SHARE

சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களிற்கு கறுப்பு நாள் என்பதை வலியுறுத்தி இன்று (4) தமிழர் தாயகம் வடக்கு- கிழக்கு உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களால் எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் பிரித்தானியாவிலும் பெரும் திரளாக ஒன்றுதிரண்ட புலம் பெயர் தமிழர்கள் சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்கான கரி நாள் என கோரி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் பின்னர் அங்கிருந்து பேரெழுச்சியாக பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்தனர்.

இந்நிலையில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன் ஒன்று திரண்ட தமிழர்கள் தமிழீழ தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தூதரகத்தின் மேற் கூரையில் பறக்கவிடப்பட்டிருந்த சிறிலங்காவின் தேசியக் கொடியை தாண்டி தமிழீழத்தின் தேசியக் கொடியையும் உயர்த்திப்பிடித்தனர்.

படங்கள் – அனுஷன் பாலசுப்பிரமணியம்

Print Friendly, PDF & Email