Home Blog Page 301

இறந்தோரை நினைவு கூர்ந்த ஊழியரை பணிநீக்கம் செய்த வங்கி

image_pdfPRINT

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி  அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியதை அடுத்து , அஞ்சலி நிகழ்வுகள் குறித்து வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் எடுத்து வருவதாக தெரிய வருகின்றது.

இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அக்கரைப்பற்றையும் (அம்பாறை) சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புகளுக்கெதிராக நடவடிக்கை

image_pdfPRINT
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.
யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு ஓழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முன்னெடுக்கவுள்ளனர்.
ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் சேவையையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாணம் பொலிஸாரின் உதவியைப் பெற்று இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நீதிமன்று அனுமதி வழங்கவேண்டும்” என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (23) புதன்கிழமை விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்குவதாகக் கட்டளை வழங்கினார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் நல்லூர் பிரதேசம் உட்பட பல பகுதிகளில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என தொலைத்தொடர்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

யாழில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற இருவர் கைது

image_pdfPRINT

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த இருவர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றிற்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கில் உரிமையாளரான மாணிக்கம் வசந்தகுமார் மற்றும் ஜெயசீலன் துசிலன் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்வர்கள் ஆவர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் இயங்கிவந்த பாக்கு விற்பனையகம் கடந்த மாதம் பொலிஸாரினால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த பெரும் தொகையாக போதைப் பாக்குகள் மீட்கப்பட்டதோடு, இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த போதைப் பாக்கினை வெளிமாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து, குறித்த திருத்தகத்தில் பதுக்கி வைத்து மாவணர்வகள் உட்பட இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது தொடர்பில் யாழ்.பொலிஸ் உயர் அதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார் திருத்தகத்தில் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது அங்கு விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிராம் போதை பாக்கினை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் அத் திருத்தகத்தில் உரிமையாளரையும், அவருடைய உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சான்றுப் பொருட்களுடன் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய பிரித்தானியா!

image_pdfPRINT

முக்கிய ஆவணங்களை அழித்தமை அம்பலம்

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு – 5) மற்றும்  எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘தி கார்டியன்’ ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் பிரித்தானிய, இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான எந்தவொரு பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று மூன்று தசாப்தங்களின் பின்னரான காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடவில்லை.

யாழிலிருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன்

image_pdfPRINT
திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரச சட்டவாதிகள் நாகரட்னம் நிஷாந்த், திருமதி பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் வெல்லவராஜன் ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள், மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.
மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து வாழ்த்துப் பாமலை மற்றும் நினைவுச் சின்னம் என்பனவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நலன்புரிச் சங்கம் சார்பில்  குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் வழங்கிவைத்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

தூக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு பருத்தித்துறையில் அஞ்சலி

image_pdfPRINT
தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி ; கரவெட்டியில் சம்பவம்

image_pdfPRINT
கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மின்சார தாக்குதலுக்கு இலக்கான தந்தையை காப்பாற்ற சென்ற மகனுக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதேவேளை தந்தையையும் , சகோதரனையும் காப்பாற்ற முயன்ற மற்றுமொரு மகன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரில்  அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வாள் வெட்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை

image_pdfPRINT

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள் வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை. 

குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை.
தம் மீது தாக்குதல் நடத்தும் போது தாக்குதலாளிகள் முகத்தினை மறைத்து கறுப்பு துணி கட்டி இருந்தமையால் , தாக்குதலாளிகளை அடையாளம் காணமுடியவில்லை என சாட்சியங்கள் மன்றில் தெரிவித்தன.
அதை அடுத்து குறித்த வழக்கினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் சந்தேக நபர்கள் மூவரையும் அன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

என்னை சீண்டினால் மனோ கணேசனின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்

