SHARE

மல்லாகத்தில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தவிலை. 

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் , மல்லாகம் குளமங்கால் பகுதியை சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) எனும் இளைஞர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூட்டினை நடாத்தின சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகஸ்தரை தடுத்து வைத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடாத்தும் விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டது எனவும் , விசாரணைகளின் பின்னர் துப்பாக்கி சூட்டை நடாத்தியவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெனர்ண்டோ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்திருந்தார்.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்த்து ஊரவர்கள் நீதிமன்றில் கூடியிருந்தார்கள்.
ஆனால் நேற்றைய தினம் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தவில்லை.
துப்பாக்கி சூட்டினை நடாத்திய பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்து நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தாமை தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்ததுடன் , பொலிசாரின் விசாரணைகளில் நம்பிகையீனம் ஏற்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தனர்.
Print Friendly, PDF & Email