Home Blog Page 7

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?

image_pdfPRINT

நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் அநுர அரசாங்கத்தின் உண்மை முகம் -கஜேந்திரகுமார்

image_pdfPRINT

போருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்தையும் விட மோசமான அரசாங்கமாக, தமிழருடைய இனப்படுகொலைக்கு உள்நாட்டு ரீதியாக மட்டுமே பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டுமே எனக் கூறியமை அநுர அரசாங்கத்தினுடைய உண்மையான முகத்தை காட்டுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில், எந்தவொரு இடத்திலும் இராணுவத்தினருக்கோ முப்படையினருக்கோ எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என இவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது வெறுமனே இனவாதத்தை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தப் போவதாக திரும்ப திரும்ப கூறி தமிழினத்தையும் நம்ப வைக்கும் இவர்களது நடவடிக்கை தற்போது ஜெனீவா தொடர்பான செயற்பாடுகளில் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

image_pdfPRINT

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்று சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுச்சபை கூட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகப் பொதுச்சபை கூட்டப்படவில்லை என்றும் அறிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியில் சிலரின் எதேச்சதிகாரம் மிக்க செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பலர் அந்த கட்சியை விட்டு வெளியேறியும், பதவிகளைக் கைவிட்ட வண்ணமும் உள்ளனர்.

இந்த நிலையில் மார்க்கண்டு நடராசாவினால் இந்த வழக்கு நேற்று யாழ்., நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கோடரி சின்னத்தில் களமிறங்கும் 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு!

image_pdfPRINT

களுத்துறை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று  ‘கோடரி’ சின்னத்தில் போட்டியிட  வேட்புமனுத்  தாக்கல் செய்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து இம் முறை 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரகம, ஹொரணை, புலத்சிங்கள, அகலவத்தை மத்துகம, பாணந்துறை, பேருவளை மற்றும் களுத்துறை உட்பட 8 தேர்தல் தொகுதிகளில் இருந்து  நாடாளுமன்றத்திற்குத்  தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அந்தவகையில் செல்வராஜ் விஜேபாண்டியன், குப்புசாமி ஆரோக்கியன், சுந்தரலிங்கம் சிவன் பிள்ளை, கிருஷ்னசாமி சிவகுமார், ராமையா ஸ்ரீ காந்த, நடேஷன் சிவபாலன், நடேசன் உதயகுமார், சிதம்பரம், தேவேந்திர சுப்பிரமணியம் ரமேஷ், சந்திரஜோதி வினோதா,  முத்து திரிச்செல்வம், சின்னசாமி சுப்ராயன், விஜேகுமார் மோனிஷா, சுமதி சுப்ரமணியம் ஆகியோர் மேற்படி  சுயேச்சை குழுவில் இம் முறை தேர்தல் களத்தில் போட்டியிடவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1024,244 ஆகும். இதில் சுமார் நாற்பதாயிரம் அல்லது நாற்பத்து ஐந்தாயிரம் தமிழ் வாக்காளர்கள் இம் முறை பொது தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கும் பட்சத்தில் விகிதாச்சார அடிப்படையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்க கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக குழு தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!

image_pdfPRINT

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு!

image_pdfPRINT

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலில் 22 மாவட்டங்களுக்கு 690 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் – செல்வம்  அடைக்கலநாதன் 

image_pdfPRINT

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில் போட்டியிடுகிறோம். 

அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்டோம்.  தமிழ் மக்களுக்கு தலைமைதாங்குவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கவலையடைய வேண்டாம். இனத்தின் விடுதலையினை நோக்கிச் செல்லும் சின்னமாக சங்கு சின்னம் இருக்கிறது. 

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. எனவே, தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்றபோது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.

எமது கூட்டமைப்பு இந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெறும். 10 ஆசனங்கள் மக்களால் தெரிவுசெய்யப்படும் என்பதுடன் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும். 

பதினொரு ஆசனங்களை கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். இதேவேளை அரசுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை என்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல்

image_pdfPRINT

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு,முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (10)  தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய தோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பொதுத் தேர்தல்:வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்!

image_pdfPRINT

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து பின்னர், ஆதரவாளர்களின் வற்புறுத்தல் காரணமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

எவ்வாறு இருப்பினும் மீண்டும் நேற்றைய தினம் (8) இந்த தேர்தல் களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக் கட்சிக் கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகின்றது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் யோசனையை இலங்கை நிராகரிப்பு

image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆம் அமர்வுகளில் முன்வைக்க உத்தேசிக்கப்படவுள்ள யோசனையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில காரணிகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி தொடக்கம் இந்த மாதம் 11-ம் திகதி வரையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் இம்முறை நடைபெறுகின்றது.

இம்முறை 57 ஆம் அமர்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அமர்வுகள் தொடர்பில் வெளிவகார அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இலங்கையை தொடர்பில் 51/1 என்ற யோசனை திட்டம் ஒன்று முன்மொழிக்கப்பட உள்ளது. வெளி சாட்சியங்கள் திரட்டும் இயந்திரத்திற்கான அதிகாரம் வழங்கப்பட போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு பொறிமுறைமை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்

image_pdfPRINT

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி  வன்னி மாவட்டத்தில்  போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன்  தற்போது தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது சரியான தீர்மானம் அல்ல என பல அறிவுறுத்தல்கள் தனக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த போட்டியிட வேண்டாம் என்ற முடிவினை எடுத்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தனது முகநூல் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!

image_pdfPRINT

நாட்டில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”  அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருந்தது என்றும் அங்கு வந்திருந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றும் நோக்குடன் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மாறாக அவரை கொலை செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்ததை தாம் நன்கு அறிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வருகை தந்தவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் தன்னிடம் உள்ளதாகவும் எனவே தான் தற்போதைய அரசாங்கம் ஒரு அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே தாம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

error: Content is protected !!