image_pdfPRINT

மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக அமைச்சர் மனோகணேசன் இருப்பதனால் , அரசியல் நாகரிகம் இன்றி அவரை விமர்சித்தால் , அது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் இன்று விமர்சிக்கவில்லை. என்னை மீண்டும் சீண்டினால் விமர்சிப்பேன் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபை உறுப்பினரை அமைச்சர் மனோகணேசன் “கோமாளி” என விளித்து தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
என்னுடைய கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் , அதனை அரசியல் நாகரிகத்துடன் தெரிவிக்க வேண்டும். எனது கருத்துக்களில் விமர்சனங்கள் இருந்தால் அவை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வரலாம். பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராகவே உள்ளேன்.
அமைசரை போல அரசியல் நாகரிகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கூட என்னால் விமர்ச்சிக்க முடியும். மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக இருப்பதனால் அவரை விமர்சிப்பது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் விமர்சிக்க வில்லை.
தொடர்ந்து என்னை சீண்டினால் , அமைச்சரின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்.
அவர் தான் ஏறி வந்த ஏணியை தற்போது எட்டி உதைத்துள்ளார். அவரை எறிவருவதற்கு , ஏணிப்படிகளாக இருந்த பிரபாகணேசன் , குமரகுருபரன் , வேலணை வேணியன் ஆகியோர் தற்போது எங்கே ? அவர்களை எட்டி உதைத்து விட்டார்.
நடந்தது இனவழிப்பு தான் என சொல்வதற்கு அரசாங்கத்திற்கு அடிமையாக இருக்கும் அடிமை புத்தி சொல்ல விடாது தடுக்கலாம். ஆனால் , நாம் இனவழிப்பு நடந்தது என்பதனை ஆணித்தரமாக சொல்லுவோம்.
மலையாக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனவழிப்பின் ஓர் அங்கம் தான் என்பதனை அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

சொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை ; பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

image_pdfPRINT
தமிழ்நாடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர்.
இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர். அதனையடுத்து  போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
எனினும் அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும்  விரட்டி அனுப்பினர். இதனால் பதற்ற நிலைமையை  கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர்.
இந்நிலையில் போலீசார் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் 11  பேர் பலியானார்கள்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

குறித்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

வடக்கில் மின்சார வேலி பயன்படுத்தும் இராணுவம் ; அரியவகை யானை பலி

image_pdfPRINT
மின்சாரவேலியை பயன்படுத்தி வடக்கின் அரியவகை காட்டு யானையை கொன்ற குற்றச்சாட்டுக்குள்ளான  முல்லைத்தீவு, உடையார்கட்டு இராணுவ கட்டளை அதிகாரிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்குண்ட காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது.
இப்பகுதியிலில் 68 ஆவது படைப்பிரிவின் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக போட்டிருந்த மின்சார வேலியிலேயே குறித்த யானை சிக்குண்டு இறந்துள்ளது.
இறந்த யானையின் உடலில் பரிசோதனை மேற்கொண்ட வடபிராந்திய வனஜீவராசிகள் திணைகள கால் நடை மருத்துவ உத்தியோகத்தர், குறித்த யானை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியே இறந்துள்ளதாகவும் 35 வயதுடைய இந்த யானை இன்னும் நீண்ட காலம் வாழக்கூடியதுடன் இதுபோன்ற அரிய வகை காட்டு யானை மூன்றையே வடக்கில் இதுவரை காட்டில் கண்டுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில் வேண்டமென்றே படையினர் தமது விவசாய நடவடக்கையின் நலன்கருதி இந்த யானை கொன்றுள்ளனர் என வனவிலங்கதிகாரிகள் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து குறித்த படைப்பிரிவிற்கு பொறுப்பான கட்டளை அதிகாரிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தபோது நீதிமன்றம் அவருக்கு பிணை  வழங்கியுள்ளது.
யுத்தம் முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் மக்களின் காணிகளை தம்வசப்படுத்தியுள்ளது மட்டுமல்லாது அவற்றில் விவசாயம் செய்து வருகின்றனர்.

“தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – காசி.ஆனந்தன்

image_pdfPRINT

ஒரு தமிழ் பொதுமகன் என் தாயகம் தமிழீழம் என்று கூறுவது எந்தவிதத்திலும் தேசத்துரோகம் தான் எனது கேள்வியிடுகிறது. தமிழீழம் தமிழர் ​​தாயாகம்  என அங்கீகரிக்கப்பட வேண்டும் இவ்வாறு மட்டக்களப்பை பிறப்பிமாகக் கொண்டுள்ள இலங்கைத் தமிழ்ச்சரட்சியின் ஆரம்பகால இளைஞர் அணியில் செயற்பட்டாளரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் விவகார பிரிவின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் உணர்ச்சிக் கவிஞருமான காத்தமுத்து சிவன்ந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட கசி.ஆனந்தன் கூறியுள்ளார்.

