தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் காலமானார்
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது 91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார்.
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது 91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார்.

நான்காது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் இன்று நடைபெற்றது.
கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வின் தொடர்ச்சியான 3 ஆவதும் இறுதியுமான நிகழ்வே இன்று ஞாயிற்றுக்கிழமை ஒக்ஸ்பேட்டில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்றது.
உலகத்தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் இணைந்து பிரமாண்டமாக முன்னெடுத்த இந்நிகழ்வின் இறுதி நாளாகிய இன்று சர்வதேச ரீதியாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பேராளர்கள், கல்விமான்கள், தொழில் சார் நிபுணர்கள், மற்றும் உறவுகள் அனைவரும், 1974ம் ஆண்டின் நினைவுகளை மீட்கும் வகையில் தமிழரின் பண்பாட்டு வடிவங்களான பறை இசை, சிலம்பம், இன்னியம், காவடிகளின் அணிவகுப்புடன்சி றப்பாக அமைக்கப்பட்டு இருந்த உயிர்க்கொடை உத்தமர்களின் நினைவு தூபியின் மாதிரி வடிவத்தினை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
அங்கு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, நினைவுத்தூவிக்கும் 10.01.1974 அன்று படுகொலை செய்யப்பட்டு திருவுருவ படங்களாக வைக்கப்பட்டிருந்த, உயிர் கொடை உத்தமர்களின் நினைவுகளுடன் மலர் வணக்கங்களும் ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
தொடர்ந்து மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் மாதாந்த வணக்க நிகழ்வு நடைபெற்றது. போராட்ட காலத்தில் யூன் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் அக்காலப்பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும், குறிப்பாக 04.06.2024 அன்று பிரான்சில் சாவடைந்த மூத்த போராளி விநாயகம் மற்றும் 16.06.2024 அன்று தாயகத்தில் சாவடைந்த வைத்திய கலாநிதி மாமனிதர் ஜெயகுலராஜா ஆகியோருக்குமான ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருமண்டபத்தில் நிகழ்வுகள் பேராளர்களின் திருவிளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகியது. ஆசியுரையினை அருட்சுனைஞர் முருகுதிரி சிறிரஞ்சன் வழங்க, வரவேற்புரையினை ஆலோசகர் திரு.பாலகிருஸ்ணன் ஆசிரியர் வழங்கினார். தலைமை உரைகளை உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு.அமுது இளஞ்செழியனும் வைத்திய கலாநிதியும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பேராளரான பூலோகநாதன் அவர்களும் வழங்கினர். தொடர்ந்து நோக்க உரையினை நிகழ்வு ஏற்பாட்டு குழு இணைப்பாளர் திரு. அகிலன் வழங்கினார்.
தமிழ் தாய் வாழ்த்து பாடல்களை யாழிசை கலையக மாணவிகள் வழங்க, தமிழ் வணக்க நடனங்களை சிவலாய மாணவிகள், சிவதர்மி நர்த்தனாயல மாணவிகளும், சௌத்தென்ட் முத்தமிழ் மாணவிகளும் வழங்கியிருந்தனர்.
இன்னிய அணிவகுப்பினை சவுத்என்ட் முத்தமிழ் மன்ற மாணவர்கள் வழங்க, பறை இசையினையும் சிலம்பத்தினையும் நாம் தமிழர் பண்பாட்டு மீட்சி பாசறையினரும் வீரத்தமிழர் முத்தமிழ் மன்றத்தினரும் வழங்க, காவடியினை தமிழ் சோலை (Dunstable) பாடசாலை மாணவர்கள் வழங்கியிருந்தார்கள்.
சத்தியவான் சாவித்திரி நாட்டு கூத்தினை சௌத்தென்ட் முத்தமிழ் மாணவர்கள் வழங்க, கூத்து வழி தமிழ் வணக்கத்தினை மெய்வெளி அரங்க மாணவர்கள் வழங்கினர்.
