SHARE
கொழும்பு,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புகள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை இராணுவம் குறித்து ஐக்கிய நாடுகள்  சபைக்கு பொய்யான தவல்களை வழங்கி வருகிறார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க புலம்பியுள்ளார்.
இந்த நிலை சரி செய்துகொள்ள சில காலம் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் கூறியுள்ளார்.
மேலும் உலக சமாதானத்தை முன்னிட்டு ஐ.நா.வோடு இணைந்து செயற்படுவதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இவ் வெளிநாட்டு நடவடிக்பை பணிப்பகமானது தற்காலத்தில் காணப்படுகின்ற பல சவால்களுக்கு தீர்வாக அமையும்.
எதிர்காலத்தில் ஐ.நா.அமைதிப்படையில் கடமையாற்றச்செல்லும் படையினருக்கு இப் பணிப்பாளர் சபையினுடாக தேவையான கடமைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா.அமைதிகாக்கும் படையின் பணிக்காக லெபனான் செல்ல தயாராகவிருந்த போர்க் குற்றவாளியான  இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் க்கு எதிராக புலம் பெயர் தமிழர் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து ஐ.நா.வுக்கு குவிந்த முறைப்பாடுகளையடுத்து அவர் அதிரடியாக ஐ.நா.வால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email