பெரும்பான்மை இனத்தின் போக்குகள், தமிழ் இன,மொழியின் வரலாற்றுப் பெருமைகள், தமிழர்களுக்கான தயாகம், தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுள், தமிழனத்துக்கான மாற்றுத்தலைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
புரிதலற்ற செயற்பாடுகள் பிரித்தானியர்கள் வெளியேறியவுடன் தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். அவர் சிங்கள இன வெறுப்புடனோ அழிப்புடனே கட்சியை ஆரம்பித்திருக்கவில்லை. சிங்கள மக்களுடன் ஒரு நாட்டுக்குள் வாழ முடியும் என்ற நம்பிக்கையுடதான் கட்சியை ஆரம்பித்திருந்தார்.  தந்தை செல்வாவின் அத்தகைய நல்லெண்ண முயற்சியை சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் தமது சிங்கள, பௌத்த பேரினவாத எண்ணத்தினையே முன்னிலைப்படுத்தலானார்கள். அதன் விளைவாக தற்போது இலங்கைத் தீவு எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது.

அஹிம்சை, ஆயுதப்போராட்ட காலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஓட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கின்றபோது இலங்கை நாடு இரு தேசங்களைக் கொண்டது என்பதான சாரம்சமாகின்றது.

இருதேசக் கொள்கை என்பது ஒன்றும் இனவெறிபிடித்த கொள்கை அல்ல. அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று அடிப்படையில் இலங்கைத்தீவு இரு தேசங்களாக இருந்துள்ளது என்பது மறுதலிக்க முடியாதவொன்றாகின்றது.

சிங்களவர்களுக்கு கண்டி அரசு, கோட்டை அரசு என தனி அரசுகள் இருந்துள்ளன. அதேபோன்று தான் தமிழர்களுக்கும் யாழ்ப்பாண அரசு, மட்டக்களப்பு அரசு, வன்னி அரசு திருகோணமலை அரசு என இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தினை சங்கிலியன், வன்னியில் பண்டார வன்னியன், திருகோணமலையில் குளக்கோட்டன் மட்டக்களப்பில் உலகநாச்சியன் என தமிழர்களும் அரசு கொண்டு வாழ்ந்த வரலாறுகள் காணப்படுகின்றன.

அவ்வாறிருக்கையில் தற்போது வரையில் சிங்களவர்கள் இனரீதியான பெரும்பான்மையை மையப்படுத்தி சிங்கள, பௌத்த மேலாதிக்கவாத்தின் பால் ஒட்டுமொத்தமாக தமிழினத்தனையே அழித்து துடைந்தெறிந்து விடவேண்டும் என்ற நோக்கத்தினையே தற்போது வரையில் கொண்டிருகின்றது. தற்போதும் இந்த மனநிலையல் சிங்கள மக்கள் இருப்பதானது ஒருமித்த நாட்டிற்குள் அவர்களுடன் இணைந்து வாழ்வதை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது.

பூர்வீக தேசத்தினை பூர்வீக இன மக்கள் இழப்பது என்பது மிகப்பெரும் துயராகும்.சிங்கள மக்கள் இலங்கைத் தீவில் உள்ள சிக்கலை வெறிகொண்டு பார்க்ககூடாது. அவர்கள் இதனை அறிவு பூர்வமாக பார்க்கவேண்டும். ஆகக்குறைந்தது அவர்கள் அவ்வாறு சிந்திக்க கூட இல்லை. இங்கு ஒரு முக்கியமான விடயத்தினை குறிப்பிட விரும்புகின்றேன்.

