Home Blog Page 25

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி இணக்கம்

image_pdfPRINT

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (5) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் சுதந்திர தினம் ; எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் ஒன்று திரண்ட தமிழர்கள்

image_pdfPRINT

சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களிற்கு கறுப்பு நாள் என்பதை வலியுறுத்தி இன்று (4) தமிழர் தாயகம் வடக்கு- கிழக்கு உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களால் எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் பிரித்தானியாவிலும் பெரும் திரளாக ஒன்றுதிரண்ட புலம் பெயர் தமிழர்கள் சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்கான கரி நாள் என கோரி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் பின்னர் அங்கிருந்து பேரெழுச்சியாக பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்தனர்.

இந்நிலையில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன் ஒன்று திரண்ட தமிழர்கள் தமிழீழ தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தூதரகத்தின் மேற் கூரையில் பறக்கவிடப்பட்டிருந்த சிறிலங்காவின் தேசியக் கொடியை தாண்டி தமிழீழத்தின் தேசியக் கொடியையும் உயர்த்திப்பிடித்தனர்.

படங்கள் – அனுஷன் பாலசுப்பிரமணியம்

கிளிநொச்சியில் கைதான மாணவர்கள் விடுதலை

image_pdfPRINT

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று  முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை  விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராடத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தடைகளை அமைத்திருந்ததுடன், அதனை மீறி செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள்   விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரதின ஆர்ப்பாட்டத்தில் இருவர் கைது ; பொலிஸார் அடாவடி

image_pdfPRINT

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்!

image_pdfPRINT

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்காக உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி உறுமய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஊடாக, மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மானியப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பதிவு செய்வதற்கும் உறுமய தேசிய செயற்பாட்டுச் செயலக அலுவலகத்தை 0114354600 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது tinyurl.com என்ற இலத்திரனியல் படிவத்தின் ஊடாகவா தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

image_pdfPRINT

தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தனியாருக்கு நெல் கொள்வனவு அனுமதி : கமக்காரர் அமைப்புக்கள் விசனம்!

image_pdfPRINT

நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இந்த காலபோக செய்கையில்,

“விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் அரசாங்கத்திடம் இழப்பீடு கேட்டு நிற்கின்ற நேரத்தில் அரசாங்கம் நெல்லையும் கொள்வனவு செய்யாது தனியாருக்கு வழங்கினால், தனியார் நினைத்த விலையில் கொள்வனவு செய்வார்கள்.

அத்துடன், தனியார் இன்னும் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வார்கள். இதன் காரணமாக விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!

image_pdfPRINT

மன்னார் மாவட்டத்தின், நானாட்டான் பிரதேசத்திலுள்ள காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரி,  இன்று பொதுமக்களால் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள 46 ஏக்கர்  காணியை 113 குடும்பங்களுக்கு  பகிர்ந்தளிக்குமாறு கோரியே, இசைமாளத்தாழ்வு கிராம மக்களினால் குறித்த  கவனயீர்ப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், போராட்டத்தின் பின்னர்  பல கோரிக்கைகள்  அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் ஆகியோருக்கு  கையளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்!

image_pdfPRINT

கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில்  அடிப்படை மனித உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்தபாய பொறுப்புகூற வைக்கப்படுவாரா ?

image_pdfPRINT

கோத்தபாயாவின் போர்க்கால வகிபாகம் -ITJP வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கை

கோத்தபாயா ராஜபக்ஷ எப்போதாவது பொறுப்புக்கூற வைக்கப்படுவாரா என கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு (ITJP) கோத்தபாய ராஜபக்ஷவின் போர்க்கால வகிபாகம் என்னும் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் 1980களில் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற முன்னைய வன்முறைக்காலப்குதியின்போது, பாரிய வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களில் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டிருந்ததான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வுசெய்து 2022 இல் ITJP யால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக இவ்வறிக்கை வெளிவருகின்றது

