SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் மாநாட்டை நடத்த விடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இச்சம்பவமானது தமிழர்கள் மனதில் என்றும் நீங்காத வடுக்களாக இன்றுவரை அமைந்துள்ளது, இக்கலவரமானது பின்னர் தமிழர்களை ஆயுதப் போராட்டம் வரை கொண்டு செல்வதற்கான மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நான்காவது உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மிகவும் எழுச்சி பூர்வமாக நடைபெற்று வருகின்றது.

உலகின் பல்வேறுபட்ட தமிழ் ஆர்வலர்களும் ஆளுமைகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில் “இலங்கை தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம்” எனும் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் மறைக்கப்படும் வீர வரலாறு இனப்படுகொலையின் போது அழிக்கப்பட்ட தமிழின தேசத்தின் கட்டுமானங்கள், இனப்படுகொலையின் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் பங்கு, தொடரும் கலாச்சார கட்டமைப்பு சார் இனப்படுகொலை, நீதி கூறல் என்பவற்றை இளைய தலைமுறையினருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் விளகும் விதமாக கண்காட்சியானது இடம்பெற்று வருகின்றது.

இன்று ஜூலை 29 இடம் பெற்ற கண்காட்சியை அதிகளவானோர் பார்வையிட்டதுடன் அவர்களின் ஆழமான கருத்துக்களையும் அவர்களின் கடந்த கால அனுபவங்களையும் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினிடம் பகிர்ந்து கொண்டனர். இக்கண்காட்சியானது நாளையும் சிறப்பான முறையில் இடம்பெற காத்திருக்கின்றது.

Print Friendly, PDF & Email