மறுதலிக்க முடியாத வரலாற்று பின்னணி

ஆபிரிக்காவில் தோன்றி ஹோமோசேப்பியன்ஸ் இனம் கண்டத்திட்டுக்கள் வழியாக தமிழ் நாட்டிற்கு வந்திக்கின்றன. அதாவது 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமாக தோன்றிய மொழி இனமாக தமிழினம் இருக்கின்றது. இதனை பாவணர் என்ற மொழி ஆய்வாளர் ஆய்வு செய்து லெவி போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் கீழ் திசை வழியாக அவுஸ்திரேலிய கண்டத்திற்கு தமிழ் மொழி நகர்ந்துள்ளது. அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தினர் பேசும் மொழியில் தமிழ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பனி உழிக்காலம் வந்தபோது தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கிப் போனவர்கள் சிந்துவெளி சுமேரியா போன்ற வரலாற்றில் இருப்பதும் உறுதியாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான வரலாறு இருக்கையில் தமிழகத்திலிருந்து 10ஆயிரம் ஆண்களுக்கு முன்னர் பனி உழிக்காலத்தில் தான் இலங்கை தீவு பிரிந்துள்ளது. ஆகவே இலங்கை தீவில் தமிழ் மொழியின் வரலாறு மிகப்பழமையானது. இதன் பின்னர் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தான் சிங்கள மொழியும் சிங்கள இனமும் தோற்றம் பெறுகின்றது. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட மாகாவம்சம் கூட பாளி மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. அப்போது கூட சிங்கள மொழி இருந்திருக்கவில்லை. இவ்வாறான வரலாற்றுப்பின்னணிகளை வைத்துப்பார்க்கின்றபோது இலங்கைத் தீவில் சிங்கள மக்களின் வரலாறு 1400 ஆண்டுகளாகவே இருக்கின்றது. இதனடிப்படையில் பார்க்கின்றபோது 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள தமிழினத்தை 1400 ஆண்டுகள் வரலாற்றுப்பின்னணி கொண்ட சிங்கள இனம் அழித்தொழித்து கோலோச்ச நினைப்பது மிகப்பெரும் கொடுமையாகின்றது.

இந்தக் கொடுமையை எதிர்த்து தான் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலுடன் அனைத்தும் முடிவுக்க வந்து விட்டதாக தற்போதைய சிங்கள ஆட்சியாளர்கள் முழுமூச்சுடன் மார்பு தட்டிக் கூறுகின்றார்கள். தனி ஈழம் எல்லாம் கிடையாது என்று பறைசாற்றுகின்றார்கள். உலகம் முழுதும் வாழுகின்ற ஒரு இனம் தான் தமிழினம். ஆகக்குறைந்தது சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு தேசிய இனத்தின் உணர்வை மதிக்கின்ற மனிதநேயப் பண்பு கூட தற்போதுவரையில் ஏற்படவில்லை என்பது மிகவும் வேதனையாக விடயம்.

தாயகம் தமிழீழமே

தமிழ் ஈழத்திற்கான விடுதலைக் கோரிக்கையை முன்வைக்க கூடாது அவ்வாறு கோருவது தேசத்துரோகம் என்று தற்போது ஆணித்தனமாக பெரும்பான்மை ஆட்சியார்கள் கூறுகின்றார்கள். இலங்கை தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்களே இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அதனை நியாயப்படுத்த விடலாம். ஆனால் ஒரு தமிழ் பொதுமகன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று கூறுவது எந்தவகையில் தேசத்துரோகம் என்பது தான் எனது கேள்வியாகின்றது.

“சிங்கள சிறிலங்கா” எவ்வாறு சிங்களவர்களின் தயாகமாகின்றதோ அதேபோன்று தான் “தமிழீழம்” என்பது தமிழர்களின் தயாகமாகின்றது. தமிழீழம் தனியாக அமைய வேண்டும் என்பதானது நாட்டினை பிரிக்க முயல்கின்றார்கள் என்ற அடிப்படையில் தேசத்துரோகமாக கருதலாம். ஆனால் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதில் எவ்விதமான பிரிவினையும் இல்லையே. அது தேசத்துரோக வரையறைக்குள்ளே இடம்பெறதே.

தேசிய இனச் சிக்கிலை தீர்ப்பதற்கு ஆத்மாத்தமாக செயற்பட சிங்கள ஆட்சியாளர்கள் விரும்புவார்களாயின் “தமிழர்களின் தாயகம் தமிழீழம்” என்பதை அரசியலமைப்பில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசியலமைப்பினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் அதில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து என்றெல்லாம் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரதேசங்களில் தனித்தனியான தேசிய இனங்கள் உள்ளன. அந்த தேசிய இனங்களின் தேசங்களின் பெயர்கள் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று தான் இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் இங்கு பல்தேசிய இனங்கள் காணப்படுகின்றன. அந்தந்த தேசிய இனங்களுக்கு சொந்தமான தாயகங்களின் பெயர்கள் இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஒரு காலத்தில் தனிநாட்டுக்கோரிக்கையை எழுப்பிய தமிழ் நாட்டின் பெயரே அரசியலமைப்பில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களின் தயாகமான தமிழீழத்தின் பெயர் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கின்றது.

