SHARE
image_pdfPRINT

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு காய்ச்சல் அதிகரித்து உள்ளது. அதனை அடுத்து மறுநாள் சங்கானை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பயனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது,

மாணவன் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்துள்ளார். மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவென கண்டறியப்படவில்லை. அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே மேலதிக விபரம் தெரியும் என தெரிவித்தார்.