சிறிலங்காவில் போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, குறித்த உள்நாட்டுப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முக்கிய வகிபாகம் கொண்டிருந்ததற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன என மனித உரிமை வழக்கறிஞர்கள் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நூறு பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பதவிவகித்தபோது, 2009 இல் சண்டைக்களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியமைக்கான விரிவான ஆதாரங்கள் மற்றும் அவர் இராணுவத் தளபதியாக இல்லாதபோதிலும்கூட, பாதுகாப்புப் படைகளுக்கு கட்டளையிட்டதுடன், அவர்கள் மீதான செயற்றிறன் மிக்க கட்டுப்பாட்டினையும் கொண்டிருந்தமை, சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் சர்வதேச குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுக்கொண்டிருந்தமை தொடர்பாக அப்போதே நன்கு தெரிந்திருந்ததுடன், அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறியதுடன், அல்லது, தனக்குக் கீழே செயற்பட்டவர்களைப் பொறுப்புக்கூறவைக்க முயலவுமில்லை என்பதை சான்றுகளுடன் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட போர்த்தடை வலயங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் கோத்தபாய ராஜபக்ஷ கொண்டிருந்த வகிபாகத்தினையும், விசாரணைகளற்ற படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, எழுந்தமானகத் தடுத்தவைத்தல், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் தடுத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அவர் தவறியமையும் தொடர்பான ஆதாரங்களையும் இவ்வறிக்கை ஆய்வுசெய்கின்றது.

கோத்தபாயாவுக்கும் அவரது போர்க்கால தளபதிகளுக்கும் இருந்த படையணி மற்றும் பாடசாலைத் தொடர்புகள் 2009 வன்னி நடவடிக்கையின் போது இருந்த சிறிலங்கா இராணுவ கட்டமைப்பு இறுதிப்போரில் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைதல், 3 போர்த்தடை மண்டலங்களை ஒருதலைப்பட்சமாக அறிவித்து அதற்குள் பொதுமக்களை செல்லுமாறு கூறி பின்னர் அவற்றின் மீது கனரக ஆயுதங்களால் கொடூர மனங்கொண்டு தாக்கியமை, தரைவழி இராணுவச் செயல்பாடு பற்றிய கோத்தபாயாவின் அறிதல், மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களில் ஒவ்வொரு வருடமும் வெளிவந்த முரண்பாடான தொகைகள் என்பன குறித்து மிகத் தெளிவாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபாய தொடர்பிலான அதிர்ச்சி தரும் மேலும் பல தகவல்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ITJP யின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா
‘தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மிகவும் மோசமானவராக கோத்தபாய ராஜபக்சவே இருக்கமுடியும். 1989 தொடக்கம் 2009 வரைக்கும், அத்துடன் இன்றுவரைக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கு காணப்படுகின்றது. பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படாமலும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமலும் உள்ளன.

இவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏமாற்றத்தினையும் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தின. குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்காமல், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தேவைப்படும் மீளவும் நிகழமாட்டா என்பதற்கான உத்தரவாதத்தினை வெறுமனே ஆணைக்குழுக்களின் விசாரணைளால் பெற்றுவிடமுடியது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

British Shadow Minister Alex Norris supports the Calls for Ban on Sri Lankan Army Commander Shavendra Silva

image_pdfPRINT

In a significant virtual meeting on January 19, 2024, Alex Norris MP, the Shadow Minister of British Police and Member of Parliament for Nottingham North, supported the call to ban Sri Lankan Army Commander General Shavendra Silva under the Global Human Rights Sanction Regime. The meeting, chaired by legal adviser and human rights activist Geeth Kulasegaram, was attended by several prominent figures including Benjamin Kumar Morris, Director of the Sri Lanka Campaign for Peace and Justice, Sen Gandiah, Chairman of Tamils For Labour, and Roy Ickson from the International Center for the Prevention and Punishment of Genocide (ICPPG).

Key issues raised during the meeting focused on Britain’s historical responsibility in Sri Lanka’s genocide and the failure of the British Foreign Office (FCDO) to act on submitted evidence of war crimes and human rights violations, including those under the command of Shavendra Silva. The meeting highlighted Silva’s implication in war crimes as per United Nations reports and the existing travel bans against him by the United States and Canada. Attendees urged the UK to follow suit, aligning with the continuous protests by Tamil activists in Britain.

Kulasegaram emphasized the ongoing human trafficking and torture in Sri Lanka, while Morris detailed the war crimes committed by Silva. Kandiah expressed disappointment over the FCDO’s response to parliamentary demands for Silva’s ban and called for Britain to recognize the genocide in Sri Lanka and support an investigation by the International Criminal Court.

MP Norris, attentive to the discussions, acknowledged his growing understanding of the Sri Lankan issue and the Tamil community’s plight. He committed to advocating for the Tamils’ right to self-determination and to pressuring the FCDO to ban Silva. Norris also pledged to join the All Party Parliamentary Group for Tamils (APPGT) and the All Party Parliamentary Group for Magnitsky Sanctions (APPG), showing gratitude for the enlightening meeting and information shared.

error: Content is protected !!