ITJP மற்றும் HRDAG யின் கூட்டு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் இறுதி மூன்று நாட்களான மே 17 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் படையினரிடம் சரணடைந்த தமிழ் பிரஜைகளில் 500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டத்திற்கான அமைப்பு (ITJP) அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான புள்ளியலாளர்கள் அமைப்பான Hardag எனும் அமைப்புடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவிலேயே இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
உலகிலேயே வலிந்து காணாமல் போனவர்களை பெரும் எண்ணிக்கையாகக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. ஆனால் இந்த 500 போரும் ஒரே நாட்டில் ஒரே இடத்தில் அதேவேளை ஒரே நேரத்தில் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கத்தோலிக்க பாதிரியார் பிரான்ஸிஸ் ஜோசப் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் என பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போனமை தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என ITJP யின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.