Home Blog Page 297

யாழ். பொது நூலக எரிப்பு நினைவு நாள்

image_pdfPRINT
யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.
இந்நினைவை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை காலையும் மாலையும்  நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் காலை யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையிலும் பின்னர் மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நூலம் முன் அனுஷ்டிக்கப்பட்டது.

‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா

image_pdfPRINT
ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்”  நூல் அறிமுக விழா எதிர்வரும் 9 ஆம் திகதி பிரித்தனியாவில் நடைபெறவுள்ளது.
தமிழ் தகவல் நடுவம் (TIC) பெருமையுடன் பிரித்தானியாவில் அறிமுகம் செய்யும் இந்நிகழ்வு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh MP கலந்து கொள்ளவுளதுடன் சர்வதேச ஊகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்திய அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக  உள்ளன.
இந்நிலையில் அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தீர்க்கதரிசன ஓவியன் அஸ்வினின்
காட்டூன்களை ஆவணப்படுத்தி ஊடக நண்பர்களால் இலங்கையில் வெளியிடப்பட்ட நூலினை தமிழ் தகவல் நடுவமும் பிரித்தானியாவில் அறிமுகம் செய்கிறது.
தொடர்ந்து தமிழ் ஊடகத்துறையில் குறித்த கலை மேலும் வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். நாட்டிலுள்ள வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த மக்களிடையே ஒரு புரிந்துணர்வையும் கருத்துப் பரிமாறலையும் கொண்டு வருவதற்கு கேலிச்சித்திரங்கள் முக்கிய கருவியாக இயங்க முடியும் என தமிழ் தகவல் நடுவம் நம்புகிறது.

மாலை மேளதாள மரியாதையுடன் உங்களை அழைப்பரென எதிர்பார்க்காதீர்கள்

image_pdfPRINT
நினைவேந்தல் விவகாரம்; பணத்தை திருப்பி கேட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் பதிலடி
நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்று , அங்கே மாலை மரியாதை அளித்து மேள தளத்துடன் அழைத்து செல்வார்கள் என எதிர்ப்பார்க்க கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்கு செல்வது போன்றது. அங்கே மோள தாளத்துடன், மாலை போட்டு அழைத்து செல்லமாட்டார்கள். அதை நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள் , அந்த இடத்தில் வெறும் காலுடன் நடக்க கூடிய வாறு அதனை துப்பரவு செய்தமை , குடிக்க நீர் வழங்கியமை போன்ற செலவுகள் மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் செய்யப்பட்டதே என தெரிவித்தார்.

யாழில் வீதியோர மரத்தடியில் பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

image_pdfPRINT
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கும்
புல்லுக்குளத்திற்குமிடையில்  வீதியோரமாக உள்ள மரத்தடியில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சீருடை உட்பட சில உடமைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடமைகள் அச்சுவேலி இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவருடையது என்றும், சீருடை, உள்ளாடைகள், பாடசாலை கழுத்து பட்டி, செருப்பு, உட்பட சில உடமைகள் மீட்கப்பட்டுள்ளது என யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு

image_pdfPRINT

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில்,  யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ,அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

நல்லூருக்கு அருகில் விரைவில் விகாரை!

image_pdfPRINT

(கார்டூன்-தீர்க்க தரிசன ஓவியர் அஸ்வின்)

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன்.
அது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.
கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு , சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது.
ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது என தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்

image_pdfPRINT
உக்ரைனில் கொல்லப்பட்டுவிட்டார் என நம்பப்பட்ட ரஷ்ய ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ (Arkady Babchenko) இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்த்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையிலேயே இன்று அவர் உயிருடன் தோன்றியுள்ளார்.
எனினும் தன்னை கொல்லுவதற்கான உத்தரவை தனது ரஷ்ய நாட்டு பாதுகாப்பு தரப்பினரே பிறப்பித்திருந்ததாகவும் அத்தகவல் தனக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
பலத்த காரகோச வரவேற்புக்கு மத்தியில் ஊடக மாநாட்டுக்குள் நுழைந்த அவர் தன் உயிரை காப்பாற்றியமைக்காக உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை இக் கொலை நாடகத்திற்கு தானே காரணம் எனவும் ஊடகவியலாளரை கொலைசெய்பவர்களை கைது செய்வே இவ்வாறு மறைந்து இருந்ததாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகமாநாட்டில் இன்று அர்கடி பப்சென்கோ உயிருடன் தோன்றும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த அவரது ரஷ்ய நாட்டு ஊடக நண்பர்கள் பெரும் அதிர்ச்சிககுள்ளானதுடன் மகிழ்ச்சியில் சிலர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டார்கள்.

