் கந்தையா மற்றும் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான CATHERINE WEST MP, WESS TREETING MP, DAME SIOBHAIN MCDONAGH MP, RT.HON SIR STEPHEN TIMMS MP, GARETH THOMAS MP, JOHN MC DONNELL MP, DAWN BUTLER MP, JAMES MURRAY MP, VIRENDRA SHARMA MP, SARAH JONES MP, BARRY GARDINER MP ஆகியோரும் சித்திரவதையிலிருந்து விடுதலைக்கான அமைப்பின் தலைமை நிர்வாகி SONYASCEATS, NATALIA KUBESCH (Legal Officer at REDRESS), DR SHIVAAHNEE RAVEENTHIRAN – People for Equality &Relief in Lanka (PEARL), JENSIYA NEWTON – International Diplomatic Council Of Tamil Eelam (IDCTE), DR CHAYAN SHANMUGARATNAM – International Diplomatic Council Of Tamil Eelam(IDCTE), YVONNE SCHOFIELD (The SriLanka Campaign for Peace&Justice) ஆகியோரும் இதில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது!

image_pdfPRINT

தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மேற்படி மூவரையும் சம்பூர் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் தமிழ்த் தேசிய மக்கள் முண்னனியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமாரும் உள்ளடங்குகின்றார்.

இரவு வேளையில் துப்பாக்கிகளுடன் வந்த ஆண், பெண் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் கைதான மூவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன 

image_pdfPRINT

ITJP யின் அதிர்ச்சிதரும் புதிய அறிக்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர் என  தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP)  என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் 2015 முதல் 2022 வரை  இலங்கை படையினரால் தாக்கப்பட்ட பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய சித்திரவதைகளுக்குள்ளான 123 தமிழர்களின் விபரங்களை அடிப்படையாக வைத்து புதிய அறிக்கையை வெளியிட்;டுள்ளது.

தமிழர்கள் காணாமல்போதல் சித்திரவதை செய்யப்படுதல் பாலியல்வன்முறைக்குள்ளாக்கப்படுதல் 2025 முதல் 2022 என்ற இந்த அறிக்கை 2022 இல் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற பின்னர் 11 தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டனர் என குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழர்களின் காணாமல்போதல்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் 2015-2022″ என்னும் இவ்வறிக்கையில் இந்த ஏழாண்டு காலப்பகுதியில் 139 தடவைகள் சிறிலங்காப் பாதுகாப்புப்

படைகளால் சட்டவிரோதமாகப் பிடித்துச்செல்லப்பட்டு தடுத்துவைத்திருக்கப்பட்ட 20-39 வயதிற்குட்பட்டவர்களைப் பெரும்பான்மையானவர்களாகக் கொண்ட 109 ஆண்களும் 14 பெண்களுமாக 123 தமிழர்களது வாக்குமூலங்கள் ஆராயப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இத்தமிழர்கள்அனைவரும் இப்போது சிறிலங்காவிற்கு வெளியே வசிக்கின்றார்கள்.

2009 இல் போர் முடிந்த பின்னர் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் ITJP முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிவரும் இப்புதிய அறிக்கை சரணடைந்தவிடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் எதிரான கடத்தல்காணாமல்போகச் செய்தல் மற்றும் சித்திரவதைகளில் பாதுகாப்புப் படைகளால் போர் முடிவடைந்த உடனடி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதே முறைமைகளும் நடைமுறைகளுமே இற்றைவரையும்தொடர்வதைக் காட்டுகின்றது.

‘மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப்பயன்படுத்துவது என்றுதான் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்பது வரையறை செய்யப்படுகின்றதுஇது காலப்போக்கில் அரசியல் அமைப்புக்களிலுள்ளும் அரசியல் கலாச்சாரத்தினுள்ளும் ஆழவேரூன்றிப்போயுள்ளது.

