Home Blog Page 300

இந்து – பௌத்தர்களின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இலங்கையை விட்டு வெளியேறுங்கள் – சிவசேனை அமைப்பு தெரிவிப்பு

image_pdfPRINT

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஐயாயிரம் , ஆறாயிரம் ஆண்டுகளாக நாம் காத்து வரும் மரபு எருதாக இருந்தாலும் சரி , பசுக்களாக இருந்தாலும் சரி அவற்றை நாம் பேணுவதும் பாதுகாப்பதும் எம் முன்னோர்கள் செய்து வந்திருக்கின்றார்கள்.

தற்போது ஏன் மாட்டு இறைச்சி கடை கொல்களங்கள் இங்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் அவைகள் இங்கு இருக்கவில்லை. 2007ஆம் ஆண்டுகளின் பின்னரே அவை இங்கே வந்தன.

இதை யார் கொண்டு வந்தார்கள் ? இங்கு முன்னோர்கள் இருந்தவர்களா? இல்லை நேற்று இங்கு வந்தவர்கள். அவர்கள் தாம் இங்கு வர முதல் எங்கு இருந்தார்களோ அங்கு எந்த மிருகத்தை மதிக்கின்றார்களோ அந்த மிருகங்களை அவர்கள் ஒரு போதும் கொல்ல மாட்டார்கள். சவூதியில் இந்துக்கள் வாழுகின்றார்கள். அவர்கள் அங்கே பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா ?

ஒல்லாந்தர்கள் மாட்டிறைச்சி கேட்ட போது கொடுக்க மாட்டேன் என ஞானப்பிரகாசர் இங்கிருந்து சிதம்பரத்துக்கு போனவர். ஆறுமுக நாவலர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என வலியுறுத்தியவர்.

இது இந்து பூமி அல்லது பௌத்த பூமி வேறு எவருக்கும் இந்த பூமி சொந்தமானது அல்ல. இதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். இங்கே வந்தால் எங்கள் பூமியின் மரபுகளை பேணி நடவுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் நாடுகளுக்கே திரும்பி விடுங்கள்.

எங்கள் மரபுகளை மதிக்க முடியவில்லை எனில் உங்கள் நாடுகளுக்கு சென்று விடுங்கள். இந்த மண் பசுக்களை பாதுகாத்த பெருமை மிக்க மண். இந்த மண்ணிலே பசுக்களின் இரத்தத்தை சிந்தவிட முடியாது.

எத்தனை பசுக்களை , நாம்பன் மாடுகளை கொன்று குவித்துள்ளீர்கள். கடந்த வாரம் 300 மாடுகள் வெட்டப்பட்டன. சாவகச்சேரியில் யார் மாடு சாப்பிடுகின்றார்கள். 12 இஸ்லாமிய குடும்பங்கள் 100க்கு சற்று அதிகமான கிறிஸ்தவ குடும்பங்கள் 70 ஆயிரம் மக்கள் சைவ மக்கள் அவர்களில் எத்தனை பேர் மாடு சாப்பிடுகின்றார்கள்.

எனவே எங்கள் நாட்டில் மாடுகளை வெட்டுவதனை அனுமதிக்க முடியாது. விரும்பின் உங்கள் நாடுகளுக்கு சென்று அங்கே மாடுகளை வெட்டுங்கள் – என்றார்.

யாழிலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

image_pdfPRINT

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்களால் கொடிகாமம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

கச்சாய் வீதி , கொடிகாமத்தை சேர்ந்த சிவராசா உதயகுமார் (வயது 48) என்பவரே காணாமல் போயுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 21ஆம் திகதி கொழும்பு செல்வதாக கூறி சென்றவர் இன்றைய தினம் வரையில் (26ஆம் திகதி) தொடர்பு இல்லை என கூறியே குடும்பத்தினர் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கு சந்தர்ப்பம் வரும்