யாழ்.பல்கலையில் ஊடகத்துறை கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும்

image_pdfPRINT

-யாழ்.ஊடக அமையம்

ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில்; ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என யாழ்.ஊடக அமையம் யாழ்.பல்கலைகழத்திடம் கோரியுள்ளது.

யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கை மூலமே இக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது,

யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென்பது யாழ். ஊடக அமையம் நீண்ட கால கோரிக்கையாகும்.

அவ்வகையில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு யாழ்.ஊடக அமையம் விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகம் முன்வந்திருப்பதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
யாழ். பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கி வந்த ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம் நிதியுதவி நிறுத்தப்பட்டதும், அந்த மையத்தின் செயற்பாடுகளும் முடிவுற்கு வந்ததை யாழ் ஊடக அமையம் கவலையுடன் கவனித்தே வந்திருந்தது.
எவ்வாறாயினும் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் இடைநிறுத்தப்பட்ட ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என யாழ.பல்கலைக்கழகத்திடம் நாம் தொடர்ச்சியாக வேண்டுதலை விடுத்தே வந்திருந்தோம்.
குறிப்பாக போரின் மிகப்பெரும் பாதிப்பிற்குள்ளான வன்னி பெருநிலப்பரப்பில் ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, ஆனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில், ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையில் யாழ் ஊடக அமையம் உறுதியாக இருந்தது.
எமது வேண்டுகோளை ஏற்று, யாழ். பல்கலைக்கழகமும் முன்னர் இருந்த டிப்ளோமா கற்கைநெறியை காலத்தேவை கருதி மீளாய்வு செய்து, அதனை மீள நடாத்த முயற்சிகள் மேற்கொண்டு வந்ததை நாம் வரவேற்றிருந்தோம்.
அதன் ஒரு கட்டமாக, மீளாய்வு செய்து தயாரிக்கபட்ட பாட விதானத்தை, முன்னர் டிப்ளோமா படித்த மாணவர்கள் மத்தியிலும் யாழ் ஊடக அமையம் உள்ளடங்கலாக ஊடகவியலாளர்களதும் முன்பாகவும் யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் விபரமாக கடந்த வாரம் பகிரங்க அழைப்பொன்றின் மூலம் கலந்துரையாடலுக்கு முன்வைத்திருந்தது. அதற்கு ஆக்கபூர்வமான யோசனைகளும் திருத்தங்களும் பரிந்துரைகளும் அப்போது பங்குபற்றியோர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தன.
தமது கருத்துக்களை சிபார்சுகளை முன்வைக்க பகிரங்க வெளியில் இடமிருக்கின்ற நிலையில் முகம் தெரியாத பிரச்சாரங்கள் எமது ஊடகத்துறையினருக்கு குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பை சார்ந்தோருக்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்குமென நாம் கருதுகின்றோம்.
எனவே,  யாழ.பல்கலைக்கழகம் , ஊடகத்துறை டிப்ளேமா மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை   தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்கு அப்பால் ,கைவிட்டுவிடாது, வளர்ந்துவரும் தமிழ் ஊடகத்துறைக்கு தனது நிறுவனம்சார் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவேண்டுமென யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொள்கிறது. என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் விடயத்தில் முன்னைய ஆட்சியை போலவே நல்லாட்சியும்