சிறிலங்காவில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும்பாரதூரமான சர்வதேக் குற்றங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலுமில்லாமல் பல தசாப்தங்களாகஇத்தண்டனை விலக்களிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் பாதுகாப்புதுறைசீரமைக்கப்படுவதற்கும் தமிழர்களுக்கு எதிராக இவ்வன்முறைக் கலாச்சாரத்திற்க்குப்பொறுப்பானவர்களை நீக்குவதற்கும் சர்வதேச சமூகம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமேஇதனை நிறுத்திக்கொள்ள முடியும்.

இவ்வறிக்கையில் ஆய்வுசெய்யப்பட்ட வாக்குமூலங்களைவழங்கியவர்கள் பிரித்தானியாவிலோ அல்லது இதர இடங்களிலோ புகலிடம் கோரும் தமிழர்களின் ஒருசிறு பகுதியினர் மட்டுமே” இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின்நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இவ்வறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2022இல் இடம்பெற்ற தடுத்துவைப்புக்களில்  24பேரில் 11 பேர் – சம்பவங்கள் யூலை 2022இல் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னரேயே நிகழ்ந்தன.

இந்த 139 சம்பவங்களில் 65 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்துஅல்லது உறவினர்களின் வீடுகளிலிருந்து உறவினர்கள் முன்னிலையில் சிறிலங்காவின் சட்டஅமுலாக்கள் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இதர சம்பவங்களில் பெரும்பாலானவற்றில்அவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இவ்வனைத்துச் சம்பவங்களிலும் தடுத்து வைக்கப்பட்டவர்களது கண்கள் கட்டப்பட்டும் கைகள் பின்னால்கட்டப்பட்டும் பெரும்பாலும் வெள்ளைநிற வான்களிலேயே பிடித்துச்செல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒருசில சம்பவங்களைத் தவிர மற்றைய அனைத்திலும் அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கேகொண்டு செல்லப்பட்டதுடன்இ குடும்பங்களுக்கும் அவர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்றும்தெரிவிக்கப்படவில்லை.

இரகசியத் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கையில் 139 தடுப்புக்காவல்சம்பவங்களில் 130 இல் விசாரணைகளின்போது குறைந்தபட்சம் கடுமையாகத் தாக்கப்பட்டது உட்படசித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

85 சம்பவங்களில் பிளாஸ்ரிக் பைகளால் மூச்சுத்திணறல் செய்யப்பட்டது. 47 சம்பவங்களில் சிகரட்அல்லது சூடான பொருட்களால் அவர்களுக்கு சூடுவைக்கப்பட்டது. 46 பேர் நீரில் முகத்தை அழுத்திமூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 32 சம்வங்களில் அவர்கள் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்பட்டனர். 85 சம்பவங்களில் அவர்கள் பலமுறையான வடிவங்களில் சித்திரவதைகளுக்குஆளாக்கப்பட்டனர்.

2022 மார்ச்சில் 28 வயது ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சாதாரண உடைகளில் வந்தநபர்களால் பிடித்துச்செல்லப்பட்டு 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். ‘அந்த நேரத்தில்தான்பெற்றோலில் நனைக்கப்பட்ட பொலித்தீன் பையால் என்னுடைய தலை மூடப்பட்டது. நான்கு அல்லதுஐந்து தடவைகள் இவ்வாறு அவர்கள் என்மீது போட்டார்கள்.பின்னர் தண்ணீர் நிரப்பப்ட்டிருந்தபிளாஸ்டிக் கொள்கலனுக்கு என்னைக் கொண்டுசென்றார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள்என்னுடைய முகத்தினை நீரினுள் அழுத்திப்பிடிக்கும்போது அது அரைமணித்தியாலங்கள் நீடித்ததுபோன்று எனக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் முகம் வெளியில் எடுக்கப்பட்டு மூச்சுஇழுத்துவிடும்போது உண்மையைச் சொல்லும்படியும் பெயர்களைச் சொல்லும்படியும் எனக்குச்சொல்லப்பட்டது. நான் மிகவும் களைப்படைந்து தரையில் சரிந்து விழுந்தேன். அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு மீண்டும் நான் இழுத்துச்செல்லப்பட்டேன்” இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் ரீதியான சித்திரவதையும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட 91 தடுத்துவைப்புநிகழ்வுகளில் அனைவருமே பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 82 பேர்பின்வரும் ஐந்து வகையான பாலியல் சித்திரவதைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றுக்காவது ஆளாக்கப்பட்டனர்: விதைப்பைகளை கசக்குதல் வாய்மூலமாக வன்புணர்வு ஆண்குறி மூலமானபலாத்காரம் கம்பிகளை மலவாசல்வழியே செலுத்துதல் சுய இன்பத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் என்பன 51 பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

