Home Blog Page 312

நேற்று மத்திய மாகாண ஆளுநர் இன்று வடக்கின் ஆளுநர் ; மீண்டும் ரெஜினோல்ட் குரே

image_pdfPRINT
வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்ட 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே நேற்றையதினம் மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வடமாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பி.பீ.திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராகவும் ஊவாமாகாண பதில் ஆளுநராகவும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களை தேடும் பணியின் பின்னணி; கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது

image_pdfPRINT
கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட அவர்  வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஆயுத கொள்கலனைத்தேடி தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தோண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்த தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளி யார்? அவர் எதற்காக கைது செய்யப்பட்டார்? யாரால் கைது செய்யப்பட்டார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல்; கூடாரத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபர் தாக்க முயற்சி

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர் ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்பட்டு உள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து தப்பித்து உறவுகள் கூடாரத்தை விட்டு வெளியேறிய வேளை , அந்நபர் அங்கிருந்த கதிரையினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த சமையல் பத்திரங்களையும் சேதப்படுத்தி உறவுகளால் ” இன்று 400 ஆவது நாள் ” என எழுதி தொங்க விடப்பட்ட பதாகையையும் சேதப்படுத்தி உள்ளார்.
அந்நிலையில் அவ்விடத்தில் மக்கள் கூடி தாக்குதலளியை பிடிக்க முயன்ற வேளை அவ்விடத்தில் இருந்து தாக்குதலாளி தப்பி ஓட முயன்றுள்ளார். இருந்த போதிலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிசாரின் உதவியுடன் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.
பொலிசாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை முல்லைத்தீவு போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ருவிட்டரில் முதலிடம் பிடித்த #GoBackModi

image_pdfPRINT

இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். மோடி, விமான நிலையத்தில் இறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டகாரர்கள் கைது
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைதாகினர்.

மத்திய மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம் : வட மாகாண ஆளுநர் யார்?

image_pdfPRINT
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வடக்கின் புதிய ஆளுநர் யார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.
ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
01. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
02. கே.சி லோகேஸ்வரன் – வட மேல் மாகாணம்
03 நிலுகா ஏகநாயக்க – சபரகமுவ மாகாணம்
04 ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
05 மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
06 எம்.பி ஜயசிங்க – வட மத்திய மாகாணம்
07 பி. பி. திசாநாயக்க – ஊவா மாகாணம்

நுண் கடன் வழங்குதலை தடுக்க முடியாமைக்கு அரசியல் பின்னணியே காரணம்- மகளிர் விவகார அமைச்சர் ஐயம்!

image_pdfPRINT

நுண் கடன்களை வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியாமைக்கு அவற்றின் அரசியல் பின்னணியே காரணமாக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் இன்று (12) மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இவ் ஆலோசனைக்குழுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய அனந்தி சசிதரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நுண் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள், குடும்பங்களில் உள்ள பெண்களை இலக்குவைத்து கடன் பொறிக்குள் சிக்கவைத்துவரும் போக்கு தொடர்ந்து வருகின்றது. இக் கடன் பொறிக்குள் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் போதிலும் இந் நுண் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றமைக்கு இந்நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் அரசியல் பின்புலமே காரணாமாக இருக்குமோ என்ற ஐயப்பாடு ஏற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இன்று காலை நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் ஆகிய அமைச்சின் கீழான திணைக்களங்கள் ரீதியான செயற்பாடுகளை வினைத்திறமையுடன் மேற்கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
 

மீளவும் களத்தில் குதிக்கும் முதலமைச்சர்

image_pdfPRINT

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)

மக்களின் நலன் கருதி அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், சீ.வி.விக்னேஸ்வரன் கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் நிற்கலாம் என கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான தனது வாரமொரு கேள்வி பதிலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆதன ஆரம்பகாலத்தில் அதனை உருவாக்க பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. வடகிழக்கு, தாயகம், இறைமை சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கூறுகளை ஜந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும்.

அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாணசபை தேர்தலில் நாம் மக்களிடம் வாக்கு கேட்டோம் மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்று தந்து என்னையும் முதலமைச்சர் ஆக்கினர்.

ஆனால் அதே கொள்கையுடன் தமிழத்தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கிறதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஓரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமியை தடுக்க கடலில் பூஜை; முல்லை கடலில் அமெரிக்க ஆய்வாளர்கள்

image_pdfPRINT
முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வழமைக்கு மாறாக கடலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க ஆய்வு குழுவொன்று முல்லைத்தீவுக்கு சென்றுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து பல சந்தர்ப்பங்களில் முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல முறை கடல் கொந்தளித்து கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும், அதனால் சுனாமி ஏற்படும் என அஞ்சியவர்கள் கடலில் பூஜை ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இதேவேளை அண்மையில் கடலில் நீர் வீதிக்கு வருவதாக கூறி முல்லைத்தீவு பிரதேச மக்கள் நகரத்தின் கடைகளை மூடிவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்ற சம்பவமும் நடைபெற்றது.
இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி காமினி பிரியந்த கடல் நிலைமை தொடர்பில் அனைவருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் பிரிவு பிரிவு குழுவினர், கொழும்பில் உள்ள சில குழுக்கள் இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் சுற்றுலா சூழல் மற்றும் புவியியல் மாற்றம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சிலர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அழைப்பிற்கமைய முல்லைத்தீவிற்கு வருகைத்தந்துள்ளனர்.
அமெரிக்க ஆய்வு குழுவினர், மாவட்டத்தின் மேலதிக செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி காமினி பிரியந்த ஆகியோருடன் முல்லைத்தீவு கடல் எல்லைக்கு சென்று ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் கன்னி அமர்வு

image_pdfPRINT
யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று (11) காலை 9.30 மணிக்கு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.
முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கல வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து  முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கன்னி உரைகள் இடம்பெற்றன.

திட்டமிட்டு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை நேரில் சென்று ஆராய்ந்த வடமாகாண சபை

image_pdfPRINT
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு கடந்த 05 ஆம் திகதி வடமாகாண சபையில் நடைபெற்றது.
இதன்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்தனர்.
இதன்பிரகாரம் இன்று காலை 09 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய், நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதாகத் தீர்மானித்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினர்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெறும் இடங்களை நேரடியாகச் சென்று ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன், இன்று மாலை மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளிப்பது என்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
மாயாபுர சிங்கள குடியேற்றத் திட்டத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட மாகாண சபையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழன் கைக்குண்டு,அருள் எறிகணைகள் முல்லையில் மீட்பு; மிரளும் இராணுவம்

image_pdfPRINT

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது.

வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 22, அருள் எறிகணைகள் 34, உட்பட மைக்ரோ பிஸ்டல் ரவைகள் 3000, கைக்குண்டுகள் 34, மிதிவெடிகள் 48, ஆர்.பி.ஜி. குண்டுகள் 07, இ.ஜி.பி.எம்.ஜி. ரவைகள் 2000, விமான எதிர்ப்பு குண்டுகள் 1710, கிளைமோர்கள் 04, சி.04 வகை வெடிமருந்து 48 கிலோ என்பன மீட்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இதில் விடுதலை புலிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட தமிழன் கைக்குண்டுகள் மற்றும் அருள் எறிகணைகளை பார்வையிட்ட இராணுவத்தினர் அதன் தயாரிப்பு குறித்து வியந்துபோயுள்ளனர்.

1989 களில் இந்திய இராணுவத்தின் எதிர்த்தாக்குதலை முறியடிப்பதற்காக விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் தயார் செய்யப்பட்டவையே அருள் எறிகணைகள் என தெரியவருகிறது.

சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணை

image_pdfPRINT

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்த சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த பிரேரணையை தோல்வியடைய செய்திருந்திருந்தனர்.

இந்நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் குறி எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக திரும்பியுள்ளது.

error: Content is protected !!