திட்டமிட்ட செயற்பாடுகள்

எமது தயாகத்தில் புற்றுநோயாக பரவும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதில் எம்மால் எந்தளவிற்கு வெற்றிபெற முடிந்திருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது தயாகத்தினை விழுங்காதீர்கள். திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துங்கள் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்கள் அந்தச் செயற்பாட்டை கைவிட்டதாக இல்லை. இந்த செயற்பாட்டின் உள்ளாந்தத்தினை புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ள சிங்களவர்கள் அதனை அவ்வாறான தாயகத்தினை இல்லாதொழிக்கின்ற செயற்பாட்டினைத் தான் திட்டமிட்டுச் செய்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றம் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் அதேசெயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி சிங்கள மொழி, பௌத்த மதம் என்று அனைத்தையும் திணிக்கின்ற செயற்பாடுகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏ -9 வீதியில் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் காணப்படுகின்ற அரச மரங்களுக்கு கீழ் எல்லாம் எவ்வாறு புத்தர் வந்தார். அனைத்துமே முள்ளி வாய்க்காலுக்கு பின்னர் முளைத்த பௌத்த கோவில்கள். கி.பி.3ஆம் நூற்றாண்டில் தான் பௌத்த சமயம் இலங்கைக்கு வருகின்றது. பௌத்த சமயம் இலங்கைக்கு வருகின்றபோது மூத்த சிவனின் மகனான தேவநம்பிய தீசன் அதனை ஏற்றுக்கொள்கின்றார். தேவநம்பி தீசன் என்பது சைவப்பெயர். இவ்வாறு இந்து சமயத்திற்கு பின்னர் வருகை தந்த ஒரு மதம் அந்த தேசத்தில் உள்ள பூர்வீக மதத்தனை ஒழிக்க நினைப்பது என்பது எந்தவகையில் நியாயம். அந்தந்த இனக்குழுக்களுக்கு அந்தந்த மதங்கள் பெரியவை தான். அதற்காக இன்னொரு மதத்தினை அழிக்க வேண்டிய அவசியமில்லை.

செல்வாவின் தீர்க்க தரிசனமும் தற்போதைய தலைமைகளும்

இதனை தீர்க்கதரிசனமாக உணர்ந்து கொண்டதனால் தான் தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதை கருப்பொருளாக கொண்டு தீர்மானத்தினை நிறைவேற்றினார். தற்போதைய தலைமைகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று கோரலாம். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்பது தயாக கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்பதனையே வெளிப்படுத்துகின்றது.

தந்தை செல்லாவின் பாசறையில் நான் இளைஞனாக இளம் வயதில் இணைந்த போது அவரிடமிருந்து பலவிடயங்களை கற்றிருக்கின்றேன். என்னுடடைய சகபாடிகள் பலரும் அதே பாசறையில் தான் கற்றார்கள். அவர்கள் தற்போது தாயகத்தில் செயற்பாட்டு அரசியலில் இருக்கின்றார்கள். தந்தையைப் பொறுத்தவரையில் எந்தவொரு காலத்தில் அவர் கொள்கையின் அடிப்படைகளை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அரசியல் தலைவர்களிடத்தில் இருக்க வேண்டிய கொள்கை சார்ந்த மிக உயரிய பண்பு தந்தை செல்வா இடத்தில் இருந்தது.

தந்தை செல்வா இடத்தில் அரசியல் விட்டுக்கொடுப்பு என்பதே என்றும் இருந்தது கிடையாது. ஆனால் அவர்களின் வழி வந்தவர்கள் தற்போது எதனையெல்லாம் விட்டுக்கொடுக்க கூடாதோ அதனையெல்லாம் விட்டுக்கெர்டுக்க தயார் என்பதை உறுதிப்படுத்துகின்றார்கள். அதுவொரு தவறான அணுகுமுறையும் அரசியல் பண்பாடுமாகும். நாம் எங்கு நிமிர்ந்து நிற்க வேண்டுமோ அங்கு நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிமிர்ந்து நிற்க முடியாதென்றால் தலைமையிலிருந்து ஒதுங்கிப்போவது தான் சிறந்த வழியாகும்.

தலைமை என்ற ஸ்தானத்தில் இருக்கின்றபோது தந்தை செல்வா எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்க்க வேண்டும். அந்த அனுபவங்களை நுணுக்கமாக எடுத்துகொள்ள வேண்டும். தந்தை செல்வாவின் பாசறையில் உருவாகி தற்போது தமிழினத்திற்கு தலைமை ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் தயாக விடயத்தினை மிகக் கவனமாக கொள்ளவேண்டும்.