சிறப்புரைகளை தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழருவி சிவகுமார், தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த மொழி பேரறிஞர் தக்கார் மாசோ விக்டர், நாம் தமிழர் பண்பாட்டு மீட்சி பாசறையின் இணைப்பாளர் பேராசிரியர் திரு.செந்தில்நாதன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த, 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் சு.வித்தியானந்தனின் மகள் திருமதி.செல்வி இராஐதுரை, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் திருமதி.மதிவதனி, பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த உலக தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய தலைவர் திரு.மைக்கல் கொலின்ஸ், தமிழ் தேசிய செயற்பாட்டளரும் சைவநெறி அறிஞருமான முருகானந்தம், இளையவன் செல்வன் அன்பு, மலேசியாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் குணபதி ஆறுமுகம் உட்பட பலர் வழங்கியிருந்தனர்.
மெய்வெளி அரங்கத்தினர் வழங்கிய “மரணத்தை விட கொடியது ” என்னும் அரங்க ஆற்றுகை மிகவும் உணர்வுபூர்வமாகவும், இன்றைய காலத்தின் யாதார்த்தினை சுட்டி காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
எதிர்வரும் காலத்தில் ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டினினை பிரித்தானியா ஓக்ஸ்போர்ட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் என்பதனை
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பாவுக்கான தலைவர் திரு.மைக்கல் கொலின்ஸ் அவர்களினால் அறிவிக்கப்பட்டது.
மேலும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் திரு.வசந்தன் 50வது ஆண்டு “உயிர் கொடை உத்தமர்களின்” நினைவு நாள் மலரை வெளியிட்டு வைத்தார். அத்துடன் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் கட்டப்பட இருக்கும் “தமிழ் இல்ல” கட்டுமானத்துக்கான இணைய வழி நிதி சேகரிப்புக்கான பொறி முறையும் வெளியிட ப்பட்டு வைக்கப்பட்டது. தமிழர் தகவல் மன்றத்தின் ( TIC) இலங்கை தீவில் தமிழர்களின் தொன்மையும் வரலாற்றினையும் உள்ளடக்கியதாக தமிழீழ நிழல் அரசாங்கத்தின் மாதிரி கண்காட்சி மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சம நேரத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட பேராளர்களுக்கான மதிப்பளித்தலும், நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவ மாணவிகளுக்கான மதிப்பளித்தலும் அவ் அரங்கத்திலேயே நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் சங்கமத்துடன் குறிப்பாக பெருமளவு இளையோர்களின் பங்களிப்புடன் “உயிர் கொடை உத்தமர்கள்” நினைவு நாள் நிகழ்வுகள் பல்வேறு நினைவுகளுடனும் உணர்வுகளுடனும் நடந்தேறியது.

தமிழ் மொழியின் தொன்மையை காக்கவும் அதன் சிறப்பை உலகறியச் செய்யவும் தமிழர்களின் கலை கலாச்சார விழுமியங்களை பேணிக்காக்கவும் பல்மொழிப்புலமை கொண்ட வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளாரால் 1966 ஆம் ஆண்டு உலகத் தமிழராய்ச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியான 1974 ஆம் ஆண்டு 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடைபெற்றது. ஆனால் அந்த 4 ஆவது தமிழராய்ச்சி மாநாடு பெரும் கலேபரத்துடனும் 11 பேரின் படுகொலையுடனுமே நிறைவுக்கு வந்தது.
4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக யாழ்ப்பானமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதிகள் எங்கும் வாழைமரங்களும் தோறணங்களும் மின் விளக்கு அலங்காரங்களும் மிளிர யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு வைபவ ரீதியாக ஜனவரி 3 ஆம் திகதி வண.சேவியர் தனிநாயகம் அடிகளாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்புற நடைபெற அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்தவெளி அரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் நடைபெற்றன.
இவ்வாறு பெரு விழாக்கோலமாக நடைபெற்று வந்த மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி 10 ஆம் திகதி பரிசளிப்பு விழாவும் விருந்தினருக்கான உபசார நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே சிங்கள் காவல்துறையினரும் அவர்களின் ஒத்துழைப்புடனான குண்டர்களும் இணைந்து மாநாட்டில் கூடியிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். மாணவர்கள் ஆசிரியர் வைத்தியர் ஆகியோரும் அப்பதினொரு பேரில் அடங்குவர்.
































