image_pdfPRINT

-வடக்கு முதல்வர் நம்பிக்கை

எமக்குரிய சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக குத்துச்சண்டை ஜம்பவான் முகமட் அலி களத்தில் சண்டை போடும் கதையை சொல்லி, அவரிடமிருந்து தற்போது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தின் இணைத்தலைவர் உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பின்வருமாறு,
தமிழ் மக்கள் பேரவை தனது பணிகளை விரிவடையச் செய்ய வேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது. இவ்வாறான விரிவுபடுத்தலுக்கு எமக்கு உறுதுணையாக இருக்கப் போவது எமது இளைஞர் யுவதிகளே! இன்று வடகிழக்கு மாகாணங்களில் வலுப்படுத்த வேண்டிய ஒரு சமூக அலகாக வலம் வருவது இளைஞர் யுவதிகளே!
“வலுப்படுத்த வேண்டிய” என்று கூறும் போது உடல் ரீதியாக என்பது அர்த்தமில்லை. ஆத்மீக ரீதியாக கொள்கை ரீதியாக, அவர்கள் வலுப்பெற வேண்டிய ஒரு கால கட்டம் ஜனித்துள்ளது.
இன்றைய இளைஞர் குழாம் பல விதங்களில் முன்னைய காலத்தில் வாழ்ந்த எம்மவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். நாம் வயதுக்கும் முதுமைக்கும் மதிப்புக்கொடுத்தோம். இன்று அப்படியில்லை. இன்றைய பிள்ளைகள் உலக விடயங்கள் பலதையும் பத்துப் பதினைந்து வயதுக்கு முன்னரே அறிந்து கொள்கின்றார்கள். உலக ஞானம் அவர்களுக்கு நிரம்பவும் உண்டு.
தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மகாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்த உள்ளோம். அரசியல் ரீதியாக நாங்கள் அவர்களுக்கு சில அடிப்படை விடயங்களை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.
சமூக ரீதியாகவும் சில விடயங்களை அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
எமக்கென சில உரித்துக்கள் உண்டென்று சர்வதேசச் சட்ட நூல்கள் கூறுகின்றன. இந்த நாட்டின் ஆதிக் குடியினரின் வழிவந்தவர்கள் என்பதால் தமிழர்களாகிய எமக்கு நாம் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது. மேலும் எமக்கு எம்முடைய கலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றை சுதந்திரமாகப் பாவித்து பாதுகாத்து வர உரித்துண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் மேல் எமக்கு உரித்துண்டு. நிலங்களின் வளங்களை எடுத்துப் பாவிக்க உரித்துண்டு. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள் என்ற முறையில் எமக்கு சில உரிமைகள் உரித்துக்கள் உண்டு என்பதை இதுகாறும் மறந்துவிட்டோம்.
பாரம்பரிய மூத்த குடிகள் பற்றிய உரித்துக்களை உள்ளடக்கியுள்ள ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவணத்தில் அவை இடம் பெற்றுள்ளன. 46 ஷரத்துக்களைக் கொண்ட அதில் பல உரித்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்தல் நன்மை பயக்கும்.
இன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. இது இளைஞர் யுவதிகளிடமும் காணப்படுகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர் யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு.
உலக அதி கூடிய எடைக்குரிய குத்துச் சண்டை வெற்றி வீரனாக ஒரு காலத்தில் வலம் வந்த மொகமட் அலி குத்துச் சண்டை அரங்கினுள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்திருக்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வலையத்தளங்களில் இப்போதும் பார்க்கலாம். அரங்கினுள் நடனமாடுவது போல் அங்கும் இங்குமாக வலம் வருவார். அவர் தன்முகத்துக்கு எதிரியின் எந்த ஒரு குத்தும் படாமல் பார்த்துக் கொள்வார். எதிரியின் குத்துக்கள் பலமாக இருந்தால் தன் கைகளுக்குள் எதிரியின் தலையைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடியாமல் ஆக்கிவிடுவார். மத்தியஸ்தர் அப்போது இருவரையும் பிரித்து விடுவார். இவ்வாறே நடனமாடி சுற்றுக்களை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்வார்.
அதாவது பலம் கொண்ட மட்டில் எதிரி குத்த எத்தனித்து எத்தனித்து அவை வீண்போகவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்கத் தொடங்கிவிடுவார். முகமட் அலி நடனமாடிக் கொண்டு அவரிடம் இருந்து தப்பிப் போய் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சுற்றில் அலியின் குத்துக்கள் எதிரியின் மீது சரமாரியாகப் பொழிய அவர் சுருண்டு நிலத்தில் விழுந்து விடுவார். அலி வெற்றிவாகை சூடுவார்.
இதனை எதற்காக இங்கு கூறினேன் என்று நினைப்பீர்கள். காரணம் இருக்கின்றது. எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள், சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம். சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.
அதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும்.
நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்பு பெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பை உண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும். எமது தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து என கூறினார்.

