SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணிகள் விடுவிப்பதற்கு இராணுவம் மாற்று காணி கோரியுள்ளதாகவும் அதற்க்கு மாற்றுக்காணி எங்கு வழங்குவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பு காணி உரிமையாளர்கள் மற்றும் புதிதாக பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் கூடி கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் நேற்று (02) மாலை மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய வளாகத்தில் இடம்பெற்றது

இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி மக்கள் கடந்த வருடம் பெப்பரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் ஒருமாத கால போராட்டத்தை தொடர்ந்து மக்களின் காணிகளில் ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டதோடு மிகுதி காணிகள் இரண்டு கட்டங்களில் 6 மாத காலத்தில் விடுவிப்பதாக இராணுவம் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எழுத்து மூலமான உறுதிமொழி வழங்கியிருந்தனர்

இருப்பினும் இன்று ஒருவருடமாகியும் இந்த காணிகள் விடுவிக்கவில்லை இந்நிலையில் இராணுவம் தாம் வேறு இடத்துக்கு மாறுவதற்கு காணி கோரியிருப்பதாக அதிகாரிகள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்தனர்

இந்நிலையில் அவர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் உள்ள ஒரு காணியையே அவர்கள் கோரியுள்ள நிலையில் இந்த காணியை வழங்க முடியாது எனவும் வேறு எங்கு இதை வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

இருப்பினும் இது தொடர்பில் எங்கு காணி வழங்குவது என்பது தொடர்பான இறுதிமுடிவு இங்கு எட்டப்படவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியவே இந்த கூட்டம் கூட்டப்பட்டதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே எட்டப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்

இருப்பினும் பலர் இராணுவம் கோரியுள்ள காணி பொருத்தமில்லை என்பதை தெரிவித்ததோடு மக்கள் மத்தியில் உள்ள இராணுவத்தை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

இருப்பினும் இறுதிமுடிவு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே எடுக்கப்படவுள்ளது.

Print Friendly, PDF & Email