Home Blog Page 28

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வாடிக்கு தீ வைப்பு

image_pdfPRINT

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று (1.1.2023) மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரை நோக்கி விரைந்து தீயை அணைத்துள்ளனர்.

இதன்போது, செல்வரத்தினம் சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே எரிக்கப்பட்டுள்ளதோடு பத்து இலட்சம் பெறுமதியான வலைகளும் தீயில் எரிந்துள்ளன.

தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார் !

image_pdfPRINT

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியிருந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யாழில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவாறே இறையடி சேர்ந்த நபர்!

image_pdfPRINT

ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வழமை போல் ஆலயத்திற்கு சென்று தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை அவர்  மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

image_pdfPRINT

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலை பகிஸ்கரிப்பது தான் தமிழ் மக்களுக்கு உள்ள ஒரேயொரு தெரிவு என்றும் அதனையே தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கள தரப்பில் இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

image_pdfPRINT

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத்  தெரிவித்து அவரது  குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவியே கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த  பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மழையுடனான காலநிலை : வழமைக்குத் திரும்பாத கிளிநொச்சி!

image_pdfPRINT

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மழை நின்றும் வெள்ளத்தின் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் மழை முடிந்தும் வெள்ள நீர் வடிந்து செல்லாத நிலையில் தற்பொழுதும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக சிலரது கிணறுகளில் வெள்ள நீர் மூடி பாய்ந்ததன் காரணமாக கிணறுகள் பகுதி அளவிலும் முற்று முழுதாகவும் அழிவுற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் பகுதியில் கால்நடை பண்ணை ஒன்றை நடாத்தி வரும் ஒருவர் 50க்கும் மேற்பட்ட கோழிகளும் ஐந்து ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது வெள்ளநீர் வடிந்த பின் தொற்றுநோய் காரணமாக நான்கு ஆடுகள் இறந்துள்ளதாகவும், அதில் இரண்டு ஆடுகள் தற்பொழுது கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

image_pdfPRINT

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கடந்த 09 ஆம் திகதி நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை எதிர் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

image_pdfPRINT

பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் வெற்றிகொள்ளவும் தமிழ் மக்களை அதற்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளம் என்ற சிந்தனையில் ஈடுபடும் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது அவரது முன்னுரிமைப் பட்டியலில் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுத்தம் முடிந்து பதினான்கு வருடங்கள் கடந்த பின்னரும்கூட, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்கள அரசதரப்பினர் தயாராக இல்லை என்பதை புதிதாக கடமையேற்றுள்ள இந்திய தூதுவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் பார்வையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

image_pdfPRINT

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (pass) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதால் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (pass) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நோயாளருக்கு தலா இரு அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் நோயாளரை அனுமதிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறப்பான நோய்ப்பராமரிப்பு வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த ஒழுங்கு முறைக்கு அனைத்து பார்வையாளர்களும் ஒத்துழைப்பினை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

image_pdfPRINT

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புகள், இலங்கை தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பாரிய தவறு என்றும் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாக இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இது இழக்கச் செய்துள்ளதாக கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது- மைத்திரி

image_pdfPRINT

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நாட்டின் நீதிமன்றங்களில் 13 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உள்ளன. தற்போது 14 இலட்சத்தை இது நெருங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் தாமதமடைவதால், அந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் பல குற்றங்கில் ஈடுபடுவார்கள்.

தற்போதைய அரசாங்கம், ஐஸ். அஷிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலைகளில் இடவசதி இல்லாதமையே இதற்கான காரணமாகும். இது உண்மையில் வேடிக்கையான விடயமாகும்.

இந்த நாட்டில் போதியளவு இடவசதி உள்ளது. இராணுவம் நினைத்தால் ஒரே மாதத்தில் அங்கு புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க முடியும். நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும். சில வழங்குகள் 20 வருடங்கள் நடக்கின்றன.

இன்னும் சில வருடங்கள், 3 தலைமுறைகளாகக்கூட நடந்து வருகின்றன. குறைந்தது 6 மாதங்களில் ஏனும் வழங்குகளை முடிப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றில் கொண்டுவர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!