SHARE
image_pdfPRINT

யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது. 

மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.