SHARE

பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல்பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும், தமிழீழகொள்கைக்கு ஆதரவும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஒன்றாகஇணைந்துள்ளனர்.

இந்நிலையில் Chipping Barnet பகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் Theresa Villers அவர்களின் தேர்தல்பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்று அவருக்கான பிரச்சார பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.

சனிக்கிழமை (15) நடைபெற்ற மேற்படி இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள்தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், சுதாகரன் தங்கவேலு, ஜெயவீரசிங்கம் பேரானந்தம், ஞானசிங்கம்தயாபாரன், சுபாஷ்கரஷர்மா வானுபிரியா ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Print Friendly, PDF & Email