டிலக்ஷன் மனோரஜன்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் மாநாட்டை நடத்த விடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இச்சம்பவமானது தமிழர்கள் மனதில் என்றும் நீங்காத வடுக்களாக இன்றுவரை அமைந்துள்ளது, இக்கலவரமானது பின்னர் தமிழர்களை ஆயுதப் போராட்டம் வரை கொண்டு செல்வதற்கான மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நான்காவது உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மிகவும் எழுச்சி பூர்வமாக நடைபெற்று வருகின்றது.
உலகின் பல்வேறுபட்ட தமிழ் ஆர்வலர்களும் ஆளுமைகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில் “இலங்கை தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம்” எனும் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் மறைக்கப்படும் வீர வரலாறு இனப்படுகொலையின் போது அழிக்கப்பட்ட தமிழின தேசத்தின் கட்டுமானங்கள், இனப்படுகொலையின் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் பங்கு, தொடரும் கலாச்சார கட்டமைப்பு சார் இனப்படுகொலை, நீதி கூறல் என்பவற்றை இளைய தலைமுறையினருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் விளகும் விதமாக கண்காட்சியானது இடம்பெற்று வருகின்றது.
இன்று ஜூலை 29 இடம் பெற்ற கண்காட்சியை அதிகளவானோர் பார்வையிட்டதுடன் அவர்களின் ஆழமான கருத்துக்களையும் அவர்களின் கடந்த கால அனுபவங்களையும் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினிடம் பகிர்ந்து கொண்டனர். இக்கண்காட்சியானது நாளையும் சிறப்பான முறையில் இடம்பெற காத்திருக்கின்றது.




யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், தன்னை சர்வதேச மனித உரிமைகள் காப்பகத்தில் பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் மனித உரிமை காப்பகத்தின் ஊடாக இளைஞரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடியும் எனக் கூறி அவரிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீண்ட காலமாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காததால், பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில், குறித்த நபர் மனித உரிமைகள் காப்பகத்தில் வேலை செய்வதாகவும் , கொழும்பில் வசிப்பதாகவும் இளைஞனிடம் கூறியது பொய் எனவும் , கிழக்கு மாகாணத்தை சொந்த இடமாக கொண்டு , கிழக்கு மாகாணத்திலையே வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வேறு நபர்களையும் இவ்வாறு ஏமாற்றியுள்ளாரா ? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நவாலி பகுதியை சேர்ந்த இளைஞனை சந்தேகத்தில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர் .
அதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுக்கு வாகன பதிவு மேற்கொள்ளப்படாது , பதிவின்றி மோட்டார் சைக்கிள் காணப்பட்டமையால் , இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இளைஞனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .
ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகெட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
கூட்டு பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட மாணவி நேற்றையதினம் தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஜந்து இளைஞர்கள், மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று ,பாழைடைந்த கட்டிடம் ஒன்றினுள் வைத்தே கூட்டுப் பாலியல் வன்புனர்வை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் , சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் மகிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்திருந்தார்.
செப்டெம்பர் 20 திகதியிலிருந்து ஒக்டோபர் 17 திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.
இந்த தேர்தலை பிற்போட முடியும் என எவரேனும் கூறினால், அவர்களின் மூளையை பரிசோதனைக்குட்படுத்தி பார்க்க வேண்டும்.
எக்காரணத்தினாலும் தேர்தலை பிற்போடுவது என்பது தவறு.
வானமே இடிந்து தலைமேல் விழுந்தாலும் ஜனாதிபதித் தேர்தலை மட்டும் பிற்போட முடியாது. தேர்தலுக்கான முதற்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
அதுகுறித்து நாம் ஆராயப்போவதில்லை. அதற்கான உரிமையும் எமக்கு இல்லை.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கடமைகளை, உண்மையுடனும், நேர்மையுடனும் செய்யும் என கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.