11 பேர் மீது கம்பிகளைப் பயன்படுத்திமேற்கொள்ளப்பட்டது. 40 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஆண்கள் மீதும் 11 சம்பவங்களில் பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது.கடத்தல்கள் தடுத்து வைப்புக்கள் சித்திரவதை மற்றும் பாலியல் சித்திரவதைகள் என்பவற்றின்எண்ணிக்கை இவை எவ்வாறு முறைப்படுத்தப்பட்ட பரந்துபட்ட பாரதூரமான குற்றச்செயல்களாக நடைபெறுகின்றன என்பதை விளக்குகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கெர் ரூர்க் 2024 மார்ச் 1 ம் திகதி இடம்பெற்ற மனிதஉரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் உரையாற்றியபோது தனது கவலையினை வெளிப்படுத்திபின்வருமாறு கூறினார்: ‘கடத்தல்கள் சட்டவிரோத தடுத்துவைப்புக்கள் பாலியல் வன்முறைகள்உள்ளிட்ட சித்திரவதைகள் சிறிலங்கா காவல்துறையாலும் பாதுகாப்புப் படைகளாலும் திரும்பத்திரும்பமேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த நம்பகரமான தகவல்களால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.இக்குற்றச்செயல்களில் சில 2023 இல் இடம்பெற்றதாகவும் குறிப்பாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது.”

சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2023 ஆண்டிற்கான மனிதஉரிமைகள் அறிக்கையில் அறிக்கையில் ‘வடக்கினைச் சேர்ந்த சில தமிழர்கள் காவல்துறை தம்மைச்சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும் விடுதலைப் புலிகளுடன்அவர்களுக்கிருந்த தொடர்பு அல்லது ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தமை தொடர்பாக அவர்களிடம்விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக சில குடியியல் சமூக அமைப்புக்கள்தெரிவித்தன.” எனக் கூறப்பட்டிருந்தது.

சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு

image_pdfPRINT

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த பயனாளிகள் குறித்த தகவல்களை கணினிமயமாக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், அதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும். அதன்படி, கிராமத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

அத்துடன், இந்த மக்களின் வாழ்வாதார வழிகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வருவாய் கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

மேலும், கடந்த புத்தாண்டு காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

இது இம்மக்களுக்கு மேலும் நிவாரணத்தை அளிப்பதுடன், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து இந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்டதால் அவர்களுக்கும் ஓரளவு நன்மை கிடைத்துள்ளது.

கிராமத்தின் வளர்ச்சிக்காக இந்தப் பணி தொடர வேண்டும். அத்துடன், மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.

இந்த காணி உரிமையால், அவர்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும். மேலும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வலுப்பெறுகிறது. முற்காலத்தில் ரஜரட்ட பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது. தம்பதெனிய முதல் கண்டி வரையிலான ஈரப்பதம் உள்ள பிரதேசத்தில் கறுவா உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி பொருளாதாரம் காணப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு என்பன ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். எனவே இப்பணிகளை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறக் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். அதற்கு உங்கள் பங்களிப்பும் அவசியம்.

உறுமய வேலைத் திட்டம் தொடர்பான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் பணியை வினைத்திறனாக்கும் வகையில், பிரதமருடன் கலந்துரையாடி நடமாடும் சேவையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்படி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!