வடக்கில் மின் தடை

image_pdfPRINT

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று சனிக்கிழமையும் நாளை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் மக்களுக்கான பணத்தை இராணுவத்துக்கு வழங்குகிறோம் – வேறு வழியில்லை என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்

image_pdfPRINT

மீள்குடியேறிய மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து பெரும் தொகையை இராணுவத்துக்கு வழங்குவது உண்மை என தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடக்கு முதல்வர் கூறியதில் உண்மை உள்ளது எனவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மீள்குடியேறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பெருமளவான நிதியை இராணுவத்துக்கு கொடுப்பதாக வடக்கு முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக, நேற்று யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்.

முதலமைச்சர்கூறிய குற்றச்சாட்டை ஆரம்பத்தில் மறுத்த அமைச்சர் பின்னர் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
முதலமைச்சர் கூறியதை பிழை என தெரிவிக்க மாட்டேன். இராணுவத்தினர் குடிகொண்டுள்ள மக்களின் காணிகளில் தற்போது அவர்களுடைய கட்டடங்கள் பல உள்ளன. அந்த கட்டடங்களை அகற்றுவதற்கு நாம் சில பண உதவிகளை செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் அந்த கட்டிடத்தை அகற்றுவர்கள்இ அதன் பின்னர் தான் அந்த காணிகளில் மக்களை மிள் குடியேற்ற முடியும்.

மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து பெரும் தொகையைத் தான் நாம் கொடுக்கிறோம். முதலமைச்சர் கூறியதில் உண்மை உள்ளது. ஆனால் அதை கொடுக்காமல் விட்டால் எமக்கு காணி கிடைக்காது.
பாதுகாப்பு அமைச்சால் குறித்த பணித்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை ஜனாதிபதி தான் செய்ய வேண்டும் அது தொடர்பில் எனக்கு தெரியவில்லை. எனது கடமையை நான செய்கிறேன் காசை கேட்கிறார்கள் நாம் கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

வடக்கு, நகர்ப்பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள 600 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதி காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள 600 ஏக்கர் காணி அடுத்த வருடமளவில் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் பல ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்சியாக பல தரப்புக்களால் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சில காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் வடக்கு மாகாணத்தில் உள்ள நகர் புறங்களில் உள்ள சில சில பகுதிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். குறித்த பகுதிகளில்  உள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு பல பகுதிகளில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.  

அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள நகர்புற காணிகளில்  இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள முகாம்களை விட்டு வெளியேறவுள்ளதாக  உத்தரவாதம் அளித்துள்ளனர். இராணுவ முகாம்கள் அமைந்துள்ள ஏறத்தாள 600 ஏக்கர் காணி அடுத்த வருடம் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவுள்ளது. 

இதற்கான உத்தியோகப10ர்வ அறிவிப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பணத்தில் பிரதம மந்திரி தலைமையில்இடம்பெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழர்களின் உணர்வுகளை ஏற்காத வங்கியை வடக்கு, கிழக்கில் தடை செய்ய வேண்டும் – சிறீதரன் எம்.பி சீற்றம்

image_pdfPRINT

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் தனியார் வங்கியை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றியமைக்காக பிரபல தனியார் வங்கியின் ஊழியர்கள் இருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த, வங்கியின் கிளிநொச்சி கிளையில் பணி புரிந்த இருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த தமது தமிழ் உறவுகளுக்காக கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த தமது உறவினர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் குறித்த ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேற்படி தனியார் வங்கி சிங்கள வங்கியா? தமிழர்களை ஏற்க மறுத்தால் வடக்கில் அப்படியொரு வங்கியே தேவையில்லை.

உயிரிழந்த உறவினர்களுக்கு கண்ணீர் விடுகின்ற உரிமை இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுக்களை மூடிவிடுங்கள் என எச்சரித்துள்ளார்.

யாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று

image_pdfPRINT

யாழ் மாவட்டத்தில் இரு வாரங்களுக்குள் பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதாத் துறையினர் இதுவரை 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. பின்னார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

அண்மையில் தென்பகுதியில் குறித்த நோய்த் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் யாழ் மாவட்டத்துக்குள் இந்த நோயின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ் போதனா வைததியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து 10 பேர் வரையில் கடந்த இரு வாரங்களுக்குள் குறித்த நோய் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே தற்போது மழை காலமாக இருப்பதாலும் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது. அதாவது தொண்டை நோ, தடிமனுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது அதற்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம் ஆகும்.