தற்போது மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை சில கட்சிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும்.
தேர்தல் காலத்தில் இவ்வாறான அபிவிருத்திகள் கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்காணிப்பு அமைப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும்” என மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பலனாக இன்றையதினம் குறித்த பாலத்திற்கு அருகில் காணப்பட்ட வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அப்பகுதியில் ராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும், தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் Watford பகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் Dean Russell அவர்களின் தேர்தல்பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்று அவருக்கான பிரச்சார பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்ற மேற்படி இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள் தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், துரைசிங்கம் கஜந்த், திருசிவகாந்த், திலீபன் அபிநாஷ், சிரிபன்நாகநாதன் ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டார்கள்.



பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல்பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும், தமிழீழகொள்கைக்கு ஆதரவும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஒன்றாகஇணைந்துள்ளனர்.
இந்நிலையில் Chipping Barnet பகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் Theresa Villers அவர்களின் தேர்தல்பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்று அவருக்கான பிரச்சார பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
சனிக்கிழமை (15) நடைபெற்ற மேற்படி இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள்தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், சுதாகரன் தங்கவேலு, ஜெயவீரசிங்கம் பேரானந்தம், ஞானசிங்கம்தயாபாரன், சுபாஷ்கரஷர்மா வானுபிரியா ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டார்கள்.




தீபச்செல்வன் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா என்பதை ஆராயும் நோக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது. கிளிநொச்சி பரந்தனில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இன்று (16) தீபச்செல்வனிடம் இரண்டு மணி நேர விசாரணை இடம்பெற்றது.
தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவல் தொடர்பில் பல கேள்விகளை இதன்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுப்பியுள்ளது.
நாவலில் இடம்பெறும் மாறன் என்ற கதாபாத்திரம் யார்? இப்போது எங்கே உள்ளார்? என்றும் நாவலில் இடம்பெறும் இராணுவக் கதாபாத்திரங்கள் யாரைக் குறித்துள்ளன என்றும் கேட்கப்பட்டதாக தீபச்செல்வன் தெரிவித்தார்.
அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையானவை என்று தாம் பதில் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை இந்த நாவலில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் கருத்துக்கள் உள்ளனவா என்றும் விசாரணை செய்யப்பட்டது. அப்படியான கருத்துகள் நாவலில் இல்லை என்றும் கடந்த காலத்தில் நடந்த விடயங்களையே நாவல் பேசுவதாகவும் தீபச்செல்வன் பதில் அளித்துள்ளார். போரில் தாய். தந்தையரை இழந்த ஒரு குழந்தை அதிலிருந்து தப்பி கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்வதையும் அங்கு மாணவத் தலைவராகும் அந்த இளைஞன் பின்னர் போரால் கொல்லப்படுவதையும் தனது நாவல் பேசுவதாக தீபச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் சில மாணவத் தலைவர்களும் மாணவர்களும் கொல்லப்பட்ட நிலையில் அந்தப் பின்னணியை வைத்து மாறன் என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகவும் தீபச்செல்வன் குறிப்பிட்டார். பிழையான இராணுவத்தினர் மத்தியில் உள்ள நல்ல இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இராணுவ சிப்பாய்களையும் பற்றி பயங்கரவாதி நாவல் பேசுவதாகவும் இதனை சிங்கள மக்கள் வாசித்தால் தமிழர்களை புரிந்து கொள்ள வழி வகுக்குமே தவிர, இன வேறுபாட்டை ஒருபோதும் ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிடாத மாறன் என்ற கதாபாத்திரம் வழியாக இந்த நாவல் கல்வியை பேசகிறது என்றும் இனிவரும் காலத்தில் போரும் மரணங்களும் அழிவுகளும் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நாவலை தாம் எழுதியுள்ளதாகவும் தீபச்செல்வன் தெளிவுபடுத்தினார்.