அவர்கள் தமிழர்களின் தயாகம் தமிழீழம் என்பதை அரசியலமைப்பில் இடம்பெறச் செய்வதனை வலியுறுத்த வேண்டும். அதற்கு அழுத்தங்களை அளிக்க வேண்டும். அந்தக்கோரிக்கையை முன்னிலைப்படுத்தி மக்கள் மயப்படுத்த போராட்டத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும். அதனை அவர்கள் தற்போது வரையில் ஏன் செய்யாதிருக்கின்றார்கள் என்பது தான் எனது ஆதங்கமாக இருக்கின்றது.

அதேநேரம் தந்தையின் காலத்தில் எமது கட்சியானது தாயக தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக்காரியாலங்கள் அமைந்திருந்தன. மக்களின் கருத்துக்கள்ரூபவ் தேவைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டன. பின்னர் அவற்றின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று தான் கட்சியின் தீர்மானம் எடுக்கப்படும்.

ஆனால் தற்போதைய சூழலில் முக்கியமான அரசியல் தீர்மானங்கள் கூட அவ்வாறு எடுக்கபடுவதாக நான் அறியவில்லை. வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் இல்லை.

ஆகக்குறைந்தது கட்சிக்காரியலங்கள் முறையாக இயங்குகின்றதா என்பதற்கான பதிவுகள் கூட இல்லை. விடுதலையை எதிர்பார்த்திருக்கின்ற இனமொன்றிற்கு தலைமையேற்று அமைப்பு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய வினைத்திறனுடன் செயற்படவில்லை. தந்தை செல்வா காலத்திலும் சரி அதன் பின்னர் தம்பி பிரபாகரனின் காலத்திலும் சரி தாயகத்திற்காக தங்களை அழித்துக்கொள்ளக்கூடிய ஈக உணர்வு தமிழினத்தவர்களிடத்தில் இருந்தது.

தற்போதைய நிலையில் அந்த உணர்வினை முற்றாக சிதைக்கின்ற வகையிலான செயற்பாடுகள் தான் அங்குள்ள தலைமைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதனைவிடவும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளும் அதிகமாக உள்ளதாக அறிகின்றேன். இந்த நிலைமைகள் விடுதலை நோக்கிய பயண உணர்வை முற்றாக மழுங்கடித்துவிடும் அபாயத்தின் சமிக்ஞையாகவே உள்ளது.

தொடரும் ஆதரவுகள்

நான் பச்சியப்பால கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது உங்களின் கல்வியோடு சேர்த்து தமிழீழ மக்களுக்காக இயலுமான உதவிகளை தமிழகத்திலிருந்து மேற்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் வன்னியசிங்கம் ஐயா குறிப்பிட்டார். அன்று முதல் நான் அத்தகைய செயற்பாடுகளை ஆரம்பித்தேன். எமக்கு அண்டை நாடு இந்தியா. எமது போராட்டத்திற்கு இந்தியா பக்கபலமாக நிற்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நான் இந்த நிமிடம் வரையில் தமிழக, மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காத்திரமான பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

விக்கி தலைமையில் எழுச்சி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வந்திருந்தாலும் கூட அவர் தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள்ரூபவ் தலைவர்களில் விடுதலைக்கான இனத்திற்காக செயற்படக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவராகவே உள்ளார். ஏனையவர்களை விடவும் அனுபவத்தில் குறைந்தவராகவும் பிற்பட்ட காலத்தல் விடுதலைக்கான பயணத்தில் இணைந்து கொண்டவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்ற ஒரு தலைவராக இருக்கின்றார்.

அறிவு, அனுபவம், அகவை, இன உணர்வு, நேர்மை ஆகியவற்றை மையப்படுத்திய விக்கினேஸ்வரின் கொள்கை வழியல் ஏனைய இளம் தலைவர்கள் ஒரு அமைப்பாக அணியமாவது தற்போதைய சூழலுக்கு அவசியமானதாக உள்ளதாக நான் கருதுகின்றேன். ஏனைய தலைவர்கள் தமிழ் மக்களுக்காக இயங்கினாலும் விக்கினேஸ்வரனின் தலைமையில் எழுச்சி ஏற்படுவதை வரவேற்கின்றேன்.

நேர்காணல்:- இந்தியாவிலிருந்து  ஆர்.ராம்

நன்றி வீரகேசரி 

error: Content is protected !!