இது குறிப்பிட்ட சில தரப்பினரை உடனடியாக பாதிக்கின்றது அதாவது 2 வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றாநோய் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாக்கப்படுகின்றனர்.

இது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களில் அநாவசியமாக செல்வதை தவிர்த்தல் அவசியம் எனவும் சனநெருக்கமான இடங்களுக்கு செல்வதை தவிர்பதுடன், இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக அவசியம் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு

image_pdfPRINT

– கட்சியின் தலைவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு

ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள் என்று யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்சியின் செயலாளர் நாயகம் கதிர் கடந்த 14 ஆம் திகதி 04 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை முழுநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மீண்டும் விசாரணைக்கு எப்போது அழைக்கின்றபோதிலும் தவறாமல் பிரசன்னமாக வேண்டும் என்கிற கட்டாய நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்து அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் இக்கட்சியின் தலைவர் வேந்தன் எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு எழுத்துமூல அழைப்பாணை பிறப்பித்து உள்ளதுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் யாழ்ப்பாண அலுவலகத்தை சேர்ந்த  உத்தியோகத்தர்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறையில் உள்ள இவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அழைப்பாணை உத்தரவை கையளித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் ஜனநாயக போராளிகள் கட்சியும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களும் அண்மைய காலங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது குறித்து தலைவர் வேந்தன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களுக்கு தெரிவித்தவை வருமாறு:-
ஜனநாயக போராளிகள் கட்சி இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆவர். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமுதாயத்தோடு இரண்டற கலந்து வாழ அனுமதிக்கப்பட்ட இவர்கள் அமைதியான, வன்முறை அற்ற வாழ்க்கையையே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எந்தவொரு வன்செயலிலும் ஈடுபட்டதாகவோ, சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவோ நாட்டில் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் கிடையாது.
இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது பேரதிர்ச்சி தருகின்றது. போருக்கு பிந்திய இன்றைய அமைதி சூழலில் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துகின்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவே நாம் இதை ஐயுறவு கொள்ள வேண்டி உள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த ஜே. வி. பியினர் ஒரு காலத்தில் புரட்சியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் ஆயினும் அவர்கள் முழுமையான அளவில் இயல்பான, அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சி அது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால பகுதிக்குள் பிரமாண்ட வளர்ச்சி கண்டு மக்கள்மயப்பட்ட அரசியல் அமைப்பாக பரிணமித்து வருகின்ற நிலையில் எமது கட்சியை முடக்கின்ற சதி திட்டத்தின் ஒரு அம்சமாகவே இதை எமது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள்.மேலும் இது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற செயற்பாடாகவே எம்மால் மாத்திரம் அன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் பார்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ஊழியரை பணிநீக்கம் செய்த HNB க்கு எதிராக கடும் எதிர்ப்பு

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் நேற்று வெளியானதைத்தொடர்ந்து தற்போது குறித்த வங்கிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் பலர் ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக பதிவுகள் செய்து வருகின்ற அதேவேளை சிலர் அதனையும் தாண்டிச் சென்று அவ் வங்கியுடனான தமது கணக்கு நடவடிக்கையினை முறித்துக் கொண்டுள்ளனர்.
மனித உணர்வுகளை மதிக்க தெரியாத அந்நிறுவனம் தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்

image_pdfPRINT
கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
முன்னாள் போராளியும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 28ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மூன்றாம் மாடிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவராக உள்ளார்.  இவர் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி கடை ஒன்றை நடாத்தி வருகின்றார்.
போரின் போது ஒரு காலை இழந்த நிலையில்  வாழ்ந்து வரும் இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கடந்த மே 18ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தலமை தாக்கியமை காரணமாகவே இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்

image_pdfPRINT

தனியாருக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தம் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர். 

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள தனியார் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை   இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா   இராணுவ முகாமுக்குள் சென்று இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்துரையாடும் காட்சியினை அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்தனர் .
அதன் போது இராணுவத்தினர் அங்கிருந்த ஊடகவியலாளர்களை தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்தனர்.
error: Content is protected !!