கடவுளின் காது கூர்மையானது – நீதிபதி இளஞ்செழியன்
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம், நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அயலில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது.
அதன் போது குறித்த மனுதாரர் , அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிப்பட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுவதனால் இருதய வருத்தம் உள்ள தான் பாதிக்கப்படுவதாகவும் , தனது சிறு பிள்ளைகளும் பாதிக்கப்படுவதாகவும் மன்றில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில் , கடவுள் நல்ல காது கூர்மை உடையவர். அவரை அமைதியான முறையில் வழிபடலாம். எங்கள் உரிமை மத வழிப்பாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது.
தொலைபேசி இலக்கங்களூடு இராணுவத்தினர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்; சந்திரிக்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் முறைப்பாடு
போரினால் துவண்டு போயுள்ள வடமாகாண பெண்கள் மீது இராணுவத்தினர் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திரிக்காவிற்கும் , உளவியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த போதிலும் இன்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் , அதிகளவான இராணுவத்தினர் , போலீசார் நிலைகொண்டுள்ளனர். அந்நிலையில் முல்லைத்தீவில் அதிகளவான வன்கொடுமைகள் இடம்பெறுகின்றன.
போரினால் கணவனை பெற்றோரை இழந்து தனித்து வாழும் பெண்களை இலக்கு வைத்தே வன்கொடுமைகள் புரியப்படுகின்றன. ஆரம்பத்தில் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு பின்னர் தொலைபேசி ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுக்கின்றார்கள்.
அதேநேரம் இராணுவம் மற்றும் பொலிசாரின் அனுசரணையில் அங்குள்ள சிலரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடுகின்றார்கள்.
பாதுகாப்பு தரப்பினரின் ஆதிக்கம் காணப்படுவதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க கூடிய வழிமுறைகள் இல்லாமல் உள்ளது. என உளவியல் செயற்பாட்டாளர்கள் எடுத்து கூறி இருந்தனர்.
அதற்கு முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கா எந்தவிதமான பதிலையும் கூறாது அமைதியாக இருந்தார்.
ஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர்
இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று (01.4.2018) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ் அரசில் கைதிகளின் விடுதலையை கோரியும் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் திரண்ட புலம்பெயர் தமிழர், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் காணமால் ஆக்கப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய பிரித்தானிய அரசு இலங்கைக்கு அழுத்தங்கங்களை கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி லண்டனில் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை (01.4.2018) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்னாள் (10 Downing Street, London SW1A 2AA) பி.ப.13.00 மணி முதல் 16.30 மணிவரை நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் வாடும் உறவுகளுக்கு குரல் கொடுக்க பிரித்தானியா வாழ் அனைத்து புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக அண்மையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் அரசியல் ஆயுள் கைதி ஆனந்த சுதாகரனினை, விரைவாக விடுதலையை செய்ய இலங்கைக்கு பிரித்தானிய அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இவ் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தினம்; யாழிலும் மன்னாரிலும் நினைவுகூறல்
தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தின நினைவுகூறல் நிகழ்வு இன்று யாழ் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெற்றது.
தனித்தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டுவந்து தமிழருக்கான தனித்தேசம் வேண்டி அகிம்சை வழியில் சுய உறுதிப்பாட்டுக்கான போராட்டத்தை வழிநடத்திய தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
இந்நிலையில் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது நினைவு உருவச்சிகை;கு தமிழரசு கட்சியின் சேனாதிராஜா மலர் மாலை அணிவித்ததுடன் அவரது நினைவுதூபிக்கும் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை மன்னாரிலும் தந்தை செல்வாவின் நினைவுருவச்சிலைக்கு மலர்மாலை அணியப்பட்டு அவரது பிறந்தநாள் நினைவுகூறப்பட்டது.
காணமால் போனோர் குறித்து 13,200 விண்ணப்பங்கள்
காணாமல் போனோர் குறித்து நாடளாவரீதியில் 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்களை காணமால் போனோர் பணியகத்திடம் கையளித்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்காக நாடெங்கிலும் பரவலாக அவர்களின் பெற்றோர் உறவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை அண்மையில் ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத்தேடரின் போது இலங்கையில் காணமல் போனோர் அலுவலகம் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவன் அனைத்து படங்களிலும் ‘A’ சித்தி
சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த ஆண்டு (28 டிசம்பர்) இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி தோற்றிய 9 பாடங்களிலும் ‘ஏ’ தர பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்
வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார்.
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும்.
நல்லாட்சி அரசுக்கு சித்திரை வரை காலக்கெடு -எம்.ஏ.சுமந்திரன்
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
நல்லாட்சி அரசாங்கத்திற்கு சித்திரை மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். 2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை எதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் சித்திரை 2ம் திகதிக்குள் எமக்கு கிடைக்கவேண்டும். கிடைத்தால் மட்டுமே இந்த ஆட்சி தொடர்வதற்கு எங்களால் முடிந்தளவு முயற்சிப்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பதென தீர்மானிப்பதற்காக சித்திரை மாதம் எமது நாடாளுமன்ற குழு கூடவுள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்.
இந்த பேச்சுவார்த்தையின்போது 2015ம் ஆண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை இனிமேலாவது நிறைவேற்றவேண்டும் என கூறுவோம். இதனடிப்படையில் இனிமேலாவது மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக இந்த அரசாங்கம் நடந்து கொள்ளும் சமிக்ஞையை காண்பித்தால் இந்த அரசாங்கம் தொடர்வதற்கு எங்களால் இயன்ற சகல முயற்சிகளையும் எடுப்போம்.
மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பது பொது எதிரணியின் முதலாவது காய் நகர்த்தலாகும். இதன் பின்னர் ஜனாதிபதிக்கும் இது நடக்கும். அதனை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியை தொடங்கியிருந்தது. அந்த முயற்சி இப்போது இடைக்கட்டத்தில் நிற்கிறது. தொடர்ந்து நடக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இவ்வாறான ஒரு கட்டத்தில் இந்த கூட்டரசாங்கம் விழுந்தால் ஒன்றுமே நடக்காமல்போகும். ஆகவேதான் நான் முன்னர் கூறியதைபோல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்புகூறல் போன்ற விடயங்களில் அரசு இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சமிக்ஞைகளை காண்பித்தால் இந்த அரசாங்கம் தொடர்வதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை செய்வோம். இல்லையேல் சித்திரை மாதம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.
இராணுவத்தின் துப்பாக்கியை பறித்து சென்ற மர்ம நபர்; முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏகே-47 துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி செறுள்ளத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஆண்டாள்குளம் காட்டுப்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மரம் கடத்தலை தடுப்பதற்கு நின்ற சிப்பாயின் துப்பாக்கியையே மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரை இராணுவத்தினரும் பொலிஸாரும் வலைவிரித்து தேடிவருவதாகவும் இதனால் அப்பகுதிகாளில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடற்படையினரின் தண்ணீர் பவுசரில் மோதுண்டு ஒருவர் பலி
கடற்படையினரின் சமிஞ்ஞை விளக்குகள் அற்ற தண்ணீர் பவுசரில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பூனகரி நாவற்குழி வீதியி இன்று (26) இரவு 8.30 மணியளவில் சமிஞ்ஞை விளக்குகள் ஏதுமற்று,பொறுப்பற்ற விதத்தில் கடற்ப்படையினரால் பயணித்த தண்ணீர் பவுசரில் மோதுண்டவர் நிலை தடுமாறிச் செல்ல, அவரின் பின்னே வந்த கார் மோதித் தள்ளியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

