image_pdfPRINT
தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும் பொறுப்பின்றியும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு என யாழ்.காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யாழில்.இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை கண்டித்து யாழில். கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் இறுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளூநர் ஆகியோரிடம் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் மகஜர் கையளித்திருந்தார்.
குறித்த மகஜரிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது ,
கூலிப் படைகளை ஏவி விட்டு நடத்தப்படுவது போன்று அச்சமூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை, வடக்கின் ஊடகத்துறை மீண்டுமொரு இருண்ட யுகத்திற்குள் பிரவேசிக்கப்போகின்றமைக்குக் கட்டியம் கூறும் ஓர் அவல நிகழ்வாகக் கருதி நாம் மனக்கிலேசமடைகின்றோம்.
முன்னைய ஆட்சியாளர்களின் இருண்ட யுகத்தில் படுகொலை செய்யப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதல்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு.
அந்தப் பின்புலத்திலேயே மீண்டும் ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக வன்முறைக் கொடூரம் கட்டவிழும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றமையை பெரும் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
எதிர்க்கட்சியில் இருந்தபடி ஊடக சுதந்திரம் குறித்து நீண்ட காலம் குரல் எழுப்பி வந்தவரும், அண்மையில் கூட ஊடக சுதந்திரம், சுயாதீனம் குறித்து அதிகம் வற்புறுத்திப் பேசியவருமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கே வந்து தங்கி நிற்கையில் – அவரது வருகைக்காக வடக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உயர்த்தப்படுத்தப்பட்டிருக்கையில் – பத்துப் பேர் கொண்ட கும்பல், சாதாரணமாக வீதியில் நடமாடி, இக்கொடூரத் தாக்குதலை அரங்கேற்றிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றது.
ஊடகத்துறைக்கும், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், அரசமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கும் நேரடி யாக விடுக்கப்பட்ட சவாலாகவே இந்தத் தாக்குதலை நாம் நோக்குகின்றோம்.
இந்தத் தாக்குதலுக்கு மட்டுமல்லாமல், இதற்கு முன்னர் இருண்ட யுகத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் காணாமலாக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமை, சட்டமுறையற்ற விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான புலனாய்வு நடவடிக்கை களையும் விசாரணை செயற்பாடுகளையும் இனியும் தாமதிக்காமல் விரைந்து முன்னெடுக்குமாறு வலியுறுத்திக் கோருகின்றோம்.
தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளருக்கு நீதி மேலும் தாமதிக்கப்படாமல் விரைந்து கிட்வதற்குரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசுத்தலைமை இதயசுத்தியுடனும், பற்றுறுதியுடனும், திடசங்கற்பத்துடனும் விரைந்து முன்னெடுப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்

image_pdfPRINT

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுப்பட்டது .

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்கள் க.விந்தன், சுகிர்தன், கஜதீபன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர்கள், மூத்த பத்திரிகையாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கனாமயில்நாதன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வைத்தியசாலை வீதியூடாகச் சென்று மீண்டும் அதே வீதியூடாக பேருந்து நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தடைந்தனர்.
“ஊடக குரலை நசுக்காதே – குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு, பொலிஸாரின் தாமதம் – வன்முறையாளரின் ஊக்கம் உள்ளிட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆகியோரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து. அதில் அந்தச் செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு

image_pdfPRINT

மக்களின் ஆரொக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த மக்கள், அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின்மீது தமிழக போலிசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டிக்கும் கவனயீர்ப்பு எதிர்வரும் 01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளது.

என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் சார்பாக அதன் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக் குறிப்பில் மன்னார் வளைகுடாக் கடல், நிலத்தடி நீர், காற்று ஆகிய இயற்கைச் சூழலைச் சீரழித்து, புற்றுநோய் போன்ற பாரதூரமான நோய்களை உருவாக்கி மக்கள் பலர் பலியாகவும், பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகவும் காரணமாக இருந்த, இந்த செப்பு ஆலையை மூட இருபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்த தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் எடுத்துத் தீர்வை வழங்காத இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் போராடிய மக்கள்மீது கடந்த வாரம் பெரும் வன்முறையைக் கட்டவிள்த்து விட்டுள்ளது. இதில் 13 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும், 100 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். இம் மக்கள் போராட்டங்களின் பின்னர் குறித்த ஸ்டெர்லைட் ஆலை சட்டவிரோதமானது எனக்கூறி அதைப் பூட்டியுள்ள அரசு, சரியானதும் சட்டரீதியானதுமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய மக்கள்மீது வன்முறையைக் கட்டவிள்த்து விட்டதோடு அல்லாமல், இப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நீதி விசாரணைகளையும் முன்னெடுக்கப்படாமை கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, வேதாந்தா என்ற பெருமுதலாளிய நிறுவனத்தின் இலாப வெறிக்காக மக்களைப் பலிகொண்ட தமிழக அரசின் வன்செயல்களை எதிர்த்து இடம்பெறவுள்ள கவனயீர்ப்பில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு யூலை மாதம் நியமனம்

image_pdfPRINT

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேருக்கும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அரசு தனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளது.

ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் சமுகமளித்தனர்.
இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சுக்கு கிடைத்தன. கோரப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார்.

error: Content is protected !!